பத்தாவது இடத்தில் எந்தப்படமும் இல்லாததால் நேரடியாக ஒன்பதாவது இடத்திற்கு செல்வோம்.
சென்ற வருடம் தமிழ்த் திரையுலகை விஜய் சேதுபதி என்கிற சூது செமையாகக் கவ்வியிருந்தது.தொலைக் காட்சித் தொடரில் கூட நடிக்க லாயக்கில்லாத மூஞ்சி என்று ஆரம்பத்தில் சிலரால் புறக்கணிக்கப்பட்டு, பிற்பாடு சிறு வேடங்கள், டப்பிங் ஆர்டிஸ்ட் என்று படிப்படியாக முன்னேறி 2013 ஆம் ஆண்டின் சிறந்த நடிகராகப் பலரால் பாராட்டப்பட்டவர்தான் இந்த விஜய் சேதுபதி.
ஆரம்பத்தில் நிறைய அனுபவப்பட்டதால் என்னவோ, கதை மட்டுமே ஒரு படத்தை வெற்றியாக்கும் என்பது மட்டுமல்ல கடைக்கோடி ரசிகர்களையும் கட்டியிழுத்து திரையரங்குக்குக் கொண்டு வரும் என்கிற சூட்சமத்தைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார். பீட்சா, ந.கொ. ப.காணோம், இ.ஆ.பாலகுமாரா.. என்று ஹீரோவாக நிதானமான வெற்றியை பெற்றாலும் வில்லன் கதாபாத்திரத்திலும் சில படங்களில் அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த வருடத்தில் அவர் நடித்ததில் மாஸ் 'சூது கவ்வும்'. 90 களின் ஆரம்பத்தில் திரைப்படக்கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள் தமிழ்த்திரையில் கோலோச்சியதைப்போல் கடந்த வருடம் குறும்பட இயக்குனர்களின் கைகளில் தமிழ் சினிமா உலகம் சிக்கி வேறொரு கட்டத்திற்கு நகர்ந்தது. தமிழ் சினிமாவின் திரைக்கதை வடிவம் வேறொரு பரிமாணம் கண்டது. கிளிசே வகைக் காட்சிகள் தமிழ் ரசிகர்களைச் சலிப்படைய வைத்ததால் இப்படியொரு புதிய முயற்சிக்கு ஆரம்பத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்தது. நிச்சயமாக சூது கவ்வும் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரென்ட் செட்டர்.
ஆதலால் காதல் செய்யாதீர்கள் என்பதுதான் படத்தின் மையக்கருத்து. நவநாகரிகம் என்கிற பெயரில் வெளிநாட்டுக் கலாச்சாரம் எப்படி நம் கலாச்சாரத்தினுள் ஊடுருவி இளைய சமுதாயத்தை தவறான பாதையில் பயணிக்கச் செய்து படுகுழியில் தள்ளுகிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.
நிச்சயம் பருவம் எய்திய பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் இப்படத்தைப் பார்த்தால் பதறிப்போவார்கள். கருவைக்கலைக்க டாக்டரிடம் சென்று சமாளிக்கும் காட்சியும், தன் மகள் தவறான முறையில் உண்டாகியிருக்கிறாள் என்பதை அவளது தாய் உணர்த்து துடிக்கும் காட்சியும் சுசீந்திரனின் திறமைக்கு சில சாம்பிள்கள். அதற்காக காதலிப்பவர்கள் எல்லோரும் இப்படித்தான் முடிவெடுப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. தன்னால் உருவான பிஞ்சை அப்பா உதாசீனப்படுத்தலாம். அம்மாவும் அப்படி தூக்கி எறிவாரா என்ன..?
மதுரையைக் களமாகக் கொண்ட படங்கள் எல்லாமே தமிழ்ச் சினிமாவில் தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கிறது. மதயானைக் கூட்டமும் அவ்வகைப் படைப்பே. மதுரையைக் காட்டி விட்டு சாதிப் பெருமையைப் பேசாமலிருந்தால் எப்படி..?
ஆனால் கவுண்டர் சாதிப்பெருமைப் பேசிய ஆர்.வி. உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், தேவர் பெருமைப் பேசிய மனோஜ்குமார், பாரதிராஜா போன்றோர்களின் படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மதயானைக் கூட்டம்.
