Saturday, 31 March 2012

சிதறல்கள்-6

முத்தத் திருவிழா ...       
   
     நம்ம ஊர்ல கலாச்சார சீர்கேடு என்று சொல்லப்படும் பொது இடத்தில் முத்தமிடுதல்,இந்தோனேசியாவில் ஒரு கலாச்சார விழாவாகவே நடத்தப் படுகிறது.பல தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் பாலித்தீவு மிகப் பிரபலமான சுற்றுலாத்தலம்.இங்கு வருடந்தோறும்  ஓமெட்- ஓமெடன் (Omed-Omedan) என்ற முத்தமிடும் திருவிழா நடக்கிறதாம்.இது கடந்த வாரம் இந்தத் தீவில் வெகு விமரிசையாக நடந்து முடிந்ததாம்.


     இது 17ஆம் நூற்றாண்டிலிருந்து இங்கு நடக்கிறதாம்.ஓமெட் என்றால் பாலி மொழியில் இழு என்று பொருள்.ஓமெட்- ஓமெடன் என்றால் ஒருவரை ஒருவர் இழுத்துக்கொள்ளுதல் என்று அர்த்தம் வருமாம்(இதில் எங்கே கிஸ் வருகிறது?). ஆனால் இதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்.பல ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள ஒரு அரசன்  உடல்நிலை சுகமில்லாமல் படுத்த படுக்கையாய் கிடந்தாராம். அப்போது அவரது மாளிகைக்கு வெளியே சில இளைஞர்களும் பெண்களும் இதுபோல் முத்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளனராம்.ஒரு பக்கம் ஆண்களும் மறுபக்கம் பெண்களும் நின்று கொண்டு இரண்டு பக்கத்திலிருந்தும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதற்காக தள்ளிவிடுவார்களாம். இவர்கள் போட்ட சத்தத்தில் தூக்கத்தை இழந்த அரசர் படுக்கையை விட்டு எழுந்து வந்து இவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு பின் உள்ளே சென்ற அரசருக்கு ஒரே ஆச்சர்யம். அது வரை இவரைப் பிடித்திருந்த நோய் விலகி பூரண குணமாகிவிட்டாராம். உடனே அவர் மூளையில் உதித்தது அந்த யோசனை.இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த விளையாட்டை இங்குள்ளவர்கள் விளையாட வேண்டும் என்று புலிகேசி ஸ்டைலில் உத்தரவு போட்டுவிட்டாராம்.
போருக்கு புறப்படும் முன் 
தயார் நிலையில் பெண்களும் ஆண்களும் 
ஓசியில் படம் பார்க்கும் உற்சாகத்தில் திரண்ட கூட்டம் 

    முத்தத் திருவிழா என்றால் கண்டபடி கண்ட இடத்தில் அவரவர் இஷ்டம் போல் முத்தமிட்டுக்கொள்வது என்று பொருளாகாது.இதற்கென்று நிறைய விதிமுறைகள் உள்ளனவாம்.இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் முதலில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.பிறகு இதற்கென்று இருக்கும் 'பதினோரு பேர் கொண்ட ஒரு குழு' 50ஆண்கள்,50பெண்களை தேர்ந்தெடுக்கும்.பின்பு அவர்கள்  அனைவரும் 'புர பன்ஜார்' என்ற கடவுளை வணங்கி பிராத்தனை செய்து விட்டு, இந்த முத்தப் போருக்கு தயாராகி விடுவார்களாம்.இதில் இன்னொரு சுவாரஸ்யம் யாருடன் யார் ஜோடி சேருவார்கள் என்று  யாருக்குமே தெரியாதாம்.எல்லாம் அந்த சாமிக்கே வெளிச்சம்.காஞ்சமாடு கம்புல புகுந்த கதையா எதுவும் ஆகிட கூடாது என்று உஷாரா நாலு ஆளுங்க சுத்தி நின்னு தண்ணிய ஊத்திகிட்டே இருப்பாங்களாம்(பின்ன...தீப்பிடிக்க முத்தம் கொடுத்தா.. அத எப்படி அணைக்கிரதாம்?) 
       வரம்பு மீறவில்லை என்றால் எதுவும் தப்பில்லை போல.....

