MASTERCAM-தமிழில்...
MASTERCAM-ன் விளக்க வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதிலுள்ள மொத்த COMMANDS-யையும் வகைப்படுத்தி உங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக இந்த FLOW CHART வரைந்துள்ளேன். ஒவ்வொரு COMMAND-யையும் தனித்தனியே விளக்கும் போது இது எதற்கு?... இதன் உபயோகம் என்ன?... என்பது தெரியவில்லை என்றால் மேற்கொண்டு படிப்பதற்கு உங்களுக்கு ஆர்வமில்லாமல் போகலாம்.அதற்காகத் தான் இவ்வளவு அறிமுகம் கொடுக்க வேண்டியதாயிருக்கிறது.
MASTERCAM-ஐ இரண்டு பிரிவுகளாப் பிரிக்கலாம்.
1.DESIGNING ( வடிவமைத்தல் )
2.TOOL PATH ( இதன் விளக்கம் இங்கே சென்று பார்க்கவும் )
சரி... DESIGNING-ன்ன என்ன? நமக்கு 'கஸ்டமர்' கொடுத்த வரை படத்தை (DRAWING) அல்லது மாதிரியை (SAMPLE) அவர்களின் தேவையை அறிந்து MASTERCAM-ல் வரைவது.
சில நேரங்களில் கஷ்டமர்களே AUTOCAD-ல் வரைந்து DWG/DXF .'.பைல்களாகவோ அல்லது STEP, PARASOLID, IGES .'.பைல்களாகவோ கொடுத்து விடுவர்.இது மாதிரி தருணங்களில் நமக்கு ஒரு வேலை மிச்சம். இதை நேரடியாக MASTERCAM-ல் இறக்குமதி(IMPORT) செய்து TOOLPATH எடுத்து விடலாம்.ஆனால் இது போல கொடுக்கப்படும் .'.பைல்கள் சில நேரங்களில் பிரச்சனை கொடுத்து விடும்.TOOLPATH எடுத்தால் ERROR காண்பிக்கும்.என்னப் பிரச்சனை என்று கண்டு பிடிப்பதற்குள் உயிரே போய்விடும்.பேசாமல் புதுசாவே MASTERCAM-ல் வரைந்து விடலாம் என்று எண்ணத்தோன்றும். இதற்கு என்ன காரணம்னா...AUTOCAD என்பது வரைபடத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ஒரு மென்பொருள்.அதில் வரையும் போது கோடுகள் இணையாமலோ அல்லது புள்ளிகள் அழிக்கப்படாமலோ இருத்தால் AUTOCAD -ல் பெரிய பிரச்சனை ஒன்றும் வராது.ஆனால் அதையே MASTERCAM-ல் இறக்குமதி செய்து TOOLPATH எடுக்கும் போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
ஆனால் அதே வரை படத்தை MASTERCAM-ல் நேரடியாக வரையும் போது இது போன்ற தவறுகள் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.சில நேரங்களில் பெரிய நிறுவனங்களுக்கு 'MOULD' அல்லது 'DIE' செய்யும் போது அவர்களுக்கென்றே பிரத்தியோகமான குறீயீடு,வெளிப்புற அமைப்பு ( உதாரணம்..கோகோ கோலா பாட்டில்)இருப்பதால் அவர்களே DESIGN செய்ததை மாற்றாமல் TOOLPATH எடுக்க வேண்டிவரும்.
மேலே உள்ள படத்தில் DESIGN-ஐ இரண்டாக பிரித்துள்ளேன்.
1 . CREATION 2.MODIFICATION.
