Sunday 18 March 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?-PART-4

                                                MASTERCAM-தமிழில்... 

  இந்தப் பகுதியில MASTERCAM எப்படி  INSTALL செய்வது என்று பார்க்கலாம்.இது SOLIDWORKS,UNIGRAPHICS போல உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள HARD DISK-ல்  அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.வெறும் 500MB இருந்தாலே இதற்கு போதும்.

  MASTERCAM -ஐ உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவ வேண்டுமானால்  குறைந்த பட்ச தேவைகள்..
  • Windows XP,  Vista or Windows 7 
  • Memory- 1 GB Minimum
  • RAM-     512 MB Minimum
  • Screen Rsln - 32-bit or 64-bit 
    சரி...இப்போ MASTERCAM எப்படி உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவுரதுன்னு படிப்படியா சொல்றேன்.

     உங்க கிட்ட  MASTERCAM CD இருந்தால் அதை அப்படியே CD ROM-ல போட்டு INSTALL செஞ்சிடாதீங்க..அந்த CD-யை அப்படியே COPY செய்து உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு FOLDER உருவாக்கி அதில் SAVE செய்துவிட்டு பிறகு இன்ஸ்டால் செய்யுங்கள்.இதை எதற்கு சொல்றேன்னா எதிர் காலத்தில ஏதாவது வைரஸ் தாக்கி வேலைசெய்யாமல் போச்சுன்னா மீண்டும் நீங்கள் நிறுவிக்கொள்ளலாம்.  


STEP-1
           முதல்ல நீங்க SAVE செய்த MASTERCAM FOLDER-ஐ திறந்து உள்ளே இருக்கிற SETUP FILE-ஐ டபுள்கிளிக் பண்ணுங்க...
 
 STEP -2
           அடுத்ததா NEXT பட்டனை ஒரு கிளிக்....        


STEP-3
     அடுத்ததா YES  பட்டனை ஒரு கிளிக்...

 STEP- 4
          அடுத்ததா உங்க பெயர்.அப்பறம் உங்க கம்பெனி பெயர் போடாம HOME-னு போட்டு  NEXT பட்டனை ஒரு கிளிக்.... 


 STEP-5
          அடுத்ததா கொஞ்சம் கவனமா இருக்கணும்.இது UNIT SELECTION.நீங்க செய்யப்போற பெரும்பாலான  JOB, METRIC-ல இருந்தால் METRIC-ஐ DEFAULT - ஆக தேர்வு செய்து NEXT பட்டனை ஒரு கிளிக் பண்ணுங்க.பிறகு வேண்டுமானால் INCH-க்கு மாற்றிக் கொள்ளலாம்.


 STEP-6
           அடுத்ததா எங்க நிறுவப்போறோம்னு கேட்கும். 'C ' யில் என்றால் NEXT பட்டனை ஒரு கிளிக் பண்ணுங்க....  

 STEP-7
       அடுத்ததா..MILLING,TURNING,DESIGN& WIRECUT இதுல நீங்க எதை நிறுவப் போறீங்கனு கேட்கும்.கீழே உள்ளது போல எல்லாத்தையும் 'டிக்' பண்ணுங்க. பிறகு தேவையில்லாததை நீக்கிவிடலாம்.(ஏதாவது ஒன்றை மட்டும் டிக் செய்தால் சில நேரங்களில் பிரச்சனை வருகிறது)

    
 STEP-8
            அடுத்ததா NEXT பட்டனை ஒரு கிளிக்....  


STEP-9

       இப்போ MASTERCAM உங்க கம்ப்யூட்டரில் INSTALL ஆக ஆரம்பித்திருக்கும்.


STEP-10
         
         இப்போ 100 %  முடிந்தப் பிறகு POST PROCESSOR நிறுவ வேண்டுமா என்று கேட்கும்.இந்த இடத்தில் POST PROCESSOR என்றால் என்ன என்பதை சுருக்கமாக  சொல்லி விடுகிறேன்.MASTERCAM-ல் TOOLPATH எடுத்தப்பிறகு அதை MECHINE- க்கு  உரிய NC PROGRAMM-ஆக மாற்றக்கூடிய ஒரு சாப்ட்வேர். இது C++ ல் எழுதப்பட்டிருக்கும்.இதை ஒவ்வொரு  MECHINE-க்கு தகுந்த மாதிரி மாற்றலாம். இதை கடைசியாக விளக்குகிறேன்.அடுத்ததா YES  பட்டனை டபுள் கிளிக்...    
           

STEP-11
           அடுத்ததா NEXT பட்டனை ஒரு கிளிக்....


 STEP-12

           அடுத்ததா NEXT பட்டனை ஒரு கிளிக்....


STEP-13

   மற்ற CAD/CAM SOFTWARE-களில் வரைந்த படங்களை MASTERCAM-ல் IMPORT செய்யும் வசதி உள்ளது.அதற்காக கீழே உள்ளது போல எல்லாவற்றையும்  டிக் செய்து NEXT பட்டனை ஒரு கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் MASTERCAM முழுவதுமாக  நிறுவப்பட்டிருக்கும்.



