கடந்த வாரம் ஹைதராபாத்-ல் உள்ள இன்போசிஸ் கம்பெனியின் கார் பார்க்கில்,அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.பத்திரிகைகளில் இப்படித்தான் செய்தி வெளியாகியிருந்தது.இது நடந்தது ஜூலை 31 ஆம் தேதி இரவு.இதன் பின்னணியில் உள்ள மர்மங்கள் அடுத்தடுத்து வெளிவர,ஒட்டுமொத்த ஆந்திராவே பரப்பரப்பானது.தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் ஊழியர்களிடையே இந்தச்செய்தி காட்டுத்தீயாய் பரவ அவர்களுக்கும் கலவரம் தொற்றிக்கொண்டது. ஆந்திரா ஊடகங்கள் அனைத்திலும் கடந்தவாரம் இந்த செய்திதான் நிரம்பி வழிந்தது.நம்பமுடியாத பல திருப்பங்களுடன் சென்ற இந்த வழக்கு தற்போதுதான் இறுதி நிலையை எட்டியுள்ளது.
அந்தப் பெண்ணைப்பற்றி சிறிய அறிமுகம்.பெயர் நீலிமா.தற்போது 27 வயதை தொட்டிருக்கும் இவர் 2006-ல் இன்போசிசில் வேலைக்கு சேர்ந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த சுரேஷ் ரெட்டி என்பவரை 2009-ல் திருமணம் செய்தார்.இவர் ஹைதராபாத்-ல் செல்போன் கம்பெனி ஒன்றின் டீலர் ஆக இருக்கிறார். இவர்களின் காதல் திருமணத்திற்கு சாட்சியாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
அந்தப் பெண்ணைப்பற்றி சிறிய அறிமுகம்.பெயர் நீலிமா.தற்போது 27 வயதை தொட்டிருக்கும் இவர் 2006-ல் இன்போசிசில் வேலைக்கு சேர்ந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த சுரேஷ் ரெட்டி என்பவரை 2009-ல் திருமணம் செய்தார்.இவர் ஹைதராபாத்-ல் செல்போன் கம்பெனி ஒன்றின் டீலர் ஆக இருக்கிறார். இவர்களின் காதல் திருமணத்திற்கு சாட்சியாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
நீலிமா அதிபுத்திசாலி.B.E கம்ப்யுடர் சயன்ஸ் படித்து,பின் M.E முடித்தவர்.மிக
தைரியசாலியும் கூட. குறுகிய காலத்திலேயே கம்பெனியில் உயர் பதவிக்கு
வந்தவர்.யு.எஸ்-க்கு வேலைக்குச் சென்ற சில மாதங்களிலே ப்ராஜக்ட் டீம்
லீடாக பதவி உயர்வுபெறும் அளவுக்கு திறமையானவர்.யு.எஸ்-ல் தனியாக .'.பிளாட்
வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறார்.அவரைப்பற்றி அவர்
குடும்பத்தினரும் நண்பர்களும் நல்லவிதமாகவே சொல்கிறார்கள்.
தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலைபார்ப்பவர்கள் அடிக்கடி கம்பெனி ப்ராஜக்ட் தொடர்பாக வெளிநாடுகள் சென்று பணிபுரிய பணிக்கப்படுவது வழக்கம்.ஆண் பெண் என்ற பேதமில்லாமல் யு.எஸ், சிங்கப்பூர்,ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ அந்தந்த ப்ராஜக்ட்-க்கு ஏற்ற மாதிரி கம்பெனிகளால் அனுப்பிவைக்கப்படுவர்.கொஞ்சம் சிரமம் என்றாலும் இரட்டைச் சம்பளத்திற்காக மறுப்பேதும் சொல்லாமல் இதை எற்றுக்கொள்பவர்களே மிக அதிகம்.அப்படித்தான் நீலீமாவும் கடந்த வருடம்(2011) அமெரிக்க சென்றிருக்கிறார்.கணவரும்,குழந்தைகளும் ஹைதராபாத்தில் இருக்க இவர் மட்டும் அமெரிக்காவில் உள்ள .'.புளோரிடாவில் ஓராண்டுக்கு மேல் தனியாக வசித்திருக்கிறார்.கடந்த ஜூலை 22ஆம் தேதி இந்தியாவிற்கு வந்திருக்கிறார் நீலிமா.கணவரையும் குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு செல்வதற்காக வரும்போதே ரிடர்ன் டிக்கெட்-ம் சேர்த்துதான் எடுத்து வந்திருக்கிறார்.ஆகஸ்ட் 17ஆம் தேதி குடும்பத்துடன் அமெரிக்க செல்ல திட்டமிட்டிருந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலைபார்ப்பவர்கள் அடிக்கடி கம்பெனி ப்ராஜக்ட் தொடர்பாக வெளிநாடுகள் சென்று பணிபுரிய பணிக்கப்படுவது வழக்கம்.ஆண் பெண் என்ற பேதமில்லாமல் யு.எஸ், சிங்கப்பூர்,ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ அந்தந்த ப்ராஜக்ட்-க்கு ஏற்ற மாதிரி கம்பெனிகளால் அனுப்பிவைக்கப்படுவர்.கொஞ்சம் சிரமம் என்றாலும் இரட்டைச் சம்பளத்திற்காக மறுப்பேதும் சொல்லாமல் இதை எற்றுக்கொள்பவர்களே மிக அதிகம்.அப்படித்தான் நீலீமாவும் கடந்த வருடம்(2011) அமெரிக்க சென்றிருக்கிறார்.கணவரும்,குழந்தைகளும் ஹைதராபாத்தில் இருக்க இவர் மட்டும் அமெரிக்காவில் உள்ள .'.புளோரிடாவில் ஓராண்டுக்கு மேல் தனியாக வசித்திருக்கிறார்.கடந்த ஜூலை 22ஆம் தேதி இந்தியாவிற்கு வந்திருக்கிறார் நீலிமா.கணவரையும் குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு செல்வதற்காக வரும்போதே ரிடர்ன் டிக்கெட்-ம் சேர்த்துதான் எடுத்து வந்திருக்கிறார்.ஆகஸ்ட் 17ஆம் தேதி குடும்பத்துடன் அமெரிக்க செல்ல திட்டமிட்டிருந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
போலிசுக்கு கிடைத்த முதல் துப்பு அந்தக் கம்பெனியில் பொருத்தப் பட்டிருக்கும் CCTV கேமராவில் பதிவான காட்சிகள்தான்.அதில் பதிவாகியிருந்த விடியோவப் பார்த்த போது,அதில் நீலிமா கம்பெனி ஐடியை நுழை வாயிலில் ஸ்கேன் செய்துவிட்டு உள்ளே நுழையும் காட்சி பதிவாகியிருந்தது.அவர் தனியாகத்தான் வந்திருக்கிறார்.பின்பு ஆபிசில் ஒருமணி நேரம் இருந்து விட்டு அங்கிருந்து வெளியியிருக்கிறார்.போலிசை குழப்பிய இன்னொரு விஷயம்,அவர் அன்று காரில் வரவில்லை.பிறகு எதற்காக கார் பார்க்கின் பத்தாவது மாடிக்கு செல்ல வேண்டும்?
இதற்கிடையில், 'நீலிமா இறந்தது இரவு 10.30மணி.ஆனால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதிகாலை 3 மணிக்குதான்.அப்படியென்றால் இடைப்பட்டக் காலத்தில் என்ன நடந்தது.? சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் 10.30 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன் அவரின் கணவர் சுரேஷுடன் செல்போனில் தொடர்பு கொண்டு,இன்று இரவு அம்மா வீட்டிற்கு செல்கிறேன்.காலையில் வந்து அழைத்துக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்.தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கெல்லாம் அவள் பலவீனமானவள் அல்ல. அவரை இன்போசிஸ் கம்பெனி ஊழியர்கள்தான் கொலை செய்திருக்கிறார்கள்' என நீலீமா தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட,விவகாரம் பெரிதாகி வழக்கு சூடு பிடித்தது.விசாரணை இன்னும் முடிக்கிவிடப்பட மர்ம முடிச்சுகள் மெதுவாக அவிழத்தொடங்கின.
