Saturday 22 June 2013

தாவத் தயாராகும் எம்எல்ஏ வைத் தடுப்பது எப்படி...?




"தம்பி...இப்படி மாடு கழுத்து பூரா மணியை கட்டி ஊரெல்லாம் நாய்ஸ் பொலூசன் உண்டாக்கிட்டு மாட்டு வண்டியில அப்படி எங்கப்
பா போறீங்க ..ஏதாவது திருவிழாவா..."

"ஐயா இருவது வருசத்துக்கு முன்னால,  பதினெட்டுப் பட்டி....."


"ஸ்டாப்...எனக்கு நெறைய வேலையிருக்கு...மேட்டர மட்டும் சொல்லு.."

"ஐயா...கடந்த அஞ்சு வருசமா தனி ஆளா தோட்டத்தில வேலை செஞ்சுகிட்டு இருந்த சின்ன கவுண்டர்,ஒரு வழியா கண்டவன் கைய கால  புடிச்சி இப்பத்தான் 29  பேரை  வேலைக்கு  சேத்தாருங்கயா.....  ஆனா இவரு மச்சான் சக்கர கவுண்டர்,சின்னகவுண்டர் தோட்டத்தில வேலை செய்யிற ஒவ்வொரு ஆளா ஆசைகாட்டி தன் தோட்டத்துக்கு இழுத்துகிட்டாருயா.அதிலும் பாருங்க
ய்யா போனவன் சும்மா இல்லாம தொகுதி வளர்சிக்காக பாக்கப் போனேன்னு பொய் வேற சொல்றானுவய்யா.அதான் பொறுத்து பாத்துட்டு பஞ்சாயத்தைக் கூட்டிட் டாரு எங்க சின்ன கவுண்டர்..."

"ஆமா... பில்கவுண்டர் ,கேஷ் கவுண்டர் ,டிக்கெட் கவுண்டர் கேள்வி பட்டிருக்கேன்..அது என்ன சின்ன கவுண்டர்..?"

"ஐயா உங்களுக்கு சின்னகவுண்டர் தெரியாதுங்களா....எங்க சின்னக் கவுண்டர் பரம்பரை இருக்குங்களே அது சாராயத்தில கலந்த வாட்டரையும்,சரக்குல கலந்த சோடாவையும் தனித்தனியா பிரிக்கிற பரம்பரைங்க.. அதிலும் சின்னகவுண்டர் இருக்காருங்களே வெறும் வாசனையை வச்சே எந்த நாட்டுல எந்த வருசத்தில தயார் பண்ணினது
னு கரெக்டா சொல்வாருங்க. முடிஞ்சா ஒரு எட்டு வந்து பஞ்சாயத்த பாத்து போட்டு போங்கயா..."    


இடம்: பதினெட்டுப் பட்டி பஞ்சாயத்து ஆலமரம்.

"சின்ன கவுண்டர் வந்துடார்ருங்க...
சின்ன கவுண்டர் வந்துடார்ருங்க...சின்ன கவுண்டர் வந்துடா..சின்ன கவுண்டர் வந்....சின்ன கவுண்ட...சின்ன க.....சின்...சி......."

" டிங் டிங் டிங் டட டிங் டிங்,,,,,  

கண்ணுபடப் போகுதையா சின்னக் கவுண்டரே....
உனக்கு சுத்திப் போட வேணுமையா சின்னக்கவுண்டரே........"

சின்ன கவுண்டர் : நாயே..நாயே.......நானே ஒன்னு ஒன்னா போகுதேன்னு கவலையில இருக்கேன்...இதுல கண்ணு படப் போகுதா....

பஞ்சாயத்து பெருசு : ஐயா..உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை...தலைமுறை தலைமுறையா இந்த பதினெட்டு பட்டி ஜனங்களுக்கும் தெரிஞ்சதுதான்.பதினெட்டு பட்டி பஞ்சாயத்து இங்க கூடியிருக்குனா.. பதினெட்டுப் பட்டிக்கு தீர்ப்பு சொன்ன நம்ம கவுண்டர் அய்யாவுக்கே இப்படி ஒரு நெலமை வந்தத நெனச்சி பாக்கும் போது.....மாட்டுவண்டி கொட சாஞ்சா நிமுத்து வச்சிரலாம்...கவுண்டரய்யா குடும்ப மானமே கொட சாஞ்சி நிக்கிறத நெனைக்கும் போது.... 

சின்ன கவுண்டர் :   நாயே... நாயே....மேட்டருக்கு வாடா...

