எப்படி பதிவு போட்டாலும் ஹிட்ஸ் ஆக மாட்டேங்குது. ஓட்டும் விழ மாட்டேங்குது. கமெண்ட்ஸ்-ம் கிடைக்கல. பாலோயர்ஸ்-ம் அதிகரிக்க மாட்டேங்குது. இப்படியே போனா நான் எப்போ பிரபல பதிவர் ஆவது என பீல் பன்றிங்களா....?
' பிரபல பதிவர் ஆவது எப்படி...? ' னு 'மிகப் பிரபலபல பதிவர்கள்' போட்ட பழைய பதிவை ஃபாலோ பண்ணியும் பாத்துட்டேன்.அப்பவும் பிரபல பதிவராக முடியலனு வருத்தப்படுறீங்களா...?
கவலையை விடுங்க. நீங்களும் பிரபல பதிவர்தான். அது எப்படி சாத்தியம்னு தர்க்க ரீதியா கேள்வி எழுப்பாம கீழே உள்ளத பாலோ பண்ணினா நீங்களும் பிரபலபல பதிவர்தான்...
' பிரபல பதிவர் ஆவது எப்படி...? ' னு 'மிகப் பிரபலபல பதிவர்கள்' போட்ட பழைய பதிவை ஃபாலோ பண்ணியும் பாத்துட்டேன்.அப்பவும் பிரபல பதிவராக முடியலனு வருத்தப்படுறீங்களா...?
கவலையை விடுங்க. நீங்களும் பிரபல பதிவர்தான். அது எப்படி சாத்தியம்னு தர்க்க ரீதியா கேள்வி எழுப்பாம கீழே உள்ளத பாலோ பண்ணினா நீங்களும் பிரபலபல பதிவர்தான்...
2. சரி.. கமெண்டே போடலனா நம்மை எப்படி கண்டுக்குவாங்கனு கேட்பீங்களே...அதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு. மிகப் பிரபலபல பதிவர்னு சொல்லிட்டு சிலர் இருப்பாங்க. அவுங்க பதிவுல போயி, அருமை.., கலக்கல்..., நல்லாயிருக்கு..., great writeup. keep it up இப்படி ஏதாவது ஒரு டெம்பிளேட் கமெண்ட் போட்டுட்டு வந்திடுங்க. ஸ்மைலி மட்டும் போட்டால் இன்னும் வசதி. பார்ரா.. மிகப் பிரபலபல பதிவர் போஸ்ட்ல மட்டும் கமெண்ட் போடுறாரு.. அதுவும் டெம்பிளேட் கமெண்ட்.அப்படினா இவரும் பிரபல பதிவர்தான்யானு ஒரு இமேஜ் தானா வந்துடும்.
3.முக்கியமா உங்க பதிவில யாராவது கமெண்ட் போட்டா விழுந்தடிச்சி ரிப்ளை பண்ணக் கூடாது. அப்புறம் கமெண்டுக்கு அலையிறான்னு இமேஜ் உருவாகிடும்(பின்ன.. பிரபல பதிவர் ஆக வேண்டாமா ). அப்படியே பண்ணினாலும் குறிப்பிட்ட 'மிகப் பிரபலபல பதிவர்' போட்ட கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணிட்டு விட்டுடணும்.
4.முக்கியமா 'Comment moderation has been enabled ' இதை விட்டுடாதிங்க. கமெண்டே விழலனானும் இதை வச்சி மெயிண்டைன் பண்ணிக்கலாம். நிறைய கமெண்ட் விழுந்தும் அத ரிலீஸ் பண்ண டைம் இல்லாம பிசியா இருக்கிற மாதிரி காட்டிக்கலாம். ஒரு கமெண்ட் கூட விழலனா அனானியா ரெண்டு கமெண்ட் நாமே போட்டுக் கலாம்.