அடுத்து நீலீமாவின் செல்போனை ஆராய்ந்த போலிசுக்கு மீண்டும் பின்னடைவு.அதில் உள்ள போன் நம்பர்கள் உட்பட அனைத்து தகவல்களும் மொத்தமாக அழிக்கப்பட்டிருந்தது.தொடர்பு கொள்ள நம்பர் இல்லாததால் தான் இன்போசிஸ் ஊழியர்களால் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க தாமதமாயிற்று என தெரியவந்திருக்கிறது.நீலிமா எதற்கு போன் நம்பர்களை அழிக்க வேண்டும்? அல்லது வேறு யாரவது அழித்திருப்பர்களா?.
இதிலிருந்துதான் வழக்கு வேறு ஒரு கோணத்தில் செல்ல ஆரம்பித்தது.அடுத்து விரைவாக செயல்பட்ட போலீசார் நீலிமாவின் செல்போனிலிருந்து எந்தந்த நம்பருக்கு அழைப்பு சென்றிருக்கிறது என்ற தகவலை(CDR) திரட்டினர்.அதில்தான் இந்த வழக்குக்கான மொத்த முடிச்சும் இருந்தது.கடைசியாக நீலீமா பேசியது அவரின் கணவருடன்தான் என்று இதுவரை போலிஸ் நம்பியிருந்தது.ஆனால் அவருடன் போனைத்துண்டித்த அடுத்த நிமிடமே நீலிமாவின் செல்போனுக்கு மும்பையிலிருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது.அதுதான் நீலிமா பேசிய கடைசி நம்பர்.நீலிமா பேசிமுடித்த அடுத்த சில நொடிகளில் நீலிமா செல்போனிலிருந்து அந்த நம்பருக்கு ஒரு மெசேஜ் போயிருக்கிறது.இது கிட்டத்தட்ட இறப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு.அதுதான் இந்த வழக்கின் போக்கையே மாற்றிய முக்கிய தடயம்.நீலிமா அந்த மும்பை நம்பருக்கு கடைசியாக அனுப்பின மெசேஜ் இது தான் ." I want to be a good wife to you in my next birth ”
உடனடியாக அந்த நம்பரின் விபரங்களை திரட்ட ஆரம்பித்தது போலிஸ்.அது மும்பையில் இருக்கும் பிரஷாந்த் என்பவரின் போன் நம்பர்.ஆக,இந்த வழக்கின் மையப்புள்ளியே பிரசாந்த் தான் என முடிவுக்கு வந்தது போலிஸ். இதற்கிடையில் அமெரிக்காவில் உள்ள இவரது நண்பர்களிடமும் தனியாக விசாரணை நடந்து கொண்டிருந்தது.அங்கிருந்து இவர்களுக்கு மற்றொரு தகவல் ஓன்று கிடைத்தது.இவர் தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு விட விளம்பரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.அப்படியானால் இவர் திரும்பவும் அமெரிக்க செல்வதற்கான திட்டம் இவரிடம் இல்லை என்று தெரியவர,போலிசுக்கு நீலிமா மீதிருந்த சந்தேகம் வலுத்தது.