பஞ்சாயத்து பெருசு : நம்ம ஊர் ஜனங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல...மொதல்ல நம்ம கவுண்டரய்யா கட்ன கல்யாண மண்டபத்த இடிச்சாங்க,கவலைப்படல.... பின்னாடியே கொடை பிடிச்சிட்டு திரிஞ்ச வடிவேல வச்சி கழுவி கழுவி ஊத்தினப்ப,கலவரப்படல....கூட்டணிக்காக   சக்கரைக்கவுண்டர் தோட்டத்தில  ஜிம்மி மாதிரி பம்மிகிட்டு நின்னப்போ கூட அசிங்கப்படல.....குடிகாரன்னு சொன்னப்போ கூட..ம்
ஹும்.......நொந்து போயி கவுண்டரய்யா சம்சாரமே மது ஒழிப்பு போராட்டம் நடத்தினப்போ கூட அதிர்சியடையில........
  
ஆனா அய்யா தோட்டக்காரங்க ஒவ்வொருத்தரயும்  அந்த சக்கர கவுண்டர் ஆட்டையை போட்டா அத எப்படிங்க பாத்துட்டு சும்மா இருக்க முடியும்.அட போனவன் சும்மா போனா பரவாயில்ல. ஏதோ தொகுதி வளர்ச்சியாம். இப்ப மட்டும் தொகுதி பத்தடி பெருசா வளந்துடவா போகுது. அதனால கொட சாய்ஞ்சு போன கவுண்டரய்யா மானத்தை செங்குத்தா தூக்கி நிறுத்தணும்னா வெண்ணிற ஆடை மூர்த்திய கூப்பிட முடியாது..நாமலே பாத்து ஒரு யோசனை சொல்லோனும்...




பெருசு 2: ஐயா.. நான் ஒரு யோசனை சொல்றேனுங்கையா..இனிமே ஒங்க தோட்டத்திலேருந்து யாராவது சக்கர கவுண்டர் தோட்டத்துக்கு வேலை செய்யப்போனா,பதினெட்டுப் பட்டி ஜனங்களோட அண்ட்ராயரை தொவைக்கனும்னு தீர்ப்பு சொல்லி போடுங்கையா...

பெருசு 3: ஐயா...ஒவ்வொருத்தருடைய சம்சாரத்துகிட்டயேயும் போயி..."தொகுதி" ங்கிறது  அவுங்க 'செட்டப்'போட செல்லப் பெயர்னு  சொல்லிடுங்கய்யா...இனி எவனாவது தொகுதி வளர்ச்சிக்காக அங்க போனேன்னு சொல்வானா... 


 பெருசு 4: ஐயா..அப்டி ஓடிப்போற ஆள இழுத்து வந்து  ஊரு ஆலமரத்தில கட்டிவச்சி,விருதகிரி,சபரி, மரியாதை படத்த கேப் விடாம போட்டு காமிக்கிறோம்.எப்படியும் ஒரு படத்திலேயே மயக்கம் போட்டுடுவான். தெளிஞ்ச ஒடனேயே அடுத்தப் படத்த போடுறோம்.தெளிய வச்சி..தெளிய வச்சி போட்டு காண்பிக்கிறோம். ஒரு வழியா மூளை குழம்பி போய் இங்கேயே இருந்துடுவான்...அப்படியும் முடியலனா, கடைசி ஆயுதமா சுறா, வேட்டைகாரனை போட்டு மொத்தமா முடிச்சிடலாம். 

பெருசு 5: கவுண்டரய்யா இப்படி செஞ்சா என்ன...மிச்சம் இருக்கிற கொஞ்சம் போரையும் கூப்பிட்டு,இது வரை நான் அடிக்காத சரக்கு ஏதாவது இருந்தா கொண்டு வாங்கனு சொல்லுங்க.அவுங்க எங்க தேடியும் கிடைக்காது. அதுக்குள்ள அடுத்த எலக்சன் வந்துடும்...


பெருசு 6: ஐயா..பேசாம அவுங்க வீட்டை சுத்தி பள்ளம் தோண்டி,அது மேல இலை தழை எல்லாம் போட்டு மூடி வச்சிடுவோம். அது தெரியாம அது மேல நடத்து போவும் போது பள்ளத்துக்குள்ள விழுந்துடுவாங்க. நாம லபக்குனு புடிச்சிடலாம்...எப்படி என் ஐடியா...ஹி...ஹி...ஹி..


சின்ன கவுண்டர் : அடிங்.. கொய்யால.அவங்க போனது கூட கஷ்டமா இல்லடா..உங்க கிட்ட யோசனை கேட்டேன் பாரு. அப்படினா இந்த பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ற நேரம் வந்துடிச்சினு நெனைக்கிறேன். எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.நான் இந்த துண்டை எடுத்து இடுப்ல கட்னனா சாமி கும்பிடப்போறேன்னு அர்த்தம்.இந்த துண்டை எடுத்து...............


"ஆமா இவரு துண்டை எடுத்து கால் கவட்டைகுள்ள விட்டாருன்னா கோமணம் கட்டப்போறாருனு அர்த்தம். அந்த துண்டை எடுத்து தலைமேல போடாருன்னா,சின்ன வீட்டுக்கு திருட்டுத்தனமா போறாருன்னு அர்த்தம்.அப்படியே    தரையில விரிச்சார்ன்னா சரக்கு அடிக்கபோறார்னு அர்த்தம்.எல்லாம் தெரியுங்க சின்னகவுண்டரு...மொதல்ல தீர்ப்ப சொல்லுங்க..."