5.மொத்தமா பத்தே பதிவுதான் போட்டிருந்தாலும்(அதுல ஒன்பது காபி பேஸ்டா இருந்தாலும் ) 'எனது பத்தாவது பதிவு' அப்படின்னு ஒரு பதிவு போடுங்க. அதுல செண்டிமெண்டா சில மேட்டர சேக்கணும்.. பெத்தவங்க, வளத்தவங்க, வாத்தியார் மொத கொண்டு எல்லாருக்கும் ஒரு நன்றியை சொல்லிபோடனும். அப்படியே, நான் யாருக்குமே கமெண்ட் போட்டதில்லைனாலும் எனக்கு தொடர்ந்து கமெண்ட் போடுற உங்களுக்கு நான் என்ன செய்யபோறேன்னு கண் கலங்கிற மாதிரி ஒரு பத்தி சேத்து விடுங்க.
6. ' வலையுலகத்திலிருந்து விடைபெறுகிறேன் நண்பர்களே' அப்படின்னு திடீர்னு ஒரு பதிவு போடனும். ஒரே நாள்ல பிரபல பதிவர் ஆவதற்கு இதுதான் சிறந்த வழி.இதுவரையில வராதவங்க எல்லாம் வருவாங்க. கமெண்டு போடாதவங்க எல்லாம் போடுவாங்க... சீக்கிரமே வரணும், மறுபரிசீலனை செய்யனும்னு சொல்வாங்க. சில பேரு ஒருபடி மேலே போயி பதிவுலகத்திற்கே பேரிழப்புனு சொல்வாங்க. அதெல்லாம் பிரியத்தில சொல்றாங்கன்னு நினைக்கக் கூடாது.அப்பாடா எண்ணிக்கையில ஒன்னு கொறைஞ்சி போச்சு என்கிற சந்தோசத்திலதான்.
7. ஆனால் அடுத்த வாரமே ' மீண்டும் பதிவுலகில் நான்' என இன்னொரு பதிவு போடனும். ( நைசா முன்னாடி போட்ட பதிவை அழிச்சிடனும்) . உடனே , வருக நண்பரே..மீண்டும் பதிவுலகத்திற்கு வந்ததற்கு நன்றி..... அடுத்த இன்னிங்க்சை ஆரம்பிங்க....இப்படி வரிசையா கமெண்ட் விழும். எல்லாம் சந்தோசத்தில போடுறாங்கனு நெனைப்பீங்க. அதுதான் இல்ல.. ' ங்கொய்யால உடனே வந்துட்டான்யா..." இதைத்தான் அப்படி சொல்ல வர்றாங்க.
9. ஏதாவது ஒரு திரட்டியை திட்டி பதிவு போடனும். அந்த திரட்டி இல்லனா வலைப்பூவே இயங்காதானு கேள்வி கேக்கணும். இவ்வளவு போல்டா பதிவு போடுறார்னா இவர் கண்டிப்பா பிரபல பதிவர்தான்னு நினைப்பாங்க. ஆனா அடுத்த மாசமே நைசா அதே திரட்டில உங்க பதிவைகளை இணைச்சு விட்டுடணும்.
10. சமீபத்தில், முகநூளில் அதிக லைக் வாங்கிறவங்க பின்னால மாபியா கும்பல் இருக்குனு மனுஷ்ய புத்திரன் சொன்னவுடன், அஞ்சு பத்து லைக் வாங்கிறவன் கூட பொங்கி எழுந்தான். அப்பத்தான் எவன் எவன் தன்னை பேஸ்புக் பிரபலம்னு நினைச்சுட்டு இருக்கான்னு தெரிஞ்சது. அதேப் போல பிளாக்கரைப் பத்தி யாராவது, எங்கேயாவது , ஏதாவது சொன்னா.. பொங்குற மொத ஆளு நீங்களா இருக்கணும்.
11. ஒரு பொண்ணோட மனச இன்னொரு பொண்ணுதான் புரிஞ்சுக்க முடியும் என்பது மாதிரி..பிரபல பதிவர் ஆவது எப்படிங்கிறது ஒரு பிரபல பதிவருக்குத்தான் தெரியும் என்கிற லாஜிக் படி, 'பிரபல பதிவர் ஆவது எப்படி' னு ஒரு பதிவ போட்டீங்கனா...
இந்த நாள் மட்டுமல்ல வருடத்தில் எல்லா நாட்களும் நீங்கள் பிரபல பதிவர்தான்.