ஆண்ட பரம்பரை என சொல்லிக்கொள்பவர்களின் சாதிப்பெருமையை உயர்த்திப் பிடிக்க, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அவர்கள்முன் கைகட்டி,வாய்ப்பொத்தி,காலனி மற்றும் மேல் சட்டை அணியாமல், கூழைக் கும்பிடுப் போடும் அடிமைகளாகக் காட்சிப்படுத்தப்பட்டு வந்தனர். தமிழ் சினிமாக் கட்டமைத்து வைத்திருந்த அந்த டெம்பிளேட் வடிவமைப்பை முதலில் உடைத்தெறிந்தது தேவர் மகன். அந்த ஆண்டச் சாதிக்குள்ளேயிருக்கிற அறியாமையையும், அர்த்தமற்ற சாதிப்பெருமிதத்தையும்,காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும்,அடியாள் கலாச்சாரத்தின் அடிப்படையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது அப்படம். தவிரவும், அப்படத்தில் விளிம்புநிலை மக்களிலிருந்து பஞ்சாயத்துத் தலைவர் வரை ஒரே சமூகத்தைச்சார்ந்த மக்களாகக் காட்டியது கமலின் சாமர்த்தியம்.
கதைக்கருவைப் பொறுத்தவரையில் தேவர் மகனுக்கு மிக அருகில் பயணிக்கிறது மதயானைக் கூட்டம். இன்னமும் அச்சமூகத்தில் சாதி வெறிப்பிடித்த, மூடர்க் கூடங்களாக வாழும் ஒரு கூட்டத்தைப் பற்றிய கதைதான் மதயானைக் கூட்டம். ஆனால் கதையை முடித்த விதத்தில்தான் பெரும் ஓட்டை விழுந்துவிட்டது.
ஒரு கலவரம் நடைபெறுகிறது. பலர் சாகிறார்கள் என வைத்துக்கொள்வோம். கலவரத்தின் மூலக் காரணம், அதன் விளைவு, எதிர்காலத்தில் கலவரம் நடைபெறாமல் தடுக்க முன் யோசனைகள் என்று அலசும் போதுதான் அது முழுமையடைகிறது. மாறாக, இவர்கள் அப்படித்தான் அடித்துக்கொள்வார்கள் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போவது எப்படித் தீர்வுக்கான முறையாகும்....? அந்த விதத்தில் படம் முடிந்து வெளிவரும்போது ஒரு டாக்குமெண்டரியான அனுபவத்தை உண்டுபண்ணியது படத்தின் மிகப்பெரிய சறுக்கல்..
அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், கடந்த வருடத்தில் கடைசியில் வந்தாலும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது மதயானைக் கூட்டம். இப்படியொரு கதையைத் திரையில் வடித்த தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷின் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.
உலக நாயகனின் உச்சபட்ச படைப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒட்டு மொத்த உழைப்பிற்காக வெகுவாகப் பாராட்டலாம். ' வேறு தேசம் நோக்கிய நகரல்' இப்படத்திற்கு அதிக பட்ச விளம்பரத்தைத் தேடிக்கொடுத்தது. என்றாலும் அக்கசப்பான சம்பவங்கள், திரைப்படங்கள் சமகால சமூகப் பிரக்ஞை கொண்டதொரு படைப்பாக இருக்கவேண்டும் என்கிற பார்வையை மக்களிடம் விதைத்தது.
படைப்பு ரீதியாகப் பார்த்தால் ஹாலிவுட்டின் நேர்த்திக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை விஸ்வரூபம். ஆனால் தர்க்க ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சப்பைக்கட்டுக் கட்டியதோடு, சிறுபான்மை மக்களின் ஒரு பகுதியினரை தீவிரவாதியாகக் காட்சிப் படுத்தியது இப்படம்.
ஒரு காட்சியின் நம்பகத்தன்மையைக் கூட்ட , அதை மென்மேலும் மெருகூட்டி தத்ரூபமாகப் படைப்பதில் கலைஞானி கமல்ஹாசன் ஒரு விற்பன்னர் என்பதை உலகம் அறியும். அதனால்தான் என்னவோ அக்காட்சிகளின் வீரியத்தன்மை சில நேரங்களில் அவருக்கு எதிராகவே திரும்பிவிடுகிறது. தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் என்கிற தட்டையான சிந்தனையை ஏற்கனவே திரையிலகில் பலர் விதைத்து விட்டுப் போனாலும், கமல் சொல்லும்போது அதன் வீச்சு வேறுவித சிந்தனையைத் தூண்டுகிறது. அதுதான் கமலின் பலமும் பலவீனமும்.
மன்மத அம்பு என்கிற மகா மொக்கைக்குப் பிறகு வந்ததால் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, வியாபார ரீதியாக கமலுக்கும் முழுத் திருப்தியளித்த படம்.