பிரசாந்தைப்பற்றி நீலிமாவின் கணவர் சுரேஷ் ரெட்டியிடம் விசாரித்தபோது,தான் நீலிமாவின் பிறந்தநாள் பார்டியில் கலந்து கொள்ள அமெரிக்க சென்றிருந்ததாகவும்,நிறைய நண்பர்களை நீலிமா அறிமுகம் செய்துவைத்தபோது அதில் பிரசாந்தும் இருந்தான் எனவும் மற்றவர்களைப் போல் ஒரு சாதாரண நண்பன்தான் என தெரிவித்தார்.பிரசந்தைப்பற்றி மற்ற தகவல்களை சேகரித்த போலிசுக்கு,பிரசாந்தும் நீலிமாவும் முன்பு இன்போசிசில் ஒன்றாக வேலை பார்த்ததாகவும் பிறகு பிரசாந்த் CTS க்கு சென்று விட்டதாகவும், நீலிமாவைப்போல் பிரசாந்தும் கம்பெனி ப்ராஜக்டுக்காக அமெரிக்க சென்றதாகவும் தகவல் கிடைத்தது.
அடுத்து அதிரடியாக களமிறங்கிய போலீஸ்டீம் நீலிமாவின் EMAIL,FACEBOOK -ஐ திறந்துப் பார்க்க முடிவு செய்தது.அதன் பாஸ்வேர்ட் இல்லாததால் சில தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் திறக்கப்பட,அதில் கிடைத்த தகவல்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக அமைந்தது.அவரின் ஈமெயில் முழுவதும் பிரசாந்துக்கு அனுப்பிய மெசேஜ்-ஆல் நிரம்பி வழிந்தது.அவற்றைத் திறந்து படித்தபோதுதான் நீலிமாவுக்கும் பிரசாந்துக்கும் இடையே தனி 'லவ் டிராக்' இருந்தது போலிசுக்கு தெரிய வந்தது.சமீபத்திய மெயில்களை திறந்து படித்தபோதுதான் மற்றொரு அதிர்ச்சியும் இருந்தது.அதில் அவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை சில நாட்களுக்கு முன்பே எடுத்து அதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பது ஈமெயில் மூலமாக நிரூபணமானது.பிரசாந்துக்கு அனுப்பிய கடைசி மெயிலில் 'அடுத்த ஜென்மத்திலாவது இணைவோம்' என்று எழுதியிருக்கிறார்.
கடைசி நேரத்தில் நீலிமாவுக்கும்,பிரசாந்துக்குமிடையேயான ஈமெயில் பரிமாற்றம்... |
இதன் கடைசி திருப்பமாக,இந்தப்பிரச்சனையில் பிசியாக இருந்த சுரேஷ் ரெட்டி,மூன்று நாள் கழித்துதான் அவரின் ஈமெயில்-ஐ எதோச்சையாக திறந்து பார்த்திருக்கிறார்.அதில்,நீலிமா தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் அனுப்பிய ஈமெயில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியாகி திறந்து படித்திருக்கிறார். அதில்தான் நீலிமாவின் "திட்டமிட்ட தற்கொலை"க்கான முழு ஆதாரம் சிக்கியது.அந்த ஈமெயிலில் தனது கடைசி ஆசையாக,தான் இறந்த பிறகு தன் சொத்துக்கள் யார் யாருக்கு போகவேண்டும் மேலும் பி.'.எப், இன்சுரன்ஸ்-லிருந்து வரும் பணம் யார் யாருக்கு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும்,தன்னிடம் உள்ள நகைகள் யாருக்கு போய் சேரவேண்டும் என்பதை தெளிவாக எழுதியிருக்கிறார்.அமெரிக்காவில் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை பாக்கி $500,பிரசாந்திடம் வாங்கிய கடன் $4000 அனைத்தையும் செட்டில் செய்ய வேண்டும் எனவும் தெளிவாக குறிப்பிட்டிருந்திருக்கிறார். கடைசியில்,தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும்,தனக்காக யாரும் வருந்த வேண்டாம் என்றும் இந்த வாழ்க்கை தனக்கு வெறுத்து விட்டதாகவும் இந்த வாழ்க்கையை தொடர தனக்கு விருப்பமில்லை,என முடித்திருக்கிறார்.
