Thursday 22 November 2012

தமிழக அரசியல் களத்தில் 'வௌவால்கள்'


"ஆமை புகுந்த வீடு உருப்புடாது"  என்று தமிழில் முற்போக்குச் சிந்தனையைத் தூண்டக்கூடிய(?!) ஒரு பழமொழி உண்டு.அதனாலையோ என்னவோ தமிழக அரசியலில் களம் பல கண்ட அந்தப் புகழ்பெற்ற நடிகரை  'ஆமை' என்று அரசியல் நோக்கர்கள் அழைத்தனர்.........!!!

அதேபோல் தமிழக அரசியலில் 'வௌவால்கள்' நிறையவே உண்டு.

தான் இருக்கும் கட்சி மட்டுமே ஜெயிக்கவேண்டும் என நினைப்பவன் அரசியல்வாதி...ஜெயிக்கும் கட்சியில் மட்டுமே தான் இருக்க வேண்டும் என நினைப்பவன் வௌவால்..(புரியலையே....என்று உச்சந்தலையை சொரிபவர்கள் கடைசியில் சொல்லப்பட்ட கதையை முழுவதுமாகப் படிக்கும் வரை பொறுத்திருக்கவும்.)

நான் சொல்லப்போ
தும் அதுமாதிரியான ஒரு வௌவாலைப் பற்றிதான்.

"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி........"   

இப்படி பாட்டாவே படிக்க வேண்டிய விஷயத்தை,பேஸ்புக்ல ஸ்டேடஸ் போடுற மாதிரி அந்தக் கட்சியின் தலைமைக்கு 'சுருக்கமா' தெரியப் படுத்தியிருக்கார் அவர்.ஆனால் இது முதல்முறை அல்ல...மாசத்துக்கு ஒருக்கா இப்படித்தான் கெஞ்சிப் பார்க்கிறார்.ஆனால் அழைப்பு வந்தபாடில்லை.கடைசில இவருக்கு அழைப்பு வருகிற நேரம் பார்த்து ஆட்சி மாறும்.அப்புறம் இந்தப் பக்கம் தாவுவார்(பின்ன...அதனாலதானே வௌவால்-னு சொல்றோம்..)

நான் எந்த வெளவாலைப் பற்றி சொல்றேன்னு புரியுதுங்களா...? அவர் ஒரு 'காமெடி நடிகர்' கம் 'நாடக நடிகர்' கம் 'அரசியல் கோமாளி..ச்சீ அரசியல்வாதி' கம் 'முன்னாள் எம்எல்ஏ' (போற இடமெல்லாம் 'பசை' போட்டு ஓட்டிப்பார் போல)..ஓரளவு யூகித்து இருப்பீங்க....

 
"தோட்டத்திலிருந்து அழைப்பு வந்தால் அதிமுகவில் சேருவேன்.." இதுதான் அந்த மறைமுக
க் கெஞ்சல்.

அதுசரி ...எதனால் வெளவால்...?

முதலில் வெளவால் ஏன் தலை கீழாக தொங்குகிறது என்ற இந்தக் கதையை படித்தீர்கள் என்றால் தமிழக அரசியலில் எத்தனை வெளவால்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இனம் காணமுடியும். 

முதலில் வெளவால் ஏன் தலைகீழாக தொங்குகிறது ?(முகநூலில் படித்தது)

ரு காட்டில் விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும் பலத்த போர்.காடு யாருக்குச் சொந்தமென்று. பல நாட்கள், மாதங்கள் நடைபெறுகிறது போர். ஒரு கட்டத்தில் விலங்கினங்கள் ஜெயிக்கிற மாதிரி ஒரு சூழல் வருகிறது. பறவைக்கூட்டத்தில் இருந்த வௌவால் இதைக் கணிக்கிறது. உடனே பறந்து விலங்கின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள நினைக்கிறது.

வௌவாலைத் தடுக்கிற பறவைக்கூட்டணி. ‘நீ செய்வது நியாயமா’ என்று கேட்கிறது.

பறவைக்கூட்டணி தன்னைப் பார்த்து அவ்வாறு கேட்டதும் வௌவால் சொன்னது: ‘நானென்ன உங்களைப் போல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறேனா? நான் குட்டியிட்டு பாலூட்டுகிறேன். பாலூட்டுவதால் நான் விலங்கினம்’ என்று சொல்லிவிட்டு விலங்குக் கூட்டணியில் சேரப் பறந்தோடியது.போரில் வெல்ல எவர் வந்து கூட்டத்தில் சேர்ந்தாலும் சேர்த்துக் கொள்வோமென விலங்கினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது.