STEP -14
                         
  



    இப்ப உங்க DESKTOP SCREEN-ல்ல இப்படியிருக்கும். இனிமே தான் முக்கியமான வேலையே இருக்கு.இப்ப 'MILL9' என்கிற ஐகான 'டபுள்கிளிக்' செய்தா 'HASP NOT FOUND' என்கிற error வரும்.HASP என்பதன் விரிவாக்கம் Hardware Against Software Piracy.அதாவது MASTERCAM வேலை செய்வதற்கான லைசென்ஸ்.இது உங்கள் CPU-க்கு பின்னால் செருகக்கூடிய ஒரு சாதனம். அதன் படம் கீழே இருக்கு.     





ERROR
HASP DEVICE


   இந்த HASP DEVICE-க்கு நான் எங்கே போறது?-னு யோசிக்கிறவங்க கவலையே பட வேண்டாம்.இது MASTERCAM -ஐ பயன்படுத்தி உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளுக்கு மட்டும்தான். நமக்காக Educational Version இருக்கு.இதை இணையத்திலிருந்து நாம் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நமக்கு வெளியில் கிடைக்கும் CD கூட இந்த வகைதான்.சரி...இதை எப்படி வேலை செய்ய வைப்பது?.....மிக முக்கியமான விஷயம் இதுதான்.
 
STEP-15
             
            முதல் STEP-ல் சொன்ன மாதிரி  MASTERCAM FOLDER-ஐ திறந்து உள்ளே இருக்கிற CRACK FILE-ஐ டபுள் கிளிக் பண்ணுங்க...

STEP-16
           அடுத்ததா Lc_mcam9 பட்டனை டபுள் கிளிக்....
            


STEP-16
           அடுத்ததா 'APPLY' பட்டனை ஒரு கிளிக்....


 


STEP-17
           ஓடி முடிந்ததும் கீழே உள்ளது போல் வரவேண்டும்.தற்போது உங்கள் MASTERCAM நூறு சதவீதம் வேலை செய்ய தயாராகிவிட்டது. 




இப்ப உங்க DESKTOP SCREEN-ல்ல உள்ள 'MILL9' என்கிற ஐகான 'டபுள்கிளிக்' செய்தா இப்படி வரும்...


இதை ' X ' செய்துவிட்டால் அடுத்தது கீழே உள்ள மாதிரி வரும்.


  இதை 'டிக்' செய்து 'YES' பட்டனை அழுத்திவிட்டால்..நீங்கள் வரையத் தயாராகி விடலாம்.(இது முதல் முறை மட்டும் தான் வரும்.) 

         நீங்கள் MASTERCAM-9 அல்லது மற்ற VERSION எதுவாக இருந்தாலும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் போது ஏதேனும் பிரச்சனை வந்தால் இங்கே பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்,
 
    MASTERCAM சம்மந்தமாக உங்களுக்கு எழும் சந்தேகங்களையும் இங்கே கேட்கலாம்.அதற்கான பதிலை ஒரு பதிவாக போடுகிறேன்....


அடுத்தப் பதிவிலும் ச(சி)ந்திப்போம்...... 

----------------------------------------((((((((((((((((((((((((()))))))))))))))))))))))----------------------------

10 comments:

  1. good work thanks any doubt i will ask thanks , keep write

    ReplyDelete
    Replies
    1. THANKS FOR YOUR COMMENT SENTHIL...

      Delete
    2. ! மனதில் உறுதி வேண்டும் !: Cad -Cam Programmer ஆக வேண்டுமா?-Part-4 >>>>> Download Now

      >>>>> Download Full

      ! மனதில் உறுதி வேண்டும் !: Cad -Cam Programmer ஆக வேண்டுமா?-Part-4 >>>>> Download LINK

      >>>>> Download Now

      ! மனதில் உறுதி வேண்டும் !: Cad -Cam Programmer ஆக வேண்டுமா?-Part-4 >>>>> Download Full

      >>>>> Download LINK GB

      Delete
  2. கதிரவன்18 March 2012 at 14:55

    அருமையான தொழில்நுட்பக் கட்டுரை அழகு தமிழில். என்னிடம் உள்ள G-CODE ஐ ஓட்டி சிமுலேஷன் பார்ப்பதற்க்கு ஏதாவது இலவச மென்பொருள் இருக்கிறதா?. இருந்தால் சொல்லவும்.

    இன்னும் நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

    கதிரவன்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கதிரவனுக்கு நன்றி.

      //சிமுலேஷன் பார்ப்பதற்க்கு ஏதாவது இலவச மென்பொருள் இருக்கிறதா?//
      http://www.cncsimulator.com செல்லவும்.CncSimProSetup.exe பதிவிறக்கம் செய்து LIMIT SET பண்ணினப் பிறகு முயற்சி செய்யவும்

      Delete
  3. நல்லதே,, விளக்கமாக சொல்லித்தரும் விதம் மிகவும் அருமை .
    எனக்கு வயசு இதை படித்து பயன் பெற முடியுமா?

    ReplyDelete
  4. அருமை மணி சார்.......
    என் சிடி யில் post processer - insall-இல் error வருது....

    ReplyDelete
  5. ! மனதில் உறுதி வேண்டும் !: Cad -Cam Programmer ஆக வேண்டுமா?-Part-4 >>>>> Download Now

    >>>>> Download Full

    ! மனதில் உறுதி வேண்டும் !: Cad -Cam Programmer ஆக வேண்டுமா?-Part-4 >>>>> Download LINK

    >>>>> Download Now

    ! மனதில் உறுதி வேண்டும் !: Cad -Cam Programmer ஆக வேண்டுமா?-Part-4 >>>>> Download Full

    >>>>> Download LINK Et

    ReplyDelete