இன்னைக்கே உங்க ஐடியாக்களை பாலோ பண்ணி பிரபல பதிவர் ஆயிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
ReplyDeleteஹா..ஹா..நீங்க ஏற்கனவே பிரபல பதிவர் தானே பாஸ்... ஓ...அப்போ 'மிகப் பிரபலபல பதிவர் ஆகப் போறீங்கனு சொல்லுங்க.
Deleteஅட..டா...
ReplyDeleteஇது தெரியாமப் போச்சே...
இப்பவே ஆரம்பிச்சிட வேண்டியதுதான்
ஒரு கருத்துக்கணிப்பு..........
யார் இங்கே பிரபல பதிவர்...? என்று
ஹா..ஹா.. நடத்துங்க பாஸ்... ஆனா மேலே சொன்னதெல்லாம் பாலோ பன்றவங்களையும் பிரபல பதிவராக ஏத்துக்கனும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேன்.
Delete:-)
ReplyDeleteநீங்க இன்றுமுதல் மிகப் பிரபலபல பதிவர் என்று அழைக்கப் படுகிறீர்கள்... :-)
Deleteமுந்தைய கமெண்ட் ட்ரைலர் :-)
ReplyDelete//ஸ்மைலி மட்டும் போட்டால் இன்னும் வசதி. // ஒரு மனுசன கிண்டல் பண்றதுக்கு அளவே இல்லாம போச்சே :-)
ReplyDelete
Deleteஹா.ஹா.. நான் அவரைத்தான் சொல்றேன்னு நீங்க யாரை நினைச்சிட்டு சொன்னீங்களோ அவரைத்தான் நானும் நெனைச்சிகிட்டு சொன்னதா நீங்க சொன்னதா நான் நெனச்சிகிட்டு இருக்கேன்.. இது நமக்குள்ள இருக்கட்டும்.. :-)
// சில பேரு ஒருபடி மேலே போயி பதிவுலகத்திற்கே பேரிழப்புனு சொல்வாங்க. // ஹா ஹா ஹா கரேட்டு கரேட்டு மிரட்டு மிரட்டு :-)
ReplyDeleteபிரபலம் ஆனதற்கு வாழ்த்துக்கள் தலைவரே :-)
இவன் அண்ணனின் அடிபொடிகள்
நன்றி வாழ்த்துக்கள் :-)
Deleteஎதையோ எழுதனும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிட்டேன்.
ReplyDeleteகடைசில நீங்க எதை நெனச்சிகிட்டு எழுத வந்தேன்னு மறந்துட்டீங்க பாத்தீங்களா... :-) நன்றி.
Delete('l')
ReplyDelete:-)
Deleteமிகவும் அருமையான அறிவுரைகள். இதன்படி நடந்துகொண்டு அனைவரும் உடனடியாகப் பிரபலமாகக் கடவது.
ReplyDeleteநன்றி சார் உங்களைபோன்ற மிகப் பிரபலபல பதிவர் கமெண்ட் போட்டதின் மூலம் நான் பிரபல பதிவர் ஆயிட்டேன்.
Deleteமன்னிக்க வேண்டும் தெரியாமல் உங்கள் பதிவு பக்கம் வந்து. புரியாமல் கருத்திட்டு, அறியாமல் நீளமாயும் எழுதிவிட்டேன். இதைப் படித்து விட்டு கருத்தை நீக்கிவிடவும். அவ்வ்வ்.. :)
ReplyDelete:-)
Delete(இது மாதிரி ஸ்மைலி கமெண்ட் போட்டு நாங்களும் பிரபல பதிவர் ஆயிடும்..)
ஹா ஹா ஹா நல்லாயிருக்குங்க...
ReplyDeleteநன்றி பாஸ்..
Delete:)
ReplyDelete(THIS COMMENT ACCORDING THE 2nd LAW)
நன்றி பிரபல பதிவர் ஹாரி அவர்களே..
Deleteஅருமை.., கலக்கல்..., நல்லாயிருக்கு..., great writeup. keep it up
ReplyDeleteஹா.ஹா.. நன்றி தல. ..நீங்க ஒரு புள்ளி மட்டும் கமெண்டா போட்டாலே அவுங்க பிரபல பதிவர் தான்.
Deleteசூப்பரு....!
