Showing posts with label MASTERCAM. Show all posts
Showing posts with label MASTERCAM. Show all posts

Thursday, 22 March 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?-PART-5


 MASTERCAM-தமிழில்...


   MASTERCAM-ன்  விளக்க வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதிலுள்ள மொத்த COMMANDS-யையும் வகைப்படுத்தி உங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக இந்த FLOW CHART வரைந்துள்ளேன். ஒவ்வொரு COMMAND-யையும் தனித்தனியே விளக்கும் போது இது எதற்கு?... இதன் உபயோகம் என்ன?... என்பது  தெரியவில்லை என்றால் மேற்கொண்டு படிப்பதற்கு உங்களுக்கு ஆர்வமில்லாமல் போகலாம்.அதற்காகத் தான் இவ்வளவு அறிமுகம் கொடுக்க வேண்டியதாயிருக்கிறது.
 


MASTERCAM-ஐ இரண்டு பிரிவுகளாப் பிரிக்கலாம்.  

1.DESIGNING ( வடிவமைத்தல் )
2.TOOL PATH ( இதன் விளக்கம் இங்கே சென்று பார்க்கவும் )

சரி... DESIGNING-ன்ன என்ன?  நமக்கு 'கஸ்டமர்' கொடுத்த வரை படத்தை (DRAWING) அல்லது மாதிரியை (SAMPLE) அவர்களின் தேவையை அறிந்து MASTERCAM-ல் வரைவது.

                  சில நேரங்களில் கஷ்டமர்களே AUTOCAD-ல் வரைந்து DWG/DXF  .'.பைல்களாகவோ அல்லது STEP, PARASOLID, IGES .'.பைல்களாகவோ கொடுத்து விடுவர்.இது மாதிரி தருணங்களில் நமக்கு ஒரு வேலை மிச்சம். இதை நேரடியாக MASTERCAM-ல் இறக்குமதி(IMPORT) செய்து TOOLPATH எடுத்து விடலாம்.ஆனால் இது போல கொடுக்கப்படும் .'.பைல்கள் சில நேரங்களில்  பிரச்சனை கொடுத்து விடும்.TOOLPATH எடுத்தால் ERROR காண்பிக்கும்.என்னப் பிரச்சனை என்று கண்டு பிடிப்பதற்குள் உயிரே போய்விடும்.பேசாமல் புதுசாவே  MASTERCAM-ல் வரைந்து விடலாம் என்று எண்ணத்தோன்றும். இதற்கு என்ன காரணம்னா...AUTOCAD என்பது வரைபடத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ஒரு மென்பொருள்.அதில் வரையும் போது கோடுகள் இணையாமலோ அல்லது புள்ளிகள் அழிக்கப்படாமலோ இருத்தால் AUTOCAD -ல் பெரிய பிரச்சனை ஒன்றும் வராது.ஆனால் அதையே MASTERCAM-ல் இறக்குமதி செய்து TOOLPATH எடுக்கும் போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
  
    ஆனால் அதே வரை படத்தை MASTERCAM-ல் நேரடியாக வரையும் போது இது போன்ற தவறுகள் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.சில நேரங்களில் பெரிய  நிறுவனங்களுக்கு 'MOULD' அல்லது 'DIE' செய்யும் போது அவர்களுக்கென்றே பிரத்தியோகமான குறீயீடு,வெளிப்புற அமைப்பு ( உதாரணம்..கோகோ கோலா பாட்டில்)இருப்பதால் அவர்களே DESIGN செய்ததை மாற்றாமல் TOOLPATH எடுக்க வேண்டிவரும். 

 மேலே உள்ள படத்தில் DESIGN-ஐ இரண்டாக பிரித்துள்ளேன்.

1 . CREATION    2.MODIFICATION.

        எந்த ஒரு வரைபடம் வரைந்தாலும் அதற்கு அடிப்படையான COMMANDS தான் புள்ளி(POINT), கோடு(LINE), செவ்வகம்(RECTANCLE), வட்டம்(CIRCLE), போன்றவைகள்.எல்லா வரைபடங்களும் இதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இவைகள் CREATION என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது.  

          இதன் பிறகு MODIFICATION.அதாவது வரைந்த படங்களை வெட்டுவது, சேர்ப்பது,சுற்றுவது,சிறிது-பெரிதாக்குவது,ஒன்றை பத்தாக்குவது-பத்தை நூறாக்குவது போன்ற பல வேலைகள் இதில் நடக்கும். இது முடிந்தவுடன்  உங்கள் வரைபடம் TOOLPATH எடுப்பதற்கு தயாராகிவிடும்.                  

3.TOOLPATH.
   
      MASTERCAM-ன்  புஜபல பராக்கிரமம் இதில் தான் அடங்கி உள்ளது.இதில் இரண்டு வகை உள்ளது.

1.  2D TOOLPATH 

2.  3D TOOLPATH

     இதன் தெளிவான விளக்கம் இங்கே சென்று பார்க்கவும்.சரி... முன்னோட்டத்தை இத்தோடு நிறுத்திக்கிறேன்.
----------------------------------------------------------------------X--------------------------------------------------------- 

  இப்ப DESKTOP -ல உள்ள MASTERCAM ஐகான டபுள் கிளிக் பண்ணா,இதோ கீழே உள்ள மாதிரி ஸ்க்ரீன் உங்களுக்காக பிரகாசமாக விரியும்.இதை சுருக்கமா சொல்லிட்டு நேரா மேட்டருக்கு போகலாம்.   
 



 சைடுல முதல்ல இருக்கிறது MAIN MENU.

    அதாவது மேலே சொன்ன விளக்கவரைபடத்துல இருக்கிற எல்லா COMMANDS-ம் இதில் தான் அடங்கியிருக்கு.நீங்க DESIGN அல்லது TOOLPATH எடுக்கணும்னா இங்கே போய்தான் செலக்ட் பண்ணனும்.

 அடுத்ததா MENU BUTTONS.

      ஒவ்வொரு தடவையும் MAIN MENU -ல உள்ள COMMANDS-யை கிளிக் செய்து அடுத்தடுத்து இன்னும் உள்ளே போயிட்டு திரும்ப முன்னால இருக்கிற  COMMANDS-க்கு வர்றதுக்கு இந்த 'BACKUP'  COMMAND நமக்கு உபயோகமாகுது. திரும்ப ஒரேயடியா MAIN MENU-க்கு வரணும்னா அடுத்ததா உள்ள MAIN MENU-வ ஒரு கிளிக் பண்ணிடுங்க போதும்.  

குறிப்பு:  நீங்கள் 'BACKUP' பட்டனை சொடுக்குவதற்குப் பதில் கிபோர்டு-ல் உள்ள Esc பட்டனைக் கூட உபயோகப் படுத்தலாம். 