எந்த ஒரு வரைபடம் வரைந்தாலும் அதற்கு அடிப்படையான COMMANDS தான் புள்ளி(POINT), கோடு(LINE), செவ்வகம்(RECTANCLE), வட்டம்(CIRCLE), போன்றவைகள்.எல்லா வரைபடங்களும் இதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இவைகள் CREATION என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிறகு MODIFICATION.அதாவது வரைந்த படங்களை வெட்டுவது, சேர்ப்பது,சுற்றுவது,சிறிது-பெரிதாக்குவது,ஒன்றை பத்தாக்குவது-பத்தை நூறாக்குவது போன்ற பல வேலைகள் இதில் நடக்கும். இது முடிந்தவுடன் உங்கள் வரைபடம் TOOLPATH எடுப்பதற்கு தயாராகிவிடும்.
3.TOOLPATH.
MASTERCAM-ன் புஜபல பராக்கிரமம் இதில் தான் அடங்கி உள்ளது.இதில் இரண்டு வகை உள்ளது.
1. 2D TOOLPATH
2. 3D TOOLPATH
இதன் தெளிவான விளக்கம் இங்கே சென்று பார்க்கவும்.சரி... முன்னோட்டத்தை இத்தோடு நிறுத்திக்கிறேன்.
----------------------------------------------------------------------X---------------------------------------------------------
இப்ப DESKTOP -ல உள்ள MASTERCAM ஐகான டபுள் கிளிக் பண்ணா,இதோ கீழே உள்ள மாதிரி ஸ்க்ரீன் உங்களுக்காக பிரகாசமாக விரியும்.இதை சுருக்கமா சொல்லிட்டு நேரா மேட்டருக்கு போகலாம்.
சைடுல முதல்ல இருக்கிறது MAIN MENU.
அதாவது மேலே சொன்ன விளக்கவரைபடத்துல இருக்கிற எல்லா COMMANDS-ம் இதில் தான் அடங்கியிருக்கு.நீங்க DESIGN அல்லது TOOLPATH எடுக்கணும்னா இங்கே போய்தான் செலக்ட் பண்ணனும்.
அதாவது மேலே சொன்ன விளக்கவரைபடத்துல இருக்கிற எல்லா COMMANDS-ம் இதில் தான் அடங்கியிருக்கு.நீங்க DESIGN அல்லது TOOLPATH எடுக்கணும்னா இங்கே போய்தான் செலக்ட் பண்ணனும்.
அடுத்ததா MENU BUTTONS.
ஒவ்வொரு தடவையும் MAIN MENU -ல உள்ள COMMANDS-யை கிளிக் செய்து அடுத்தடுத்து இன்னும் உள்ளே போயிட்டு திரும்ப முன்னால இருக்கிற COMMANDS-க்கு வர்றதுக்கு இந்த 'BACKUP' COMMAND நமக்கு உபயோகமாகுது. திரும்ப ஒரேயடியா MAIN MENU-க்கு வரணும்னா அடுத்ததா உள்ள MAIN MENU-வ ஒரு கிளிக் பண்ணிடுங்க போதும்.
குறிப்பு: நீங்கள் 'BACKUP' பட்டனை சொடுக்குவதற்குப் பதில் கிபோர்டு-ல் உள்ள Esc பட்டனைக் கூட உபயோகப் படுத்தலாம்.
அடுத்து SECONDARY MENU
ஒவ்வொரு தடவையும் MAIN MENU -ல உள்ள COMMANDS-யை கிளிக் செய்து அடுத்தடுத்து இன்னும் உள்ளே போயிட்டு திரும்ப முன்னால இருக்கிற COMMANDS-க்கு வர்றதுக்கு இந்த 'BACKUP' COMMAND நமக்கு உபயோகமாகுது. திரும்ப ஒரேயடியா MAIN MENU-க்கு வரணும்னா அடுத்ததா உள்ள MAIN MENU-வ ஒரு கிளிக் பண்ணிடுங்க போதும்.
குறிப்பு: நீங்கள் 'BACKUP' பட்டனை சொடுக்குவதற்குப் பதில் கிபோர்டு-ல் உள்ள Esc பட்டனைக் கூட உபயோகப் படுத்தலாம்.
