Thursday 18 December 2014

லிங்கா, பிம்பிளிக்கி பிளாப்பி ஆனது எப்படி..?



ரு ரஜினி ரசிகனாகத்தான் படம் பார்க்க சென்றேன். இன்னும் சொல்லப்போனால் இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதவே கூடாது என எண்ணியிருந்தேன். ஏனென்றால் வலைப்பூவில் விமரிசனம் என்கிற பெயரில் கிறுக்க ஆரம்பித்தப் பிறகு தியேட்டரில் நான் பார்க்கும் முதல் ரஜினி படம். அதனால் தலைவர் படத்தை விமர்சனக் கண்களோடு தோண்டித் துருவி ஆராயக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இருப்பினும் FDFS என்பதில் மாற்றம் இல்லை. ஏனென்றால் வெளிநாடுகளில் அதற்கு அவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை என்பது மட்டுமல்ல, பாடாவதி படங்களையே முதல்நாள் பார்க்கும்போது தலைவரின் படம் அதுவும் ரசிகப் பட்டாளங்களோடு பார்க்கும் பாக்கியம் வேறு அல்லவா.. !

நான் பார்த்த தியேட்டரில் ஆன்லைன் புக்கிங் கிடையாது. ஆபிசில் 3 மணிக்கு எனக்கு லஞ்ச் பிரேக். அந்த இடைப்பட்ட நேரத்தில் சென்று டிக்கெட் எடுத்து விடலாம் என்று ஆபிசில் எவரிடமும் சொல்லாமல் புறப்பட்டு சென்றேன். அங்கே போனால் எனக்கு முன்பாக பெரிய கியூ . கடைசியாக நிற்பவரிடம் கேட்டேன்.

' எத்தன மணிக்கிங்க டிக்கெட் கொடுப்பாங்க.. '

' தெரியாதுங்க.. '

' படம் எத்தன மணிக்கி.. '

' தெரியாது.... '

' அப்புறம் எதுக்கு கியூல நிக்கிறீங்க.. '

' எப்படியும் இந்த கவுண்டர்லதான் டிக்கெட் கொடுப்பாங்க. நைட் எப்படியும் ஷோ போடுவாங்க. வாங்கிட்டுத் தான் போறதா இருக்கேன் .. '

நானும் நின்றுவிட்டேன். ஆபிசுக்கு போன் செய்து ஒரு அர்ஜெண்ட் மேட்டர். ஸெகண்ட் ஆஃப்  லீவ் எடுத்துக் கிறேன் என சொன்னேன். அது போகும்போது அல்லவா சொல்ல வேண்டும். போயிட்டு போன் பண்ணி சொன்னா எப்படி என்று கடிந்த மேனேஜரை ஒரு வழியாக சமாளித்தேன். அப்படி இப்படியென்று மூன்று மணி நேரம் இழுவைக்குப் பின் தலைவரின் லிங்கா டிக்கெட் கையில் கிடைத்தது.

இதெல்லாம் எதற்காக என்றால், லிங்காவை இணையத்தில் விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் நேற்று காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கிறார். ஏதோ ரஜினி மீது வன்மத்தை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே இணையத்தில் லிங்காவுக்கு எதிரான பிம்பத்தை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். ஒரு விதத்தில் லிங்காவை 'மொக்கை' என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். முதல்நாள் காட்சியின் இடைவேளையின் போதே தல செங்கோவியின் போஸ்ட் ஒன்றில் 'படம் மொக்கைய்யா' என கமெண்டிட்டேன். பிறகு, நான்கு வருட தவத்திற்குப் பின் ஏக்கத்துடன் காத்திருந்த ஒரு ரசிகனுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை  எப்படி பதிவு செய்வது..?

மூன்று நாட்களில் 100கோடி வசூல் சாதனை என்று விளம்பரப்படுத்துகிறீர்களே. அது எப்படி வந்தது..? எல்லாம் எங்கள் ரஜினிக்காக நாங்கள் கொடுத்த தட்சனையய்யா..! (நள்ளிரவு ரிலீஸ் என்பதால் எனக்கு மட்டுமே டாக்சி $50+டிக்கெட் $20. ஆக மொத்தம் இந்திய ரூபாயில் மூவாயிரத்துக்கு மேல் செலவுய்யா..). ஆனால் விமர்சனம் மட்டும் பண்ணக் கூடாது என்றால் எப்படி.? அப்படியே பெரிய இழப்பு என்றால் தலைவரிடம் போய் நில். தலைவர் தன் சம்பளத்தில் கால்வாசி  திருப்பிக் கொடுத்தாலே போதும். மொத்த இழப்பையும் சரிக்கட்டி விடலாம்.


