Saturday, 25 August 2012

பட்டைய கிளப்பப்போகும் பதிவர் மாநாடும் குட்டையக்குழப்பும் கஜினி வரலாறும்...



பட்டைய கிளப்பட்டும்....!!!!




 நாளை  சென்னையில் தமிழ்பதிவர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. அவ்வப்போது நடைபெறும் சிறு சிறு பதிவர் சந்திப்புகளை வெகு தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.எதிலும் கலந்துகொண்டதில்லை.அதற்காக வருத்தப்பட்டதுமில்லை.வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் பதிவர்களின் சூழ்நிலை அப்படி.ஆனால் முதன் முதலாக மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த பதிவர் மாநாட்டில் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருத்தமாகத்தான் உள்ளது.

   பொதுவாகவே பதிவுலகத்தில் பிரபல பதிவர்களுக்கும் ஆரம்ப நிலையிலுள்ள பதிவர்களுக்கும் ஒரு நீ.......ண்ட இடைவெளியுள்ளது.சில நல்ல பதிவர்கள் கூட பதிவு எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஊக்கப்படுத்துபவர்கள் எவரும் இல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள்.அந்த இடைவெளியை இதுபோன்ற பதிவர் சந்திப்புகள் போக்கிவிடும் என்பது என் கணிப்பு.

    முகம் தெரியா நட்புகள்.வெறும் எழுத்தில் மட்டுமே இணைந்த உறவுகள்.அவ்வப்போது சிறு ஊடல்கள்.பிறகு தமிழ் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் மூலம் கூடல்கள்.இவையெல்லாமே விரவிக்கிடக்கும் பதிவுலகத்தின் இதயங்கள் சங்கமிக்கும் இந்த மெகா மாநாடு மிகப்பெரிய வெற்றியடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...... 
************************************************************************************************************************************************
கஜினியின் தவறான வரலாறு...


    தோல்வியைக் கண்டு அஞ்சமாட்டோம் என்று சொல்வதற்கு நிறைய பேர் கஜினிமுகமதுவைத்தான் உதாரணம் காட்டுவார்கள்.பதினாறு முறை படையெடுத்து தோற்றாலும் தளராத தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் அவரை பதினேழாவது தடவையில் வெற்றி பெறச்செய்தது என்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் இது தவறான வரலாற்றுச் செய்தி.

    உண்மையில் கஜினி தொடர்ந்து தோல்வியடைந்ததால் மீண்டும் இந்தியாவுக்கு வரவில்லை.கஜினியின் பதினேழு படைஎடுப்புமே வெற்றிதான்.இன்னும் சொல்லப்போனால் கஜினி இந்தியப்பகுதிகள் மீது படையெடுத்தது ஆட்சி செய்வதற்காக அல்ல.இங்குள்ள செல்வங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் தான் படையெடுத்திருக்கிறார்.

   மத்திய ஆசியாவிலும் சரி,ஆப்கானிஸ்தான்,அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் சரி அங்குள்ள மன்னர்களின் முதல் இலக்கு  இந்தியாதான். இந்தியாவில் விண்ணைமுட்டும் கோவில்கள்,மாடமாளிகைகள்,தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட செல்வசெழிப்புகள் ஏற்படுத்திய பிரமிப்புதான், வெறிச்சோடிய  பாலைவனத்தையும் கரடு முரடான மலைகளையும் ஆட்சி செய்து கொண்டிருந்த அவர்களை இந்தியாவை நோக்கி படையெடுக்க வைத்தது.
  
       ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரை ஆட்சிசெய்த கஜினி முகமது தனது முதல் படையெடுப்பை கிபி 1000-ல் இந்தியாவின் மீது நடத்தினார்.முதல் போரிலே மிகப்பெரிய வெற்றிபெற்ற கஜினியின் படைகள் அடுத்து கொலை கொள்ளை என்று வெறியாட்டத்தில் இறங்கியது.அசுரத்தனமும் அதிபுத்திசாலித்தனமும் கலந்து போரிட்ட ஆப்கான் படையிடம் இந்திய படையின் வீரம் செல்லுபடியாகவில்லை.வந்த வேகத்திலே வெற்றிபெற்று கொள்ளையடித்த பொருட்களோடு சென்றுவிடுவானாம் .

    கஜினிமுகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய்விட்டது.ஆண்டுக்கொரு முறை இந்தியாவின் மீது படை எடுப்பதை ஒரு பிரத்தியோக திருவிழாவாகவே கொண்டாடினான் கஜினி.ஒருமுறை படையெடுத்து கொள்ளையடித்த இடத்திற்கு மீண்டும் வரமாட்டான்.

 கஜினிக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது.தான் போரிட்டு வெற்றிகண்ட மன்னர்களின் விரல்களை வெட்டி எடுத்து சேகரித்து வருவானாம்.ஆக கஜினி தோற்கவில்லை.அவன் ஒவ்வொரு முறையும் கொள்ளையடித்து வெற்றியோடுத்தான் திரும்பினான் என்பதுதான் உண்மை.

  ஆக...நான் 'கஜினி மாதிரி' என்று காலரைத் தூக்கி விட்டுக்கொள்பவர்கள் இந்த விஷயத்தை நினைவில் கொள்ளவும்...

************************************************************************************************************************************************

தமிழகம் முழுவதும் மீண்டும் 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு.-செய்தி.





வணக்கங்களுடன்....
மணிமாறன்.



 ---------------------------------------------(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))-----------------------

20 comments:

  1. அண்ணே கடைசிப் படம் சூப்பர். நல்ல அப்ரசண்டிங்க.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கும்மாச்சி அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  2. அட புது விசயமாள்ள இருக்கு

    ReplyDelete
  3. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!

    கஜினி வரலாறு செம!

    ஹி ஹி லாஸ்ட் போட்டோ செம செம!

    ReplyDelete
    Replies
    1. //பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!//

      நம்மளால தூரத்திலிருந்து வாழ்த்து மட்டும்தான் சொல்லமுடியும் பாஸ்...நன்றி..

      Delete
  4. மணிமாறன்,

    கஜினி வரலாற்றின் ஒரு பின்னூட்டமாக முன்னர் சொல்லி இருக்கேன், இப்போவும் கொஞ்சம் கூடுதல் தகவல்,

    கஜினி அல்லது அப்போதைய ஆப்கான்,பதான், போன்ற இடத்து மன்னர்களின் தொழில் கொள்ளை அடிப்பது..

    கஜினி என்பது ஊரின் பெயர் , அங்கிருப்பவர்கள் கஜன்வாட்ஸ், அங்கிருந்த முகம்மது கஜினி முகம்மது,கோரி என்பதும் ஊர் எனவே கோரி முகம்மது, வீரபாண்டி ஆறுமுகம்,ஆர்காட்டு விராசாமி போலத்தான் :-))

    ஒரு முறை கொள்ளை அடித்த இடத்துக்கு மீண்டும் போக மாட்டான் என்பது தவறு சோம்நாத் ஆலயத்தின் மீது பல முறை கொள்ளை அடிக்க சென்று அக்கோவிலின் தங்கம் வேய்ந்த கதவுகளை திருடியும் சென்றான்,

    அப்போது கஜினியை விட பலம் வாய்ந்த மன்னர்கள் இந்தியாவில் இருந்தார்கள், ஆனால் அப்போது ஒரே நாடு இல்லை என்பதால் அவன் நாட்டுக்கு சண்டை நாம் ஏன் போகணும் என மற்றவர்கள் சும்மா இருந்துவிட்டனர்.

    கஜினி குஜராத் அந்தபக்கம் தான் கொள்ளை அடிக்க முடிந்தது, இந்தியா உள்ளே நுழையவே முடியாத சூழல், ஏன் அப்போது சோழர்கள் விந்திய மலைக்கு இந்த பக்கம் இருக்கும் தீபகற்ப இந்தியா முழுவதும் ஆண்டார்கள்,அதனாலும் கஜினி உள்ளே ஊடுருவ முடியவில்லை..

    இன்றைய மும்பையின் கல்யாண் தான் சோழர்களின் அப்போதைய வடமேற்கு எல்லை.,கிழக்கே ஒரிசா . இப்போதைய பீகாரில் இருக்கும் பாட்னாவினை ஆண்ட சாளுக்கிய மன்னர்களும் சோழர்களும் திருமண பந்தம் கொண்டவர்கள். கஜினி உள்ளே கொஞ்சம் வந்திருந்தாலும் உயிரோடு போயிருக்க மாட்டான்ன், கஜினி 17 முறை என வரலாறும் வந்திருக்காது.