அடுத்து SECONDARY MENU  
 
  அடுத்ததா இருக்கிற 'Z = 0' இது 2D வரைபடத்துக்கு எந்த மாற்றமும் இருக்காது. 3D-ல வரையும் போதுதான் இது மாறும்.இதுக்கு CONSTRUCTION DEPTH-னு சொல்வாங்க.இதைப்பற்றி SOLID வரையும்போது விளக்கமா சொல்றேன்.   

 டுத்ததா COLOR.இது ஒன்னும் கஷ்டமான விஷயம் அல்ல.நீங்கள் வரையக் கூடிய படத்தின் வண்ணத்தை உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். இதைக் கிளிக் பண்ணினா 16 கலர் காண்பிக்கும்.இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.


 அல்லது இன்னும் நிறைய வண்ணங்கள் வேண்டுமென்றால் 16/256 கிளிக் செய்தால் 256 வண்ணங்கள் கிடைக்கும்.


இதிலுள்ள மற்ற COMMANDS களை நாம 3D வரையரப்போ பார்க்கலாம் .

              அடுத்ததா நான் சொல்லப்போறது அடிப்படை எற்பாடு(BASIC SETUP).இது ரொம்ப ரொம்ப முக்கியம்ங்க.பிற்பாடு நீங்க MASTERCAM-ல பெரிய கில்லி  ஆயிட்டீங்கனா இந்தத் தலையை சுத்தி மூக்கத்தொடுற வேலையையெல்லாம் தவிர்க்கனும்.என்ன சொல்றேன்னு புரியுதுங்களா? நீங்க சீக்கிரமா வரைந்து புரோகிராம வெளிய எடுக்கிற விஷயத்தை தான் சொல்றேன்.உதாரணமா... உங்க கம்பெனியில என்ன மாதிரி மெசின் இருக்கு,அதுல எத்தன டூல்ஸ் இருக்கு,அது என்னென்ன டைப்புல இருக்கு,என்ன மாதிரி புரோகிராம அது படிக்கும் என்பதை ஆராய்ந்து அதை MASTERCAM-ல செட் பண்ணிடீங்கனா அதுக்கப்பறம் உங்க வேகத்தை  யாராலும் தடுக்க முடியாது.

     மொத்த SETUP-யும் இப்பவே சொன்னா குழம்பிடுவீங்க.மொதல்ல முக்கியமான இரண்டு விஷயம் செய்யப்போறோம்.உங்களுக்கு கொடுக்கப்பட்ட வரைபடம் எந்த அலகு(UNIT)ல இருக்குனு பாருங்க.ஒன்னு MM (மில்லிமீட்டர்-METRIC) அல்லது INCH(இன்ச்-ENGLISH) இருக்கும்.அதை  எங்கே போயி தேடுரதுன்னு யோசிக்க வேணாம்.அதன் விவரம் வரைபடத்தின் கீழே இருக்கும்.      


சரி  இதை எப்படி SET பண்றது?
               
MAINMENU-க்கு மொதல்ல போங்க...

 அப்பறம்   Screen -------->Configure .இப்ப System Configuration -னு ஒரு பேஜ்  திறக்கும். இதுல Start/Exit பட்டனை சொடுக்கினா,கீழே உள்ள மாதிரி இன்னொரு பக்கம் திறக்கும்.இதுல Startup Configuration File-ல போயிட்டு உங்களுக்கு தேவையானதை மாற்றிக்கொள்ளலாம்.      


அடுத்ததா AUTO SAVE.இது ரொம்ப  முக்கியமான COMMAND.நம்ம ஊருக்கு இது மிக மிக அவசியம்..நாம பல மணி நேரமா கஷ்டப்பட்டு வரைந்து, TOOLPATH எடுத்து முடிக்கிற நேரத்தில பவர்கட் ஆயிடும்.அல்லது சில நேரங்களில் சிஸ்டமே மக்கர் பண்ணி அப்படியே நின்னுடும்.நாம வரையிற ஆர்வத்தில SAVE பண்ணாம விட்டுடுவோம்.இப்ப சிஸ்டத்தை ஓபன் பண்ணிப் பாத்தா நாம இதுவரை வரைந்தது எதுவுமே இருக்காது.ஒரு இன்டர்வியுல எனக்கு இப்படித்தான் ஆயிடுச்சு.

     சரி AUTOSAVE -ன்னா  என்ன?.உதாரணமா  AUTOSAVE-ல 5 நிமிடம்-னு செட் பண்ணினா,ஐந்து நிமிட இடைவெளில ஒவ்வொரு தடவையும் அந்த பேஜ் ஓபன் ஆகி SAVE பண்ணவா?-னு  கேட்கும்.நாம ஓகே-னு க்ளிக் பண்ணினா தானாகவே SAVE-ஆகிடும்.

  இத எங்க போயி பன்றது?.இதுவும் அதே  Start/Exit பேஜ்லதான் இருக்கு.அங்கே கீழே போய் AutoSave என்கிற பட்டனை சொடுக்கினா கீழே உள்ள மாதிரி இன்னொரு பேஜ் திறக்கும்.அதுல போய் Active பட்டனை ஒரு டிக்.உங்களுக்கு எவ்வளவு கால இடைவெளி வேண்டும் என்பதை Interval -ல் பதிய வேண்டும். சரி...இது எங்கே போய் SAVE ஆகும்.குழம்ப வேண்டாம்.ஏற்கனவே இருக்கும் இடத்தில் அதே பெயரில் SAVEஆக வேண்டுமென்றால் அடுத்ததாக உள்ள 'Save using active Mastercam file name' -ஐ ஒரு  டிக் செய்யவும். 

 அடுத்ததா உள்ள Prompt before saving file-ன்னா என்ன?....இதை டிக் செய்துவிட்டால் ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கும் இந்த பேஜ் திறக்கப்பட்டு நம்மிடம் SAVE பண்ணவா? என்று  கேட்கும்.உடனே OK என்று சொடுக்க வேண்டும்.ஒருவேளை டிக் செய்யாமல் விட்டால் நம்மிடம் கேட்காமல் அதுவாகவே SAVE ஆகிக் கொண்டிருக்கும்.இது சில நேரங்களில் சிக்கலாகிவிடும்.நாம் AUTOSAVE போட்டோமா என்று கூட தெரியாமல் போய்விடும்.அதனால் நீங்கள் கீழே கண்பிக்கப்பட்டுளது போல் டிக் செய்து OK கொடுத்து மீண்டும் ஒரு OK,கடைசியாக YES கொடுக்க வேண்டும்.
   
 
சரி ...அடுத்தப் பதிவிலிருந்து CREATE-ல உள்ள ஒவ்வொரு COMMAND யையும் பார்க்கலாம்.

அடுத்தப் பதிவிலும் ச(சி)ந்திப்போம்......

---------------------------------------((((((((((((((((((((((((())))))))))))))))))))))-------------------------


Sunday, 18 March 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?-PART-4

                                                MASTERCAM-தமிழில்... 

