Tuesday 10 November 2015

தூங்காவனம் ..(விமர்சனம் )



தாவது ஒரு நைட் கிளப் இருக்கு. அதன் ஓனர் பிரகாஷ் ராஜ். அவர் கமல் மூஞ்சில ஒரு டிச் விடுறாரு. அடுத்ததா கமல், மூக்குல வழியிற ரத்தத்தை நடுவிரல்ல தொட்டு அப்படியே கையை திருப்பி ஆடியன்ஸ் கிட்ட காமிக்கிற சீன் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும். சென்ஸார்ல கடுப்பாகி கட் பண்ணிட்டாங்க போல... 

அப்புறம் அதே நைட் கிளப்புல கமலும் திரிஷாவும் கட்டிப்புடிச்சி, உருண்டு புரண்டு, தூக்கி அடிச்சி, பல்டியடிச்சி சண்டைப் போட்டுகிறாங்க.அதுக்கப்புறம் கிஷோரும் கமலும் மாறி மாறி குத்து விட்டுக்கிறாங்க... முதல்ல கமல் சுருண்டு கீழ விழுந்திடுறாரு.. அவர் ஹீரோ என்பதால் திரும்பவும் எழுந்துவந்து ஒரே குத்துல கிஷோர சுருண்டு விழ வச்சிடுராறு..

இந்த கேப்புல ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடக்க முயற்சி செய்யும் அவ பாய் ஃபிரண்டை  பாத்ரூம்ல வச்சி நங்கு நங்குன்னு போட்டு மிதிச்சி வக்கிறாரு ஹீரோ கமலு. பிறகு அடுத்த சீனிலே பேத்தி வயசு இருக்கிற அந்த பாப்பாவுக்கு ஃபிரெஞ்சு கிஸ் கொடுக்கிறாரு நம்ம ஹீரோ.அந்த பாப்பாவும் வஞ்சனையில்லாம வட்டியும் முதலுமா திருப்பிக் கொடுக்குது..( என்ன கருமம்டா இது..)

அப்புறம் கமல் நடந்து போறப்போ ஒருத்தன் மேல இடிச்சிடுறாரு. அப்படினா லாஜிக்படி அவனும் கமல் மூஞ்சியில ஒரு குத்து விட்டுருக்கனுமே..? இல்லாம பின்ன.. ! அப்புறம் லாஜிக் ஓட்டை அது இதுன்னு ஏதாவது சொல்லிட்டீங்கனா..

இப்படி படத்துல வர்ற எல்லா கேரக்டரும் கமல்கிட்ட குத்து வாங்குது இல்லனா மிதி வாங்குது. சும்மா வந்துபோற சந்தான பாரதி, ஜெகன், உமா ரியாஸ் கூட..

எதுக்காக இப்படி மாறி மாறி குத்துவிட்டுக்கிறாங்க..? அதன் பின்னணிதான் படத்தில் கதை. இது எல்லாம் நடப்பது ஒரு நாள் இரவில். அதுவும் அந்த நைட் கிளப்பில்..

sleepless night என்கிற ஃபிரெஞ்ச் படத்தை பார்த்தவர்கள் டோமர் சிஸ்லேவுக்குப் பதில் கமலையும், Serge Riaboukine க்கு பதில் பிரகாஷ்ராஜையும்,Joeystarr க்குப் பதில் சம்பத்தையும் , Julien Boisselier  க்குப் பதில் கிஷோரையும் , Lizzie Brocheré க்குப் பதில் திரிஷாவையும் கற்பனை செய்து பார்த்தால் போதும். ஏன்னா , சீன் பை சீன் அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.

கதைன்னு பார்தீங்கனா... கமல் ஒரு அன்டர்கவர் போலிஸ் ஆபீசர்...  தனது டிபார்ட்மெண்டில் இருக்கும் ஒரு கருப்பு ஆடைக் கண்டுபிடிக்க அவரும் கடத்தல் செய்வது போல் நாடகம் ஆடுகிறார். போதைப் பொருள் கடத்தல் செய்யும் பிரகாஷ் ராஜுக்கு சொந்தமான 10 கிலோ கோகைனை கமலும் யூகிசேதுவும் சேர்ந்து ஆட்டையை போடுகின்றனர். அதைத் தெரிந்துகொண்ட பிரகாஷ்ராஜ், கமலின் மகனைக் கடத்தி பிளாக் மெயில் செய்கிறார்.