நீலிமா கொலைதான் செய்யப்பட்டிருக்கிறாள்.கொலையாளியை விரைந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று தெருவில் இறங்கி போராடாத குறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த நீலிமா குடும்ப உறுப்பினர்கள் தற்போது இது தற்கொலைதான்,இந்த வழக்கை இனிமேல் தொடரக்கூடாது,உடனே நிறுத்த வேண்டும் என காவல்துறையினரிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு நிறைவுப்பகுதிக்கு வந்தாலும் இன்னும் விடை தெரியாத மர்மங்கள் சில உள்ளன.
நீலிமா,தற்கொலைக்காக தன் ஆபிசை அதுவும் கார் பார்க்கை ஏன் தேர்ந்தெடுத்தார்.....?
சுரேஷ்-ம் நீலிமாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு,காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நீலிமாவுக்கு இன்னொருவருடன் அதுவும் திருமணம் நடந்து ஐந்தே வருடத்தில் 'லவ் அ.'.பயர்' வருமளவுக்கு கணவன் மனைவி இடையே என்னப் பிரச்சனை?
இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் ஒரு தாய்,தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செல்லவைத்தது எது?
தற்கொலை என்பது திடீரென்று எடுக்கும் முட்டாள் தனமான முடிவு.ஆனால் பல நாட்களாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றால் இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்ற மனைவியின் மனநிலையை,ஒரு கணவனால் புரிந்து கொள்ள முடியாமலா இருக்கும்?
இது போன்ற கேள்விகளெல்லாம் நீலிமாவோடு சேர்ந்து எரிந்து சாம்பலாகிவிடும்.ஆனால் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?
பெண்களை வெறும் போதை பொருளாகப் பார்த்த ஆண் வர்க்கம்,தற்போது பணம் அடிக்கும் இயந்திரமாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.இந்தத் தற்கொலை,கள்ளக்காதல் கைகூடவில்லை என்ற விரக்தியில் ஏற்பட்டது என்று மேலோட்டமாக அலசிவிட முடியாது.வெறும் 26 வயதே நிரம்பிய ஒரு பெண்,தன் ஆசையான இரு குழந்தைகளையும் பிரிந்து ஒரு வருடத்திற்கு மேல் வெளிநாட்டில் வாழும் அளவுக்கு அவளின் மனநிலை மாற்றப்பட்டிருக்கிறது.அதன் மூலம் கடுமையான மன உளைச்சலுக்கு உட்பட்டிருக்கலாம்.அதற்கு மருந்தாக பிரஷாந்தின் ஆறுதலான வார்த்தைகள் இருந்திருக்கலாம்.
பொதுவாகவே I.T துறையில் வேலை என்பது ஒரு 'மெண்டல் ஸ்ட்ரெஸ்' உள்ள வேலைதான்.இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களே.நேரம் காலமில்லாமல் வேலை செய்யவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் வேறு.பெரும்பாலும் இந்தத்துறையில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே நிறைய 'கம்மிட்மெண்ட்ஸ்'. வீட்டு லோன்,கார் லோன்,இன்ஸ்யுரன்ஸ் என்று வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலே கடன்காரியாக்கபடுகிறார்கள்.இதற்காகவே திருமணத்திற்குப் பிறகு வேலைக்குக் கட்டாயம் சென்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம்.இதில் வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகி வேலை செய்பவர்களுக்கு பிரச்சனை குறைவுதான்.ஆனால் 'ஆன்-சைட் ஒர்க்' என்ற பெயரில் கிளைன்ட் இடத்திற்கே சென்று ஒருவருடம்/இரண்டு வருடம் ஒப்பந்தம் அடிப்படையில் வேலைபார்க்கும் சூழ்நிலையில்தான் இதுபோன்ற பிரச்சனை வருகிறது.இது மாதிரி சூழ்நிலையில் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல்,தன் குடும்பத்தையும் கவனிக்கவேண்டும் என்கிற அக்கறை மனப்பான்மையோடு, இது போன்ற வாய்ப்புகளை பெண்கள் தவிர்த்து விடுவதுதான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும்.
-------------------------------------------------------X----------------------------------------
வணக்கங்களுடன்....
மணிமாறன்.
