தனுஷின் ஒய் திஸ் கொலைவெறி பாடல் YOUTUBE-ல் கிட்டத்தட்ட 48 மில்லியன்
பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. சமீபத்தில் ஒரு
கல்யாண நிகழ்ச்சியில் மணமகனும் மணமகளும் தனித்தனியே குத்தாட்டம் போட்டு
மணமேடைக்கு வந்தததை எல்லோரும் YOUTUBE-ல் பார்த்து 'இன்ப அதிர்ச்சி'
அடைந்திருப்பீர்கள்.இந்த வீடியோதான் ஒன்றரை மில்லியனுக்கு மேல்
ஹிட்ஸ் வாங்கி அசத்தியிருக்கிறது.தமிழ் கலாச்சாரம்,பண்பாடு என்று ஒரு சிலர்
கூப்பாடு போட்டாலும் இதில் சம்மந்தப்பட்ட மணமகன் திலீப்பும்,மணமகள்
மோகனாவும் இதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொள்கின்றனர்.
திலீப்பும் மோகனாவும் |
இந்த வராலாற்று சிறப்புமிக்க கல்யாணம் எங்கே நடந்ததுன்னு
கேட்கிறீங்களா?அட நம்ம சிங்கபூர்லதான்.மூன்று வருட காதலுக்குப் பின் இந்த
ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன்
கோயிலில் தான் இந்தத் திருமணம் நடைபெற்றது.
வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்தத் திருமணம் நடந்த கோயில் |
இந்த 'பிரிலியன்ட் யோசனை' இவர்களுக்கு எப்படி வந்ததாம்?
இந்தத்
திருமணம் தமக்கும் தங்களை வாழ்த்த வந்தவர்களுக்கும் ஒரு மறக்க முடியாத
அனுபவமாக இருக்கவேண்டும் என்பதற்காக நடனமாடிக்கொண்டே மணமேடைக்கு வரலாம்
என்று நண்பர்களுடன் சேர்த்து முடிவு செய்தார்களாம். முதலில் இவர்களுக்கு
முன்னால் இவர்களின் பெற்றோர்கள் ஆடி வந்தப் பிறகு இவர்கள் ஆடி வரலாம் என்று
திட்டம் போட்டிருக்கிறார்கள்.அவர்கள் மறுத்து விடவே அந்தத் திட்டத்தை
கைவிட்டு விட்டார்கள்.
இந்த விஷயம் அங்கு வந்தவர்களுக்கும் தெரியாதாம்.நாதஸ்வரம்,தவில் போன்ற
வழக்கமான பாரம்பரிய இசையை எதிர்பார்த்தவர்களுக்கு 'கறுப்புப்
பேரழகா','மங்காத்தா','இடிச்சப் பச்சரிசி','மம்புட்டியான்' போன்ற கலை
ரசனைமிக்க,கருத்தாழம் மிகுந்த பாடல்களைப் போட்டு மணமக்கள் நடனமாடி வந்தபோது
அங்கிருந்தவர்கள் புரோகிதர் உட்பட எல்லோரும் அதிர்ந்து தான்
போனார்கள்.பிறகு இது ஒரு கலாச்சாரப் புதுமை என்றெண்ணி எல்லோரும் பார்த்து
ரசித்து மகிழ்ந்திருக்கின்றனர்.
அந்த வீடியோ கீழே...
சரி இதைப்பற்றி புதுமைப்பெண் மோகனா என்ன சொல்கிறார்...."எனது திருமண நாளன்று என்னால் தலைகுனிந்து பவ்யமாக நடக்க இயலாது.அது என்னுடைய இயல்பும் அல்ல.ஆனால் இந்த நடனமாடும் திட்டம் கோயில் நிர்வாகம் உட்பட யாருக்கும் தெரியாது.இந்த வீடியோ-வை என் தோழிதான் யூடியுபில் வெளியிட்டார்.அதற்குப் பின் .'.போன் நம்பரைத் தெரிந்து கொண்ட பலர் என்னை கடுமையாக சாடினார்கள்.இது போன்ற விமர்சனங்கள் என்னை பாதிக்காது.மேலும் இந்த வீடியோ படத்தைப் பார்ப்பது ஒவ்வொருவருடைய சொந்த விருப்பம்.என்னை கடுமையாக விமர்சிப்பவர்கள் ஏன் மீண்டும் அந்த வீடியோ-வை பார்க்கவேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார்.
எது எப்படியோ தமிழர்களின் திருமணம் ஓன்று இந்த அளவுக்கு உலக அளவில் பிரபலம் அடைந்து வருவது இதுவே முதல் முறை.
--------------------------------------------------(((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))----------------
நானும் இந்த வீடியோவை சில வாரங்களுக்கு முன்பு யூடியுபில் பார்த்தேன். புதுமை ... சாங் செலக்சனும் நன்றாகவே இருந்தது.
ReplyDeleteஹி..ஹி..இதுதான் கலாச்சாரப் புதுமை...வருகைக்கு நன்றி
Deleteஅருமை அமர்க்களம்... மாப்பிளையும் பொண்ணும் கலக்குறாங்கப்பா...
ReplyDeleteநண்பரே... http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை அனைத்தையும் இணைக்கலாமே... ஏராளமான வாசகர்கள் கிடைப்பார்கள்.
Nice
ReplyDeleteஊர்ல பேசறவன் பேசிகிட்டுதான் இருப்பான், நான் பார்த்த வரைக்கும் நல்லாதான் இருந்தது, அதுல ஒன்னும் தப்பு இல்லைனு தான் நான் சொல்லுவேன்
ReplyDelete//Kathir RathMar 19, 2012 05:47 AM
ReplyDeleteஊர்ல பேசறவன் பேசிகிட்டுதான் இருப்பான், நான் பார்த்த வரைக்கும் நல்லாதான் இருந்தது, அதுல ஒன்னும் தப்பு இல்லைனு தான் நான் சொல்லுவேன்//
10000000000000000000000000000000000000000000000% righ
nallaa irukkuthu
DeleteThis comment has been removed by the author.
Deletemmm...:
ReplyDeleteமாப்பிள்ளை சூப்பரப்பு.காதல் படத்துல வந்த
ReplyDeleteவிருச்சிககாந்த் இவர்தான பாஸ்?
இதில் தவறு என்ன இருக்கின்றது .. தமிழ் பாரம்பரியத் திருமணம் என்று ஒன்று உண்டா என்ன ... ஆரம்பக் காலங்களில் வெறும் மாலை மாற்றல்களும் சில வித பழங்குடிகள் வகையாக இருந்த தமிழ் திருமணம் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என பலவகை பழக்க வழக்கங்களை உள்வாங்கி.. கேக் வெட்டிக் கொள்வது வரை வளரவில்லையா..
ReplyDeleteதிருமணம் என்பது ஆடிப் பாடத் தானே !!! இதில் என்ன தப்பு இருக்கு .. அந்த பெண்கள் அழகாக ஆடுகின்றார்கள் .. சினிமாவில் மட்டுமே இதைப் பார்த்ததுண்டு ...