கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்: நானும் அவர் மொகத்த மூணு மணி நேரமா உத்துப் பாத்துகிட்டு இருந்தேன்.மனுசன் ஒரு வார்த்தை..ஒரே வார்த்தை பேசியிருந்தா போதும்..ஓரளவு கெஸ் பண்ணிருப்பேன்.. ஆனா அவ்ளோ தூரத்திலிருந்து அமெரிக்க ஒட்டு கேட்டுருக்குனா, அது சாதாரண விஷயமில்ல...
ஜார்ஜ் புஸ் : லைஃப்ல ரெண்டே தடவதான் தலையை இந்த அளவுக்கு சாய்ச்சிருக்கேன். ஒன்னு ஷூ வை தூக்கி அடிச்சப்போ... அதுல ஜெயிச்சிட்டேன். இன்னொன்னு இவரு என்ன பேசுறாருன்னு கேக்க முயற்சி பண்ணினப்போ....பட்..இதுல தோத்துட்டேன்..ஆனா அதையும் நுணுக்கமா கண்டு புடிச்சிருக்காங்கனா ..ஐ ரியல்லி அப்ரிசியேட் மை பாய்ஸ்...
சப்பான் பிரதமர்..:救命士に相当する資格を有する者(以下「外国救急救命士」という。)を除く。以下この号において同じ。)が厚生労働大臣の指定する病院(以下この号におい て「指定病院」という。)において臨床修練指導医若しくは臨床修練 அதாவது நம்ம சப்பான் பிரதமர் சங்கி மங்கி என்ன சொல்ல வறாருனா...."எனக்கு ஜாப்பனீஸ் தவிர எதிலேயும் பேச வறாது. ஆனா மத்தவங்க என்ன பேச வராங்கனு கண்டு பிடிக்கிற அதி நவீன கருவி என் சட்டை பட்டனில் சொருகி வச்சிருந்தேன். அது மொத மொதல்ல பெயிலியர் ஆனது இவர்கிட்ட பேசினப்போதான். ஆனா அமெரிக்க சாதிச்சிருக்குனா, அது..யொஹோகவா மிட்சுபிஷிகி அயோனோ சியோ சியோகோ...
சோனியா ஜி...சரி...பேசத்தான் மாட்டேங்குறீங்க.என்ன தோணுதோ அதை எழுதியாவது காமிங்கனு சொன்னேன்.. ஒரு மணிநேரம் கழிச்சி ஒரு பேப்பர கொண்டுவந்து கொடுத்தாரு. அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்.. ஏன்னா அது ஒண்ணுமே எழுதாத பிளாங் பேப்பர். இவ்வளவு நாள் கூட இருந்த என்னாலே முடியாதத, யு.எஸ் கண்டுபுடிச்சிருக்குனா வால்மார்ட் என்ன.. தலைமார்ட் கூட இங்க ஆரம்பிக்கிறதுக்கு அதுக்கு தகுதி இருக்கு...
ப.சிதம்பரம்: இது இந்தியாவிற்கு விடப்பட்ட சவால்.. நாங்கள் பொத்திப் பொத்தி வளர்த்து வருகிற எங்கள் பிரதமரின் பேச்சை அமெரிக்கா ஒட்டுக் கேட்டிருப்பது இந்திய இறையாண்மை மேல் வீசப்பட்ட அணுகுண்டு.. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு நாங்கள் காலில் விழும் முன் அந்த ஒலி நாடாவை இந்தியாவிற்கு கொடுத்து விடுவதுதான் அமெரிக்காவுக்கு பாதுகாப்பு என தெரிவித்துக் கொள்கிறேன்.
சரி...அமெரிக்காவில என்ன பேசிக்கிறாங்க...?
ஒபாமா : கங்கிராட்ஸ் மை பாய்ஸ்...வெல்டன்...! தகவல் தொழில் நுட்பத்தில இது ஒரு மைல் கல்..உலகமே நம்மள வியந்து பாராட்டுது. எங்கே...ஒட்டுக் கேட்டத பிளே பண்ணுங்க..ஐயாம் ஆல்சோ ஈகர்லி வெயிட்டிங்...
(பிளே பண்ணப்படுகிறது..)
"............................................................"
ஒபாமா : எங்கேடா ஒரு சத்தத்தையும் காணோம்...?
உளவுத்துறை: மிஸ்டர் பிரசிடென்ட், அதான் எங்களுக்கும் கன்பியுஸா இருக்கு...பூமிக்கு நூறு அடிக்கு கீழே ஒளிஞ்சிருந்த ஒசாமா பேசினதையே ஒட்டுக் கேட்ட இன்ஸ்ட்ருமென்ட் இது. தப்பே செய்யாது...வெயிட்..ஒன் மோர் டைம்..
".........................................................."