மணிமாறன்.
முழுத் தகவல்கள்...
ReplyDeleteவேதனை தரும் சம்பவம்....
நன்றி...
நன்றி நண்பரே..
Deleteநல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை.. மனதிற்கு வேலியடைக்க ஏனோ மனித மனத்தால் முடிவதில்லை.. ஒவ்வொருவரும் ஒரு இடத்தில பலவீனம்.. ஆனாலும் ஆண் பெண் என்ற உறவு வருகையில் சர்ச்சை ஆகிறது.. ம்ம் எங்கும் இருக்கும் வில்லங்கம்.. பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteநண்பரின் கருத்துக்கு நன்றி...
Deleteமிகத் தெளிவாக பிரச்சனையின் ஆணிவேரை
ReplyDeleteபடிப்பவர்களும் உணர வேண்டும் என
பதிவு செய்துள்ளீர்கள்
படித்து முடித்து சில மணி நேரம்
வேறு எந்த சிந்தனையும் இல்லாது
அந்தப் பெண்ணின் அவல முடிவு குறித்தே
நினைத்துக் கொண்டிருந்தேன்
அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய பதிவு
பகிர்வுக்கு நன்றி
மிகத் தெளிவாக பிரச்சனையின் ஆணிவேரை
ReplyDeleteபடிப்பவர்களும் உணர வேண்டும் என
பதிவு செய்துள்ளீர்கள்
படித்து முடித்து சில மணி நேரம்
வேறு எந்த சிந்தனையும் இல்லாது
அந்தப் பெண்ணின் அவல முடிவு குறித்தே
நினைத்துக் கொண்டிருந்தேன்
அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய பதிவு
பகிர்வுக்கு நன்றி
நன்றி சார்.என் மனைவியும் ஐடி துறையில்தான் வேலைசெய்கிறார்.கடந்த வாரம் முழுவதும் இந்த செய்திகளைப்படித்து விட்டு கடும் மனவேதனை அடைந்தேன்.இன்னும் எத்தனையோ நீலிமாக்கள் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர்.கருத்துக்கு ரொம்ப நன்றி சார்.
Deleteஅன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
:-((((( நன்றி ....
Deleteநல்லதொரு கட்டுரை... எது எப்படியோ இதனுள் இருக்கும் கலாச்சாரச் செரளிவை பார்க்க மனம் வேதை தான் அடைகிறது... தர்கோல் என்பது வாழ்வின் முடிவென்றால் உலகமே தற்கொலை செய்து கொள்ள வேண்டியது தான்...
ReplyDeleteநண்பர் சொல்வதும் சரிதான்.தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் மனது பாதிக்கப் படுவதற்கான காரணங்களை முதலில் ஆராயவேண்டும்
Deleteஉண்மை நிகழ்ச்சிகள் கற்பனையை விட திகிலூட்டுகின்றன.இதில் யாரைக் குற்றம் சொல்வது?எத்தனையோ வழிமுறைகள் இருக்க தற்கொலையை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்?புரியாத புதிர்தான்.
ReplyDeleteநண்பரின் கருத்துக்கு நன்றி...
Deleteபிரச்சனைகளை எவ்வளவு தூரம் இறங்கி ஆராய்கிறீர்கள் நண்பரே, பேசாமல் நீங்கள் crime branch பணிக்கு முயற்சிக்கலாம்! :)
ReplyDeleteநன்றி நண்பா. இது கடந்த வாரம் முழுதும் இந்திய ஐடி ஊழியர்களிடையே பரப்பரப்பாக பேசப்பட்ட சம்பவம்.ஆனால் தமிழ் ஊடகங்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.அதனால் பல ஆங்கிலத் தளங்களில் செய்திகளைத் திரட்டி இந்தப்பதிவை எழுதினேன்.
