Tuesday 23 October 2012

அந்நிய நேரடி முதலீடு VS மச்சினிச்சி மறைமுக முதலீடு...



நட்புகளுக்கு வணக்கம்..

கொஞ்ச நாட்களாக பதிவுலக பக்கமே எட்டிப்பார்க்கவில்லை... பணிச்சுமை..ஆர்வமின்மை...எழுதுவதற்கு விஷயம் கிடைக்காமை..இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.('நீ எழுதலன்னு இங்கு யார் அழுதா.. சர்தான் போப்பா..' அப்படீன்னு நீங்க திட்டுறது கேக்குது பாஸ்..).வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடம் நெருங்குகிறது.
பெரிசா ஒன்னும்  நட்பு கிடைக்கல,தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் ஒரு சிலரைத் தவிர.தமிழ்மணத்தின் தனிப்பெருங்கருணையால் குறிப்பிடும்படியான ஹிட்ஸ்...ஆனால் இன்னும் பாலோயரில் சதம் கூட அடிக்க முடியாத அப்பாவி நான். :-((

   சரி...கொஞ்ச நாள் ஓய்வு கொடுக்கலாம்னா...திரும்ப இங்க வர போரடிக்குது.ஒருவேளை இப்படித்தான் பல 'பெரியவங்க' எழுதாம ஒதுங்கி போயிட்டாங்க போல...நாம எழுதி ஒன்னும் பெருசா புரட்சி பண்ணப் போறதில்ல.புரட்சி பண்ணக்கூடிய இடமும் இதுவல்ல.அப்பப்போ மனசில என்ன தோணுதோ அதை அப்படியே இங்கே பதியணும்னு தோணுது.அவ்வளவுதான்.

  ரெண்டு நாட்களுக்கு முன்னால் சும்மா என் வலைப்பூவை திறந்து பார்த்தேன்.லேசான இன்ப அதிர்ச்சி!. புலவர் ராமானுசம் அய்யா என் பாலோயர் லிஸ்டில் இருக்கார்.பாராட்டி கமென்ட் வேற போட்டிருந்தார்... விடப்படாது.திரும்பவும் எழுதனும்னு ஆர்வம் வந்திடுச்சி....இனி கட்டுக்கடங்காமல் சீறிப்பாயும் என் எழுத்தின் சீற்றம் எவரையேனும் வெட்டிச் சாய்த்தால் அதற்கு முழு பொறுப்பு  புலவர் ராமானுசம் அய்யா அவர்களையே சாரும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். :-))))))  


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ப்போதெல்லாம் அடிக்கடி  'சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு' பற்றியே பேசுறாங்களே...அப்படீனா என்ன..? (ஆமா.. 'பிராபலங்களை' கிண்டல் செய்தால் 'உள்ளே' தூக்கி போடுறாங்களாமே...அப்படியா..??? )


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 யுதபூஜை-னா வீட்டில் உள்ள மர,இரும்பு சாமான்கள்,வாகனங்கள் அனைத்தையும் கழுவி,சுத்தப்படுத்தி சந்தனம்,குங்குமம் பூசி சாமிக்கு படைப்பாங்க... கார்,லாரி போன்ற பெரிய வாகனங்களை ஆற்றிலோ அல்லது குளத்திலோ இறக்கி சுத்தம் பண்ணுவாங்க..இதானுங்க காலகாலமா பின்பற்றி வருகிற பழக்க வழக்கம்.நம் முன்னோர்களும் இதைத்தானே நமக்கு கற்பித்திருக்காங்க...

சரி..வீட்டில் மட்டும் கொண்டாடினால் போதுமா... ஆபிசிலும் கொண்டாடவேண்டாமா..?  அதுக்காக ஆபிசில் இருந்த வாகனத்தை
க் கழுவி சுத்தப்படுத்தினது தப்பாங்க...? அதுக்கு போயி ஆபிசை விட்டு தூக்கிட்டாங்க.....(என்னவொன்னு..'சைஸ்' கொஞ்சம் பெரிசா இருந்ததால கடல்ல இறக்கி சுத்தப்படுத்த வேண்டியதாயிற்று. அவ்வளவுதான்.....)


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 

குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும்.கணவன் மனைவிக்கும் இடையே நடக்கும் சிறு சிறு உரசல்கள்(சண்டையைச் சொன்னேன்.... ),அவர்களுக்கிடையே உள்ள அன்பின் ஸ்திரத்தன்மையை அதிகப்படுத்த வேண்டுமே தவிர,பிரிவுக்கு விதையாக அமைந்து விடக்கூடாது.அதிலும் ஒரு சில குடும்பங்களில் சிறிய சண்டை என்றாலும் மாதக்கணக்கில் பேசாமல் இருக்கும் கணவன் மனைவி எல்லாம் இருக்காங்க...