கடந்த வருடம் தமிழ்ச் சினிமாவில் நடந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. பிளாக் காமெடி என்ற வகைமைக்குள் வரும் படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டுவதுண்டு. சூது கவ்வும் படமும் அவ்வகையே. சமூகத்தின் புறக்கணிப்பால் நேர்ந்த வலியின் உச்சம் இளைய சமுதாயத்தை எப்படித் தடம் மாறச்செய்கிறது என்பதை அபத்த நகைச்சுவையின் மூலம் தோலுரித்துக் காட்டிய வகையில் தமிழ் சினிமாவின் கோபுரக் கதவைப் பலமாகத் தட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நவீன்.
Attack The Gas Station என்ற கொரியப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழ் வெகுஜன சினிமா பார்வையாளனின் ரசனையின் உச்சமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார் நவீன். சமகாலக் கலாச்சார மீறல்களையும் சமூக அவலங்களையும் தன் நேர்த்தியான வசனங்களின் மூலம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் நவீன் சொல்லியது படத்தின் மிகப்பெரிய பிளஸ். ஓவியாவின் காதலனிடம் சென்ட்ராயன் பேசும் அந்தப் பன்ச் ஒன்றுபோதும் நவீனின் நவீன யுகத்தின் மீதான அறச்சீற்றத்திற்கு...
பின்புல சுவாரஸ்யத்தை அவிழ்க்கிறேன் என்று வீட்டு நாய் வரைக்கும் ஃபிளாஷ்பேக் வைத்தது கொஞ்சம் புதுமை என்றாலும் எந்த நேரத்தில் யாருக்கு ஃபிளாஷ்பேக் வரப்போகிறதோ என்ற அச்ச உணர்வைத் தூண்டிக் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். மற்றபடி சில CLICHE வகைக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தமிழ்த் திரையுலகம் கண்ட SPOOF வகைத் திரைப்படங்களின் திரைக்கதை வடிவமைப்பில் மூடர்கூடம் ஓர் உச்சம்.
3.விடியும் முன்...
ஆரண்ய காண்டம் படத்திற்குப் பிறகு அழுத்தமான, ரசிகனின் ஆழ்மனதை அசைத்துப்பார்க்ககூடிய வகையில், உலகத்தரத்தை உரசிச்செல்கிற எந்தவொரு படைப்பும் தமிழில் வரவில்லையே என்ற கலைத்தாகத்தைப் போக்கிய படம் விடியும் முன். ஆனால் ஆங்கிலப்படத்தின்(London to Brighton ) தழுவல் என்ற ஒற்றைப் புள்ளியில் ஆரண்ய காண்டத்திற்கு ஒரு படி கீழ்.
படத்தின் அசுரபலம் திரைக்கதையும் பின்னணி இசையும். ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் உலகத்தரம். அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது என்பதைக் கணிக்க முடியாதது மட்டுமல்ல, இறுதிக் காட்சிவரை படத்தின் கதையை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரில்லர். இந்தப் படத்திற்காக நிறைய வாய்ப்பை இழந்தாராம் பூஜா. காரணமில்லாமல் இல்லை. அவர் சினிமா கேரியரில் இது மணிமகுடம். பூஜாவின் முந்தைய படங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எனக்கு இன்னொரு 'பசி' ஷோபாவாகத் தெரிந்தார்.
அசல் படைப்பில் வெறும் fucking என்ற இலக்கியப் பதத்தை வைத்து மொத்தவசனத்தையும் வடித்திருப்பார்கள். அந்தச் சிறுமி கூட சர்வ சாதாரணமாக அவ்வார்த்தையை உதிர்ப்பாள். நல்லவேளை தமிழில் அப்படியோர் விபரீத முயற்சி எடுக்கவில்லை. கமர்சியலுக்காக எந்த காம்ப்ரமைசும் செய்யாமல் எடுத்ததற்காகச் சிரம் தாழ்த்தி வாழ்த்தலாம் இயக்குனரை.
