Saturday, 10 August 2013

தலைவா படத்தை ரிலீஸ் செய்வது எப்படி..?


ன்றைக்கு தமிழ் நாட்டோட தலையாய பிரச்சனையே(!?)  தலைவா படம் ரிலீஸ் ஆகுமா என்பது தான்... சில செய்திகள் நாளை ரிலீஸ் எனவும் சிலர் ஆக-15 னும் சொல்றாங்க...

சரி அப்படியென்ன இந்தப்படத்தில வில்லங்கமான காட்சிகள் இருக்கு...? படம் பார்த்தவங்கள கேட்டீங்னா நாலு நாளைக்கு ரூம் போட்டு சிரிப்பாங்க. படத்துக்கு பில்டப் கொடுக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குங்ண்ணா...

முதல்ல தலைவா தரப்பு ஒரு விஷயத்தை சரியா புரிந்து கொள்ளவில்லை. எல்லா படமும் விஸ்வரூபம் ஆகிவிட முடியாது. எல்லா நடிகரும் கமல்ஹாசனாகவும்  முடியாது. 'விஸ்வரூப பார்மலா'வை அதற்கு பின் வந்த சில படங்கள் முயற்சி செய்து பார்த்தது.ஆனால் தோல்வியில் தானே முடிந்தது.கடலும் அன்னக்கொடி யும் கடலில் கரைத்த பெருங்காயமானதே  ...

விஸ்வரூப பிரச்சனையே வேறு. அவர் சில அமைப்புகளை அழைத்து படத்தை திரையிட்டுக் காண்பித்தார். நிச்சயம் கமல் என்ன சொல்ல வந்தார் என்பதை முழுவதும் புரிந்திருக்க மாட்டார்கள். ஆனாலும் படம் ரிலீஸ் ஆகி ஏதாவது ஏடாகூடமான எதிர்வினைகள் வந்துவிட்டால், அனுமதித்த நம் அமைப்பின் மீதுதானே குற்றம் சொல்வார்கள் என்கிற அச்சத்தில் குருட்டாம் போக்கில் தடை கோரப்பட்டது.பிறகு இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி கமல் என்கிற கலைஞானி மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. அதுவே அந்தப்படத்திற்கு ஒத்த பைசா செலவில்லாமல் விளம்பரமாகிப் போனது.

அது மட்டுமல்லாது, வெளிநாடுகளில் முதலில் திரையிட்டபோது படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாமே பாசிட்டிவாகத்தான் வந்தது. சிலர் ஆகா ஓகோ என புகழ்ந்திருந்தனர். அதுகூட படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

ஆனால் தலைவா பிரச்சனை வேறு. எதிர்ப்பு என்கிறார்கள். யார்னு கேட்டா தெரியாதாம். தியேட்டரில் 'பாம்' வைப்பதாக மிரட்டல் வந்தாக சொல்கிறார்கள். அது யார்னு கேட்டா, புரட்சி மாணவர் படையாம். திடீர்னு அது எங்கிருந்துய்யா வந்தது..? விட்டா, ரமணா படத்தில் வந்த ACF குரூப்னு சொன்னாலும் சொல்வாய்ங்க.

சரி...கமல் செய்தது போல யாருக்காவது படத்தை போட்டுக் காண்பித்தாவது பிரச்னையை முடிக்கலாம்னு பாத்தா..அது யாருக்கு போட்டுக் காமிக்கிறதுனு தெரியில.. அப்படியே ரோட்ல போற யாரோ பத்து பேரை வலுக் கட்டாயமா இழுத்து வந்து படத்தை போட்டுக் காமிச்சாலும், இடைவேளையின் போது 'நம்பர் ஒன்' போறதா பொய் சொல்லிட்டு சுவரேறி குதிச்சி தப்பிச்சி போகமாட்டாங்கனு என்னய்யா நிச்சயம்..?

முதல்வரை சந்திக்க கொடநாடு போனாங்களாம்.. அனுமதி கிடைக்கவில்லையாம்.. அப்படின்னு தலைவா தரப்புதான் சொல்லுது. அரசு தரப்பிலிருந்து எந்த ரியாக்சனும் காணோம்.

