Wednesday 29 February 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?-PART-2


MASTERCAM-தமிழில்...

          MASTERCAM பற்றி படிப்பதற்கு முன்பு....மற்ற CAD/CAM SOFTWARE-லிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

                

  MASTERCAM போல Manufacturing Company-களில்    அதிகமாக உபயோகப் படுத்தப்படும் SOLIDWORKS, UNIGRAPHICS, PRO-E போன்றவைகள் எல்லாமே DESIGNING-க்கு கொடுக்கும் முக்கியத்துவம் MACHINING-க்கு கொடுப்பதில்லை. அதாவது MASTERCAM போல சுலபமாக TOOLPATH எடுக்க முடிவதில்லை என்பது  இந்தத் துறையில் உள்ள அனுபசாலிகளின் குற்றச்சாட்டு.பொதுவாக 2D TOOLPATH-க்கு MASTERCAM-ஐ அடிச்சிக்கிரதுக்கு வேற எந்த சாப்ட்வேர் -ம் கிடையாது என்பது  எல்லா  CAD/CAM SOFTWARE-ம் ஓரளவு தெரிந்தவர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மை. ஆனால் DESIGNING & AASEMBLY-க்கு SOLIDWORKS-ம்,  MOULD&DIE MAKING-க்கு  UNIGRAPHICS-ம்  அதிகமாக  உபயோகப்படுத்தப்படுகிறது.

       

       பொதுவாக CNC இண்டஸ்ட்ரியில் வெளிநாடுகளில் வேலைக்கு விளம்பரம் கொடுக்கும் போது  CAD/CAM SOFTWARE தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பர்கள்.இதன் அர்த்தம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கைதேர்ந்தவராக இருந்தால் போதுமானது என்று அர்த்தம்.அதெப்படி என்று குழம்புகிறீர்களா.....இவற்றில் ஏதாவது ஒன்றில் நீங்கள் வல்லவராக இருந்தால் மற்ற SOFTWARE-களை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்.எல்லா CAD/CAM  SOFTWARE-களிலும் கமாண்ட்ஸ்(COMMANDS), வரையும்முறை (DESIGN)  எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும்.ஆனால் TOOLPATH எடுக்கும் முறைதான் கொஞ்சம் வித்தியாசமானது.
    பொதுவாக  MASTERCAM -ஐ ஒரு  User-friendly Software என்று சொல்வார்கள். அதாவது யாரும் மிக எளிதில் கற்றுக்கொள்ள முடியும். இதைக்   கற்றுக் கொள்வதற்கு நீங்கள் CNC துறையில் பெரிய அனுபசாலியாகவோ அல்லது திறமைசாலியாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏன்.......இந்தத்துறை சம்மந்தப்படாதவர்கள் கூட இதைக்கற்று சிறந்த Programmer-ஆக  இருக்கிறார்கள். 


              

