Monday, 5 March 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?-PART-3


MASTERCAM-தமிழில்...



CNC மெசின் பத்தி நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும்.அதுல MASTERCAM-ன் பங்கு என்ன என்பதைப் பத்தி முதல்ல தெளிவா சொல்லிடுறேன்.இல்லன்னா இதெல்லாம் எதற்காக சொல்றேன்,இது எங்க உபயோகமாகுதுன்னு தெரியாம குழம்பிப் போயிடுவீங்க..

        இப்போ நம்ம கையில நாம போட வேண்டிய JOB யோட வரைபடம் இருக்கு.இத வச்சி MASTERCAM-ன் உதவியோடு CNC மெசின்ல்ல எப்படி JOB போட்டு வெளியில எடுக்கப்போறோம் என்பதை சுருக்கமா சொல்லிடுறேன். பிறகு ஒவ்வொரு Commands -யையும்  தெளிவா விளக்கமா பார்க்கலாம்.

     நம்ம வாடிக்கையாளர் ('கஷ்ட'மர்) கொடுத்த DRAWING இதோ கீழே இருக்குங்க. நம்ம கைக்கு DRAWING  வந்த உடனே மொதல்ல  நாம செய்ய வேண்டியது PROCESS  PLANNING.வெயிட்...........வெயிட்...... பயந்திடாதிங்க.இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க.உதாரணமா..நீங்க 'சாம்பார்' வைக்க போறீங்கனு வச்சிப்போம்.....(ஒரு பேச்சுக்கு).சட்டியத்தூக்கி அடுப்புல வக்கிறதுக்கு முன்னால, காய்கறி எல்லாம் வெட்டிவச்சி,புளி,பருப்பு ஊறபோட்டு,எண்ணெய்,கடுகு, பெருங்காயம் எல்லாம் எடுத்து வச்சுகிட்டு ரெடியா இருப்போம்ல...அதுபோல தாங்க...CNC மெசின்ல்ல JOB  போடுறதுக்கு முன்னாடி,இத எங்க புடிச்சி போடப்போறோம்,எப்படி போடப்போறோம்,இதுக்கு என்னென்ன TOOLS தேவைப்படும், எந்த ஆபரேசன மொதல்ல போடுறது இத எல்லாத்தையையும் முடிவு பண்ணி ரெடியா இருக்கிறது தான் PROCESS PLANNING-னு சொல்வாங்க.இதைப்பத்தி விளக்கமா TOOLPATH நடத்தரப்போ சொல்றேன்.இதெல்லாம் எதுக்குன்னு கேக்குறீங்களா?.......CNC மெசின்ன நிக்காம ஒட்டுனுமாம்.இத ஏதோ பணம் அடிக்கிற மெசின்னு ஒவ்வொரு முதலாளிங்களுக்கும் நெனப்பு.ஒரு நிமிஷம் நின்னாலும் அவங்க வாழ் நாளுல ஒரு வருஷம் கொறஞ்ச மாதிரி கத்தி ரகளையே செய்வாங்க.இதுல இந்த ஆபரேடரோட பாடுதான் படு திண்டாட்டம்.சில நேரங்களில அவசரத்துக்கு 'உச்சா' போகக் கூட முடியாம நம்ம உசிர எடுத்திடுவாய்ங்க. இதெல்லாம் எங்கேன்னு கேட்கிறீங்களா? அட..நம்ம ஊர்ல தாங்க.ஒரே ஒரு CNC மெசின்ன வாங்கிப் போட்டுட்டு ஊரையே வளைச்சி போட்டுரலாம்னு கனவு கான்பாங்க... நம்ம ஊர்ல போடுற JOB-யோட தரம் சரியில்லாததுக்கு இது போல 'துக்கடா கம்பெனி'க தான் காரணம்.இவங்களுக்கு  Sub Contractors-னு பேரு...

               எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆதங்கம்....ஏன் நம்மளால சொந்தமா ஒரு .'.ப்ளைட்(FLIGHT) தயார் செய்ய முடியல?அதற்கான தொழில்நுட்பம் இல்லையா?......தேவையான இடம் இல்லையா?.........அல்லது திறமையான மனிதவளம் இல்லையா?..சரி...அட்லீஸ்ட் .'.ப்ளைட்-க்கான ஸ்பேர் பார்ட்ஸ்- ஆவது செய்யுறோமா?..... ஒரு விஷயம் தெரிஞ்சுக்குங்க..IT  துறையில மட்டும்  நம்ம ஆளுக வெளிநாட்ல கொடிகட்டி பறக்கலீங்க...  பெருமையா உங்க காலர தூக்கிவிட்டுக்குங்க....இந்த CNC &CAD/CAM துறையிலும் நம்ம ஆட்கள் தான் உலகம் முழுவதிலும் கம்பநட்டு,தோரணம்கட்டி,கொடியகட்டி,பந்தல்போட்டு, பட்டயக் கெளப்புறாங்க.பின்ன ஏன் நம்ம ஊர்ல இது சாத்தியமில்லை?



   ஒரே ஒரு உதாரணம் சொல்றேன்.நான் CNC துறையில் சேர்ந்த புதிதில்,ஒரு சின்னக் கம்பெனியில் வேலை செஞ்சேன். அங்க POWER STEERING செய்யும் ஒரு பெரிய கம்பெனிக்கு நாங்க  ஒரு வால்வு செஞ்சு கொடுத்தோம்.இதுக்கு முன்னாடி இந்த வால்வு ஜப்பானில் போட்டு இறக்குமதி செய்தார்களாம். அப்போது ஒரு வால்வு 400 ரூபாய் க்கு வாங்கியிருக்கிறார்கள்.அத எங்க பாஸ் போயி,பதினெட்டு ரூபாய்க்கு போடுவதாக சொல்லி ஆர்டர் எடுத்துட்டு வந்துட்டார்.ஆனால் ஆர்டர் எடுத்துட்டு வந்துட்டு நமக்கு கொடுக்கிற டார்ச்சர் இருக்கே....என்ன பண்ணுவியோ தெரியாது....ஒரு ஷிப்டுக்கு கொறஞ்சது 250 பீசாவது  வெளிய வரணும்-னு உத்தரவு போட்டுட்டு போய்டுவாரு.நாமளும் மண்டைய உருட்டி,மயித்த பிச்சி அப்படி இப்படின்னு PROGRAM செஞ்சி ஒரு வழியா JOP செட் பண்ணிக் கொடுத்துடுவோம்.அதுக்குப் பிறகு இந்த ஆபெரடர் படுற பாடு இருக்கே....மாட்டிக் கழட்டுரதுக்கே  நேரம் சரியா போய்டும்.பின்ன எங்கே CHECK பண்றது....அவசரத்துல போடும் போது பத்து பீஸு கண்டமாயிடும்.பாஸ்-கிட்ட சொன்னாலும் திட்டுவாரு....எங்கயாவது ஒளிச்சி வைக்கலாம்னா......அப்பறம் எண்ணிப்பாத்துட்டா என்ன பண்றது?. சரி 'அடியில' தெரியாம போட்டுட்டா  எவன்  CHECK   பண்ணப் போறான்னு கலந்து விட்டுடுவாய்ங்க.இதுல பாத்தீங்கனா.....பத்து வால்வும் பத்து பவர் ஸ்டீரிங்... பத்து பவர் ஸ்டீரிங்-ம் பத்து கார்.பத்து காரும் வழியில மக்கர் பண்ணினா ....நோ ப்ராம்ளம்.. ஏதாவது மெகானிகல்ஷாப்-ல போயி 'ஸ்பேர் பார்ட்ஸ்' வாங்கி மாத்திடலாம். ஆனால் முப்பதாயிரம் அடிகளுக்கு மேல் பறக்கும்  .'.ப்ளைட் நின்னுட்டா?????.....எப்படியாவது பணம் சம்பாதிக்கணும் என்கிற எண்ணத்தில் QUALITY-யைவிட QUANTITY தான் முக்கியம்னு இருக்கிற இதுபோல 'துக்கடா' கம்பெனி(SubContractors)-களுக்கு மொதல்ல ஒரு கடிவாளம் போடணும்.நம்ம தரத்த இன்னும் உயர்த்தணும்.அப்பதாம்  MADE IN INDIA  என்கிற வார்த்தைக்கே ஒரு மதிப்பும்,மரியாதையும், பெருமையும்  வரும்.உலகத்தரத்தில சினிமா எடுக்கிற நாம ஏன் உலகத்தரத்தில JOB போடுறதில்லை?..