"எரியும் பனிக்காடு...." பரதேசி படத்தின் ஆதார ஸ்ருதி இது தான். 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரே படம் என நினைக்கிறேன்.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் நாம் அடிமைப்பட்டு, அடங்கியொடுங்கி வாழ்ந்த காலகட்டமான 1930-ல், ஆனைமலை தேயிலைக் காடுகளில் நடந்த வெவ்வேறு கொடுஞ்சம்பவங்களைத் தொகுத்துப் பின்னிப் பிணைத்து ரெட் டீ( RED TEA ) என்ற தலைப்பில் பி.எச்.டேனியல் என்பவர் நாவலாக எழுதியிருந்தார். பல தேயிலைக்காடுகளில் எழுத்தராகப் பணிபுரிந்த அவர், அந்தக் காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த பலபேரை பேட்டிக் கண்டு இந்த நாவலை வடிவமைத்திருக்கிறார். பிற்பாடு, இது தமிழில் இரா.முருகவேல் என்பவரால் 'எரியும் பனிக்காடு' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
இந்த நாவலைத்தான் பாலா, பரதேசியாக உருமாற்றம் செய்ய முனைந்திருக்கிறார். எரியும் பனிக்காடு நாவலை முழுமையாக வாசித்தவர்களுக்கு இந்தப்படம் முழுத் திருப்தி அளிக்காமல் போயிருக்கலாம். ஆனால் பாலா தேர்ந்தெடுத்த கதைத்தளமும், கதைக்களமும் தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு நகர்த்திச்செல்லும் அற்புதமான முயற்சி. நாவலை முழுமையாக உள்வாங்காமல் எடுத்தது , அந்த நாவலின் நாயகனும் அதை எழுதியவருமான பி. எச். டேனியல் கேரக்டரை காமெடியன் போல் படைத்தது, மத ரீதியான விசயங்களை தேவையில்லாமல் திணித்தது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்தாலும், பாலாவின் கிரீடத்தில் பரதேசியும் ஒரு வைரக்கல் என்பதில் சந்தேகமில்லை.
1.ஓநாயும் ஆட்டுக்குட்டியும்..
சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதைத் தன் நேர்த்தியான இயக்கத் திறமையின் மூலம் நிரூபித்த மகேந்திரன், பாலு மகேந்திரா, 'பசி' துரை, மணிரத்னம் போன்ற ஆளுமைகளின் வரிசையில் மிஸ்கினுக்கும் ஓரிடமுண்டு என்பதைத் தெளிவாக உணர்த்திய படைப்பு ஓநாயும் ஆட்டுக்குட்டியும். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. ஒருவார காலத்திற்கு மேல் என்னுள் ஏதோ இனம்புரியாத தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு.
கதை சொன்ன களமா அல்லது காட்சிப்படுத்திய விதமா அல்லது பின்னியெடுத்த பின்னணி இசையா அல்லது கதாபாத்திரப் படைப்பா அல்லது அக்கதாபாத்திரங்களின் ஆர்பாட்டமில்லாத எதார்த்த நடிப்பா.... எதுவென்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் 2003 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த படைப்பு ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
9.சூது கவ்வும்...
ஆரம்பத்தில் நிறைய அனுபவப்பட்டதால் என்னவோ, கதை மட்டுமே ஒரு படத்தை வெற்றியாக்கும் என்பது மட்டுமல்ல கடைக்கோடி ரசிகர்களையும் கட்டியிழுத்து திரையரங்குக்குக் கொண்டு வரும் என்கிற சூட்சமத்தைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார். பீட்சா, ந.கொ. ப.காணோம், இ.ஆ.பாலகுமாரா.. என்று ஹீரோவாக நிதானமான வெற்றியை பெற்றாலும் வில்லன் கதாபாத்திரத்திலும் சில படங்களில் அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த வருடத்தில் அவர் நடித்ததில் மாஸ் 'சூது கவ்வும்'. 90 களின் ஆரம்பத்தில் திரைப்படக்கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள் தமிழ்த்திரையில் கோலோச்சியதைப்போல் கடந்த வருடம் குறும்பட இயக்குனர்களின் கைகளில் தமிழ் சினிமா உலகம் சிக்கி வேறொரு கட்டத்திற்கு நகர்ந்தது. தமிழ் சினிமாவின் திரைக்கதை வடிவம் வேறொரு பரிமாணம் கண்டது. கிளிசே வகைக் காட்சிகள் தமிழ் ரசிகர்களைச் சலிப்படைய வைத்ததால் இப்படியொரு புதிய முயற்சிக்கு ஆரம்பத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்தது. நிச்சயமாக சூது கவ்வும் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரென்ட் செட்டர்.
8.ஆதலால் காதல் செய்வீர்..
ஆதலால் காதல் செய்யாதீர்கள் என்பதுதான் படத்தின் மையக்கருத்து. நவநாகரிகம் என்கிற பெயரில் வெளிநாட்டுக் கலாச்சாரம் எப்படி நம் கலாச்சாரத்தினுள் ஊடுருவி இளைய சமுதாயத்தை தவறான பாதையில் பயணிக்கச் செய்து படுகுழியில் தள்ளுகிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.
நிச்சயம் பருவம் எய்திய பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் இப்படத்தைப் பார்த்தால் பதறிப்போவார்கள். கருவைக்கலைக்க டாக்டரிடம் சென்று சமாளிக்கும் காட்சியும், தன் மகள் தவறான முறையில் உண்டாகியிருக்கிறாள் என்பதை அவளது தாய் உணர்த்து துடிக்கும் காட்சியும் சுசீந்திரனின் திறமைக்கு சில சாம்பிள்கள். அதற்காக காதலிப்பவர்கள் எல்லோரும் இப்படித்தான் முடிவெடுப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. தன்னால் உருவான பிஞ்சை அப்பா உதாசீனப்படுத்தலாம். அம்மாவும் அப்படி தூக்கி எறிவாரா என்ன..?
