Friday, 22 June 2012

கின்னஸ் சாதனையை நோக்கி ஒரு தன்மானத் தமிழன்....T.ராஜேந்தரின் மறுபக்கம்



புதுக்கோட்டை இடைத்தேர்தல்...ஆளுங்கட்சி மீண்டும் அமோகமாக அறுவடை செய்திருக்கிறது.!

         தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவல், வெற்றிக்களிப்பின் உற்சாக மிகுதியில் இருந்த அம்மாவின் நெஞ்சில் நஞ்சுண்ட ஈட்டியாக பாய்ந்தது.கடந்த ஒரு வருடகாலமாக தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகள் மீது ஏவப்பட்ட விலையேற்றத் தாக்குதலினாலும்,அத்தியாவசியத் தேவைகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பற்றாக்குறை வன்முறையாலும் மக்கள்,அரசின் மீது கடுஞ்சினம் கொண்டிருப்பதாக அம்மாவுக்கு தகவல் கிட்டியது.

   முப்பத்திரெண்டு மாண்புமிகுகளும் புதுக்கோட்டை மக்களை மிகுந்த அக்கறையோடும் அதீத சிரத்தையோடும் 'கவனி'க்கும் பொருட்டு களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்தாலும் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைத்தாலே பெரிய  விஷயம் என்று செய்திகள் கசிந்த வண்ணம் இருந்தது.அதிமுகவின் பினாமி கட்சியான சமக வின் அகில அன்டத்தலைவர் சித்தப்பு சரத்குமார் கூட நெஞ்சில் தெம்பும் கையில் சொம்புமாய் பிரச்சாரத்துக்கு சென்றவர் வாடிய முகத்துடன் தான் திரும்பி வந்தார்.புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிவுதான் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமையும் என்பதால்,இந்தியாவே இதன் முடிவை உற்று நோக்கிக் கொண்டிருக்க,கேப்டனோ மிகுந்த உற்சாகத்தில் தேர்தல் களத்தில் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டோமோ என்று அறிவாலயம் கலக்கத்தில் களையிழந்திருந்தது.தாளா துயரத்திற்கு ஆளான அம்மா,வலுவிழந்த முகத்தோடு இடிவிழுந்த மரமாய் இடிந்து போய் உட்கார்ந்திருக்க, கன நேரத்தில் தோன்றிய அந்த யோசனை அவர் கண்களில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சமாய் மின்னியது. அதுதான் அவர் நம்பியிருந்த ஒரே பிரமாஸ்திரம்.அது...சகலகலாவல்லவரும் அகில உலக லட்சிய திமுகவின் லட்சியத் தலைவருமான விஜய T.ராஜேந்தர்.!

    கடைசிநேரத்தில் ரத்தத்தின் ரத்தங்களுக்கு உற்சாகத்தைப் பீய்ச்சி,துவண்டு போன அவர்களின் முகத்தை செங்குத்தாக நிறுத்தி,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய விஜய T.ராஜேந்தர் அவர்களை பேட்டியெடுக்க அவரது இல்லத்திற்கு விரைந்தோம்.வெற்றிக் களிப்பில் யாரிடமோ அலைபேசியில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்.ஒரு கை, அலைபேசியை அடக்கி வைத்திருக்க,மறு கை காற்றை தாறுமாறாக கிழித்துக்கொண்டிருந்தது.எதிர் முனையில் வறுபடும் அந்த அப்ரானிக்காக கொஞ்சம் பரிதாபப் பட்டுவிட்டு,நெஞ்சில் தைரியத்தை வைத்துக் கொண்டு "சார் ........ " என்றோம்.

  அசுர வேகத்தில் 'U' டேர்ன் அடித்து அவர் திரும்ப,கருங்காட்டு தேசத்தில் விருட்டென்று இடுட்டில் அடித்த மின்னல் போல் மொத்தப் பற்களும் எட்டிப்பார்க்க "வாயா...கார்டனிலிருந்து வரீங்களா ..." என்றவர்,எங்கள் கைகளில் சூட்கேஸ் எதுவும் இல்லாததைக்கண்டு கொஞ்சம் வாடிப்போனார்.