போர் தொடர்ந்தது. இரு தரப்பும் சம பலத்தில் இருக்க, இப்போது பறவையினம் ஜெயிக்கிறாற்போல ஒரு தோற்றம். பயந்தது வௌவால். சடாரெனப் புறப்பட்டது பறவைக் கூட்டத்தில் சேர. தடுத்த விலங்கினத்திடம் கூறியது: ‘நானென்ன உங்களைப் போல நாலு காலால் நடக்கிறேனா?இதோ பாருங்கள்..இறக்கை இருக்கிறது.. பறக்கிறேன். பறப்பதால் நான் பறவையினம்!’ என்று சொல்லிவிட்டுப் பறந்தது. கூட்டணி தர்மத்தில் பறவையினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது!

மீண்டும் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் போர் தொடர்ந்தது. பொறுத்துப் பார்த்த வனதேவதை சடாரென இரண்டு தரப்பினரின் முன்பும் தோன்றினாள்.

“இதோ பாருங்கள்…. இந்தக் காடு உங்கள் இருவருக்கும் சொந்தமானதல்ல. அப்படி ஓர் எண்ணமிருந்தால் அதை மூட்டை கட்டி வையுங்கள். இந்தக் காடு எனக்குச் சொந்தம். இதில் நீங்கள் இருக்க வேண்டுமானால் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.இந்த இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இப்படி சண்டையிடுவீர்- களேயானால் இப்போதே இந்தக் காட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்றது கண்டிப்பான குரலில்.

வனதேவதையின் உக்கிரத்தைக் கண்ட விலங்கினமும், பறவையினமும் தங்கள் போரை நிறுத்திக் கொள்வதென தீர்மானித்தன. போரை வாபஸ் வாங்கிக் கொண்டு ஒற்றுமையாக காட்டின் நலனுக்காக உழைப்பது என முடிவெடுத்தன.

இப்போது திண்டாடியது வௌவால். பறவையினம் ‘நீ என்ன எங்களைப் போல முட்டையிட்டா குஞ்சு பொரிக்கிறாய்? போ.. போ.. விலங்குகளுடனே வாழ்’ என்று துரத்த விலங்கினமோ ‘நீ இறக்கையெல்லாம் வைத்துக் கொண்டு பறக்கிற பறவையல்லவா.. போ.. போ… பறவைக் கூட்டத்தில் சென்று வாழ்’ என்று துரத்தின.

சந்தர்ப்பத்திற்காக மாறி மாறி கூட்டு சேர முற்பட்டதால் இரண்டு புறமும் சேர முடியாத வௌவால், அவமானத்தால் பகலில் தலைகாட்ட இயலாமல் பகல் முழுதும் தலைகீழாகத் தொங்கி இரவு மட்டுமே இரை தேடி, உண்ணும் வாய் வழியாகவே மலமும் கழிக்கிற அவல நிலைக்கு ஆளானதாம்!

இப்போது புரியுதுங்களா வௌவால் என்று அழைத்ததற்கான பின்னணி...! அப்படிப் பார்த்தால் காட்டில் உள்ள வௌவால்களை விட நாட்டில் உள்ள வௌவால்களின் எண்ணிக்கையே  அதிகம்.

டிஸ்கி
 நம் அரசியல்வாதிகளை வௌவால்களோடு ஒப்பிட்டுப் பேசியதால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலின் அடிப்படையில்  காட்டில் உள்ள வௌவால்கள் அனைத்தும் சட்டப் பிரிவு 66A -ன் கீழ் என் மீது வழக்குப் பதிவு செய்தால் அதை சந்திக்கும் மனதைரியமும், எதிர்த்துப் போராடும் போர்க்குணம் கொண்ட காகிதப் புலிகளின் ஆதரவும் எனக்கு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.:-))))))))



வணக்கங்களுடன்...
மணிமாறன்.
-----------------------------------------------------------------(((((((((((((()))))))))))))))))--------------------------------------------------------

9 comments:

  1. உண்மையாகவும் இருக்கிறது.....
    சில மனிப்புறாக்களும் இருக்கின்றனவே..

    ReplyDelete
    Replies
    1. மணிப்புறாக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் பாஸ்...ஆனால் வௌவால் கூட்டம்தான் இங்கு அதிகம்.. நன்றி

      Delete
  2. super story:why so much "KAANDU" on sekar poonool?

    ReplyDelete
    Replies
    1. thanks bro...பாஸ்...இதுல நீங்க சொல்றமாதிரி எதுவும் கிடையாது.மற்ற அரசியல்வாதிகளைப் பற்றி கேவலாமாக பேசுபவர்கள் தான் ஒழுங்காக இருக்க வேண்டாமா..? இவரோட 'காதில பூ' என்ற நாடகத்தை கேட்டுப் பாருங்க.ஒரு எம்.எல்.ஏ வை செம கிண்டல் அடிப்பார்.இப்ப இவரே அப்படித்தான் இருக்காரு...

      Delete
  3. என்னுடைய ஆதரவும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
    tm3

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்..

      Delete
  4. அரசியல் செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளன. நான் சமீபத்தில் அரசியல் கட்டுரைகளை http://www.valaitamil.com/politics என்ற இணையதளத்தில் பார்த்தேன். சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது.நீங்களும் சென்று பாருங்களேன்.

    ReplyDelete