ன்று படம் முடிந்து வெளியே வரும்போது கடும் மன உளைச்சல் அடைந்தேன். ரஜினி, தமிழ் சினிமாவின் எவ்வளவு பெரிய ஆளுமை. ஒட்டுமொத்த தமிழர்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சக கலைஞன். இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் மார்க்கெட்டிங் உள்ள மகா சக்தி. அவரை வைத்து இப்படி பல்லாங்குழி விளையாடு கிறார்களே..!

ரஜினியின் இமேஜுக்கு தகுந்தாற்போல் கதையே பின்ன முடியாதா..? அவரது ஸ்டைலுக்கு தீனி போடுவது போல் திரைக்கதையை அமைக்க முடியாதா..? 25 வருடங்கள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரின் ரசிகர்களை  குறைந்தபட்ச அளவு கூட இவர்களால் திருப்திப்படுத்த முடியாதா..?  ரசிகர் மன்ற ஷோவில் ரசிகனையே தூங்க வைத்த கொடுமை எங்கேயாவது நடந்திருக்காய்யா..?

இதில் படைப்பு ரீதியாக லிங்கா அடைந்த தோல்வியை சில ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படம் மொக்கை என்று உதடு வரை வரும் வார்த்தையை அப்படியே விழுங்கி விடுகிறார்கள். சிலர் ' மூணு நாள்ல நூறு கோடி வசூல். அதுதான் சூப்பர்ஸ்டார் ' என்று ஸ்டேடஸ் போட்டு காயத்துக்கு களிம்பு தடவிக் கொள்கிறார்கள். ஏன்யா தெரியாமத்தான் கேக்குறேன்... தலைவர் படம் மூணு நாள்ல 100 கோடி வசூல் ஆவதெல்லாம் ஒரு பெருமையா..? அஞ்சான் படத்தை முதல் நாளே ஒட்டுமொத்தமா ஊத்தி ஊத்தி கழுவின போதும் முதல் நாள் வசூல் 11 கோடி என்று லிங்குசாமி பீத்திக் கொண்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்..?

இப்போதெல்லாம் அச்சு ஊடகங்களில் வரும் விமர்சனங்களை விட இணையத்தில் சூட்டோடு சூடாக வரும் விமர்சனங்களைத்தான் தமிழ் சினிமா உலகம் உத்து உத்து பார்க்கிறது. ஏனென்றால் இவர்கள்தான் எந்தவித நீக்கு போக்கும் இல்லாமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்வார்கள். படம் மொக்கை என்றால் சுத்தி வளைக்காமல் நேரடியாக பாய்ண்ட்டுக்கு வருவார்கள். அப்படியிருக்க, தலைவர் படமாகவே இருந்தாலும் குறைகளை தைரியமாக சுட்டிக்காட்டினால்தான் அடுத்தப் படத்தில் இன்னும் கூடுதல் கவனம் எடுப்பார்கள். அதைவிடுத்து படம் செம்ம... சூப்பர்ரோ சூப்பர்... அப்படின்னு சொல்லிகிட்டே இருங்க.. அடுத்து இன்னொரு பாபாவோ அல்லது நாட்டுக்கொரு நல்லவனோத்தான் வரும்.  





லிங்கா படம் பார்த்தவர்கள் அனைவருமே விமர்சகர்களாக மாறி தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங் களில் கொட்டிவிட்டனர். ஒட்டுமொத்த விமர்சனங்களையும் படித்துப்பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படும். எல்லோருமே ரஜினியின் படத்தை ஆவலோடு எதிர்பார்த்தவர்கள். ஒரு பாட்சாவாகவோ அல்லது சிவாஜியாகவோ இல்லாவிட்டாலும் அருணாசலம் ரேஞ்சுக்காவது இருக்கும் என நம்பியிருந்தவர்கள்.ஆனால் பாபாவைவிட மொக்கையாகிப் போனதுதான் எல்லோரையும் இணையத்தில் பொங்க வைத்திருக்கிறது.