7.பாண்டிய நாடு..
மதுரைக்கும் விஷாலுக்கும் அப்படியொரு பொருத்தம்... ஆறடிக்கும் அதிகமான உயரம், மதுரைக்கே உரித்தான கருப்பு நிறம், சண்டைக்காட்சிகளில் ஜல்லிக்கட்டு காளையாய் சீரும் வேகம் என அப்படியே வீரம் செறிந்த மதுரை வீரனாய் விஷாலைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
"நீ அடிச்சா பணம்... நான் அடிச்சா பொணம்..." போன்ற கடுப்பின் உச்சத்திற்குச் சென்று வெறியேற்றும் பன்ச் எதுவுமில்லாமல் சாதாரண இளைஞனாக விஷால் நடித்திருப்பது பெரும் ஆறுதல். எதார்த்த சாமானியன் போல நடித்திருக்கும் விஷால், இந்த வெற்றிக்குப் பிறகு தன் பாதையை மாற்றிக்கொள்வார் என நம்புவோம்.
படத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய மற்ற இரு கேரக்டர்கள் பாரதிராஜாவும், விக்ராந்தும். தாவணிக்கனவுகள் படத்தில் பாக்கியராஜின் நடிப்பைப் பார்த்துக் கண்கள் விரிய இயக்குனர் இமயம் ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்கள். செம காமெடியாக இருக்கும். இவர் எப்படி மற்றவர்களை நடிக்க வைக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டுப் போனேன். ஆனால் அவருக்குள் படிமங்களாகப் புதைந்திருந்த நடிப்புத்திறமையை இந்தப்படத்தில் சுரண்டி எடுத்திருக்கிறார் சுசீந்திரன். "எதாவது பண்ணனும்டா.." என்று அர்த்த ராத்திரியில் நண்பனின் வீட்டுக்கதவைத் தட்டி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும்போது உண்மையிலேயே நடிப்புச்சிகரமாக மிளிர்கிறார் இயக்குனர் இமயம். விக்கிராந்தும் ஹீரோயிசம் காட்டாமல் இதுபோல சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்தாலே போதும். இன்னொரு விக்ரமாக உருவெடுக்கலாம்.
முதல் படத்தில் மட்டும் தன் முழுத்திறமையைக் காட்டிவிட்டு அடுத்தடுத்த படங்களில் சொதப்பும் சமகால இயக்குனர்களில் சுசீந்திரன் வித்தியாசமானவர். அவரின் வெற்றிப்பயணம் இந்த வருடமும் தொடரட்டும்.

6.மதயானைக் கூட்டம்
மதுரையைக் களமாகக் கொண்ட படங்கள் எல்லாமே தமிழ்ச் சினிமாவில் தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கிறது. மதயானைக் கூட்டமும் அவ்வகைப் படைப்பே. மதுரையைக் காட்டி விட்டு சாதிப் பெருமையைப் பேசாமலிருந்தால் எப்படி..?
ஆனால் கவுண்டர் சாதிப்பெருமைப் பேசிய ஆர்.வி. உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், தேவர் பெருமைப் பேசிய மனோஜ்குமார், பாரதிராஜா போன்றோர்களின் படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மதயானைக் கூட்டம்.
ஆண்ட பரம்பரை என சொல்லிக்கொள்பவர்களின் சாதிப்பெருமையை உயர்த்திப் பிடிக்க, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அவர்கள்முன் கைகட்டி,வாய்ப்பொத்தி,காலனி மற்றும் மேல் சட்டை அணியாமல், கூழைக் கும்பிடுப் போடும் அடிமைகளாகக் காட்சிப்படுத்தப்பட்டு வந்தனர். தமிழ் சினிமாக் கட்டமைத்து வைத்திருந்த அந்த டெம்பிளேட் வடிவமைப்பை முதலில் உடைத்தெறிந்தது தேவர் மகன். அந்த ஆண்டச் சாதிக்குள்ளேயிருக்கிற அறியாமையையும், அர்த்தமற்ற சாதிப்பெருமிதத்தையும்,காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும்,அடியாள் கலாச்சாரத்தின் அடிப்படையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது அப்படம். தவிரவும், அப்படத்தில் விளிம்புநிலை மக்களிலிருந்து பஞ்சாயத்துத் தலைவர் வரை ஒரே சமூகத்தைச்சார்ந்த மக்களாகக் காட்டியது கமலின் சாமர்த்தியம்.