ஒருவேளை படத்தை ரிலீஸ் செய்ய விடாவிட்டால் நான் வேறு தேசம் நோக்கி சென்றுவிடுவேன் என விஜய் சொன்னா என்ன ஆகும்..?  " ங்ண்ணா இதைத்தாங்ண்ணா எதிர்பாத்தேன்...ஃபிளைட் டிக்கெட் வேணும்னா எடுத்து தரவாங்ண்ணா.." னு சொல்லிட்டா என்ன பண்றது ...?

சரி இந்த சிக்கலிலிருந்து வெளியேறி படத்தை ரிலீஸ் பண்ண என்னால் முடிந்த சில யோசனைகளை சொல்றேன்...

1. டிவி ரைட்சை சன் டிவிக்கு வித்துட்டதா எங்கேயோ படிச்சேன்...என்னங்ண்ணா நீங்க... சன் பிக்சர்ஸ்தான் தமிழ் சினிமாவையே அழிச்சிடிச்சினு சொல்லித்தானே அம்மாவுக்கு அனிலா மாறி பிரச்சாரம் செஞ்சீங்க... திரும்ப சன் டிவிக்கே வித்தா எப்படிங்ண்ணா...? உடனே அக்ரிமெண்டை கேன்சல் பண்ணி, ஜெயா டிவிக்கு 90 பர்சென்ட் தள்ளுபடில வித்துடுங்ண்ணா.

2. தலைப்புதான் ஆத்தாவை கோபப்படுத்திடுச்சினா அதுக்கு பரிகாரமா நான் சொல்றத செஞ்சிடுங்ண்ணா.....
     

தலைவா டைட்டிலுக்கு கீழ 'TIME TO LEAD 'னு இருக்கிறது தூக்கிட்டு இதுல ஏதாச்சும் ஒன்ன வச்சிடுங்க.

             " சத்தியமா நான் இல்லீங்க
ண்ணா...."
             "என்கிற நெனப்பே வரக்கூடாது "
             " அப்படினு எவண்டா சொன்னான்.." 
             " 2095 க்கு மேல் "
             " தலைவி இருக்குபோதா.."



3. படத்தில் டைட்டிலின் போது பேக்ரவுண்டில் மகாத்மா காந்தி,சேகுவாரா, நெல்சன் மண்டேலா,ஹோசி மின், பிடல் காஸ்ட்ரோ, லெனின், லீ குவான் யு, தலாய்லாமா என வரிசையா வருது . ஆனா...... ஆனா....... அகிலம் போற்றும் அகிலாண்டேஸ்வரி, தங்கத்தாரகை, பொன்மனச்செல்வி, காவிரித்தாய், பாரதமாதா, பன்னியின்..ச்சீ பொன்னியின் செல்வி, வீரமங்கை வேலு நாச்சியார், இதய தெய்வம், டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் போட்டோவை விட்டுடீங்கலய்யா....மொதல்ல எல்லா படத்தையும் தூக்கிட்டு அம்மா சின்ன வயசுலேருந்து இப்ப வரைக்கும் எடுத்த போட்டோவை வரிசையா காமிச்சிங்கனு வையுங்க வரிச்சளுகைக்கு நான் கேரண்டி தாறேன்.

4. படத்தில முதல்ல வர்ற அப்பா வில்லனோட பேர கருணாநிதினோ அல்லது தெட்சனா மூர்த்தினோ மாத்தணும். அந்த பையன் வில்லன் பெயரை குஞ்சாநெஞ்சன் கொலைகிரி வைக்கணும்...அப்படியே கூட இருக்கிற அல்லக்கைகள் பேரோட கடைசில 'நிதி' யை சேர்த்து விட்டுடுங்க.ஆத்தாவை ஓரளவு சாத்தப்படுத்த இது உதவும். 


5. படத்தில சத்யராஜ் பேரு 'அண்ணா'... அப்படினா விஜய் என்ன எம்ஜியாரா....? யோவ் முதல்ல அத  மாத்துங்கய்யா..

6. படத்தோட ஓபனிங் சாங்க்சை கட் பண்ணிட்டு  "அடி கோமாதா ..நீ இந்த ஊரு காக்கிற குல மாதா.." பாட்டை ரீமிக்ஸ் பண்ணி " கொடநாட்டு கோமாதா... நீ எங்க ஊரு காக்கிற குல மாதா" னு மாத்திடனும்..