        Aerospace துறையில்  சாதிக்க, நாம செல்ல வேண்டிய தூரம் ரொம்ப கிடையாது. விரைவிலே அதற்கான மைல் கல்லை அடைவோம்.

   சரி....நம்ம மேட்டருக்கு வருவோம். ஒரு பார்ட் (PART ) எப்படி உருவாகுது என்பதை உங்களுக்கு பார்ட் பார்ட்டா பிரிச்சி விளக்கி சொல்லப்போறேன்..

இப்ப நம்ம கையில நாம போட வேண்டிய பார்ட்-ன் DRAWING கொடுத்தாச்சு..அடுத்து என்ன செய்யனும்ங்கிரத படிப்படியா சொல்றேன்...

1.      நமக்குக் கொடுத்த வரைபடத்த கவனமா பார்த்து அந்த பார்ட் எப்படி இருக்கும் என்பதை கற்பனையில கொண்டு வரணும்..    
    


2. அடுத்ததா PROCESS PLANNING.(அதாங்க மேலே சொன்ன சாம்பார் மேட்டர்..)  

3. இனிமேதான் நம்ம MASTERCAM-ன் வேலையே ஆரம்பிக்குது.மேலே வரைபடத்தில நாம என்ன பார்க்கிறோமோ அதை அப்படியே MASTERCAM-ல் வரையனும். இதுக்கு DESIGNING-ன்னு சொல்வாங்க.  



4.அடுத்ததா நாம வரைஞ்ச படத்துக்கு  'TOOLPATH ' எடுக்கணும்.     


                
    TOOLPATH எடுத்தப் பிறகு எப்படி மெசின்ல ஓடப்போகுதுன்னு நாம MASTERCAM-லே பாத்திடலாம்.இதுக்கு SIMULATION-ன்னு சொல்வாங்க.அந்த வீடியோ கீழே இருக்கு பாருங்க....



           5.அடுத்ததா நம்ம MASTERCAM-மும் CNC மெசினும் அவங்க மொழியில பேசிப்பாங்க.எப்படின்னு கேக்கிறீங்களா?.கம்ப்யுடருக்கு எப்படி ஒரு மொழி இருக்கோ அதே மாதிரி CNC மெசினுக்கும் ஒரு மொழி இருக்கு.அதுக்கு NUMERICAL PROGRAM-னு சொல்வாங்க.. கம்ப்யுடருக்கு (0,1 )-ன்னா,நம்ம CNC மெசினுக்கு G-CODES,M-CODES-னு இருக்கு.மேலே நாம பார்த்த TOOLPATH-த இந்த  MASTERCAM, CNC மெசினோட மொழிக்கு  NUMERICAL PROGRAM -ஆக மாற்றும். அது இப்படித்தான் இருக்கும்...