கோகைனை விட மகனே முக்கியம் என முடிவெடுத்து அந்த கோகைன் உள்ள  பையைக் கொடுத்து மகனை மீட்பதற்காக பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான நைட் கிளப்புக்கு செல்கிறார் கமல் .. கமலை சக அதிகாரிகளான திரிஷாவும் கிஷோரும் பின் தொடர்ந்து அந்த கோகைன் அடங்கிய பையை கமலுக்குத் தெரியாமல் ஆட்டையை போடுகின்றனர்.

கோகைன் கடத்தல் கும்பலின் தலைவனான சம்பத், 'பேக் ' எங்கே என்று பிரகாஷ் ராஜை டார்ச்சர் பண்ண, கோகைன் கொடு... இல்லனா உன் பிள்ளையை கொன்று விடுவேன் என்று பிரகாஷ்ராஜ் கமலை மிரட்ட, தொலைந்து போன கோகைனை கமல் அந்த நைட் கிளப்புக்குள் தேட, அவரை திரிஷாவும் கிஷோரும் பின் தொடர .. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று கொஞ்சம் பிபியை எகிற விட்டிருக்கிறார்கள்.

கமலுக்கு நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை.. தன் மகன் கடத்தப்பட்ட செய்தி கேட்டவுடன் முகத்தில் அதிர்ச்சியை அவ்வளவாக காட்டாததால் நமக்கும் பெரிய வருத்தமும் ஒட்டுதலும் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் கமலும் அவரது மகனும் தங்களது அன்பை  ஃபோனில் பரிமாறிக்கொள்ளும் அந்தக் காட்சி அழுத்தம் இல்லாமல் போய்விடுகிறது.

பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர்  மூவருமே நடிப்புத் திமிங்கிலங்கள். இவர்களுக்கு நீந்தவா சொல்லிக் கொடுக்கவேண்டும்...? திரிஷாவுக்கு போலிஸ் ஆபிஷருக்கான மிடுக்கு அப்படியே இருக்கிறது.. ஆனால் கமலுடன் அவர் போடும் 'கட்டிப்புடி' சண்டை தமிழ் சினிமாவுக்கு ஒத்துவருமா என்பது தெரியவில்லை.

மகனைக் காணாமல் தவிக்கும் அதே அம்மாவின் பாத்திரம் ஆஷா சரத்- க்கு..  பாபநாசம் படத்தில் வரும் இரண்டு வசனங்களை இதிலும் பேசிவிட்டு போகிறார்.

ஸ்லீப்லெஸ் நைட் படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் பல வசனங்களும் அப்படியே வருவது படத்தின் முக்கிய மைனஸ். ஒருவேளை மாற்றி எடுத்திருந்தால் இன்னமும் கேவலமாக போயிருக்கும் என நினைத்திருக்கக்கூடும். படத்தில் மைய இழையே போலிஸ் அதிகாரியின் மகனைக் கடத்தும் நிகழ்வுதான். அதை இன்னும் அழுத்தமாக, கொஞ்சம் உணர்ச்சிகரமாக  சொல்லியிருக்கலாம்..  யாரை பார்த்தாலும் ஒன்னு மூஞ்சியில குத்துறது.. இல்லனா அடியில உதைக்கிறது. இதெல்லாம் புதுமையாக தெரியவில்லை. பொறுமையை சோதிக்கிறது.

ஆனால் இதையெல்லாம் மீறி, நம்மை இரண்டு மணிநேரம் தியேட்டரில் கட்டிப்போடுகிறது இதன் விறுவிறுப்பான திரைக்கதை. டைட்டிலில் திரைக்கதை கமல்ஹாசன் எனப் போடுகிறார்கள்.. சீன் பை சீன் காப்பியடித்துவிட்டு எதற்கு இந்த டைட்டில்..?

டைட்டிலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வரும்போது மைக்ரோ செகண்டில் எதோ ஒன்று வந்து செல்கிறது  . அனேகமாக அது sleepless night படத்திற்கான கிரெடிட்டாக இருக்கலாம்.