     1998 -ல் நான்  MASTERCAM படித்தபோது Version 8 தான் உபயோகத்தில் இருந்தது.அந்த நேரத்தில் 2D &3D Toolpath-க்கு இது மிகச்சிறந்த Software ஆக இருந்தது என்பதை இந்தத் துறையில் இருந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால்  Toolpath Simulation கொஞ்சம் மெதுவாகத்தான்  இருந்தது. அந்த நேரத்தில்  UNIGRAPHICS, PRO-E பிரபலமாக,MASTERCAM -லும் பல மாற்றங்கள் செய்தார்கள்.சில ஆண்டுகளுக்குப் பிறகு MASTERCAM-V9 ரிலீஸ் செய்தார்கள். இது 3D Toolpath & Simulation மிக வேகமாக இருந்தது.அடுத்த சில ஆண்டுகளிலே Toolpath-ல் சில மாற்றங்கள் செய்து   MASTERCAM-V9.1 வெளியிட்டார்கள்.இதன் பிறகு UNIGRAPHICS ,SOLIDWORKS போல இதன் முகப்பு தோற்றத்தை மாற்றம் செய்து 2006 ல் MASTERCAM X வெளியிட்டார்கள்.ஆனால் இதில் ஏகப்பட்ட குளறுபடி இருந்தது. MASTERCAM-V9-ல் வேகமாக செய்தவர்கள் இதில் தடுமாறிப் போனார்கள்.TOOLPATH-ம் கடினமாக இருந்தது.MASTERCAM-V9 உபயோகப்படுத்தும் நிறையக் கம்பெனிகள் இந்த மாற்றத்தை ஏற்கவில்லை. பிறகு இதன் சிறு குறைகளைத் திருத்தி  அடுத்தடுத்து X1,X2,X3,X4 என்று வெளியாக, இறுதியாக வெளியிடப்பட்ட  MASTERCAM X5 மற்ற CAD/CAM SOFTWARE -களுக்கு சவால் விடும் வகையில் உள்ளது.சமீபத்தில் MASTERCAM X6 வெளியாகியிருக்கிறது.ஆனாலும்  MASTERCAM உபயோக்கிக்கும்  கம்பெனிகளில் 90 சதவீதம் பேர் இன்னமும்  MASTERCAM-V9 யையே பயன்படுத்துகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் USER -FRIENDLY.அதாவது மற்றவர்களுக்கு சுலபமாக புரியவைக்க முடியும்.அதே நேரத்தில் தவறுகள் ஏற்படுவதும் மிகக் குறைவு, 

       MCAM-9 க்கும் MCAM-X6 க்கும்  பெரிய வித்தியாசமில்லை.COMMANDS, TOOLPATH,வரையும்முறை எல்லாம் ஒரே மாதிரிதான்.கொஞ்சம் அட்வான்சாக இருக்கும் அவ்வளவுதான்.நீங்கள் MCAM 9-ல் கைதேர்ந்தவராக இருந்தால்  MCAM X6 கற்றுக்கொள்வது மிக சுலபம்.முதலில் நான் நடத்தப்போவது  MCAM-V9.கடைசியில் இரண்டு அல்லது மூன்று  பதிவுகளில் MCAM-X6 யை விளக்கிவிடலாம் . 
   
      சரி.....MASTERCAM படிக்க ஆர்வமுள்ளவர்கள் கவனிக்க... இதைப்படிக்க நீங்கள் எந்த  இண்டஸ்ட்ரிக்கும் செல்ல வேண்டாம்.வீட்டில் ஒரு PC இருந்தாலே போதுமானது.ஏற்கனவே உங்கள் PC யில் MASTERCAM இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் இந்தத் துறையில் உள்ள நண்பர்களிடம் இந்த CD யை வாங்கி  உடனே  இன்ஸ்டால் செய்யவும்.அடுத்தப் பதிவில் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்று விளக்கமாக சொல்கிறேன்.
         
சரி....முன்னுரை போதும்னு நெனைக்கிறேன்.

அது சரி...அது என்ன...2D TOOLPATH....3D TOOLPATH.....புதுசா படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கும்.இதை விரிவா பிறகு சொல்கிறேன். உங்களுக்கு புரியும் படியா சிம்பிளா சொல்லனும்னா....கீழே இருக்கிற ரெண்டு படத்தையும் கொஞ்சம் நல்லா பாருங்க.
  
      நீங்க ஒரு பேனா எடுத்துக்குங்க.ஒரு பேப்பர்ல படம் 'A' யில உள்ள மாதிரி 1---2---3--4 --1 னு ஒரு சதுர வடிவில ஒரு கட்டம் வரைங்க....இப்போ உங்க பேனா போற பாதை...இடமிருந்து வலம்(1-2),கீழிருந்து  மேல்,வலமிருந்து இடம்,கடைசியாக மேலிருந்து கீழ்.

 அடுத்ததா படம் 'B'
      
                ஒரு உருண்டையான பந்து (எல்லா பந்தும் உருண்டையாத்தான் இருக்கும்) எடுத்துக்குங்க.இப்ப .....முன்பு பேப்பர்ல வரைஞ்ச மாதிரி இதுலயும் ஒரு கட்டம் போடுங்க...இப்ப உங்க பேனா போற பாதை எப்படி இருக்கு?...... முன்பு சொன்ன பாதையை விட கூடுதலாக ஒரு பாதை செங்குத்தாக கீழேயும் மேலேயும்  போகுது இல்லையா?......