Delete// பேசாமல் நீங்கள் crime branch பணிக்கு முயற்சிக்கலாம் //
Deleteபதிவுலத்தில இருக்கிறதே ஏதோ கிரைம் பிராஞ்சில வேலை செய்ற போலத்தான் இருக்கு... :-)))))
ஹா ஹா ஹா :)
Deleteநல்ல ஒரு பதிவு....ஒரு கிரைம் நாவலை போல் விறுவிறுப்பாக இருக்கிறது...
ReplyDeleteநண்பரின் கருத்துக்கு நன்றி...
Deleteஅருமையான ஆழமான அலசல். பாலச்சந்தரும் கௌதம்மேனனும் சேர்ந்து எடுத்த திரைப்படம் போல் உள்ளது. பணியும் பணமும், உறவுகளையும் உணர்வுகளையும் உயிர்களையும் சிதைப்பதைக் கண்டு வேதனைப் படாமல் இருக்க முடியவில்லை.
ReplyDeleteஅருமையான ஆழமான அலசல். பாலச்சந்தரும் கௌதம்மேனனும் சேர்ந்து எடுத்த திரைப்படம் போல் உள்ளது. பணியும் பணமும், உறவுகளையும் உணர்வுகளையும் உயிர்களையும் சிதைப்பதைக் கண்டு வேதனைப் படாமல் இருக்க முடியவில்லை.
ReplyDeleteதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..
Deleteவேதனையாக இருக்கு - பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteIT துறை பற்றி ஒரு பதிவு வைத்திருந்தேன் இதோ இப்போதே வெளி இடுகிறேன்
அருமையான தெளிவான விழிப்புணர்வை தரும் கட்டுரை. பெண் குழந்தைகள் பாவம். அவர்கள் தாயை போல் அல்லாது நீடித்த சுகமான வாழ்க்கை வாழவேண்டும். நீளிமாவ்க்கு அடுத்த பிறவி உண்டெனில் நல்ல சந்தோஷமான வாழ்வு கிடைக்கவேண்டும். தற்போது மறுஉலகில் அமைதியாக தூங்கட்டும். கந்தையா இங்கிலாந்து
ReplyDeleteஉங்களின் பிராத்தனை பலிக்கட்டும் நன்றி...
Deleteஒரு பெண் திட்டமிட்டு தற்கொலை செய்யுமளவிற்கு சிந்திப்பவர் நிச்சயம் மொட்டை மாடியில் போய் விழுந்து சாகவேண்டுமென நினைக்க மாட்டார் என நினைக்கிறேன்.இமெயில் கடித தொடர்புகள் ஒரு பக்க உண்மையை சொன்னாலும் கூட இதில் இன்னும் மர்மங்கள் இருக்கின்ற மாதிரியே தோன்றுகிறது.
ReplyDeleteபுலன் விசாரணை மாதிரி மிக விரிவான அலசல் செய்துள்ளீர்கள்.
நண்பர் ராஜ நடராஜனின் கருத்துக்கு மிக்க நன்றி...
Deleteசமீபத்தில் நான் அறிந்த இன்னொரு விஷயம்... சென்ற வருடம் இதே இன்போசிசில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுவும் அதே கார்பார்க் பத்தாவது மாடியிலிருந்து. அந்த பத்தாவது மாடி 'சூசைடு பாய்ண்டாக' மாறினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.. இதற்கு கம்பெனி நிர்வாகம் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா எனத் தெரியவில்லை.
Nenjai thodda padaippu
ReplyDeleteTHANKS FOR YOUR COMMENT
Deleteரொம்பவே ஆழமாக சொல்லி இருக்கேங்க. முக்கியமா கடைசி பேரா. நிறைய பேர் தங்களுடைய அடுத்த தலைமுறையினற்கு சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலே ஆன்-சைட் அசைன்மென்ட்டை எடுத்து கொள்கிறார்கள். அதில் இருக்கும் மெண்டல் ஸ்ட்ரெஸ் பற்றி வார்த்தைகளால் சொல்ல முடியாது. நரக வேதனை தான்.
ReplyDeleteநீங்கள் சொல்லிய தீர்வை நானும் ஏற்று கொள்கிறேன்.