மேலே சொன்ன செய்திக்கும் இந்தப் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
------------------------------------------------------------x -------------------------------------------------------- 
 உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

அடுத்து ஒரு சூடான மேட்டர்..(மேலே சொன்னது மட்டும் என்னவாம்?) 

  சீன அதிபர் ஜின்டாவோ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம் யாங் யேஷி எ‌ன்ற 26 வயததிபெத் வாலிபர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தீக்குளித்தார்.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை தனி நாடக பிரிக்க வேண்டும் என்று திபெத்தியர்கள் தலாய்லாமா தலைமையில் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இவர்களின் கோரிக்கைகளுக்கு சீனாவும்  செவி சாய்ப்பதாக இல்லை.சீனா பல முறை எச்சரித்தாலும் இவர்கள் விசயத்தில் இந்தியா எப்போதும் தலாய்லாமாவிற்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இலங்கை விசயத்தில் மட்டும் ஏன் இந்த ஒரு  தலை பட்சமோ....?


உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?....ஒரு ஜீவன் இங்கே தீயில் கருகி மரணத்தின் வாசலில் விழுந்து துடித்துக் கொண்டிருக்க.... அவரைக்  காப்பாற்றுவதை விட்டுவிட்டு தன் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பத்திரிக்கையாளர்கள். 


-----------------------------------------------x ----------------------------------------------------

 நெத்தியடி....

தந்தை பெரியாரிடம் ஒருவர், "மதம் வேண்டாம் என்று கூறுகிறீர்களே..அதற்குப் பதிலாக வேறு எதைப் பின்பற்றுவது?...."

 இதற்கு பெரியாரின் நெத்தியடி பதில்...

"கதவு இடுக்கிலிருந்து கையை எடு..கை நசுங்கி விடும் என்றால் கையை வேறு எங்கே வைப்பது என்று கேட்கிறீர்களே?......."

----------------------------------------------x------------------------------------------------------------------------
 சும்மா அதிரப்போகுதுல்ல!!!!!!...


 21 வருடங்களுக்குப் பிறகு சொந்தக்குரலில் பாடி அசத்தப்போகும் சூப்பர் ஸ்டார் ...கலக்கு தலைவா...
----------------------------------------------------------x---------------------------------------------------------
       MAESTRO......


----------------------------------------------------X------------------------------------------------------

3D CORNER


                         தெய்வ தரிசனம்: சிவன் பார்வதியுடன் கணேசன்...



------------------------------------((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))-------------------------------

6 comments:

  1. முதல் சிதறல்...கிளு கிளு...நம்ம ஊருல இதெல்லாம் நடத்த மாட்டேன்கிறாங்க...அடுத்த சிதறல் ரொம்ப பாவம்..பாவிகள்..உயிர் துடிப்பதை போட்டி போட்டு கொண்டு போட்டோ எடுப்பவர்கள்...

    ReplyDelete
    Replies
    1. //நம்ம ஊருல இதெல்லாம் நடத்த மாட்டேன்கிறாங்க..//

      அதானே....இப்படி ஒரு திருவிழா நம்ம ஊர்ல நடந்தா நம்ம ஊரு காதல் ஜோடிகள் பீச்,பார்க்குன்னு தேடி அலைய வேண்டாம்.ஹி..ஹி...நாமளும் ஓசில படம் பார்த்த மாதிரி இருக்கும்.

      Delete
  2. சிதறல்கள்

    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு ரொம்ப நன்றி நண்பா...

      Delete
  3. முத்தம்.... முத்தம்..... முத்தமா......

    நண்பா..... நீங்க இப்போ இந்தோநேசியாவுல இருக்கிங்களா?

    ReplyDelete
  4. வணக்கம் பிரகாஷ்...இருப்பது சிங்கப்பூரில் தான்.ஒரு இந்தோனேசிய நண்பர் சொல்லக்கேட்டு,இதை எழுதினேன்.

    ReplyDelete