  "என்னய்யா கட்சியில சேர வந்திருக்கீங்களா? " இவரின் அடுத்தக்கேள்வி எங்கள் கபாலத்தை கடுமையாகத் தாக்க,இதை சற்றும் எதிர்பாராத நாங்கள் நிலைகுலைந்து போனோம்.தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தற்போது அப்படியென்ன அவசியம் என்று தேற்றிக்கொண்டு,வந்த விஷயத்தை நாசுக்காகத் தெரியப்படுத்தினோம்.சற்றுத் தயங்கியவரை மீண்டும் மடக்கினோம்.

    "சார்...புதுக்கோட்டை வெற்றியே உங்களால்தான் சாத்தியமானது என்று 'நமது எம்ஜியார்' ல தலையங்கமே எழுதியிருங்கலாமே சார்..." என்று அவிழ்த்து விட,மீண்டும் அந்த கருங்காட்டு தேசத்தில் மின்னலுடன் உற்சாகமும் பீறிட, எங்களை உள்ளே அழைத்து
ச் சென்று பேட்டிக்கு தயாரானார்.


-

'நாங்கள் வரும்போது போனில் யாரிடமோ தீவிராமா சண்டைப் போட்டீங்களே.. யாரு சார்?'

"சண்டையெல்லாம் ஒன்னுமில்லையா....அடுத்த மாசம் உகாண்டாவில உள்ளாச்சி தேர்தல் வருதாம்.எங்க ஆதரவு யாருக்கும் இல்லைன்னு அறிக்கை விட்டுகிட்டிருந்தேன்.போன மாசம் கூட சவுத் ஆப்ரிக்காவில கூட சட்ட மன்றத் தேர்தல் நடந்தது.மொதல்ல தனித்து போட்டினுதான் முடிவு பண்ணினோம். ஆனா தேர்தல் கமிசனின் செயல்பாடு எங்களுக்கு திருப்தி இல்லாததால கடைசி நேரத்தில போட்டியிலிருந்து விலகிட்டோம்"

(இவர் பேசிக்கொண்டிருந்த போது உள்ளேயிருந்து வெளிப்பட்ட குறளரசன், "அப்பா..உங்க செல்போன் ஒரு வாரமா வேலை செய்யிலன்னு சொன்னீங்களே. நான் கடைக்குத்தான் போறேன்.. .'.போன குடுங்க.." என்று கேட்க,கடுப்பான டி.ஆர்,கொசுவை அடித்து துரத்துவது போல் அவரை துரத்தி விட்டார்.) 

திடீர்னு அம்மா மேல என்ன சார் கரிசனம்?

(கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டவராய்..) "ஏய்..உன்னப் பெத்ததும் ஒரு அம்மா.. என்னப் பெத்ததும் ஒரு அம்மா..அவ அலைவா காடு கரை கம்மா... அவ இல்லனா எல்லாம் இங்க சும்மா ...போதுமாயா ங்கொம்மா .."

சார்...சார்...வெயிட்..நான் கேட்டது முதல்வர் அம்மா....

(தன் சட்டைப் பையை எட்டிப் பார்க்கிறார்.உள்ளே காந்தியார் சிரிக்க,இவருக்கு கண் கலங்குகிறது..நா தழுக்கிறது.)..இந்த உலகத்தில் ஒரு அணுவும் அசையாது அம்மாவின்றி....நான் என்றும் அவர் வீட்டு வாசலில் கிடக்கும் பன்றி...மறக்க மாட்டேன் என்றென்றும் நன்றி...

 

புரிஞ்சிடுச்சு சார்...அப்பறம் உங்க குடும்பத்தில இருக்கிற ஒவ்வொருத்தரின் பெயரை மாற்றிக்கிட்டே வாறீங்களே..ஏதாவது வேண்டுதலா? 'சிம்பு...' நல்லாத்தானே இருந்தது எதுக்கு எஸ் டி ஆர்?

( நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்...தனது ஏழாம் அறிவை யுஸ் பண்ணி எதோ சொல்லப்போகிறார் என்பது மட்டும் தெரிந்தது ) யோவ்...நான் யாரு?....டி ஆரு.என் பையன் யாரு 
எஸ் டி ஆரு... நாளைக்கு என் பையன் பெரிய சூப்பர் ஸ்டார்  ஆன  பிறகு அவன் படத்தில இப்படித்தான் பஞ்ச டயலாக் இருக்கும். My father is டி ஆரு...My name is எஸ் டி ஆரு...Iam a சூப்பர் ஸ்டாரு.....எனக்கு இங்க போட்டி யாரு...எப்படியா இருக்கு இது? அடுத்ததா குறளரசனுக்கு TTR -னும் இலக்கியாவுக்கு ECR -னும் பேரை மாத்தி இதோட சேர்த்திடுவேன்.ஒரு தன்மானமுள்ள தமிழனா இதைவிட வேற என்ன செய்ய முடியும்.