  இந்தப் பகுதியில MASTERCAM எப்படி  INSTALL செய்வது என்று பார்க்கலாம்.இது SOLIDWORKS,UNIGRAPHICS போல உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள HARD DISK-ல்  அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.வெறும் 500MB இருந்தாலே இதற்கு போதும்.

  MASTERCAM -ஐ உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவ வேண்டுமானால்  குறைந்த பட்ச தேவைகள்..
  • Windows XP,  Vista or Windows 7 
  • Memory- 1 GB Minimum
  • RAM-     512 MB Minimum
  • Screen Rsln - 32-bit or 64-bit 
    சரி...இப்போ MASTERCAM எப்படி உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவுரதுன்னு படிப்படியா சொல்றேன்.

     உங்க கிட்ட  MASTERCAM CD இருந்தால் அதை அப்படியே CD ROM-ல போட்டு INSTALL செஞ்சிடாதீங்க..அந்த CD-யை அப்படியே COPY செய்து உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு FOLDER உருவாக்கி அதில் SAVE செய்துவிட்டு பிறகு இன்ஸ்டால் செய்யுங்கள்.இதை எதற்கு சொல்றேன்னா எதிர் காலத்தில ஏதாவது வைரஸ் தாக்கி வேலைசெய்யாமல் போச்சுன்னா மீண்டும் நீங்கள் நிறுவிக்கொள்ளலாம்.  


STEP-1
           முதல்ல நீங்க SAVE செய்த MASTERCAM FOLDER-ஐ திறந்து உள்ளே இருக்கிற SETUP FILE-ஐ டபுள்கிளிக் பண்ணுங்க...
 
 STEP -2
           அடுத்ததா NEXT பட்டனை ஒரு கிளிக்....        


STEP-3
     அடுத்ததா YES  பட்டனை ஒரு கிளிக்...

 STEP- 4
          அடுத்ததா உங்க பெயர்.அப்பறம் உங்க கம்பெனி பெயர் போடாம HOME-னு போட்டு  NEXT பட்டனை ஒரு கிளிக்.... 


 STEP-5
          அடுத்ததா கொஞ்சம் கவனமா இருக்கணும்.இது UNIT SELECTION.நீங்க செய்யப்போற பெரும்பாலான  JOB, METRIC-ல இருந்தால் METRIC-ஐ DEFAULT - ஆக தேர்வு செய்து NEXT பட்டனை ஒரு கிளிக் பண்ணுங்க.பிறகு வேண்டுமானால் INCH-க்கு மாற்றிக் கொள்ளலாம்.


 STEP-6
           அடுத்ததா எங்க நிறுவப்போறோம்னு கேட்கும். 'C ' யில் என்றால் NEXT பட்டனை ஒரு கிளிக் பண்ணுங்க....  

 STEP-7
       அடுத்ததா..MILLING,TURNING,DESIGN& WIRECUT இதுல நீங்க எதை நிறுவப் போறீங்கனு கேட்கும்.கீழே உள்ளது போல எல்லாத்தையும் 'டிக்' பண்ணுங்க. பிறகு தேவையில்லாததை நீக்கிவிடலாம்.(ஏதாவது ஒன்றை மட்டும் டிக் செய்தால் சில நேரங்களில் பிரச்சனை வருகிறது)

    
 STEP-8
            அடுத்ததா NEXT பட்டனை ஒரு கிளிக்....  


STEP-9

       இப்போ MASTERCAM உங்க கம்ப்யூட்டரில் INSTALL ஆக ஆரம்பித்திருக்கும்.


STEP-10
         
         இப்போ 100 %  முடிந்தப் பிறகு POST PROCESSOR நிறுவ வேண்டுமா என்று கேட்கும்.இந்த இடத்தில் POST PROCESSOR என்றால் என்ன என்பதை சுருக்கமாக  சொல்லி விடுகிறேன்.MASTERCAM-ல் TOOLPATH எடுத்தப்பிறகு அதை MECHINE- க்கு  உரிய NC PROGRAMM-ஆக மாற்றக்கூடிய ஒரு சாப்ட்வேர். இது C++ ல் எழுதப்பட்டிருக்கும்.இதை ஒவ்வொரு  MECHINE-க்கு தகுந்த மாதிரி மாற்றலாம். இதை கடைசியாக விளக்குகிறேன்.அடுத்ததா YES  பட்டனை டபுள் கிளிக்...    
           

STEP-11
           அடுத்ததா NEXT பட்டனை ஒரு கிளிக்....


 STEP-12

           அடுத்ததா NEXT பட்டனை ஒரு கிளிக்....


STEP-13

   மற்ற CAD/CAM SOFTWARE-களில் வரைந்த படங்களை MASTERCAM-ல் IMPORT செய்யும் வசதி உள்ளது.அதற்காக கீழே உள்ளது போல எல்லாவற்றையும்  டிக் செய்து NEXT பட்டனை ஒரு கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் MASTERCAM முழுவதுமாக  நிறுவப்பட்டிருக்கும்.



STEP -14
                         
  



    இப்ப உங்க DESKTOP SCREEN-ல்ல இப்படியிருக்கும். இனிமே தான் முக்கியமான வேலையே இருக்கு.இப்ப 'MILL9' என்கிற ஐகான 'டபுள்கிளிக்' செய்தா 'HASP NOT FOUND' என்கிற error வரும்.HASP என்பதன் விரிவாக்கம் Hardware Against Software Piracy.அதாவது MASTERCAM வேலை செய்வதற்கான லைசென்ஸ்.இது உங்கள் CPU-க்கு பின்னால் செருகக்கூடிய ஒரு சாதனம். அதன் படம் கீழே இருக்கு.     





ERROR
HASP DEVICE


   இந்த HASP DEVICE-க்கு நான் எங்கே போறது?-னு யோசிக்கிறவங்க கவலையே பட வேண்டாம்.இது MASTERCAM -ஐ பயன்படுத்தி உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளுக்கு மட்டும்தான். நமக்காக Educational Version இருக்கு.இதை இணையத்திலிருந்து நாம் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நமக்கு வெளியில் கிடைக்கும் CD கூட இந்த வகைதான்.சரி...இதை எப்படி வேலை செய்ய வைப்பது?.....மிக முக்கியமான விஷயம் இதுதான்.
 
STEP-15
             
            முதல் STEP-ல் சொன்ன மாதிரி  MASTERCAM FOLDER-ஐ திறந்து உள்ளே இருக்கிற CRACK FILE-ஐ டபுள் கிளிக் பண்ணுங்க...

STEP-16
           அடுத்ததா Lc_mcam9 பட்டனை டபுள் கிளிக்....
            


STEP-16
           அடுத்ததா 'APPLY' பட்டனை ஒரு கிளிக்....


 


STEP-17
           ஓடி முடிந்ததும் கீழே உள்ளது போல் வரவேண்டும்.தற்போது உங்கள் MASTERCAM நூறு சதவீதம் வேலை செய்ய தயாராகிவிட்டது. 