சின்ன கவுண்டர் : பதினெட்டுப் பட்டி ஜனங்களும் நல்லா கேட்டுக்குங்க...மாடு பால் கொடுக்குதுங்கிறதுக்காக கொம்புல கறந்தா வறாது.அதோட மடில கறக்கணும்.பனை மரத்தில கள்ளு வருதுங்கிறதுக்காக அதோட வேர்ல வெட்டினா வறாது.நுங்குல வெட்னும்.அது மாதிரி இனி இவனுகள நம்பி எந்த பிரயோசனமும் இல்ல. சாட்சிகாரன் கால்ல விழுறதை விட சண்டைக்காரன் காலிலே விழுந்தடலாம்னு முடிவு பண்ணி நாளைக்கே நானும் தொகுதி வளர்ச்சின்னு சொல்லி சக்கர கவுண்டர் தோட்டத்துக்கு வேலைக்கு போறதா முடிவு பண்ணிட்டேன்.இதுதான் இந்த பஞ்சாயத்தோட தீர்ப்பு.இது எங்க ஆத்தா மேல சத்தியம்.




16 comments:

  1. அது என்ன சக்கரை கவுண்டர். சின்ன கவுண்டரை களாய்க்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு. ஆட்சியம்மா தோட்டம்ன்னு நேரா சொல்ல வேண்டியதுதானே. அம்மான்னா பயமா பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. இங்க சக்கர கவுண்டர்தான் ஜெயா... இதுவே அந்த அம்மாவை கலாய்க்கிறது மாதிரி தானே பாஸ்... கருத்துக்கு நன்றி

      Delete
  2. Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete
  3. நிஜமாவே அதைத்தானே சின்னக் கவுண்டர் பண்ணபோறார்
    நல்ல நகைசுவை

    ReplyDelete
  4. ஐயா..அப்டி ஓடிப்போற ஆள இழுத்து வந்து ஊரு ஆலமரத்தில கட்டிவச்சி,விருதகிரி,சபரி, மரியாதை படத்த கேப் விடாம போட்டு காமிக்கிறோம்.எப்படியும் ஒரு படத்திலேயே மயக்கம் போட்டுடுவான். தெளிஞ்ச ஒடனேயே அடுத்தப் படத்த போடுறோம்.தெளிய வச்சி..தெளிய வச்சி போட்டு காண்பிக்கிறோம். ஒரு வழியா மூளை குழம்பி போய் இங்கேயே இருந்துடுவான்...அப்படியும் முடியலனா, கடைசி ஆயுதமா சுறா, வேட்டைகாரனை போட்டு மொத்தமா முடிச்சிடலாம். //

    ஐ இந்த ஐடியா நல்லா இருக்கே.....அருண்பாண்டியனுக்கு போட்டுக்காடவேண்டிய படங்களும் கூட ஹா ஹா ஹா ஹா...

    செம கலாயிப்புங்கோ....

    ReplyDelete
    Replies
    1. //அருண்பாண்டியனுக்கு போட்டுக்காடவேண்டிய படங்களும் கூட//

      சக்கர கவுண்டர் தோட்டத்துக்கு மொதல்ல வேளைக்கு போன ஆளு அவருதான்...அவருக்குத்தான் போட்டுக் காண்பிக்கணும் ஹா ஹா.

      நன்றி நண்பரே..

      Delete
  5. "ஆமா இவரு துண்டை எடுத்து கால் கவட்டைகுள்ள விட்டாருன்னா கோமணம் கட்டப்போறாருனு அர்த்தம். அந்த துண்டை எடுத்து தலைமேல போடாருன்னா,சின்ன வீட்டுக்கு திருட்டுத்தனமா போறாருன்னு அர்த்தம்.அப்படியே    தரையில விரிச்சார்ன்னா சரக்கு அடிக்கபோறார்னு அர்த்தம்.எல்லாம் தெரியுங்க சின்னகவுண்டரு...மொதல்ல தீர்ப்ப சொல்லுங்க..." ///

    ஹா ஹா ஹா இந்த லைன் படிச்சு செமையா சிரிச்சுட்டேன்! கலக்கல் பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  6. மணிமாறன் நீங்க கிரேட்...என்னை நீங்கள் அறிய வாய்ப்பில்லை.உங்களை நான் நன்றாக அறிவேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா... மிக்க சந்தோசம்... விரைவில் சந்திக்கலாம்..

      Delete
  7. அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு பாஸூ.
    ஆனாலும் பஞ்சாயத்து விருவிருப்பாகவும் கலகலப்பாகவும் நடந்தது!
    துண்டை எங்க விட்டால் என்ன அர்த்தம் என்பது... எப்படி பாஸூ... எப்படி... நோ சான்ஸ்!

    ReplyDelete