அடுத்து SECONDARY MENU
அடுத்ததா இருக்கிற 'Z = 0' இது 2D வரைபடத்துக்கு எந்த மாற்றமும் இருக்காது. 3D-ல வரையும் போதுதான் இது மாறும்.இதுக்கு CONSTRUCTION DEPTH-னு சொல்வாங்க.இதைப்பற்றி SOLID வரையும்போது விளக்கமா சொல்றேன்.
அடுத்ததா COLOR.இது ஒன்னும் கஷ்டமான விஷயம் அல்ல.நீங்கள் வரையக் கூடிய படத்தின் வண்ணத்தை உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். இதைக் கிளிக் பண்ணினா 16 கலர் காண்பிக்கும்.இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
அல்லது இன்னும் நிறைய வண்ணங்கள் வேண்டுமென்றால் 16/256 கிளிக் செய்தால் 256 வண்ணங்கள் கிடைக்கும்.
இதிலுள்ள மற்ற COMMANDS களை நாம 3D வரையரப்போ பார்க்கலாம் .
அடுத்ததா நான் சொல்லப்போறது அடிப்படை எற்பாடு(BASIC SETUP).இது ரொம்ப ரொம்ப முக்கியம்ங்க.பிற்பாடு நீங்க MASTERCAM-ல பெரிய கில்லி ஆயிட்டீங்கனா இந்தத் தலையை சுத்தி மூக்கத்தொடுற வேலையையெல்லாம் தவிர்க்கனும்.என்ன சொல்றேன்னு புரியுதுங்களா? நீங்க சீக்கிரமா வரைந்து புரோகிராம வெளிய எடுக்கிற விஷயத்தை தான் சொல்றேன்.உதாரணமா... உங்க கம்பெனியில என்ன மாதிரி மெசின் இருக்கு,அதுல எத்தன டூல்ஸ் இருக்கு,அது என்னென்ன டைப்புல இருக்கு,என்ன மாதிரி புரோகிராம அது படிக்கும் என்பதை ஆராய்ந்து அதை MASTERCAM-ல செட் பண்ணிடீங்கனா அதுக்கப்பறம் உங்க வேகத்தை யாராலும் தடுக்க முடியாது.
மொத்த SETUP-யும் இப்பவே சொன்னா குழம்பிடுவீங்க.மொதல்ல முக்கியமான இரண்டு விஷயம் செய்யப்போறோம்.உங்களுக்கு கொடுக்கப்பட்ட வரைபடம் எந்த அலகு(UNIT)ல இருக்குனு பாருங்க.ஒன்னு MM (மில்லிமீட்டர்-METRIC)ல அல்லது INCH(இன்ச்-ENGLISH)ல இருக்கும்.அதை எங்கே போயி தேடுரதுன்னு யோசிக்க வேணாம்.அதன் விவரம் வரைபடத்தின் கீழே இருக்கும்.
சரி இதை எப்படி SET பண்றது?
MAINMENU-க்கு மொதல்ல போங்க...
அப்பறம் Screen -------->Configure .இப்ப System Configuration -னு ஒரு பேஜ் திறக்கும். இதுல Start/Exit பட்டனை சொடுக்கினா,கீழே உள்ள மாதிரி இன்னொரு பக்கம் திறக்கும்.இதுல Startup Configuration File-ல போயிட்டு உங்களுக்கு தேவையானதை மாற்றிக்கொள்ளலாம்.
அடுத்ததா AUTO SAVE.இது ரொம்ப முக்கியமான COMMAND.நம்ம ஊருக்கு இது மிக மிக அவசியம்..நாம பல மணி நேரமா கஷ்டப்பட்டு வரைந்து, TOOLPATH எடுத்து முடிக்கிற நேரத்தில பவர்கட் ஆயிடும்.அல்லது சில நேரங்களில் சிஸ்டமே மக்கர் பண்ணி அப்படியே நின்னுடும்.நாம வரையிற ஆர்வத்தில SAVE பண்ணாம விட்டுடுவோம்.இப்ப சிஸ்டத்தை ஓபன் பண்ணிப் பாத்தா நாம இதுவரை வரைந்தது எதுவுமே இருக்காது.ஒரு இன்டர்வியுல எனக்கு இப்படித்தான் ஆயிடுச்சு.