இப்ப உங்க DESKTOP SCREEN-ல்ல உள்ள 'MILL9' என்கிற ஐகான 'டபுள்கிளிக்' செய்தா இப்படி வரும்...


இதை ' X ' செய்துவிட்டால் அடுத்தது கீழே உள்ள மாதிரி வரும்.


  இதை 'டிக்' செய்து 'YES' பட்டனை அழுத்திவிட்டால்..நீங்கள் வரையத் தயாராகி விடலாம்.(இது முதல் முறை மட்டும் தான் வரும்.) 

         நீங்கள் MASTERCAM-9 அல்லது மற்ற VERSION எதுவாக இருந்தாலும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் போது ஏதேனும் பிரச்சனை வந்தால் இங்கே பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்,
 
    MASTERCAM சம்மந்தமாக உங்களுக்கு எழும் சந்தேகங்களையும் இங்கே கேட்கலாம்.அதற்கான பதிலை ஒரு பதிவாக போடுகிறேன்....


அடுத்தப் பதிவிலும் ச(சி)ந்திப்போம்...... 

----------------------------------------((((((((((((((((((((((((()))))))))))))))))))))))----------------------------

Monday, 5 March 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?-PART-3


MASTERCAM-தமிழில்...



CNC மெசின் பத்தி நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும்.அதுல MASTERCAM-ன் பங்கு என்ன என்பதைப் பத்தி முதல்ல தெளிவா சொல்லிடுறேன்.இல்லன்னா இதெல்லாம் எதற்காக சொல்றேன்,இது எங்க உபயோகமாகுதுன்னு தெரியாம குழம்பிப் போயிடுவீங்க..

        இப்போ நம்ம கையில நாம போட வேண்டிய JOB யோட வரைபடம் இருக்கு.இத வச்சி MASTERCAM-ன் உதவியோடு CNC மெசின்ல்ல எப்படி JOB போட்டு வெளியில எடுக்கப்போறோம் என்பதை சுருக்கமா சொல்லிடுறேன். பிறகு ஒவ்வொரு Commands -யையும்  தெளிவா விளக்கமா பார்க்கலாம்.

     நம்ம வாடிக்கையாளர் ('கஷ்ட'மர்) கொடுத்த DRAWING இதோ கீழே இருக்குங்க. நம்ம கைக்கு DRAWING  வந்த உடனே மொதல்ல  நாம செய்ய வேண்டியது PROCESS  PLANNING.வெயிட்...........வெயிட்...... பயந்திடாதிங்க.இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க.உதாரணமா..நீங்க 'சாம்பார்' வைக்க போறீங்கனு வச்சிப்போம்.....(ஒரு பேச்சுக்கு).சட்டியத்தூக்கி அடுப்புல வக்கிறதுக்கு முன்னால, காய்கறி எல்லாம் வெட்டிவச்சி,புளி,பருப்பு ஊறபோட்டு,எண்ணெய்,கடுகு, பெருங்காயம் எல்லாம் எடுத்து வச்சுகிட்டு ரெடியா இருப்போம்ல...அதுபோல தாங்க...CNC மெசின்ல்ல JOB  போடுறதுக்கு முன்னாடி,இத எங்க புடிச்சி போடப்போறோம்,எப்படி போடப்போறோம்,இதுக்கு என்னென்ன TOOLS தேவைப்படும், எந்த ஆபரேசன மொதல்ல போடுறது இத எல்லாத்தையையும் முடிவு பண்ணி ரெடியா இருக்கிறது தான் PROCESS PLANNING-னு சொல்வாங்க.இதைப்பத்தி விளக்கமா TOOLPATH நடத்தரப்போ சொல்றேன்.இதெல்லாம் எதுக்குன்னு கேக்குறீங்களா?.......CNC மெசின்ன நிக்காம ஒட்டுனுமாம்.இத ஏதோ பணம் அடிக்கிற மெசின்னு ஒவ்வொரு முதலாளிங்களுக்கும் நெனப்பு.ஒரு நிமிஷம் நின்னாலும் அவங்க வாழ் நாளுல ஒரு வருஷம் கொறஞ்ச மாதிரி கத்தி ரகளையே செய்வாங்க.இதுல இந்த ஆபரேடரோட பாடுதான் படு திண்டாட்டம்.சில நேரங்களில அவசரத்துக்கு 'உச்சா' போகக் கூட முடியாம நம்ம உசிர எடுத்திடுவாய்ங்க. இதெல்லாம் எங்கேன்னு கேட்கிறீங்களா? அட..நம்ம ஊர்ல தாங்க.ஒரே ஒரு CNC மெசின்ன வாங்கிப் போட்டுட்டு ஊரையே வளைச்சி போட்டுரலாம்னு கனவு கான்பாங்க... நம்ம ஊர்ல போடுற JOB-யோட தரம் சரியில்லாததுக்கு இது போல 'துக்கடா கம்பெனி'க தான் காரணம்.இவங்களுக்கு  Sub Contractors-னு பேரு...

               எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆதங்கம்....ஏன் நம்மளால சொந்தமா ஒரு .'.ப்ளைட்(FLIGHT) தயார் செய்ய முடியல?அதற்கான தொழில்நுட்பம் இல்லையா?......தேவையான இடம் இல்லையா?.........அல்லது திறமையான மனிதவளம் இல்லையா?..சரி...அட்லீஸ்ட் .'.ப்ளைட்-க்கான ஸ்பேர் பார்ட்ஸ்- ஆவது செய்யுறோமா?..... ஒரு விஷயம் தெரிஞ்சுக்குங்க..IT  துறையில மட்டும்  நம்ம ஆளுக வெளிநாட்ல கொடிகட்டி பறக்கலீங்க...  பெருமையா உங்க காலர தூக்கிவிட்டுக்குங்க....இந்த CNC &CAD/CAM துறையிலும் நம்ம ஆட்கள் தான் உலகம் முழுவதிலும் கம்பநட்டு,தோரணம்கட்டி,கொடியகட்டி,பந்தல்போட்டு, பட்டயக் கெளப்புறாங்க.பின்ன ஏன் நம்ம ஊர்ல இது சாத்தியமில்லை?