    
   இந்த புரோகிராம்ம உருவாக்கத்தான் இவ்வளவு வேலை நடந்துச்சு.இந்த மாதிரி புரோகிராம்ம நம்ம கையில எல்லாம் எழுத முடியாது.ரொம்ப சிம்பிளான பார்ட்டுக்கு வேணும்னா எழுதலாம்.3D,MOULD-க்கெல்லாம் இந்த மாதிரி புரோகிராம் எழுதனும்னா,அந்த ஆண்டவனால கூட எழுத முடியாது. ஆனால் நம்ம MASTERCAM அசால்டா எழுதிடும்.இந்த புரோகிராம்ம அப்படியே மெசினுக்கு அனுப்பிடனும்.ஒரு புரோகிராமரோட வேலை இதோட முடிஞ்சிடிச்சி.இதுக்கு எல்லாம் நீங்க CNC துறையில பெரிய தில்லாலங்கடியா இருக்கணும்னு அவசியம் இல்லீங்க.சும்மா ஏசி ரூம்ல உக்காந்துகிட்டே இதை செஞ்சிடலாம்.

       6. சரி...இது CNC மெசின்ல ஓடும்போது எப்படி இருக்கும்.ரொம்ப ஆர்வமா இருக்கிறவங்க கீழே உள்ள வீடியோவை பாருங்க..நம்ம MASTERCAM கொடுத்த புரோகிராம,CNC மெசின் தெளிவா புரிஞ்சுகிட்டு எவ்வளவு சமத்தா JOB போடுது பாருங்க...CNC மெசின்னப் பத்தி தெளிவா உடனே தெரியுனும்ன்னா பிரபல பதிவர் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ்  அருமையான ஒரு தொடர் எழுதுகிறார். அங்கு சென்று பார்க்கலாம்.

       

 முதல்ல சொன்ன வரைபடத்த வைத்து MASTERCAM-ன் பேருதவியால் நாம போட்ட JOB இதோ கீழே இருக்கு பாருங்க........


.       
              இப்பயாவது MASTERCAM-ன் பயன்பாடு என்ன என்பதை ஓரளவு தெரிஞ்சிகிட்டீங்களா.....


        
   ஒன்னுமே புரியலடா சாமி...இதுதான் உங்க பதில்ன்னா..கவலைப்படாதீங்க. இது ஒரு முன்னோட்டம்தான்.இதைத் தான் இனி ஒவ்வொரு வாரமும் தெளிவா, விளக்கமா சொல்லப்போறேன்.என்ன... MASTERCAM இன்ஸ்டால் செஞ்சாச்சா?....அடுத்தப் பதிவில் எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதை விளக்கமாக சொல்கிறேன்...




அடுத்தப் பதிவிலும் ச(சி)ந்திப்போம்......
 
--------------------------------------------------((((((((((((((((((((((()))))))))))))))))))))))))------------------       

9 comments:

  1. நல்ல தகவல்...நான் ஆரம்பத்தில டெக்ஸ்மோ மோட்டார் கம்பனியில் CNC மிசின் ஓட்டி இருக்கேன்.அதன் ஞாபகம் வருகிறது.செட்டர் எனப்படும் ஆட்கள் செய்யும் அட்டகாசம் ரொம்ப ஓவர்...எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்,,,,எனக்கு வேலை ஒரு ஷிப்ட்ல 250 க்கும் மேலாக இம்பெலர் போடணும்...ஒரே கடுப்பா இருக்கும்..ப்ரோக்ராம் பண்ண விட மாட்டாங்க....ஒன்லி ப்ரொடக்சன் தான்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பா..நம்ம ஊர்ல சின்னக் கம்பேனிக எல்லாமே இப்படிதான்.பணம் மட்டுமே அவர்கள் குறிக்கோள்

      Delete
  2. Replies
    1. வருகைக்கு நன்றி..

      Delete
  3. தெளிவான விளக்கங்களுடன் பட உதவியுடன் அருமையாக தொகுத்து எழுதுகிறீர்கள்.

    மாஸ் ப்ரோடக்சன் தான் சில கம்பெனிகளுக்கு குறிக்கோள். தரம் அல்ல.

    ReplyDelete
  4. mastercam இல் சில சந்தேகங்கள் கேட்கணும். உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
    மெயில் ஐடி தரவும்.

    ReplyDelete