சரி AUTOSAVE -ன்னா என்ன?.உதாரணமா AUTOSAVE-ல 5 நிமிடம்-னு செட் பண்ணினா,ஐந்து நிமிட இடைவெளில ஒவ்வொரு தடவையும் அந்த பேஜ் ஓபன் ஆகி SAVE பண்ணவா?-னு கேட்கும்.நாம ஓகே-னு க்ளிக் பண்ணினா தானாகவே SAVE-ஆகிடும்.
இத எங்க போயி பன்றது?.இதுவும் அதே Start/Exit பேஜ்லதான் இருக்கு.அங்கே கீழே போய் AutoSave என்கிற பட்டனை சொடுக்கினா கீழே உள்ள மாதிரி இன்னொரு பேஜ் திறக்கும்.அதுல போய் Active பட்டனை ஒரு டிக்.உங்களுக்கு எவ்வளவு கால இடைவெளி வேண்டும் என்பதை Interval -ல் பதிய வேண்டும். சரி...இது எங்கே போய் SAVE ஆகும்.குழம்ப வேண்டாம்.ஏற்கனவே இருக்கும் இடத்தில் அதே பெயரில் SAVEஆக வேண்டுமென்றால் அடுத்ததாக உள்ள 'Save using active Mastercam file name' -ஐ ஒரு டிக் செய்யவும்.
அடுத்ததா உள்ள Prompt before saving file-ன்னா என்ன?....இதை டிக் செய்துவிட்டால் ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கும் இந்த பேஜ் திறக்கப்பட்டு நம்மிடம் SAVE பண்ணவா? என்று கேட்கும்.உடனே OK என்று சொடுக்க வேண்டும்.ஒருவேளை டிக் செய்யாமல் விட்டால் நம்மிடம் கேட்காமல் அதுவாகவே SAVE ஆகிக் கொண்டிருக்கும்.இது சில நேரங்களில் சிக்கலாகிவிடும்.நாம் AUTOSAVE போட்டோமா என்று கூட தெரியாமல் போய்விடும்.அதனால் நீங்கள் கீழே கண்பிக்கப்பட்டுளது போல் டிக் செய்து OK கொடுத்து மீண்டும் ஒரு OK,கடைசியாக YES கொடுக்க வேண்டும்.
சரி ...அடுத்தப் பதிவிலிருந்து CREATE-ல உள்ள ஒவ்வொரு COMMAND யையும் பார்க்கலாம்.
அடுத்தப் பதிவிலும் ச(சி)ந்திப்போம்......
---------------------------------------((((((((((((((((((((((((())))))))))))))))))))))-------------------------
good work in tamil..thanks and wishes
ReplyDeleteauto save பற்றி அறிந்து கொண்டேன்.....
ReplyDeleteஆனா ஏதாவது தப்பா ஒர்க் செய்த சமயத்தில் auto save ஆனா சரி செய்ய முடியுமா?
ஏன்னா undo ஆகாதே..
Nanbarey Master cam katrukolla enakum asai than,tharpothu naan EDM Wirecut Programmer aga ingu Jurong East il velai seithu kondirukiren.Acam,Gibbs cam software's now im using.
ReplyDeletePuthithaka emathu company il CNC Milling machines install seithirukiralkal,so now they ask me to learn MasterCam software also,i had seen your blog,it's very useful for beginners,even in tamil its very very useful for me.i got Mastercam X4 software from my frnd,n just now i installed.
Now im trying to create 2D drawings n toolpath .
Will you continue your blog for this Mastercam software in future?
If possible Kindly reply my mail id : senthil.sa1984@gmail.com
Thanks & Regards
Senthilkumar
85251537 ( Jurong East,SG ).