எங்களுக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு சார்...நீங்க இதுவரைக்கு எந்தப் பெண்ணையும் தொட்டதே இல்லைன்னு... ஐ மீன் தொட்டே நடிச்சதில்லைன்னு பேசிக்கிறாங்க..ஆனா உங்க பையன் தொடாத பெண்ணே இல்லைன்னு.. அதாவது தொட்டு நடிக்காத பெண்ணே இல்லேங்கிராங்கிலே.. ஏன் இந்த முரண்பாடு?

(ரொம்ப பீல் பண்ணுகிறார்...) இப்ப நான் ஒன்ன ஒரு கேள்வி கேட்கிறேன்...உன் பையன் உன்னை மாதிரி இருக்கனா? இந்த உலகத்தில உள்ள எல்லா அனிமல்சும் போடுற குட்டிகள் எல்லாம் அவுங்க பாதர் மாதிரி இருக்கா?.. ஏன்யா வயித்தெரிச்சல கெளப்புற.. என்னாலதான் முடியில.அவனாவது என்ஜாய் பண்ணட்டுமே...விடுயா   

அதெப்படி சார் ஒரே படத்த ஒன்பது தடவை ரீமேக் பண்ணுனீங்க? ஓடிப்போன தங்கச்சி..விட்டுட்டு போன காதலி..குடிகார அப்பா....செண்டிமெண்ட் அம்மா... இந்த நாலு கேரக்டர வச்சே பத்து வருஷம் தமிழ் நாட்டையே படுத்தி எடுத்தீங்களே..ஆனால் இப்ப நீங்க காமெடி பண்ணினா மக்கள் அழுவுறாங்க.. செண்டிமெண்ட் சீனில விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க..மக்களின் இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணும்னு நெனைக்கிறீங்க?

ஏன்யா.. இப்ப டிவி  காரங்க மட்டும் என்ன பன்றாங்க? என் கதையை  காப்பி பண்ணி சீரியலா போட்டுத் தள்ளுறாங்க.அதைப் பார்த்து அழுததே போதும்னு என் படத்த பார்க்க வரமாட்டேங்கிறாங்க.சரித்திரம் வாய்ந்த என் கதையை திருடியதற்காக நான் போடப்போறேன்  எல்லா டிவி சேனல் மீது கேஸ்...அதுக்குப் பிறகு உங்களுக்கு புடுங்கப்படும் பியுஸ்...அப்பத்தெரியும் இந்த டி ஆரோட மாஸ்..

அது எப்படி சார் அடுக்கு மொழி வசனத்தை அப்படியே அடுக்கிகிட்டேப் போறீங்க..இதுக்கு தனியா ஏதாவது கோர்ஸ் படிச்சீங்களா? இல்ல..இது உங்கள் பரம்பரை ஜீனில் இருந்து வந்ததா? இதை மக்கள் கற்றுக் கொள்வதற்கு சுலப வழி இருக்கா? 

( புன்னைகைத்துக் கொண்டே அந்த கருங்காட்டை மெல்ல நீவி விடுகிறார்..) இது ஒரு பெரிய கலையா....அதுக்கு ஸ்பெசல் பயிற்சி வேணும். எல்லோராலையும் இது முடியாது.இப்ப உதாரணமா..செருப்பு னு எடுத்துக்க... அதிலிருந்து என்னென்ன வார்த்தையை உருவாக்குறேன் பாரு...(சொடக்கு போடுகிறார்..) செருப்பு,நெருப்பு,கருப்பு,பருப்பு,அரிப்பு...இப்ப இத வச்சி ஒரு கவிதை நடையில வசனம் பேசுறேன் பாரு.. நான் இருக்க மாட்டேன் எப்போதும் உன் காலுக்கு செருப்பு...தண்ணி தெளிச்சா அணைஞ்சிடும் நெருப்பு...அதனால் ஆகிடும் அதன் கலர் கருப்பு...அப்பறம் வேகாது உன் பருப்பு...இதப் பார்த்து உனக்கு எதுக்கு பொச்சரிப்பு? இப்ப நான் ஒரு சவால் விடுறேன்....இது மாதிரி வசனத்தை இப்ப உள்ளவங்களால எழுத முடியுமா?