   ஒரே ஒரு உதாரணம் சொல்றேன்.நான் CNC துறையில் சேர்ந்த புதிதில்,ஒரு சின்னக் கம்பெனியில் வேலை செஞ்சேன். அங்க POWER STEERING செய்யும் ஒரு பெரிய கம்பெனிக்கு நாங்க  ஒரு வால்வு செஞ்சு கொடுத்தோம்.இதுக்கு முன்னாடி இந்த வால்வு ஜப்பானில் போட்டு இறக்குமதி செய்தார்களாம். அப்போது ஒரு வால்வு 400 ரூபாய் க்கு வாங்கியிருக்கிறார்கள்.அத எங்க பாஸ் போயி,பதினெட்டு ரூபாய்க்கு போடுவதாக சொல்லி ஆர்டர் எடுத்துட்டு வந்துட்டார்.ஆனால் ஆர்டர் எடுத்துட்டு வந்துட்டு நமக்கு கொடுக்கிற டார்ச்சர் இருக்கே....என்ன பண்ணுவியோ தெரியாது....ஒரு ஷிப்டுக்கு கொறஞ்சது 250 பீசாவது  வெளிய வரணும்-னு உத்தரவு போட்டுட்டு போய்டுவாரு.நாமளும் மண்டைய உருட்டி,மயித்த பிச்சி அப்படி இப்படின்னு PROGRAM செஞ்சி ஒரு வழியா JOP செட் பண்ணிக் கொடுத்துடுவோம்.அதுக்குப் பிறகு இந்த ஆபெரடர் படுற பாடு இருக்கே....மாட்டிக் கழட்டுரதுக்கே  நேரம் சரியா போய்டும்.பின்ன எங்கே CHECK பண்றது....அவசரத்துல போடும் போது பத்து பீஸு கண்டமாயிடும்.பாஸ்-கிட்ட சொன்னாலும் திட்டுவாரு....எங்கயாவது ஒளிச்சி வைக்கலாம்னா......அப்பறம் எண்ணிப்பாத்துட்டா என்ன பண்றது?. சரி 'அடியில' தெரியாம போட்டுட்டா  எவன்  CHECK   பண்ணப் போறான்னு கலந்து விட்டுடுவாய்ங்க.இதுல பாத்தீங்கனா.....பத்து வால்வும் பத்து பவர் ஸ்டீரிங்... பத்து பவர் ஸ்டீரிங்-ம் பத்து கார்.பத்து காரும் வழியில மக்கர் பண்ணினா ....நோ ப்ராம்ளம்.. ஏதாவது மெகானிகல்ஷாப்-ல போயி 'ஸ்பேர் பார்ட்ஸ்' வாங்கி மாத்திடலாம். ஆனால் முப்பதாயிரம் அடிகளுக்கு மேல் பறக்கும்  .'.ப்ளைட் நின்னுட்டா?????.....எப்படியாவது பணம் சம்பாதிக்கணும் என்கிற எண்ணத்தில் QUALITY-யைவிட QUANTITY தான் முக்கியம்னு இருக்கிற இதுபோல 'துக்கடா' கம்பெனி(SubContractors)-களுக்கு மொதல்ல ஒரு கடிவாளம் போடணும்.நம்ம தரத்த இன்னும் உயர்த்தணும்.அப்பதாம்  MADE IN INDIA  என்கிற வார்த்தைக்கே ஒரு மதிப்பும்,மரியாதையும், பெருமையும்  வரும்.உலகத்தரத்தில சினிமா எடுக்கிற நாம ஏன் உலகத்தரத்தில JOB போடுறதில்லை?..

        Aerospace துறையில்  சாதிக்க, நாம செல்ல வேண்டிய தூரம் ரொம்ப கிடையாது. விரைவிலே அதற்கான மைல் கல்லை அடைவோம்.

   சரி....நம்ம மேட்டருக்கு வருவோம். ஒரு பார்ட் (PART ) எப்படி உருவாகுது என்பதை உங்களுக்கு பார்ட் பார்ட்டா பிரிச்சி விளக்கி சொல்லப்போறேன்..

இப்ப நம்ம கையில நாம போட வேண்டிய பார்ட்-ன் DRAWING கொடுத்தாச்சு..அடுத்து என்ன செய்யனும்ங்கிரத படிப்படியா சொல்றேன்...

1.      நமக்குக் கொடுத்த வரைபடத்த கவனமா பார்த்து அந்த பார்ட் எப்படி இருக்கும் என்பதை கற்பனையில கொண்டு வரணும்..    
    


2. அடுத்ததா PROCESS PLANNING.(அதாங்க மேலே சொன்ன சாம்பார் மேட்டர்..)  

3. இனிமேதான் நம்ம MASTERCAM-ன் வேலையே ஆரம்பிக்குது.மேலே வரைபடத்தில நாம என்ன பார்க்கிறோமோ அதை அப்படியே MASTERCAM-ல் வரையனும். இதுக்கு DESIGNING-ன்னு சொல்வாங்க.  



4.அடுத்ததா நாம வரைஞ்ச படத்துக்கு  'TOOLPATH ' எடுக்கணும்.     


                
    TOOLPATH எடுத்தப் பிறகு எப்படி மெசின்ல ஓடப்போகுதுன்னு நாம MASTERCAM-லே பாத்திடலாம்.இதுக்கு SIMULATION-ன்னு சொல்வாங்க.அந்த வீடியோ கீழே இருக்கு பாருங்க....



           5.அடுத்ததா நம்ம MASTERCAM-மும் CNC மெசினும் அவங்க மொழியில பேசிப்பாங்க.எப்படின்னு கேக்கிறீங்களா?.கம்ப்யுடருக்கு எப்படி ஒரு மொழி இருக்கோ அதே மாதிரி CNC மெசினுக்கும் ஒரு மொழி இருக்கு.அதுக்கு NUMERICAL PROGRAM-னு சொல்வாங்க.. கம்ப்யுடருக்கு (0,1 )-ன்னா,நம்ம CNC மெசினுக்கு G-CODES,M-CODES-னு இருக்கு.மேலே நாம பார்த்த TOOLPATH-த இந்த  MASTERCAM, CNC மெசினோட மொழிக்கு  NUMERICAL PROGRAM -ஆக மாற்றும். அது இப்படித்தான் இருக்கும்...

    
   இந்த புரோகிராம்ம உருவாக்கத்தான் இவ்வளவு வேலை நடந்துச்சு.இந்த மாதிரி புரோகிராம்ம நம்ம கையில எல்லாம் எழுத முடியாது.ரொம்ப சிம்பிளான பார்ட்டுக்கு வேணும்னா எழுதலாம்.3D,MOULD-க்கெல்லாம் இந்த மாதிரி புரோகிராம் எழுதனும்னா,அந்த ஆண்டவனால கூட எழுத முடியாது. ஆனால் நம்ம MASTERCAM அசால்டா எழுதிடும்.இந்த புரோகிராம்ம அப்படியே மெசினுக்கு அனுப்பிடனும்.ஒரு புரோகிராமரோட வேலை இதோட முடிஞ்சிடிச்சி.இதுக்கு எல்லாம் நீங்க CNC துறையில பெரிய தில்லாலங்கடியா இருக்கணும்னு அவசியம் இல்லீங்க.சும்மா ஏசி ரூம்ல உக்காந்துகிட்டே இதை செஞ்சிடலாம்.

       6. சரி...இது CNC மெசின்ல ஓடும்போது எப்படி இருக்கும்.ரொம்ப ஆர்வமா இருக்கிறவங்க கீழே உள்ள வீடியோவை பாருங்க..நம்ம MASTERCAM கொடுத்த புரோகிராம,CNC மெசின் தெளிவா புரிஞ்சுகிட்டு எவ்வளவு சமத்தா JOB போடுது பாருங்க...CNC மெசின்னப் பத்தி தெளிவா உடனே தெரியுனும்ன்னா பிரபல பதிவர் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ்  அருமையான ஒரு தொடர் எழுதுகிறார். அங்கு சென்று பார்க்கலாம்.