       



                படம் 'A' யில் இடமிருந்து வலம்,வலமிருந்து இடம் ...இதை X-AXIS னு சொல்லுவாங்க... 

       மேலிருந்து கீழ்,கீழிருந்து மேல் ......இது Y-AXIS.

      படம் 'B' ல் செங்குத்தாக மேலும் கீழும் போகுதே....இதை Z-AXIS னு சொல்வாங்க.

   இப்ப உங்க பேனாதான் TOOL -னு வச்சுகிங்க....உங்க பேனா போற பாதைதான் TOOLPATH.
    
   இப்பயாவது  2D-க்கும் 3D-க்கும் வித்தியாசம் தெரியுதுங்களா ?....X &Y திசையில்  TOOL நகர்ந்தால் அது 2D TOOLPATH.....

   X &Y&Z திசையில்  TOOL நகர்ந்தால் அது 3D TOOLPATH.....


 சரிங்க......அடுத்த பதிவிலிருந்து ஒவ்வொரு Command யைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.அதற்கு முன்னால.ஒரு வரைபடத்திலிருந்து எப்படி MASTERCAMல் படம் வரைந்து TOOLPATH எடுத்து MACHINE-ல் JOB OUTPUT வருகிறது என்பதை ஒரே பதிவில் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். பிறகு தான் உங்களுக்கு எல்லாம் தெளிவாக புரியும் .இல்லைஎன்றால் தலை எது வால் எது என்று தெரியாமல் குழம்பி போய்விடுவீர்கள்....

அடுத்த பதிவில் ச(சி)ந்திப்போம்......


----------------------------------------------(((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))----------------   

12 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்நண்பரே..நான் ஏர்போர்டில்வேலை செய்யவில்லை...முன்பு...AEROSPACE,MOULD &DIE..இப்போ...AUTOMATION&SEMICONDUCTOR INDUSTRY.வருகைக்கு நன்றி(உங்கள் பின்னூட்டம் எப்படியோ அழிந்துவிட்டது...மன்னிக்கவும்)

      Delete
  2. nice explain, thanks

    ReplyDelete
  3. எனக்கு இந்த மென்பொருளைப்பற்றிய அறிவு இல்லை.. எனினும் தாங்கள் சொல்லிப்போகும் விதம் அருமை..!! இன்னும் எளிமையாக புதியவர்களுக்கும் புரியும்படி எழுதினால் பலரும் பயனடைவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி...இனிவரும் பதிவில் இன்னும் எளிமையாக எழுத முயற்சிசெய்கிறேன்

      Delete
    2. தங்கம்பழனி, இயந்திரவியல் துறையினருக்கு நன்றாக புரியும் வகையில் மிக எளிமையாக தான் மணி சொல்லி இருக்காரு. மணி நீங்கள் இப்படியே தொடருங்கள்.

      Delete
  4. ஆகா, அருமையான தொடர் mastercam பற்றி....

    தொடர்ந்து எழுதுங்கள்.....

    நானும் இப்போதும் mastercam V9 தான் யூஸ் பண்றேன். நீங்க சொன்னது போல 2Dக்கு மிக எளிமையான வழிகள் உள்ளது.

    சில விபரங்கள் அறிய தங்களை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரியை thaiprakash1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி பிரகாஷ்...

      Delete
  5. சாரி...எனக்கு இந்த மாஸ்டர் கேம் பற்றி ஒன்றும் தெரியாது. எனக்குத் தெரிந்த மணிமாறன் woodlands -ல் ...அது...........அந்த மார்ட் பக்கம் இருக்கின்றார். அது நீங்கள் என்று தவறாக நினைத்துவிட்டேன். சாரி...

    ReplyDelete
  6. sir adutha pathivu eppoluthu

    ReplyDelete