பாபா படத்திலும் குசேலன் படத்திலும் என்ன தவறுகள் செய்தார்களோ அதையேத்தான் லிங்காவிலும் செய்திருக்கிறார்கள். இரண்டுமே வித்தியாசமாக கதையமைப்பு உடையதுதான். ஆனால் ரஜினி என்கிற மெகா பிம்பத்தை மட்டும் காண்பித்து படத்தை ஓட்டிவிடலாம் என நினைத்ததின் வெளிப்பாடுதான் அவ்வளவு பெரிய தோல்வி. பாபாவை விடுங்கள், குசேலன் ஏற்கனவே கேரளாவில் சக்கைப்போடு போட்ட படத்தின் ரீமேக். ஆழமான கதையும் கூட. ஆனால் இங்கே என்ன செய்தார்கள்..? ரஜினி படமாச்சே. அவருக்கேற்ற மாதிரி எடுக்க வேண்டும் என்று தேவையில்லாத பில்டப் காட்சிகள் , கிராபிக்ஸ் பாடல் காட்சிகள், நிறைய கதா பாத்திரங்கள், வலிய திணிக்கப்பட்ட அரசியல் வசனங்கள் என்று கதையின் மையத்தையே சிதைத்து விட்டார்கள். வடிவேல் போர்சன் மட்டும் ஓரளவு சகிக்கும்படி இருந்தது.

ஆனால் பாருங்கள். பாபா, குசேலன், லிங்கா இந்த மூன்று படத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. மூன்று படத்தின் இயக்குனர்களும் ஒரு காலத்தில் ரஜினியை உச்சத்திற்கு கொண்டுவந்தவர்கள். மூன்று இயக்குநர்களுமே பீல்ட் அவுட்டாகி ஓய்வு பெரும் கட்டத்தை தாண்டியபிறகு ரஜினியே அழைத்து வாய்ப்புக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பதுதான் இங்கே டச்சிங். சூப்பர்ஸ்டாருடன் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பாபா எப்படி கடைசி படமானதோ, பி.வாசுவுக்கு எப்படி குசேலன் கடைசிப் படமானதோ அதேப் போல் கே.எஸ்.ரவிக்குமாருக்கு லிங்கா கடைசிப் படம். 

லிங்கா எத்தனைக் கோடி வேண்டுமானாலும் வசூல் செய்யட்டும். படைப்பு ரீதியாக லிங்கா படுதோல்வி. இப்படி ஒரு கதையை எடுத்ததற்கே பாராட்ட வேண்டும் என்கிறார்கள். ஒரு வரலாற்று நிகழ்வை தவறாக பதிவு செய்துள்ளார்களே அது எவ்வளவு பெரிய துரோகம். இனி பென்னி குயிக்கின் வரலாற்றை யாருமே திரைப்படமாக எடுக்க முடியாதபடி செய்திருக்கிறார்களே அது நியாயமா...?

காரணமே இல்லாமல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட ஒரு அணையைப்பற்றிய கதையை ரஜினி ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்...? அவர்கள் சொல்லாவிட்டாலும் அது தற்போது தமிழர்களால் அதிகம் பேசப்படுகிற முல்லைப் பெரியாறு அணையப் பற்றிய கதைதான் என்பது தானே நிதர்சனம். அந்த அணையைக் கட்ட பென்னி குயிக் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டார் என்பதை வரலாற்றின் மூலம் அறிவோம். பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது விபத்தில் சிக்கி இறந்த அவரது ஆறு வயது மகளை அங்கேயே புதைத்துவிட்டு  பணியைத் தொடர்ந்தார் என்றெல்லாம் படித்திருக்கிறோம். அது போலவே இதில் லிங்கேஸ்வரன் பல சவால்களை எதிர்கொள்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியது பிரிட்டிஷ் அரசாங்கம். இதில் அவர்களை வில்லன்கள் போல் சித்தரிப்பதில் கூட லாஜிக் பார்க்கவில்லை. ஆனால் தமிழத்தின் மிக முக்கியமான ஒரு பிரச்னையை தொட்டுவிட்டு அதில் உள்ள அரசியலை துளி கூட பேசாமல் போனால் எப்படி..?