       

 முதல்ல சொன்ன வரைபடத்த வைத்து MASTERCAM-ன் பேருதவியால் நாம போட்ட JOB இதோ கீழே இருக்கு பாருங்க........


.       
              இப்பயாவது MASTERCAM-ன் பயன்பாடு என்ன என்பதை ஓரளவு தெரிஞ்சிகிட்டீங்களா.....


        
   ஒன்னுமே புரியலடா சாமி...இதுதான் உங்க பதில்ன்னா..கவலைப்படாதீங்க. இது ஒரு முன்னோட்டம்தான்.இதைத் தான் இனி ஒவ்வொரு வாரமும் தெளிவா, விளக்கமா சொல்லப்போறேன்.என்ன... MASTERCAM இன்ஸ்டால் செஞ்சாச்சா?....அடுத்தப் பதிவில் எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதை விளக்கமாக சொல்கிறேன்...




அடுத்தப் பதிவிலும் ச(சி)ந்திப்போம்......
 
--------------------------------------------------((((((((((((((((((((((()))))))))))))))))))))))))------------------       

Wednesday, 29 February 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?-PART-2


MASTERCAM-தமிழில்...

          MASTERCAM பற்றி படிப்பதற்கு முன்பு....மற்ற CAD/CAM SOFTWARE-லிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

                

  MASTERCAM போல Manufacturing Company-களில்    அதிகமாக உபயோகப் படுத்தப்படும் SOLIDWORKS, UNIGRAPHICS, PRO-E போன்றவைகள் எல்லாமே DESIGNING-க்கு கொடுக்கும் முக்கியத்துவம் MACHINING-க்கு கொடுப்பதில்லை. அதாவது MASTERCAM போல சுலபமாக TOOLPATH எடுக்க முடிவதில்லை என்பது  இந்தத் துறையில் உள்ள அனுபசாலிகளின் குற்றச்சாட்டு.பொதுவாக 2D TOOLPATH-க்கு MASTERCAM-ஐ அடிச்சிக்கிரதுக்கு வேற எந்த சாப்ட்வேர் -ம் கிடையாது என்பது  எல்லா  CAD/CAM SOFTWARE-ம் ஓரளவு தெரிந்தவர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மை. ஆனால் DESIGNING & AASEMBLY-க்கு SOLIDWORKS-ம்,  MOULD&DIE MAKING-க்கு  UNIGRAPHICS-ம்  அதிகமாக  உபயோகப்படுத்தப்படுகிறது.

       

       பொதுவாக CNC இண்டஸ்ட்ரியில் வெளிநாடுகளில் வேலைக்கு விளம்பரம் கொடுக்கும் போது  CAD/CAM SOFTWARE தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பர்கள்.இதன் அர்த்தம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கைதேர்ந்தவராக இருந்தால் போதுமானது என்று அர்த்தம்.அதெப்படி என்று குழம்புகிறீர்களா.....இவற்றில் ஏதாவது ஒன்றில் நீங்கள் வல்லவராக இருந்தால் மற்ற SOFTWARE-களை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்.எல்லா CAD/CAM  SOFTWARE-களிலும் கமாண்ட்ஸ்(COMMANDS), வரையும்முறை (DESIGN)  எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும்.ஆனால் TOOLPATH எடுக்கும் முறைதான் கொஞ்சம் வித்தியாசமானது.
    பொதுவாக  MASTERCAM -ஐ ஒரு  User-friendly Software என்று சொல்வார்கள். அதாவது யாரும் மிக எளிதில் கற்றுக்கொள்ள முடியும். இதைக்   கற்றுக் கொள்வதற்கு நீங்கள் CNC துறையில் பெரிய அனுபசாலியாகவோ அல்லது திறமைசாலியாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏன்.......இந்தத்துறை சம்மந்தப்படாதவர்கள் கூட இதைக்கற்று சிறந்த Programmer-ஆக  இருக்கிறார்கள். 


              

     1998 -ல் நான்  MASTERCAM படித்தபோது Version 8 தான் உபயோகத்தில் இருந்தது.அந்த நேரத்தில் 2D &3D Toolpath-க்கு இது மிகச்சிறந்த Software ஆக இருந்தது என்பதை இந்தத் துறையில் இருந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால்  Toolpath Simulation கொஞ்சம் மெதுவாகத்தான்  இருந்தது. அந்த நேரத்தில்  UNIGRAPHICS, PRO-E பிரபலமாக,MASTERCAM -லும் பல மாற்றங்கள் செய்தார்கள்.சில ஆண்டுகளுக்குப் பிறகு MASTERCAM-V9 ரிலீஸ் செய்தார்கள். இது 3D Toolpath & Simulation மிக வேகமாக இருந்தது.அடுத்த சில ஆண்டுகளிலே Toolpath-ல் சில மாற்றங்கள் செய்து   MASTERCAM-V9.1 வெளியிட்டார்கள்.இதன் பிறகு UNIGRAPHICS ,SOLIDWORKS போல இதன் முகப்பு தோற்றத்தை மாற்றம் செய்து 2006 ல் MASTERCAM X வெளியிட்டார்கள்.ஆனால் இதில் ஏகப்பட்ட குளறுபடி இருந்தது. MASTERCAM-V9-ல் வேகமாக செய்தவர்கள் இதில் தடுமாறிப் போனார்கள்.TOOLPATH-ம் கடினமாக இருந்தது.MASTERCAM-V9 உபயோகப்படுத்தும் நிறையக் கம்பெனிகள் இந்த மாற்றத்தை ஏற்கவில்லை. பிறகு இதன் சிறு குறைகளைத் திருத்தி  அடுத்தடுத்து X1,X2,X3,X4 என்று வெளியாக, இறுதியாக வெளியிடப்பட்ட  MASTERCAM X5 மற்ற CAD/CAM SOFTWARE -களுக்கு சவால் விடும் வகையில் உள்ளது.சமீபத்தில் MASTERCAM X6 வெளியாகியிருக்கிறது.ஆனாலும்  MASTERCAM உபயோக்கிக்கும்  கம்பெனிகளில் 90 சதவீதம் பேர் இன்னமும்  MASTERCAM-V9 யையே பயன்படுத்துகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் USER -FRIENDLY.அதாவது மற்றவர்களுக்கு சுலபமாக புரியவைக்க முடியும்.அதே நேரத்தில் தவறுகள் ஏற்படுவதும் மிகக் குறைவு, 

       MCAM-9 க்கும் MCAM-X6 க்கும்  பெரிய வித்தியாசமில்லை.COMMANDS, TOOLPATH,வரையும்முறை எல்லாம் ஒரே மாதிரிதான்.கொஞ்சம் அட்வான்சாக இருக்கும் அவ்வளவுதான்.நீங்கள் MCAM 9-ல் கைதேர்ந்தவராக இருந்தால்  MCAM X6 கற்றுக்கொள்வது மிக சுலபம்.முதலில் நான் நடத்தப்போவது  MCAM-V9.கடைசியில் இரண்டு அல்லது மூன்று  பதிவுகளில் MCAM-X6 யை விளக்கிவிடலாம் . 
   