ReplyDeleteஅட...! தெரியாமப் போச்சே... ஹா... ஹா... ஹா...
நன்றி திண்டுக்கல் தனபாலன்
DeleteLabels: : விழிப்புணர்வு பார்ரா :-)
ReplyDeleteஹா..ஹா...
Deleteஉங்க முதல் கட்டளையை மீறிக்கொண்டிருக்கும் பாவி நான். என்னால் ஒரு போதும் பிரபல பதிவர் ஆக முடியாது என்பதை நினைச்சாலே...... இதயம் வெடித்துவிடும் போல இருக்கு!
ReplyDeleteஎப்ப கடைத்தேறுவேனோ தெரியலையே:(
Deleteஎன்னது மத்தவங்க பதிவில போயி கமெண்ட் போடுறீங்களா...போங்க பாஸ்... பிரபல பதிவர் எல்லாம் இப்படித்தான் கமெண்ட் போட்டுட்டு இருக்காங்களா .. :-)
நாலாவதும் ஆறாவதும் சூப்பர்...
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்..
Deletesalaam brother,
ReplyDeleteSema :-) :-)
thanks boss
Deleteஉங்களை பிரபல பதிவராகக் காட்டிக் கொள்வது எப்படி..?
ReplyDelete>>
இப்படி பதிவர், பதிவு, ஹிட்ன்னு தலைப்பு வச்சு டிப்ஸ் பதிவு போட்டாலும் நீங்க பிரபல பதிவர் ஆகிடலாம்!!
அப்படினா நானும் பிரபல பதிவர்னு சொல்றீங்க... எப்படியெல்லாம் பிரபலம் ஆக வேண்டியிருக்கு பாருங்க சகோ..
Deleteஏனய்யா. நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன், என்னுடைய சீக்ரட்டையெல்லாம் வெளியில எடுத்து விட்டுட்டயே!
ReplyDeleteஹா..ஹா...நன்றி ஐயா.. நீங்க மட்டும் பிரபல பதிவர் ஆனா போதுமாங்கயா... நாங்களும் ஆகவேண்டாமா.. :-)
Deleteஉங்களை பிரபல பதிவராகக் காட்டிக் கொள்வது எப்படி..?
ReplyDeleteமனதில் உறுதியுடன் பிரபல பதிவரானதற்கு வாழ்த்துகள்..
ஹி..ஹி.. நாங்களும் பிரபல பதிவர் ஆவோம்ல சகோ... ஆனா என்ன.. கொஞ்சம் நாசுக்கா நாதாரித்தனம் செய்யணும்..
Deleteவலையுலகை நாடிபிடித்துப் பார்த்திருக்கறீர்கள் நன்று.
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்..
Delete:-)))))
ReplyDeleteஹி..ஹி..
Deleteஅருமையான பதிவு :)
ReplyDelete(அவ்வ்வ்வ்வ்)
அப்படியே, கலக்கல்..., நல்லாயிருக்கு..., great writeup. keep it up இதையும் போட்டுரிந்தீங்கனா நானும் மிகப்பிரபலபல பதிவர்னு சொல்லிட்டு இருந்திருப்பேன் அவ்வ்வ்வ்வ் .. :-)
Deleteரைட்டு... நீங்க நடத்துங்க தல..... மசாலா பதிவு நீங்களுமா?
ReplyDeleteஇப்படி எல்லாம் ஜிகினா வேலை காமிச்சுத்தான் நாங்களும் பதிவுலகில இருக்கோம்னு காட்டிக்க வேண்டியிருக்கு தல...
Deleteஹா ஹா விஷயம் தெரியாமப்போச்சே நானும் எத்தனை நாளுதான் பிரபல பதிவர் ஆவது எப்படின்னு மண்டைய உடைச்சிக்கிட்டு இருக்கிறது.
ReplyDeleteஹா.ஹா.. கவலையே வேண்டாம் .மேலே சொன்னத நாலு மண்டலமா பிரிச்சி மண்டலத்துக்கு ரெண்டு ரூல்ஸை பாலோ பண்ணிட்டு வந்தீங்கனா நீங்களும் ஒரு பிரபல பதிவரே.. :-)
Delete:-)
ReplyDelete