ஒபாமா : என்னடா வெறும் காத்துதான் வருது..?
உளவுத்துறை: மிஸ்டர் பிரசிடென்ட்.. ஐ திங் இந்தியா நம்மளை விட டெக்னாலஜில பல மடங்கு அட்வான்ஸ்டா போயிட்டு இருக்கு. நாம கோடு வேர்டு வச்சி பேசுறோம்.ஆனா இந்தியா யாருமே கண்டு பிடிக்க முடியாத 'சைலன்ட் மோடு ' டெக்னாலஜி யூஸ் பண்ணி பேசிகிறாங்க...வெரி ஸாரி மிஸ்டர் பிரசிடென்ட்..நாம இந்தியாகிட்ட தோத்துட்டோம்..
"அடேய்...அடேய்...ஏன்டா இப்படி...அவரு என்னைக்குடா பேசியிருக்காரு... அவரு எதுவுமே பேசலங்கிற விஷயம் எங்களுக்கு மட்டும்தான்டா தெரியும்... "
எந்த டெக்னாலஜியும் எங்க சிங்ஜி முன்னாடி நிக்காது தெரியும்ல ...
ReplyDeleteநன்றி Robert....
Deleteஹா.... ஹா.... அபார கற்பனை...!
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்...
Deletehello
ReplyDeleteமிக மிக அருமை. படங்களும் சொல்லியவிதமும் சூப்பர்....சபாஷ் சபாஷ் என்று பாராட்டுகிறேன். என்னை கவர்ந்த பதிவுகளில் இதுவும் ஒன்று
ReplyDeletesemaya irukku..
ReplyDeleteVery nice.
ReplyDeleteOne of best blogg pathivu
ReplyDeleteTHANKS Rajathurai Arulrajah..
Deleteதலையை கிர்ன்னு சுத்துது
ReplyDeleteஹா..ஹா... நன்றி
Deleteரொம்ப நகைசுவை பதிவு. ரொம்ப நாட்களுக்கு பிறகு சிரிக்க வைத்த பதிவு.
ReplyDeleteஒரு சின்ன தொடர்ச்சி.
எவ்வளவு முயன்றும் தோற்றுபோன அமெரிக்க புலனாய்வு துறை தங்களது முடிவை பரிசோதிக்க பாகிஸ்தான் ஐ.ஸ்.ஐ அமைப்பை அணுகி உண்மையிலேயே மன்மோகன் என்னதான் பேசினார் என்று கேட்டது. அதை கேட்டு மிகவும் கடுப்பான ஐ.ஸ்.ஐ தலைவர், அமெரிக்கர்களுக்கு புரிய வைக்க ஒரு கதை சொல்ல தொடங்கினார்.
ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் 20 பைத்தியங்கள் ஒரு செவுரின் மீது காது வைத்து எதையோ கேட்டு கொண்டிருந்தன. முதல் நாள் இதை பார்த்தார் டாக்டர். அனால் தினமும் அவர் வரும் போது அனைவரும் தொடர்ந்து காதை வைத்து எதையோ கேட்டு கொண்டிருந்தனர். இது போல் ஒரு வாரம் ஓடியது. ஒரு மாதமும் கூட ஓடியது. டாக்டர் ஆவலோடு என்னதான் அவர்கள் கேட்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள செவுரின் மீது காதை வைத்து கேட்டார். ஒரு அரை மணி நேரம் கேட்டும் அவருக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவர் அந்த பைத்தியங்களை பார்த்து என்ன கேட்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் கேட்கவில்லையே என்றார்.
உடனே அனைத்து பைத்தியங்களும் அவரை அடிக்க தொடங்கின. ஒரு மாதமாக கேட்ட எங்களுக்கே ஒன்றும் கேட்கவில்லை. அரைமணி நேரத்தில் உங்களுக்கு எப்படி கேட்கும் என்றனர்.
இந்த கதையை கூறிவிட்டு, 10 வருடங்களுக்கு மேலாக ஒட்டு கேட்டு வரும் எங்களுக்கே ஒன்னும் கேட்களை. இரண்டு வருஷம் ஒட்டு கேட்டுட்டு ஒன்னுமே கேக்கலை என்று சொன்னால் என்ன பாஸ் என்றார்!
ஹா..ஹா... செம... நன்றி பாஸ்..
Deleteஅருமையான பதிவு!
ReplyDeleteநன்றி சகோ
DeleteHI..HI.. THANKS BOSS
ReplyDeleteநன்றி சகோ
ReplyDeleteஅனானியா கமென்ட் போட்ட அனைவருக்கும் நன்றி..
ReplyDeletehahahahh good work!
ReplyDeleteSema Comedy illa.........
ReplyDeleteUS intelligence paru summ urainju poi utkanthu irukanunga.......
Eppadi ipdillam yosikireenga?
ReplyDelete