1979 ஆம் ஆண்டிலிருந்தே அணை திடமாக இல்லை, அதனால் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று பம்மாத்து காட்டிக்கொண்டிருக்கும் கேரள அரசுக்கு, அணையின் ஸ்திரத்தன்மையை நிரூபிப்பதிலே தமிழக அரசின் தாவு தீர்ந்து போய்கொண்டிருக்கிறது. இதைத்தான் லிங்கா படத்தின் ஆரம்ப காட்சியில் காண்பிக் கிறார்கள். அணை திடமாக இல்லை என்று சர்டிஃபிகேட் கொடுக்கும்படி வில்லன் மிரட்டுகிறார். ஆனால் உண்மையிலேயே அணை திடமாகத்தான் உள்ளது என்கிறார் பொன்வண்ணன். இதில் வில்லனை கேரள அரசின் குறியீடாகத்தான் காண்பிக்கிறார் இயக்குனர். அப்படியே நூல் பிடித்தது போல் செல்ல வேண்டியது தானே...?

படத்தின் ஆரம்பத்தில் இந்தப்படம் முல்லைப் பெரியாறு கட்டிய பென்னி குயிக்கின் கதை என்று தைரியமாக சொல்ல வேண்டியதுதானே. அப்படி சொன்னால் கேரளாவை வில்லனாக சித்தரிப்பது போல் ஆகிவிடும். அங்கிருந்து வரும் 4 கோடி கலெக்சன் கட்டாகிவிடும். ஏன் மலையாளப் படத்தில் தமிழர்களை வில்லனாக சித்தரிக்க வில்லையா..? பெரும்பாலான மோகன்லால் படங்களில் வில்லன்கள் தமிழ் பேசுவார்களே.. இதே முல்லைப் பெரியாறு பிரச்சனையை மையமாக வைத்துத்தானே சோஹன் ராய் என்ற மலையாளி DAM999 என்ற படத்தை எடுத்து நாம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை எல்லாம் நக்கலடித்தார். அந்த தைரியம் கூட இவர்களுக்கு இல்லையே.

மீத்தேன் திட்டத்தைப் பற்றி காவிரி டெல்டா விவசாயிகளுக்கே சரியான புரிதல் கிடையாது. ஏன் அத்திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட திமுக அரசுக்கே அதிலுள்ள சாதக பாதங்களைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு அடிப்படை அறிவு கிடையாது. ஆனால் மீத்தேன் பற்றிய விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் பரப்பியது கத்தி படம் இல்லையா..? சுட்ட கதைதான் என்றாலும் அரசியல் ரீதியான எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் கதையில் எவ்வித சமரசமும் செய்துக் கொள்ளாமல் பிரச்சனையின் தீவிரத்தை உள்ளபடியே சொன்னதால்தானே தல ரசிகர்களும் அப்படத்தை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

நீங்கள் எடுத்தது தமிழ் படம்தானே. அதில் தமிழ் நாட்டுப் பிரச்சனையைப் பற்றி தைரியமாக பேச தில் இல்லை என்றால் என்னா ம@#$துக்கு இந்த டேம் கதையை எடுக்கனுங்கிறேன்..?

நம்ம தலைவரின் தைரியத்தை குசேலன் படத்தின் போதே பார்த்தாச்சு. ஒக்கேனக்கல் பிரச்சனை தொடர்பாக தமிழ்த் திரையுலகம் நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தலைவர் உணர்ச்சி வசப்பட்டு வாட்டாள் நாகராஜனை மைக்கில் வெளுத்து வாங்கினார். பிறகு, குசேலன் படம் கர்நாடாகாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இழப்பு சில கோடிகள் தான், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தார். கடைசியில் என்ன நடந்தது ..? கன்னட டிவிகளில் கதறிக் கதறி மன்னிப்பு கேட்டாரே ஞாபகம்  இருக்கா..?  