      சரி.....MASTERCAM படிக்க ஆர்வமுள்ளவர்கள் கவனிக்க... இதைப்படிக்க நீங்கள் எந்த  இண்டஸ்ட்ரிக்கும் செல்ல வேண்டாம்.வீட்டில் ஒரு PC இருந்தாலே போதுமானது.ஏற்கனவே உங்கள் PC யில் MASTERCAM இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் இந்தத் துறையில் உள்ள நண்பர்களிடம் இந்த CD யை வாங்கி  உடனே  இன்ஸ்டால் செய்யவும்.அடுத்தப் பதிவில் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்று விளக்கமாக சொல்கிறேன்.
         
சரி....முன்னுரை போதும்னு நெனைக்கிறேன்.

அது சரி...அது என்ன...2D TOOLPATH....3D TOOLPATH.....புதுசா படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கும்.இதை விரிவா பிறகு சொல்கிறேன். உங்களுக்கு புரியும் படியா சிம்பிளா சொல்லனும்னா....கீழே இருக்கிற ரெண்டு படத்தையும் கொஞ்சம் நல்லா பாருங்க.
  
      நீங்க ஒரு பேனா எடுத்துக்குங்க.ஒரு பேப்பர்ல படம் 'A' யில உள்ள மாதிரி 1---2---3--4 --1 னு ஒரு சதுர வடிவில ஒரு கட்டம் வரைங்க....இப்போ உங்க பேனா போற பாதை...இடமிருந்து வலம்(1-2),கீழிருந்து  மேல்,வலமிருந்து இடம்,கடைசியாக மேலிருந்து கீழ்.

 அடுத்ததா படம் 'B'
      
                ஒரு உருண்டையான பந்து (எல்லா பந்தும் உருண்டையாத்தான் இருக்கும்) எடுத்துக்குங்க.இப்ப .....முன்பு பேப்பர்ல வரைஞ்ச மாதிரி இதுலயும் ஒரு கட்டம் போடுங்க...இப்ப உங்க பேனா போற பாதை எப்படி இருக்கு?...... முன்பு சொன்ன பாதையை விட கூடுதலாக ஒரு பாதை செங்குத்தாக கீழேயும் மேலேயும்  போகுது இல்லையா?......

       



                படம் 'A' யில் இடமிருந்து வலம்,வலமிருந்து இடம் ...இதை X-AXIS னு சொல்லுவாங்க... 

       மேலிருந்து கீழ்,கீழிருந்து மேல் ......இது Y-AXIS.

      படம் 'B' ல் செங்குத்தாக மேலும் கீழும் போகுதே....இதை Z-AXIS னு சொல்வாங்க.

   இப்ப உங்க பேனாதான் TOOL -னு வச்சுகிங்க....உங்க பேனா போற பாதைதான் TOOLPATH.
    
   இப்பயாவது  2D-க்கும் 3D-க்கும் வித்தியாசம் தெரியுதுங்களா ?....X &Y திசையில்  TOOL நகர்ந்தால் அது 2D TOOLPATH.....

   X &Y&Z திசையில்  TOOL நகர்ந்தால் அது 3D TOOLPATH.....


 சரிங்க......அடுத்த பதிவிலிருந்து ஒவ்வொரு Command யைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.அதற்கு முன்னால.ஒரு வரைபடத்திலிருந்து எப்படி MASTERCAMல் படம் வரைந்து TOOLPATH எடுத்து MACHINE-ல் JOB OUTPUT வருகிறது என்பதை ஒரே பதிவில் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். பிறகு தான் உங்களுக்கு எல்லாம் தெளிவாக புரியும் .இல்லைஎன்றால் தலை எது வால் எது என்று தெரியாமல் குழம்பி போய்விடுவீர்கள்....

அடுத்த பதிவில் ச(சி)ந்திப்போம்......


----------------------------------------------(((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))----------------   

Monday, 27 February 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?



                மெக்கானிகல் லைனில் வெளிநாட்டில் மட்டுமில்லைங்க... நம்ம நாட்ல கூட நல்ல வேலையா கிடைக்கனும்னா CNC யப்பத்தி நல்லா தெரிஞ்சிருக்கனும்ங்க.    CNC ன்ன என்னான்னு தெரியுனுங்களா?....

  மின்னலே படத்தில விவேக் ஒரு டயலாக் சொல்லுவாருல...'அடப்பாவிகளா உள்ள 750 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு...அதுல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சைப் பழத்துல ஓடப்போகுது?......." . அந்த  750 ஸ்பேர் பார்ட்ஸ்-யும் உருவாக்கின பிரம்மாதான் இந்த CNC .

         CNC யோட விளக்கம் Computer Numerical Control . இதப்பத்தி புரியும் படியா சொல்லனும்னா....உங்க பைக்ல அல்லது கார்ல உள்ள ஒரு 'ஸ்பேர் பார்ட்' செய்யுறதுக்கு நம்ம ஆளு வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு ஒரு சாதாரண மேனுவல் மெசின்(Manual Machine)ல்ல மூணு மணி நேரம் எடுத்துக்குறாருனு வச்சிப்போம்.அதே ஆளு அதே 'பார்ட்ட' நூறா செய்யும் போது முன்னூறு மணி நேரம் எடுத்துக்கிறார். இதுவே ஆயிரம் ரெண்டாயிரம்னு வரும்போது நாள் கணக்கா எடுத்துக்க நேரிடும். இதனால் விரயமாகும் நேரம்,  செலவு, உழைப்பு, இழப்பு, மனிதவளம் இப்படி எல்லாத்தையும் ஒரு முடிவு கட்ட கண்டுபிடிக்கப்பட்டதுதான்  இந்த CNC .