இப்படித்தாங்க... என் நண்பர் ஒருவர் புதிதாக திருமணமாகி மனைவியுடன் தனிக்குடித்தனம் வந்திருக்கிறார்.வீட்டில் அவருக்கும் அவரின் மனைவிக்கும் ஏதோ தகராறு போல.மூணு நாளா பேச்சு வார்த்தை எதுவும் இல்லையாம். இதுல என்ன  பிரச்சனைனா...யார் முதலில் பேசுவது என்பதுதான்...

ஆனாலும் பொழைப்பை ஓட்டவேண்டுமே...முதல் நாள் வெறும் சைகையிலே பேசியிருக்காங்க.ஆனால் அது அவ்வளவு சௌரியப்படவில்லை. அடுத்ததா,ரெண்டு பேரும் பேப்பரில் எழுதி வச்சி பேச ஆரம்பித்திருக்காங்க. நண்பர் ஏதாவது சொல்ல வேண்டுமானால் பேப்பரில் எழுதி காண்பிப்பார். அதேபோல் அவரின் மனைவி ஏதாவது கேட்க நினைத்தால் அவரும் ஒரு தாளில் எழுதி அதற்கான பதிலை பெறுவார்.....

"காலையில் என்ன டிபன் செய்யட்டும்.." இது நண்பரின் மனைவி...

"மிளகு பொங்கல்,சாம்பார் செய்யவும்.." இது நண்பர்...

"சாயங்காலம் எப்போ வருவீர்கள்....."

"ஆபிசில் வேலை இருக்கிறது எட்டு மணியாகும்..."

"மளிகை சாமான் வாங்கவேண்டும்...எனக்கு பணம் தேவைப்படுகிறது..."

"என் ஹான்ட் பேக்கில் இருக்கிறது எடுத்துக் கொள்ளவும்.."

இப்படியே பேப்பரில் எழுதி காட்டியே நல்லாத்தான் குடித்தனம் நடத்திருக்காங்க.ஆனால் கடைசில இது பெரிய சிக்கல்ல கொண்டு வந்து விட்டுவிட்டது.

நண்பர் அடுத்த நாள் காலையில ஒரு முக்கியமான இன்டர்வியுக்கு செல்லவேண்டும்.ஆபிசிலிருந்து களைப்புடன் வந்த நம்ம நண்பர்,பெட்டில் படுக்கும் முன் வழக்கம் போல ஒரு தாளில் ," நாளைக்கு ஒரு முக்கியமான இன்டர்வியு இருக்கிறது.அதிகாலை ஐந்து மணிக்கு ரயிலைப் பிடிக்க வேண்டும்.அதனால் நான்கு மணிக்கு என்னை எழுப்பி விடவும்" என எழுதி மேசை மேல் வைத்துவிட்டு தூங்கிட்டாரு.

அசதியில் கடுமையாக தூங்கியவர் திடுக்கிட்டு விழித்து கடிகாரத்தைப் பார்த்திருக்கிறார்..காலை மணி ஏழரை...!!

நண்பருக்கு கடுமையான கோபம்....'என்னை ஏன் எழுப்பி விடவில்லை' என அவரின் மனைவியைப் பார்த்து சத்தமாக கத்தியிருக்கிறார்..

அதற்கு அந்தம்மா சொல்லியிருக்கு...,"நான் தான்  நாலு மணிக்கே எழுந்திரிச்சி  'நாலு மணியாகிவிட்டது எழுந்திரிக்கவும்'னு  ஒரு பேப்பரில் எழுதி உங்கள் தலையணைக்கு பக்கத்தில் வச்சேனே.. பார்க்கவில்லையா..?"



## இப்படியிருந்தா வெளங்கிடும்.....!!!


வணக்கங்களுடன்....
மணிமாறன்..

------------------------------------------------------------------------((((((((((((((()))))))))))))))))))))))))--------------------------------------------------------

6 comments:

  1. அடிக்கடி நீங்க சொல்லுற மாதிரியான சோர்வு பதிவு எழுதுறவங்களுக்கு வரும். அப்ப அப்ப ஒரு பிரேக் எடுத்துக்காங்க...போட்டோ கமெண்ட்டும், கதையும் நல்லா இருந்தது..

    ReplyDelete
    Replies
    1. நன்றி..ராஜ். வாரத்துக்கு ஒரு பதிவு போடுறதே இப்போதெல்லாம் பெரிய விசயமா இருக்கு..

      Delete
  2. முதல் இரு படங்களும் கருத்தும் செம...

    புலவர் ராமானுசம் அய்யா அவர்களுக்கும், தங்களின் பகிர்வுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே...கருத்துக்கு மிக்க நன்றி..

      Delete
  3. கலக்குங்க மணிமாறன்.கடைசி கதை சூப்பர்..
    கண்டினியூ பண்ணுங்க!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பாஸ்.. தொடர்ந்து எழுதனும்னு ஆசை... பார்க்கலாம்..

      Delete