கதைக்கருவைப் பொறுத்தவரையில் தேவர் மகனுக்கு மிக அருகில் பயணிக்கிறது மதயானைக் கூட்டம். இன்னமும் அச்சமூகத்தில் சாதி வெறிப்பிடித்த, மூடர்க் கூடங்களாக வாழும் ஒரு கூட்டத்தைப் பற்றிய கதைதான் மதயானைக் கூட்டம். ஆனால் கதையை முடித்த விதத்தில்தான் பெரும் ஓட்டை விழுந்துவிட்டது.
ஒரு கலவரம் நடைபெறுகிறது. பலர் சாகிறார்கள் என வைத்துக்கொள்வோம். கலவரத்தின் மூலக் காரணம், அதன் விளைவு, எதிர்காலத்தில் கலவரம் நடைபெறாமல் தடுக்க முன் யோசனைகள் என்று அலசும் போதுதான் அது முழுமையடைகிறது. மாறாக, இவர்கள் அப்படித்தான் அடித்துக்கொள்வார்கள் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போவது எப்படித் தீர்வுக்கான முறையாகும்....? அந்த விதத்தில் படம் முடிந்து வெளிவரும்போது ஒரு டாக்குமெண்டரியான அனுபவத்தை உண்டுபண்ணியது படத்தின் மிகப்பெரிய சறுக்கல்..
அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், கடந்த வருடத்தில் கடைசியில் வந்தாலும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது மதயானைக் கூட்டம். இப்படியொரு கதையைத் திரையில் வடித்த தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷின் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.
5.விஸ்வரூபம்...
படைப்பு ரீதியாகப் பார்த்தால் ஹாலிவுட்டின் நேர்த்திக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை விஸ்வரூபம். ஆனால் தர்க்க ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சப்பைக்கட்டுக் கட்டியதோடு, சிறுபான்மை மக்களின் ஒரு பகுதியினரை தீவிரவாதியாகக் காட்சிப் படுத்தியது இப்படம்.
ஒரு காட்சியின் நம்பகத்தன்மையைக் கூட்ட , அதை மென்மேலும் மெருகூட்டி தத்ரூபமாகப் படைப்பதில் கலைஞானி கமல்ஹாசன் ஒரு விற்பன்னர் என்பதை உலகம் அறியும். அதனால்தான் என்னவோ அக்காட்சிகளின் வீரியத்தன்மை சில நேரங்களில் அவருக்கு எதிராகவே திரும்பிவிடுகிறது. தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் என்கிற தட்டையான சிந்தனையை ஏற்கனவே திரையிலகில் பலர் விதைத்து விட்டுப் போனாலும், கமல் சொல்லும்போது அதன் வீச்சு வேறுவித சிந்தனையைத் தூண்டுகிறது. அதுதான் கமலின் பலமும் பலவீனமும்.
மன்மத அம்பு என்கிற மகா மொக்கைக்குப் பிறகு வந்ததால் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, வியாபார ரீதியாக கமலுக்கும் முழுத் திருப்தியளித்த படம்.
4.மூடர் கூடம்...
கடந்த வருடம் தமிழ்ச் சினிமாவில் நடந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. பிளாக் காமெடி என்ற வகைமைக்குள் வரும் படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டுவதுண்டு. சூது கவ்வும் படமும் அவ்வகையே. சமூகத்தின் புறக்கணிப்பால் நேர்ந்த வலியின் உச்சம் இளைய சமுதாயத்தை எப்படித் தடம் மாறச்செய்கிறது என்பதை அபத்த நகைச்சுவையின் மூலம் தோலுரித்துக் காட்டிய வகையில் தமிழ் சினிமாவின் கோபுரக் கதவைப் பலமாகத் தட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நவீன்.
Attack The Gas Station என்ற கொரியப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழ் வெகுஜன சினிமா பார்வையாளனின் ரசனையின் உச்சமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார் நவீன். சமகாலக் கலாச்சார மீறல்களையும் சமூக அவலங்களையும் தன் நேர்த்தியான வசனங்களின் மூலம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் நவீன் சொல்லியது படத்தின் மிகப்பெரிய பிளஸ். ஓவியாவின் காதலனிடம் சென்ட்ராயன் பேசும் அந்தப் பன்ச் ஒன்றுபோதும் நவீனின் நவீன யுகத்தின் மீதான அறச்சீற்றத்திற்கு...