 ஒரு 'சின்ன மேட்டரை' சொல்லி ஒற்றுமையாக இருக்கும் இந்தியர்களை சாதிய ரீதியாக ஒருவரால் பிரிக்க முடிகிறது. அப்படி பிரிந்து கிடக்கும் இந்தியர்களை, முதலியார்கள் யாரும் வரவேண்டாம், நாயுடு, செட்டியார், கவுண்டர், கீழ் சாதி, மேல்சாதி, இந்து, முஸ்லிம், கிருஸ்துவர் யாரும் வரவேண்டாம். உடம்பில் இந்திய ரத்தம் ஓடுறவன் மட்டும் வாங்கடா என்கிறார் ரஜினி. ஒட்டு மொத்த சாதி வெறியையும் தூக்கி எறிந்துவிட்டு இந்தியன் என்கிற ஒரு புள்ளியில் எல்லோரும் இணைவதாகக் காட்டியிருக்கிறார்கள். இவ்வளவு சின்ன டயலாக்குல இவ்ளோப் பெரிய விஷயம் பொதிந்து கிடப்பது இப்பத்தான்யா தெரியுது. இது தெரியாமத்தான் பெரியார் அத்தனை வருஷம்  கஷ்டப்பட்டிருக்கிறார்.

லிங்கா படம் திரைக்கதை, காட்சியமைப்பு, இசை , நடிப்பு , வசனம், இயக்கம் என எல்லா வகைகளிலும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அது ஒரு வரலாற்றுப் படம் என்று மட்டும் சொல்லாதீர்கள். கருத்தியல் ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் லிங்கா படு தோல்வியை சந்தித்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

23 comments:

  1. எப்படி சார்? இது மாதிரி தனக்கு பிடித்தவரின் படத்தையும் அழகாக நயமாக பாரபட்சமில்லாமல் விமர்சிக்கிற தமிழன் இன்னமும் இருக்கானா? நீங்க எழுதினதுல ஒரு வரி கூட தேவை இல்லாம இல்ல.

    ரஜினியின் அளவில்லா மற்றும் அடக்கமான நடிப்புத்திறன இங்க உபயோகிக்க ஆளே இல்ல. ராஜாதி ராஜா மற்றும் தம்பிக்கு எந்த ஊருல ரஜினி பண்ண இயல்பான நகைசுவைய இன்னைய வரைக்கும் யாரும் நெருங்கல.

    முள்ளும் மலரும் லெவெலுக்கெல்லாம் எதிர்பாக்கல தலைவா. உங்க வயசுக்கேத்த, ஊரே கொண்டாடுற அருமையான காமெடி படம் உங்களால தர முடியும். எதிர்பாக்குறோம்.

    அருமையான எழுத்து. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அனானியாருக்கு நன்றி

      Delete
  2. சாட்டையடி!(என்னமோ,போங்க.ரஜனி ரசிகன்,எனக்குப் புடிச்சிருந்துது.)

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்.ரஜனிக்கு இதை யாராவது படித்து காட்டினால் தேவலை.

    ReplyDelete
  4. ஐயோ பாவம் ! 50 +20 = 70$ கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டீர்களே. நல்லவேளை ரஜினி அவர்கள் 50வயதை தாண்டியவுடன் நடித்த எந்த படத்தையும் நான் காணவில்லை . தப்பித்தேன்.

    ReplyDelete
    Replies

    1. தலைவருக்காக செலவு பண்ணலாம்,. ஆனால் ஓசியில் படம் காட்டுவது போல் யாரும் விமர்சனமே பண்ணக் கூடாது என்கிறார்கள். அதனால்தான் வரவு செலவை சமர்பித்தேன் :-) :-)

