சமீபத்தில் குமுதம் வார இதழில் ராகதேவன் இசைஞானி அவர்களின் பேட்டி வெளியாகியிருந்தது.மனதில் பட்டதை எந்தவித ஒளிமறைவின்றி,தைரியமாக ' நறுக்' கென்று சொல்வதில் அவருக்கு நிகர் அவரே..! அவரின் மேடைப்பேச்சுகள் பலமுறை பலரை சங்கடப்படுத்தியிருக்கிறது.அதற்காகவே பல சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதைத் தவிர்க்கிறேன் என்று கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார். சமீபத்தியப் பேட்டியில் கூட அப்படியொரு அதிர்ச்சிப் பட்டாசைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
தற்கால வாழ்க்கை முறையில் தாங்கள் வெறுக்கும் விஷயம் எது ..? என்றகேள்விக்கு அவர் அளித்த பதில் ..
"என் பிறப்பு..."
தற்கால வாழ்க்கை முறையில் தாங்கள் வெறுக்கும் விஷயம் எது ..? என்றகேள்விக்கு அவர் அளித்த பதில் ..
"என் பிறப்பு..."
தலித் முரசு என்ற இதழில் 2001 ஆம் ஆண்டில், நாட்டுப் புறப் பாடல்கள் ஆய்வாளரும்,மிகச்சிறந்த மக்கள் பாடகரும்,புதுச்சேரி பல்கலைகழத்தின் நாடகத்துறைத் தலைவரும்,பேராசிரியருமான டாக்டர் கே.ஏ. குணசேகரன், இசைஞானி இளையராஜவின் இசையைப் பற்றிய தொடர் எழுதினார்.அந்தத் தொடரை "இசைமொழியும் இளையராஜாவும்" என்ற தலைப்பில் புத்தமாக வெளியிட்டபோது,இசைக்கு வெளியே சென்று இளையராஜாவைப் பற்றி கடுமையான விமர்சனங்களை அதன் இறுதிப் பாகத்தில் வைத்திருந்தார்.
' இளையராஜா தலித் என்னும் தன் அடையாளத்தை மாற்றவும் சிதைக்கவும் முற்படுகிறார். எனினும் இளையராஜா போல் தலித் அடையாளத்தை அனைவரும் மாற்றிக்கொள்ளவோ மறைத்துக் கொள்ளவோ மறுதலித்துக் கொள்ளவோ தயாராக இல்லை ' என்று கே.ஏ.குணசேகரன் எழுதியிருந்தார்.இதற்கு மறுப்பு அறிக்கையோ,விளக்கமோ தராமல் அவர் மீது வழக்கு தொடர்ந்தார் இளையராஜா.கடைசியில் அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதாக அறிந்தேன்.அதைத் தொடர்ந்து தன் சமூகத்தில் இருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு இளையராஜா என்ன செய்தார் என்ற ரீதியிலும் அப்போது விமர்சனங்கள் எழுந்தது.
தலித் மக்களுக்கு எதிராக தன்னை 'ஆண்ட சாதிகள்' என சொல்லிக்கொண்டு சில ஆதிக்கசாதி அமைப்புகள் ஒன்றுதிரண்டுள்ள இந்த வேளையில் இளையராஜாவின் இந்த பதில்,சாதி வெறியர்களால் சிதை மூட்டப்பட்ட தலித் இன மக்களின் இதயத்தில் சீமெண்ணெயை ஊற்றுவது போல் இல்லையா..? $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நமக்கெல்லாம் வயதாகிவிட்டது என்பதை இந்த நடிகைகளைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.இந்த இரண்டு படத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசம் கூட கிடையாது.கம்பீரம் படத்தில் நம்ம சித்தப்புவுக்கு மகளாக நடித்த அதே பெண்தான்,இப்படி வளர்ந்து தயாராக நிற்கிறது திரைக்கு முன் 'திறமை' காட்ட...!!!.அம்மணி ஒரு படத்தில் ஹீரோயினா நடிக்கிராங்களாம்.அது சரி... இந்த ஸ்கூல், காலேஜ்,படிப்பு இப்படி மேற்படி விசயங்கள் இருப்பது இதுங்கள பெத்தவுங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா..? எப்படியோ சித்தப்புவுக்கே ஹீரோயினாகி,பிற்பாடு அக்காவாகி,அப்புறம் அம்மாவாகி கடைசியில ஏதோ ஆகி கலைச்சேவைப் புரிய வாழ்த்துக்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கப்ளிங்,கஞ்சன் ஜங்கா,ஜலபுல ஜங்க்ஸ்,ஸ்பூன்லிங்,டிக்கிலோனா இப்படிப்பட்ட சர்வதேச 'சமூக நல்லிணக்க' விளையாட்டுகளை நீங்க பார்த்திருப்பீங்க.சில பேர் விளையாடவும் செஞ்சிருப்பீங்க.ஆனால் இதைப் பார்த்திருக்கமாட்டீங்க..
இது என்ன புது விளையாட்டு என யோசிக்காதீங்க.இதுக்குப் பேருதான் 'புல்ஷிட் புல்டாக்கு'.அதாவது மூணு மாசம் குளிப்பாட்டாத,எழும்பும் தோலுமா உள்ள ஒரு பசு மாட்டை,தெரு முச்சந்தியில கட்டி வச்சி அதுக்கு கீழால மூணு தடவை புகுந்து புகுந்து வரணும்.அப்படியே அது போடுற சாணியையும்,மூ.......யும் எடுத்துட்டு போயி உங்க வீட்டு வாசலில தெளிச்சு வச்சீங்கனா,மூனே வருசத்தில உங்கள் தோஷமெல்லாம் நீங்கி, செல்வம் பெருகிப்பெருகி........கடைசில ரிலையன்ஸ் ஓனர் வீட்டிலே அலையன்ஸ் பார்க்கிற அளவுக்கு ஒசந்துடுவீங்களாம்...
அடேய் ..பல வருசமா எங்க ஊர்ல சாணி அள்ளுற பேச்சியம்மாவும்,முனியம்மாவும் இப்படித்தான் ஒரு நாளைக்கு பத்து தடவை புகுந்து புகுந்து போறாங்க.எங்க ஊரு பால்பாண்டி அண்ணன் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் புகுந்து போயிதான் தினமும் பால் கறக்கிறாரு.அப்படிப்பாத்தா இந்நேரம் அவுங்க பில்கேட்சோடு உட்கார்ந்து பிரேக்பாஸ்ட் அல்லவா சாப்பிட்டிருக்கணும்..? உங்களை எத்தனை பெ............. ம்ஹும்... முடியவே முடியாது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வாரம் வலைச்சரத்தில் என் தளத்தைப்பற்றி நண்பர் NKS.ஹாஜா மைதீன் குறிப்பிட்டிருக்கிறார்.இதற்கு முன்பு திரு பாலா அவர்களும்,முரளிதரன் அவர்களும் குறிப்பிட்டிருந்தனர்.எனக்குக் கிடைத்த பாலோயர்களில் சிலர் வலைச்சரம் மூலம் கிடைத்தவர்களே.அந்த வகையில் என் தளத்தைக் குறிப்பிட்ட நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ ரிலாக்ஸ் ப்ளீஸ்...
-------------------------x ------------------------
இது கேப்டனின் மங்காத்தா...A Captain Game...!!!
வணக்கங்களுடன் ...
மணிமாறன்.
---------------------------------------------------------------------((((((((((((((()))))))))))))))))))))------------------------------------------