பின்புல சுவாரஸ்யத்தை அவிழ்க்கிறேன் என்று வீட்டு நாய் வரைக்கும் ஃபிளாஷ்பேக் வைத்தது கொஞ்சம் புதுமை என்றாலும் எந்த நேரத்தில் யாருக்கு ஃபிளாஷ்பேக் வரப்போகிறதோ என்ற அச்ச உணர்வைத் தூண்டிக் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். மற்றபடி சில CLICHE வகைக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தமிழ்த் திரையுலகம் கண்ட SPOOF வகைத் திரைப்படங்களின் திரைக்கதை வடிவமைப்பில் மூடர்கூடம் ஓர் உச்சம்.
3.விடியும் முன்...
ஆரண்ய காண்டம் படத்திற்குப் பிறகு அழுத்தமான, ரசிகனின் ஆழ்மனதை அசைத்துப்பார்க்ககூடிய வகையில், உலகத்தரத்தை உரசிச்செல்கிற எந்தவொரு படைப்பும் தமிழில் வரவில்லையே என்ற கலைத்தாகத்தைப் போக்கிய படம் விடியும் முன். ஆனால் ஆங்கிலப்படத்தின்(London to Brighton ) தழுவல் என்ற ஒற்றைப் புள்ளியில் ஆரண்ய காண்டத்திற்கு ஒரு படி கீழ்.
படத்தின் அசுரபலம் திரைக்கதையும் பின்னணி இசையும். ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் உலகத்தரம். அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது என்பதைக் கணிக்க முடியாதது மட்டுமல்ல, இறுதிக் காட்சிவரை படத்தின் கதையை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரில்லர். இந்தப் படத்திற்காக நிறைய வாய்ப்பை இழந்தாராம் பூஜா. காரணமில்லாமல் இல்லை. அவர் சினிமா கேரியரில் இது மணிமகுடம். பூஜாவின் முந்தைய படங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எனக்கு இன்னொரு 'பசி' ஷோபாவாகத் தெரிந்தார்.
அசல் படைப்பில் வெறும் fucking என்ற இலக்கியப் பதத்தை வைத்து மொத்தவசனத்தையும் வடித்திருப்பார்கள். அந்தச் சிறுமி கூட சர்வ சாதாரணமாக அவ்வார்த்தையை உதிர்ப்பாள். நல்லவேளை தமிழில் அப்படியோர் விபரீத முயற்சி எடுக்கவில்லை. கமர்சியலுக்காக எந்த காம்ப்ரமைசும் செய்யாமல் எடுத்ததற்காகச் சிரம் தாழ்த்தி வாழ்த்தலாம் இயக்குனரை.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் நாம் அடிமைப்பட்டு, அடங்கியொடுங்கி வாழ்ந்த காலகட்டமான 1930-ல், ஆனைமலை தேயிலைக் காடுகளில் நடந்த வெவ்வேறு கொடுஞ்சம்பவங்களைத் தொகுத்துப் பின்னிப் பிணைத்து ரெட் டீ( RED TEA ) என்ற தலைப்பில் பி.எச்.டேனியல் என்பவர் நாவலாக எழுதியிருந்தார். பல தேயிலைக்காடுகளில் எழுத்தராகப் பணிபுரிந்த அவர், அந்தக் காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த பலபேரை பேட்டிக் கண்டு இந்த நாவலை வடிவமைத்திருக்கிறார். பிற்பாடு, இது தமிழில் இரா.முருகவேல் என்பவரால் 'எரியும் பனிக்காடு' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
இந்த நாவலைத்தான் பாலா, பரதேசியாக உருமாற்றம் செய்ய முனைந்திருக்கிறார். எரியும் பனிக்காடு நாவலை முழுமையாக வாசித்தவர்களுக்கு இந்தப்படம் முழுத் திருப்தி அளிக்காமல் போயிருக்கலாம். ஆனால் பாலா தேர்ந்தெடுத்த கதைத்தளமும், கதைக்களமும் தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு நகர்த்திச்செல்லும் அற்புதமான முயற்சி. நாவலை முழுமையாக உள்வாங்காமல் எடுத்தது , அந்த நாவலின் நாயகனும் அதை எழுதியவருமான பி. எச். டேனியல் கேரக்டரை காமெடியன் போல் படைத்தது, மத ரீதியான விசயங்களை தேவையில்லாமல் திணித்தது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்தாலும், பாலாவின் கிரீடத்தில் பரதேசியும் ஒரு வைரக்கல் என்பதில் சந்தேகமில்லை.
கதை சொன்ன களமா அல்லது காட்சிப்படுத்திய விதமா அல்லது பின்னியெடுத்த பின்னணி இசையா அல்லது கதாபாத்திரப் படைப்பா அல்லது அக்கதாபாத்திரங்களின் ஆர்பாட்டமில்லாத எதார்த்த நடிப்பா.... எதுவென்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் 2003 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த படைப்பு ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
அருமையான தரவரிசை! பகிர்ந்தவிதம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்
Deleteஎன்னது? பத்தாவது இடம் காலியா இருக்கா? அண்ணே சன் டிவி மாதிரி சொல்லிட்டீங்க?