      Delete
  5. kuselan prachnayil kathiri azuthar endru solvathu ungalaukku over a theriya villaya? athu pana prachinaya mattum neenga paukkuringa, anaa athula irukkum arasiyal matrum athanale resgargalaukku erpadum bathippu ellam parthu avar varutham therivithar. oru padathulu irukke nirai , kurai solrathukku ellarukkum urimai irukkua ,aana atha thandi thanimanitha kazpunarchi varumboththan ella prachnaiyuim.
    -- Balaji.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்...அரசியல் ரீதியான ரஜினியின் நிலைபாடுகளைப் பற்றி சொல்வதற்காக குசேலன் பிரச்சனையை எடுத்துக் கொண்டேன். ஏற்கனவே படத்திற்கு விமர்சனம் எழுதி விட்டேன். ஆனால் அழுத்தமாக சொல்ல வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வை போகிற போக்கில் சொல்லிவிட்டு போன விசயத்திற்காக மட்டும் இந்தப் பதிவு. ரஜினியை கன்னடன் என்று சிலர் விஷமப் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்த போதுதான் ஒக்கேனக்கல் பிரச்சனை வந்தது. ஏற்கனவே நெய்வேலி பிரச்சனையில் அவரது இரட்டை வேடம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது அறிந்ததுதான். அப்படி ஒரு சூழலில்தான் ரஜினி கன்னட அமைப்புக்கு எதிராக பேசி ஆச்சர்யப் படுத்தினார்.கர்நாடக உரிமை 2 கோடிதான்.அதை என் சம்பளத்தில் கழித்துக் கொள்கிறேன் என்றார். ஆனால் அடுத்த வாரமே கன்னட அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன..?

      பொதுவாகவே ரஜினி எந்த விசயத்திலும் சமரசம் செய்துக் கொள்பவர். அப்படிப்பட்டவரை வைத்து முல்லைப் பெரியாறு கதையை எடுத்தால் எப்படி ஒரிஜினாலிட்டி வரும்.. அது இரு மாநில சம்மந்தப் பட்ட சென்சிடிவான பிரச்சனை அல்லவா.. அதை முழுமையாக உள்ளதை உள்ளபடியே எடுக்க வக்கு இல்லாதவர்கள் எதற்காக அக்கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.

      Delete
  6. உண்மையான விமர்சனம்...
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி -'பரிவை' சே.குமார்

      Delete
  7. மூவாயிரம் ரூபாயா...? ஏங்க இப்படி...?

    // சின்ன டயலாக் - பெரிய விஷயம் // நீங்கள் உருப்படியான செய்தியையும் சொல்ல தவறவில்லை...

    செந்தில் - கவுண்டமணி ஹா... ஹா...

    ReplyDelete
  8. enatha solrathu... THALIVAR amithiya than irukar... nama than eppothu exception oda movie ku poram.. athu illana ena pandarathu... ormam ukkara vendiyathu than..vera vali...

    neenga parunga still one india news vetri,vtri nu buildup mattum poietu than iruku...

    ReplyDelete
    Replies
    1. படம் வந்து ஒரு வாரம்தானே ஆகிறது. அவ்வளவு சீக்கிரம் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

      Delete
  9. பென்னிகுயிக்கின் தியாகத்தை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக தேச பக்தி வண்ணம் பூசி கொச்சைப் படுத்துவார்கள் என்று நான் எண்ணவில்லை. இதற்கான எதிர்வினை இன்னும் எப்படி மக்களிடம் எழாமல் இருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது. நான் படித்தவரை இரண்டில்தான் (உங்கள் கட்டுரையையும் சேர்த்து) இந்த வரலாற்றுப் புரட்டைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. மைதிலி என்பவர் இப்போதே சில பாமர மக்கள் "இந்த டேமு நம்மாளுக கட்டுனதாமுள்ள...இந்த ரசினி படம் வராட்டி இது நமக்குத் தெரியாமயே போயிருக்குமே" என்ற ரீதியில் பேசிக்கொள்வதாக எழுதியிருந்தார். உங்களின் கோபம் நியாயமானதே. துணிச்சலான விமர்சனம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. /இந்த டேமு நம்மாளுக கட்டுனதாமுள்ள...இந்த ரசினி படம் வராட்டி இது நமக்குத் தெரியாமயே போயிருக்குமே //

      செம காமெடி பாஸ்.. பென்னி குயிக்கை ஒரு பகுதி மக்கள் கடவுள் போல கும்பிடுகிறார்கள். சமீபத்தில் என் அன்னைக்கு அடுத்து பென்னிகுயிக் சிலையின் காலில்தான் விழுந்திருக்கிறேன் என வைகோவே சொன்னார். இவர்கள் ரஜினியை வைத்து பென்னி குயிக்கை கேவலப்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்

      Delete
  10. Intha kizhavan ellaam nadikanumnu yaar azhudha.

    Jim

    ReplyDelete