இனிமேல் அடிக்கடி சந்திப்போம். :)
நண்பர் ராஜ் அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி...
Deleteenna solla varinga? panathukkaga pasangathaan ponnungalai velaiku poga solrangannu solla varingala?
ReplyDeleteஇந்தியாவின் கலாச்சார மாற்றங்கள் மற்றும் பொருளாதார உயர்வு நிலையில் சிக்கித் தவிக்கும் பலரும் படிக்க வேண்டிய பதிவிது .. பெரும்பாலும் பொருளாதார நிலை உயர்வடையும் போது இந்தியர்கள் தம்மை வெள்ளையர்களுக்கு இணையாக மாற்றிக் கொள்ள முனைகின்றார்கள். ஆனால் உண்மையில் அது ஒரு மாயையே ஆகும். பொருளாதார சுதந்திரம் மற்றும் பாலியல் சுதந்திரம் அவசியமான ஒன்று தான் .. ஆனால் அவை இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை. பொருளாதாராமா அல்லது குடும்பமா என்பதையும் இளையவர்கள் சிந்திக்க வேண்டியது உள்ளது ...
ReplyDeleteஇந்த பெண்ணின் சூழலில் தனிமையான வெளிநாட்டு வாழ்வு மற்றும் கலாச்சார அதிர்ச்சிகள் போன்றவற்றால் எழுந்த மன அழுத்தத்துக்கு வடிகாலாக இன்னொரு ஆண் துணையை தேடி இருக்கின்றார். ஆனால் உளவியல் ரீதியாக பலவீனமான இந்திய சமூகத்தில் பலத் துணைவர்களை ஏற்றுக் கொள்ளவோ அல்லது தேவைக்குப் பின் கழட்டிவிடும் பாங்கும் வருவதில்லை. இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்ற உளவியல் சிக்கல் பல இந்தியப் பெண்களிடம் இருக்கின்றது ...
அதே போல மனதளவில் படும் சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ளக் கூடிய சூழல் இந்தியக் குடும்பங்களில் இருப்பதில்லை ... !!! குறிப்பாக கணவன் மனைவியர் தமக்குள் எழும் தொய்வு நிலையை போக்கவும், மன சஞ்சலங்களை மனம் விட்டு பேசி ஒரு முடிவுக்கு வரக் கூடியதாகவும் இல்லை. அப்படி ஒரு சூழல் இருந்திருக்குமாயின் இப்பெண் இப்படி முட்டாள் தனமாக இறங்கி இருக்கத் தேவை இல்லை.
பொருளாதார சுதந்திரம் என்பது வாழ்வின் எந்த எல்லையையும் தொட்டுப் பார்த்துவிடலாம் என்பதல்ல. நமக்கு எது தேவை என்பதை நிர்ணயிக்கும் பக்குவதைக் கொடுப்பது .. பாலியல் சுதந்திரம் என்பது யாரோடும் உறவாடலாம் என்பதல்ல, மாறாக தமக்கான தேவைகளை முறையாக பெற்றுக் கொள்வதாகும் .. !!!
இந்தியாவின் பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களில் மூழ்கி பக்குவம் அடைய இந்தியர்களுக்கு இன்னும் இரண்டு - மூன்று தலைமுறைப் பிடிக்கும் என்பதால், இப்படியான நிகழ்வுகள் பல நடக்கும் என்றே எதிர்ப்பார்க்கவேண்டி இருக்கு .. முறையான கவுண்சலிங்க் மற்றும் மருத்துவத் துறைகளில் உளவியல் உதவிகளைப் பெறக் கூடிய சூழல் மற்றும் அவ்வாறு உளவியல் சிக்கல்களை தீர்க்கப் தாமே முன்வரவேண்டிய சுதந்திரம் STIGMA அற்ற சமூக நிலை தேவையாகின்றது ...
iqpal Anna, your comment super 'neegkk--oru Vllage -viggani Boss
ReplyDeletev
ReplyDelete