 
சான்சே இல்ல சார்..யாராலையும் முடியாது.பின்னிடீங்க சார்.இன்னொரு முக்கியமான கேள்வி.அரட்டை அரங்கத்தில சின்னப் பசங்களை வைத்து கொடுமைப் படுத்துவதாக மனித உரிமை கமிசனுக்கு யாரோ புகார் செய்திருக்கிறாங்கலாமே? அதனால் உங்கள் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் பாயப்போவதாக பேச்சு அடிபடுகிறதே ?


 இது யாரோட சதியென்று எனக்கு தெரியும்.நாக்கை மடித்து பேசினால் நீ பெரிய அரசியல்வாதியா? என் கூட மேடையில ஒத்தைக்கு ஒத்தை நின்னு உன்னால பேசமுடியுமா ? எத்தனை பிகர் வந்தாலும் அத்தனையும் கரக்ட் பண்ணுவான்  என் பையன் சிம்பு...அதுல ஒன்னையாவது தேத்த உன் பையனுக்கு இருக்கா தெம்பு... அப்பறம் என்னா ம......க்கு என் கூட வம்பு?

சார்.. நீங்க இப்போதெல்லாம் வாத்தியக் கருவிகள் இல்லாமலே மியுசிக் போடுறீங்க.அதுக்கு என்ன காரணம்? பணப் பற்றாக்குறையா? இல்ல தீராத உடம்பு வலியா..? இல்ல யார் மீதாவது கோபமா?  ஏன் இந்த விபரீத முயற்சி...?

யோவ்...இந்த உலகத்தின் முதல் வாத்தியக் கருவி என்ன தெரியுமா?.. வாய் தான்.சொரனையே இல்லாத மாட்டுதோலில இவ்வளவு சத்தம் வரும்போது...நான் ஒரு தன்மானமுள்ள, தமிழ் உணர்வுள்ள தமிழன்யா.என் தோலில் எவ்வளவு சத்தம் வரும்? உயிரே இல்லாத நாலு நரம்பு உள்ள வீணையில டொயிங்..டொயிங்.. னு சத்தம் வருதுனா..தமிழ் ரத்தம் ஓடுற லட்சக்கணக்கான நரம்பு உள்ள உடம்புயா இது...இதுல இசைஅப்படியே அருவி மாதிரி கொட்டும்...போன வருஷம் கூட சவுத் ஆப்ரிக்கா காட்டுவாசிகளுக்காக ஒரு மியுசிக் ஆல்பம் போட்டேன்.அது செம ஹிட்.அடுத்ததா அமேசான் காட்ல இருக்கிற ஆதிவாசிகளுக்கு ஆல்பம் போடப் போறேன்.அது ஆகும் சூப்பர் ஹிட்.தட் ஈஸ் மை நெக்ஸ்ட் டார்கெட்..


போன வருஷம் சூப்பர்டூப்பர் ஹிட் ஆன "ஆப்பரிக்க காட்டில் அரைச்ச மாவு" ஆல்பத்திலிருந்து சிறு பகுதி..
(ஒரு முன் எச்சரிக்கை.. இதயம் பலகீனமா உள்ளவர்கள்,பயந்த சுபாவம் உள்ளவர்கள்,குழந்தைகள்,கர்பிணிப் பெண்கள் இந்த விடியோவைப் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கைப் படுகிறார்கள்.ஏனையோர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு பிறகு பார்க்கலாம்.)
 

 
(மீண்டும் ஒரு தடவை சொல்லிபுட்டேன்...உங்களுக்கு எது ஆனாலும் அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது)
 
விரைவிலே வெளியாகப் போகும் "அமேசான் ஆற்றில் தொவைச்ச துணி" ஆல்பத்திலிருந்து சில பகுதிகள்..


(இதைப் பார்த்தபிறகு உங்களுக்கு திருநீறு பூசி வேப்பிலை அடிக்க நேர்ந்தால் அதன் முழு பொறுப்பு டி.ராஜேந்தர் அவர்களையே சாரும்)
 
அடுத்தது அரசியல் சம்மந்தமான கேள்வி...ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் லதிமுக கட்சியை ஆரம்பித்து தேர்தல் முடிந்தவுடன் கலைத்து விடுகிறீர்கள். உலக அரசியல் வரலாற்றிலேயே ஒரே கட்சியை பத்து தடவை கலைத்து அதே பெயரிலே பத்து தடவை தொடங்கியதற்காக உங்கள் கட்சி கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாமே?