           அப்படி இந்த மெசின் என்னாதான்  செய்யுதுன்னு கேக்கிறீங்களா?... ரொம்ப சிம்பிள் தாங்க...ஒரே ஒரு  பார்ட்டு(part ) க்கு புரோக்ராம் (program ) எழுதி செட்டப்(setup) செஞ்சா போதும்ங்க....ஆயிரம் என்ன, பத்தாயிரம் என்ன அப்படியே மாட்டிக் கழட்டுற  வேலைதான் நமக்கு.... மூணு மணி நேரம் செஞ்ச இதே பார்ட்ட மூணு நிமிசத்தில முடிச்சிரலாம். எத்தன Job போட்டாலும் அதன்  தரமும் (Quality) நூறு சதவீதம் அப்படியே இருக்கும்.இந்த CNC  மட்டும் கண்டு பிடிக்கலனா இப்ப நாம ஓட்டிகிட்டு இருக்கிற பைக்கும் காரும் விக்கிற விலைக்கு நமக்கு வெறும் கனவாவே போயிருக்கும். Quality,Quantity ரெண்டுக்கும் அசைக்க முடியாத உத்திரவாதம் தருவதுதான் இந்த CNC,
  
            இந்த  CNC  யோட வரப்பிரசாதத்தில முக்கியமான ஒன்னு ஏரோபிளேன். முப்பதாயிரம் அடிக்கு மேல அவ்வளவு தைரியமா நாம பறக்கிறோம்னா   அதுக்கு முக்கிய காரணமே இந்த CNC  தாங்க.இப்ப நீங்க கையில புடிச்சிகிட்டு இருக்கிற மவுஸ்,கி போர்டு,எதிரே பாக்கிற ஸ்க்ரீன் .'.பிரேம்,உங்க சட்டையில உள்ள பட்டன்,தண்ணி பாட்டில்,பிளாஸ்டிக் சாமான்கள் இப்படி நம் வாழ்வில் அன்றாடம் உபயோகிக்கிற எல்லா பொருட்களையும் செய்யிற மோல்டு (Mould ) -ஐ உருவாக்கியது சாட்சாத் இந்த CNC தான்.வேற மாதிரியா சொல்லனும்னா ...கரடு முரடான இந்த உலகத்தை அழகா வடிவமைச்சி, நவீன உலகமா மாற்றியப் பெருமைக்கு உரியது இந்த CNC ......  

       பதினைந்து வருசத்துக்கு முன்னால நான் சென்னையில CNC யில ப்ரோகிராமரா வேலை செய்தபோது அவ்வளவு CNCமெசின்கள் கிடையாது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மொத்தமே பத்து கம்பெனியிலதான்  CNC இருந்தது.ஆனால் இன்னைக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஒரேCNC மயம்தான். இங்க மட்டுமில்லைங்க....உலகம் பூராவும் இருக்கு.மெக்கானிகல் இண்டஸ்ட்ரி யில் உள்ள எல்லோரும் தங்களை மேம்படுத்திக்கொள்ள CNC மெசின்கள்  வாங்கி உபயோகிக்க ஆரம்பிச்சிடாங்க....

             இந்த CNC லைனில் உலகம் பூராவும் வேலைவாய்ப்புகள் அபரிமிதமாக இருக்கிறது.குறிப்பாக சிங்கபூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,UK, கனடா,வளைகுடா நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் CNC லைனில் நம்மவர்கள்தான் கொடிகட்டி பறக்கிறார்கள்.

     சரி.....இந்த விவரங்கள் எல்லாம் எங்களுக்கும் தெரியும் .....நீ என்ன புதுசா சொல்லப்போறனு கேட்க வரீங்க......நேரா மேட்டருக்கு வந்திடுறேன்...CNC மெசின் ஓட்டுறது ஒன்னும் பெரிய விஷயமில்ல.....மாட்டி கழட்டுற வேலைதான்.வெறும் ஆபரேட்டரா இருந்தா காலம் பூரா அப்படியே இருக்க வேண்டியதுதான்.அடுத்தக் கட்டத்துக்கு போகணும். அதுதான் Programmer. 

       கம்ப்யுட்டர் மட்டும்தான் ஆபரேட் பண்ணத் தெரியும்ன்னா நமக்கு Data entry operator வேலைதான் கிடைக்கும்.JAVA,.NET,C++ தெரிந்தால் தானே IT Company யில் வேலை கிடைக்கும்.அது போலதான் இதிலும்.நீங்கள் ஒரு சிறந்த CNC Programmer ஆக இருந்தால் தான் நல்ல வேலையும் நிறைய சம்பளமும் கிடைக்கும். முன்பெல்லாம் Program கையில்தான் எழுதினாங்க.இதற்கு நிறைய நேரம் தேவைப்படும்.பல நேரங்களில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.இந்த முறையில் மிக சுலபமான Jobs மட்டுமே போடலாம். கம்ப்யுட்டரில் Program தவறாக எழுதியிருந்தால் bugs காண்பிக்கும்.ஆனால் CNC யில் தவறு செய்தால் மிகப்பெரிய விபத்து நடக்க வாய்ப்புண்டு.சில நேரங்களில் கோடிக்கணக்கில் வாங்கிய மெசின் மொத்தமாக கண்டமான கதைகளும் உண்டு.இந்தப் பிரச்சனைகளை   களையவும், Mold,Die,3D Machining என்று மெக்கானிகல் .'.பீல்டு முன்னேறியதாலும் கண்டுபிடிக்கப்பட்டதுதான் CAD-CAM  SOFTWARE 

 இது போன்ற Manufacturing software நிறைய இருந்தாலும் ஒரு சில சாப்ட்வேர்கள் மட்டுமே அதிகமாக உபயோகிக்கப் படுகிறது.அவற்றில் சில...
  • MASTERCAM 
  • UNIGRAPHICS
  • ALPHACAM
  • GIBSCAM 
  • SOLIDWORKS&SOLIDCAM
             இவற்றில் MASTERCAM இந்தியாவிலும்   மற்ற வெளிநாடுகளிலும் மிக அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள்.வெளிநாடுகளில் CNC Field-ல் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  இது போன்ற CAD-CAM  SOFTWARE களில் ஏதாவது ஒன்றில் அனுபவம் இருந்தால் உடனே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும்.அதே போல காலங்காலமாக வெறும் Opertor-ஆக மாவாட்டிக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இது போன்றவற்றில் ஏதோனும் ஒன்றை கட்டாயம் பயில வேண்டும்.     
  
     சரி இதில் என் வேலை என்ன?...... CNC Field-ல் அதிகமா உபயோகப் படுத்தப்படும் MASTERCAM-ஐ தமிழில் எழுதப் போகிறேன்.   பதினைந்து  வருடத்திற்கு முன்பு சென்னையில் வேலை பார்த்துக் கொண்டே இன்ஷிடியுட்-ல்  கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்த சமயம்  'CNC தமிழில்'  என்ற புத்தகம் எழுதலாம் என்று நானும் என் நண்பரும் முயற்சி செய்தோம். அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அந்தப் பணியை தொடர முடியாமல் போயிற்று.தற்போது பதிவுலகில் இணைந்திருப்பதால் இதைத் தொடரலாம் என்று எண்ணம் வந்தது.பத்து வருடமாக MASTERCAM  சொல்லிகொடுத்த அனுபவம் இருப்பதால் எல்லோரும் பயனடையும் படியும் புரியும் படியும் எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதைப்படிப்பவர்கள் இந்த  Field-ல் உள்ள மற்றவர்களுக்கும் இதைத் தெரியப் படுத்தவும்.

  அடுத்த வாரத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் இதன் பாகங்கள் வெளிவரும்...

 --------------------------------------((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))----------------------------