    ReplyDelete
    Replies
    1. வவ்வால்,
      …சாளுக்கியர்கள் தென்பகுதி தானே இருந்தார்கள். தற்போதைய கர்னாடகம் - மகாராஷ்ட்ரா மேலை சாளுக்கியரின் ஆட்சியில் இருந்தது. ஆந்திரா கீழை சாளுக்கியர் ஆட்சியில் இருந்தது.

      Delete
    2. நண்பர் வவ்வாலின் கருத்துக்கு மிக்க நன்றி..கஜினைப்பற்றி முழு வரலாற்றைப்படித்தால் அவன் ஒரு கை தேர்ந்த கொள்ளைக்காரன் என்பது தெளிவாகப் புரியும்.ஆனால் ஏன் நம் வரலாற்று ஆசிரியர்கள் வேறு மாதிரி பயிற்றுவித்தார்கள் என்பது மட்டும் புரியவில்லை...

      Delete
    3. குட்டிப்பிசாசு,

      மேலை சாளுக்கியர்கள் உஜ்ஜைனியை தலை நகராக கொண்டவர்கள்,கீழை சாளுக்கியர்கள் வாதாபி , வாதாபி கொண்டான் என நரசிம்ம பல்லவனுக்கு பெயர் உண்டு.

      உஜ்ஜைனியை தலைநகராக கொண்டு ஆண்டது விக்கிரமாதித்தன்,வாதபியை கொண்டு 2 ஆம் புலிகேசி, விக்கிரமாதித்தனின் தாத்தா..மேலும் இரண்டாம் குலூத்துங்க சோழனை சாளுக்கிய சோழன் என்பார்கள்,ஏன் எனில் சாளுக்கிய வம்சம்.

      விக்கிரமாதித்தன் பற்றி சுருக்கமாக எனது பழைய பதிவில் இருக்கு அப்புறம் சுட்டி போடுறேன்.

      ஆந்திராவின் துங்கபத்ரா ஆற்றுக்கு மேல் கரை அவர்களுக்கு கீழே சோழர்கள் , பின் முழு தீபக்கற்ப இந்தியாவும் சோழர்கள் வசமே.

      கர்நாடகா எல்லாம் சாளுக்கியர்கள் அல்ல. பல்லாலா, ஹோய்சலர்கள்.ஹோய்சாலர் மன்னனால் உருவாக்கப்பட்ட ஊர் ஹோசூர்.

      Delete
    4. வவ்வால்,

      மேலை சாளுக்கியர் (Western Chalukya) கர்நாடகாவையும் மகாராஷ்ட்டிராவையும் ஆண்டார்கள். நீங்கள் உஜ்ஜைனி ஆண்ட விக்கிரமாதித்தன் வேறு. மேலையாளுக்கிய விக்கிரமாதித்தனை நான்காம் விக்கிரமாதித்தன் என்பார்கள். ஹோய்சாலர், கடம்பர்கள், சிற்றரசர்களாகவும் பேரரசுகளாவும் சிலகாலம் இருந்திருக்கிறார்கள். சாளுக்கியரின் ஆஸ்தான மொழி கன்னடம், சமஸ்கிருதம் தான். தகவலுக்கு
      …http://en.wikipedia.org/wiki/Western_Chalukya_Empire

      கீழைசாளுக்கியர் (eastern chalukyas) வெங்கியைத் (ராஜ்முந்ரி) தலைநகராகக் கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த சில பகுதிகளை ஆண்டனர். இவர்களுடனே சோழர்கள் திருமணத் தொடர்பு கொண்டவர்கள்.
      …http://en.wikipedia.org/wiki/Eastern_Chalukyas

      Delete
    5. குட்டிப்பிசாசு,

      விக்கியில் ஒரு ஆரம்பம் பார்க்க மட்டும் பயன்ப்படுத்துவேன் ,ஏன் எனில் அவை பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை,இந்த மேப்பில் காட்டியது,காலகட்டம் எதுவும் சரியில்லை,மேலும் நான் சாலுக்கிய ,சோழ உறவு இருந்தது என சொன்னதற்கும் , நீங்கள் சொல்ல வருவதும் என்ன தொடர்பு , நீங்கள் கொடுத்த சுட்டியிலும்,சாலுக்கிய,சோழர் திருமண உறவுன்னு தானே இருக்கு.