ஆமாயா.. நானும் கேள்விப்பட்டேன்.இது என் அரசியல் ராஜதந்திரத்திற்காக கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.ஒவ்வொரு தமிழனும் இதை எண்ணி பெருமைபட வேண்டும்.(கண்கலங்குகிறது..) இதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியல......


 ((நல்லாத்தான் போய்கிட்டு இருந்ததுங்க..என் கூட கேமரா தூக்கிகிட்டு வந்த பையன்  என் காதுல கிசுகிசுத்து, "இத கேளுங்கண்ணே.." அப்படீன்னான்.நானும் சாதரணமாகத்தாங்க கேட்டேன்...)
 
சார்...கடைசியா ஒரு கேள்வி...புதுக்கோட்டை இடைத்தேர்தலில்,கடைசி நேரத்தில அம்மாவுக்கு ஆதரவா கடுமையா பிரச்சாரம் செஞ்சீங்க.நீங்க போறதுக்கு முன்பு வரை அதிமுக வேட்பாளர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்றும்,தேமுதிக வேட்பாளருக்கு ஐயாயிரம் ஓட்டுகள் கூட கிடைக்காதென்ற நிலைமையும் இருந்ததாமே.நீங்க பிரச்சாரம் செய்ததால்தான் இப்படி ஆயிடிச்சுன்னு பேசிகிறாங்களே..உங்கள் பிரச்சாரத்தின் போது பயந்துபோயி வீட்டுக்குள் பதுங்கிய  நிறைய பெண்கள் கடைசி வரை ஓட்டுப் போட வரவே இல்லையாமே....உங்களாலதான் வாக்குப் பதிவில் கூட்டமே இல்லன்னு சொல்றாங்க..இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

(அடப்பாவமே.. மனுஷன் இப்படி டென்சன் ஆவாருனு நாங்க எதிர்பார்க்கவே இல்லீங்க...அவரு கர்ர்ரர்ர்ர்ர் ...புர்ர்ர்ர் னு உறுமினதை வீடியோவா போட்டிருக்கோம்.பாத்து பக்குவமா பாருங்க....)




 
( இனிமே இன்டர்வியு அது இதுன்னு வீட்டுப் பக்கம் வந்தே...உன் கால வெட்டிப் புடுவேன்டாருங்க......)
------------------------------------------------------------((((((((((((((((((())))))))))))))))))))----------------

12 comments:

  1. உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?


    Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை




    மேலும் விபரங்களுக்கு www.tamilpanel.com





    நன்றி

    ReplyDelete
  2. //கருங்காட்டு தேசத்தில் விருட்டென்று இடுட்டில் அடித்த மின்னல் போல்//

    ஹா ஹ ஹா ஹா ஹா கொஞ்சம் பொறுங்கோ சிரிச்சி முடிசிகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா...வணக்கம்

      Delete
  3. முதல் ரண்டு வீடியோ பாட்டோ மிசிச்கோ அதே போல் அவரால் மீண்டும் பாட முடியுமா? - இருந்தாலும் சும்மா கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு .'.ப்ளோவுல வர்றது.ஒன்ஸ் மோர் கேட்டா அவருக்கே தெரியாது.

      Delete
  4. நல்லா போட்டீங்க பதிவு சும்மா நச்சின்னு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete
  6. Replies
    1. அனானியாருக்கும் நன்றி

      Delete
  7. //என்றவர்,எங்கள் கைகளில் சூட்கேஸ் எதுவும் இல்லாததைக்கண்டு கொஞ்சம் வாடிப்போனார்./// ஹா ஹா ஹா எல்லாரையும் போல எங்க தான் மான சிங்கத நினைசிடீங்க போல...

    //அமேசான் ஆற்றில் தொவைச்ச துணி// ஏன்யா ஏன். ஏன் இந்த மனுசன போட்டு பாட படுத்துறீங்க

    பதிவின் தலைப்பே அருமை. நீங்க எழுதுன ஆளு டி ஆறு
    அவருக்கு கிடைக்க போகுது கின்னஸ் பாரு
    தர மாட்டேன்னு சொல்ல நீ யாரு



    கலக்கல் பதிவு நண்பா ...இல்லை இல்லை அவரை கலங்கடித்த பதிவு


    படித்துப் பாருங்கள்

    வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்

    ReplyDelete