Monday 7 January 2013

டில்லி-இந்தியாவின் த(கொ)லைநகரம்-பயோடேட்டா...

பெயர்
 டில்லி.
துணைப்பெயர்     
இந்தியாவின் த(கொ)லைநகரம்.
வயது(பதிவேட்டில்)    
102 வருடங்கள்.
 நிஜ வயது     
காலித்தனங்கள் செய்யும் வயது.
அடையாளம்     
கொடியேத்தும் இடமும்,பஞ்சாயத்து கூடும் இடமும்...
பொழுதுபோக்கு    
தினமும் சகஜமாக நடக்கும் பாலியல் வன்புணர்வுகள்.
சைடு பொழுதுபோக்கு    
தினம் நடக்கும் போராட்டங்களும், உண்ணாவிரதங்களும்...
பெருமையாக நினைப்பது    (முன்பு)    
ஷாஜஹான் புண்ணியத்தில் வரலாற்று நினைவுகள்...
பெருமையாக நினைப்பது 
(இப்போது)   

பொறுக்கிகள் புண்ணியத்தில் உலகத்தின் பாதுகாப்பற்ற நகரம்.
நிரந்தர தொழில்     
பஞ்சாயத்துகள்  கூடுவது...
உப தொழில்                              
ஆர்பாட்டங்கள் நடத்துவது...
பகுதிநேர தொழில்   
 கொடியேத்தி ஷோ காட்டுவது...
நண்பர்கள்    
 பொறுக்கிகளும்,காமக் கயவாளிகளும்...
உறவினர்கள்       
வழக்கம் போல கடைசியில் தாமதமாக வந்து, " இது எங்க ஏரியாவில வரல.."என எஸ்ஸாகும் போலீஸ்கார்கள்
பலம்      
 பழம் தின்னு கொட்டைப் போட்ட பல பெருசுகள் வசிப்பது... 
பலவீனம்    
இந்தப் பெருசுகள் விடும் வில்லங்கமான அறிக்கைகள்.
அசுர பலம்     
 பக்கத்து நாடுகளின் பார்டரில் இல்லாமல்,ஷே.'.ப்  ஆக இருப்பது...
பக்க பலம்     
 'அறுநூறு ரூவா' ஆத்தா ஆள்வது...
பழைய எரிச்சல்     
பாதுகாப்பையும் மீறி பக்கத்து ஊராணுவ பஞ்சாயத்து மேடையை தகர்க்கப் பார்த்தது..
புதிய எரிச்சல்    
பெண்கள் தனியாக போக வேண்டாமென பெரியண்ணனையே (ஒபாமா) கருத்து சொல்ல வச்சது...
பயம்   
 ஊர் பேரைச் சொன்னாலே எல்லாப் பெண்களுக்கும் வருவது...
கோபம்      
இவ்வளவு போராட்டங்கள் நடந்தும் இன்னமும் பாலியல் வன்புணர்வு தொடர்வது...       
ஒரே ஆறுதல்     
வன்புணர்வுக்கு எதிராக  சமீபத்திய போராட்டங்கள்.
சமீபத்திய சாதனை    
கூகுள் சர்ச்சில் Delhi என்று டைப் செய்தாலே,'Delhi gang rape' என வரிசையாக வருவது...
நீண்டகால சாதனை   
பாலியல் பலாத்காரங்கள் நடக்கும் நகரங்களில் தொடர்ந்து 'நம்பர் ஒன்' இடத்தில் இருப்பது...

8 comments:

  1. நகைசுவையாக சொன்னாலும் உண்மை இதுதான் . என்று மாறுமோ இந்த நிலை

    ReplyDelete
  2. //அறுநூறு ரூவா' ஆத்தா ஆள்வது...
    //

    செம நக்கல் பாஸ் ...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே .

      Delete
  3. என்னங்க இது, டெல்லினு பேரக்கேட்டாலே அதிருதே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பூந்தளிர்...இனிமேல் டெல்லி போகணும்னா பாதுகாப்புக்கு பத்து பேரைக் கூட்டிட்டு போகணும் போல...

      Delete
  4. டில்லிய சும்மா கிழி கிழின்னு கிழிசிட்டீங் பாஸ்
    சும்மா கிழி கிழி ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஆமாவா..ஹா..ஹா..நன்றி சீனு.

      Delete
  5. நல்ல நக்கலான பயோடேட்டா.

    ReplyDelete