      நான் பேசுவது ராஜ ராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் காலம்.சோழர்களுடன் சாலுக்கியர்களும் உறவு எனவே கஜினி தென் இந்தியாபக்கம் அதாவது குஜராத் தாண்டவில்லை என்பதற்கும் நீங்கள் பேசுவதற்கும் என்ன தொடர்பு.கஜினி 970-1030 காலம் ,அப்போதைய தென்னிந்தியா ஆட்சியாளர்கள் சோழர்கள் ,நான் பேசும் காலம் தாண்டி பிற்காலத்தினை பேசுக்கொண்டு இருக்கிறீர்கள்.


      கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறுப்பார்க்கவும்.

      Delete
  5. மணிமாறன் கஜினி பற்றிய அருமையான செய்திகள்,

    //கஜினி வரலாற்றின் ஒரு பின்னூட்டமாக முன்னர் சொல்லி இருக்கேன், இப்போவும் கொஞ்சம் கூடுதல் தகவல்,//
    //இன்றைய மும்பையின் கல்யாண் தான் சோழர்களின் அப்போதைய வடமேற்கு எல்லை.,கிழக்கே ஒரிசா //

    ஐயா வவ்வால் நீங்கள் ஏன் இதுபற்றி ஒரு வரலாற்று பதிவு/ தொடர் எழுத கூடாது? :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் R.Puratchimani அவர்களுக்கு நன்றி...

      //ஐயா வவ்வால் நீங்கள் ஏன் இதுபற்றி ஒரு வரலாற்று பதிவு/ தொடர் எழுத கூடாது? :)//

      அவர் பலதுறைப் பதிவர்...நிச்சயமாக எழுதுவார்..

      Delete
    2. புரட்சிமணி அய்யா,

      ரொம்ப நாளுக்கு முன்னர் படிச்சது ,மீண்டும் வருடம் சரியான தரவு எல்லாம் பார்க்கணும் ,வேண்டுமானால் கொஞ்சம் மேலோட்டமா பதிவிடுறேன்,யாரேனும் சண்டைக்கு வந்தால் பார்த்துக்கலாம், மார்க்க பந்துக்கள் கஜினியை ஹீரோவா சொல்லிக்கிட்டு இருக்காங்க அது வேற இம்சை.:-))

      ----------

      மணிமாறன்,

      நீங்க ரொம்ப புகழுறிங்க :-))

      பழைய நூல்களில் நல்லா சொல்லி இருக்கு, அப்புறம் கல்வித்துறைக்கு நூல் எழுதும் ஆசிரியர்கள் மேம்போக்காக எழுதி ஒரே போல கதையை சொல்லிட்டாங்க.

      கஜினி முகமது படைக்கு ஆள் சேர்ப்பதே எப்படி எனில், ஒருத்தர் எவ்ளோ சூறையாடுறானோ அதில் பாதி கஜினிகு .மீதி அவனுக்கு, எனவே ஒவ்வொருத்தரும் மூர்க்கமா சண்டைப்போட்டு நிறைய கொள்ளை அடிப்பாங்க.

      இங்கே அடிக்கடி வர இன்னொருக்காரணம் பெண்கள்,ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை கடத்திப்போயிடுவாங்க.அவங்க வச்சிக்கிட்டது போக மீதிப்பெண்களை அடிமையா விற்பார்கள்,இதெல்லாம் சொன்னா பிரச்சினையாகும்னு மறைச்சுட்டாங்க போல.

      Delete
  6. நீங்கள் சொன்னது மிகச் சரி 17முறையும் வெற்றி பெற்று ஏராளாமான செல்வங்களை கொண்டு சென்றான் என்பது உண்மை.இது எப்போது மாற்றிச் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி..

      Delete
  7. இந்த தகவலை முன்பே மதனின் புத்தகத்தில் படித்திருந்தாலும்..கூடவே வந்த அம்மா படம் சிரிக்க வைத்துவிட்டது..பதிவர் சந்திப்புக்கு சில் வேண்டுகோள்கள் படிக்கவும்...கொஞ்சம் எடுத்து சொல்லுங்கண்ணே..http://tamilmottu.blogspot.in/2012/08/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி..

      Delete
  8. பின்னூடத்திற்கு நன்றி...

    ReplyDelete