ReplyDeleteஹி..ஹி... வேற எந்தப்படமும் என்னப்போட்டு உலுக்கல தம்பி
Deleteகரெக்டா வரிசைப்படுத்தியிருக்கீங்க அண்ணே...
ReplyDeleteநன்றி..நன்றி
DeleteGood one. Seems you forgot "Thanga Meengal"
ReplyDeletethx boss.. தங்க மீன்கள் ஓவர் செண்டிமெண்ட் ... கடைசிவரை அப்பா மகள் செண்டிமெண்டை சொல்லிவிட்டு இறுதியில், அரசுப்பள்ளியில் படிக்கவேண்டிய அவசியத்தை சொல்லி குழப்புதால் அவ்வளவாக இம்ப்ரஸ் ஆகவில்லை..
Deleteநன்று!என் பார்வையில்,மத யானைக் கூட்டம்,விடியும் முன்,சூது கவ்வும்,....................ஆ,க.செ........
ReplyDeleteநன்றி..நன்றி
DeleteGood List.
ReplyDeleteIn some places you have mentioned 2003 instead of 2013....
thanks boss... yes I have changed..
Deletehi, still 2003 is there in few places. nice reviews..
Deleteபாண்டிய நாடும், மத யானைக்கூட்டமும் இன்னும் பார்க்கவில்லை... முடிந்தால் பாண்டிய நாடு மட்டும் பார்க்க வேண்டும்...
ReplyDeleteநன்றி தல... இரண்டுமே முடிந்தால் பாருங்கள்.
DeleteEnna thala night adicha thanni theliyalayae??2013 ku 2003nu eluthi vachi irukingae??
ReplyDeleteஎன்ன பன்றது தல... நாட்டு சரக்கு... கண்ணு சரியா தெரியல... இப்ப மாத்திட்டேன்.
Delete+1 அருமையான வரிசை!!
ReplyDeleteநன்றி..நன்றி
Deleteபத்துப்படம்கூட தேறலியா..அநியாயம்யா.
ReplyDeleteஹா..ஹா... வேற எதுவும் என்னைப்போட்டு உலுக்கல பாஸ்..
Deleteபூஜாவுக்கு விடியும் முன் முக்கியமான படம் தான்..நானும் ஒரு விமர்சனம்(!) போடலாம் என்று இருக்கிறேன்.
ReplyDeleteகண்டிப்பாக எதிர்பார்க்கிறேன் பாஸ்..
Deleteநிறையப்படத்தில் வெறும் 9 தான் உசுப்பியதா தலைவா!ஹீ
ReplyDeleteவேற எதுவும் என்னைப்போட்டு உலுக்கல பாஸ்.. :-))
Deleteரொம்ப நாளா இந்தப் பதிவ படிக்கணும்னு நினைச்சி இன்னிக்கு தான் படிக்கிற வாய்ப்பு கிடைச்சது சார்
ReplyDeleteஇந்த பதிவு லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது சார்.. இந்தியா மாதிரி குறைந்த அலைவரிசை இணையை இணைப்பு கொண்ட நாடுகளில் பதிவு லோட் ஆக நேரம் ஆச்சுன்னா படிக்காம அப்டியே க்ளோஸ் பண்ணிட்டு போயிருவாங்க.. நீங்க சிங்கைல இருக்கதால இத பீல் மாட்டீங்க. அதுனால gif images கொஞ்சம் குறைவா போடுங்க...
ஆதலால் காதல் செய்வீர், மதயானைக் கூட்டம் விடியும் முன் மூன்று படமும் பார்க்கல.. ஆனா மதயானைக் கூட்டம் மொக்கைன்னு சொன்னங்க :-)
விஸ்வரூபம், மூடர்கூடம், சூதுகவ்வும், ஓநாய், பரதேசி இது என் முதல் ஐந்து வரிசை
//மன்மத அம்பு என்கிற மகா மொக்கைக்குப் பிறகு// ஹா ஹா ஹா ஆனா எனக்கு மன்மதன் அம்பு பிடிக்கும் சார் :-)
gif பிரச்சனை ஏற்கனவே யோசிச்சேன் சீனு. ஒவ்வொன்னும் 40 MB க்கு மேல... ஆனா இங்க எனக்கு எந்த பிரச்சனையும் வரல.. அங்கே கண்டிப்பா பிரச்சனை வந்திருக்கும். இனிமேல் gif வடிவ படங்களை தவிர்க்கணும்...
ReplyDelete