தூங்காவனம் - ஒரிஜினலைப் பார்க்காதவர்கள் ஒருமுறைப் பார்க்கலாம்..

17 comments:

  1. தமிழர்களுக்கு ஆங்கிலம் சரிவர புரியாது என்று கமல் நினைத்து இருப்பார் அதனால்தான் sleepless night என்ற படத்தை கெடுத்திட கூடாது என்பதால் அதை அப்படியே தமிழ்படுத்தி இருக்கிறார். இப்படி அவர் தமிழனுக்கு தொண்டு ஆற்றுவதை பலர் பேர் குறைகூறலாம் ஆனால் அதற்கெல்லாம் கமல் கவலைப்படாமல் தமிழருக்கு இப்படிபட்ட படத்தை எடுத்து உதவணும்

    ReplyDelete
  2. trailer parthuvittu review panna vendam. please see the movie.

    ReplyDelete
  3. கொஞ்சம் பிபி தானா...? ரைட்டு...!

    ReplyDelete
  4. எப்படியோ ஒரு பதிவு எழுதி சாரும் வலையில் இருப்பதை உறுதி செய்ய படம் உதவுகின்றது ஆனால் இப்ப படம் பார்க்க ஆசையில்லை!வேலை முக்கியம் பாஸ்.

    ReplyDelete
  5. Unna maadhiri ellorum French padatha download panni paathu irukka maattaan ga. Thoongavanam edukka aarampicha piragu thaan unakku sleepless nighttungura padam irukkuratha theriyum. Summa peethikkaatha..

    ReplyDelete
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
  7. அவ்வளவும் குறையா சொல்லிட்டு( நம்மை இரண்டு மணிநேரம் தியேட்டரில் கட்டிப்போடுகிறது இதன் விறுவிறுப்பான திரைக்கதை.) உங்களுக்கெல்லாம் விமர்சனம் எழுத வரலைல...எவனோ எழுதுன விமர்சனத்த காப்பி அடிச்சு போட்டது மாதிரியே இருக்கு

    ReplyDelete
  8. விமர்சனத்திற்கு நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. neenga ellam vimarsnam eludga thukudhiye kediyahu na ippatha ......

    ReplyDelete
  10. என்ன கோபம் கமல் மீது...

    ReplyDelete
  11. படமே பார்க்காமல் விமர்சனமா? இல்லை.. இவ்வளவு தான் வருமா?

    ReplyDelete
  12. Kamal padatha paka mandaila konjamavathu irukanum illathavanga atha pathi vimarsanam pandrathu comedy ah iruku.

    ReplyDelete
  13. உண்மையிலே நீ விமர்சகன் தானா.......
    உன் மனசாட்சியிடம் நீயே கேட்டுக்கொள்.

    ReplyDelete
  14. கருத்து தெரிவித்த Avargal Unmaigal , திண்டுக்கல் தனபாலன், தனிமரம், Minion , stalin ,‘தளிர்’ சுரேஷ், arunkumar gp ,கருத்து கந்தசாமி, Kathiravan Ponnusamy ,chandru chandru அனைவருக்கும் நன்றி . வாழ்த்து சொன்னவர்களுக்கும் நன்றி. மாற்றுக் கருத்து உள்ளவர்களுக்கு பதில் அடுத்தப் பதிவில்..

    ReplyDelete
  15. hmm purinjiduchu purinjiduchu.





    ReplyDelete
  16. Pls learn how to write a review. You've started the review with " Adhavadhu" and that shows what a pathetic writer you are. And also looks like you are very much prejudice in mind as it is very clear that you have decided what to write before seeing the movie. To write genuine review " Manadhil Urdudhiyum, Thelivum vendum" Looks like you don't have both.

    ReplyDelete
  17. Pls learn how to write a review. You've started the review with " Adhavadhu" and that shows what a pathetic writer you are. And also looks like you are very much prejudice in mind as it is very clear that you have decided what to write before seeing the movie. To write genuine review " Manadhil Urdudhiyum, Thelivum vendum" Looks like you don't have both.

    ReplyDelete