7. படத்தில விஜய் ஆஸ்திரேலியவில குடி தண்ணீர் பிசினெஸ் பன்ற மாதிரி காமிக்கிறாங்க... அதை மாத்தி டாஸ்மாக் தண்ணி பிசினெஸ் பன்ற மாதிரி காமிச்சா,
த்தாவின் புகழ் உலக அளவில ரீச் ஆகங்கிறதால உடனே அனுமதி கெடச்சிடும்.
 

8. சண்டைக்காட்சிகளில அடிக்கடி டிவி பெட்டி உடையுற மாதிரி காமிக்கணும்.அது கலைஞர் கொடுத்த இலவச டிவி மாதிரி தெரியனும்..
 
9. ஆஸ்திரேலியவில சுரேஷ் ரெஸ்டாரென்ட் நடத்துவார். அங்க தயிர் சாதம் மட்டுமே போடுவதாக காண்பிக்கணும். அப்படியே அந்த தயிர் சாதத்தை அடிக்கடி ZOOOOOM பண்ணி காமிக்கணும். அதுல ரெட்டை இலை ஷேஃப்புல கறிவேப்பிலை எப்போதும் கிடக்கிற மாதிரி பாத்துக்கணும்.

இப்படியெல்லாம் மாத்தினா படம் ஓடுமானு கேக்க கூடாது. அது வேற டிபார்ட்மென்ட். இப்போதைக்கு படம் ரிலீஸ் ஆகணும்னா இப்படி ஏதாவது செஞ்சுதான் ஆகணுங்ண்ணா..


13 comments:

  1. நான் தப்பிச்சிட்டேன்டா சாமீ........இன்னும் பாக்கவே இல்லை....அந்த தியேட்டர் பக்கம் போறதையே நிறுத்திட்டேன் அவ்வ்வ்வ்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா..
      ஹா.ஹா..முடியவே முடியாது... யாம் பெற்ற தண்டனை நீங்களும் பெற வேண்டாமா.....?

      Delete
  2. தலைவா டைட்டிலுக்கு கீழே அப்படியே "TIME TO BEG" ன்னு போட்டுக்கணும்.

    நல்ல விளம்பர உத்திதான். ஆனால் பாவம் காபி அடிச்ச்சதாலே வொர்க் அவுட் ஆகலே.

    அடுத்தமுறை வேறே எதாவது முயற்சி பண்ணலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கும்மாச்சி...

      "TIME TO BEG" சரியா சொன்னீங்க.. இப்ப நெலம அப்படித்தானே இருக்கு.

      Delete
  3. செம காமெடி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. எல்லாமே செம கலக்கல். அதிலும் கலைஞர் டிவி உடைவது கலக்கல். இவை எல்லாவற்றையும் விட ஒரு எளிய வழி இருக்கிறது. பேசாமல் படத்துக்கு "தலைவி" என்று பெயர் வைத்துவிட்டால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலா...

      ஒருவேளை தலைவினு பெயர் வச்சா... அமலாபால்தான் ஹீரோ மாதிரி ஆயிட்டா என்ன பண்றது.:-)).. படத்தில அவுங்க சிபிஐ வேற..?

      Delete
  5. சரி அப்படியென்ன இந்தப்படத்தில வில்லங்கமான காட்சிகள் இருக்கு...? படம் பார்த்தவங்கள கேட்டீங்னா நாலு நாளைக்கு ரூம் போட்டு சிரிப்பாங்க. ////

    ஹா ஹா சரியா சொன்னீங்க! தடை செய்யும் அளவுக்கு மட்டுமல்ல, ஜென்ரலாவே அதுல ஒண்ணுமே இல்லீங்க..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா...

      படம் வெளிவந்தா அவுங்களே ஒத்துப்பாங்க தல...

      Delete
  6. ஹா ஹா....

    விஜய் படம் பிரிவியு பார்த்திருப்பார்... மொக்கையா இருந்திருக்கும்... உடனே இப்படி ஒரு கதை கிளப்பி விட்டு ரிலீஸ் தள்ளிப்போட்டு... நடத்தாங்க நாடகத்தை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரகாஷ்...

      ஆனா ஒரு விஷயம் பிரகாஷ்... என்னதான் பில்டப் கொடுத்தாலும் படத்தில சங்கதி இல்லனா மண்ணை கவ்வ வேண்டியதுதான்... ஒருவேளை படத்தை ரீஎடிடிங் பண்ணி இரண்டு மணிநேர படமா மாத்தினா ஏதோ கொஞ்சம் சுமாரா ஓட வாய்ப்பிருக்கு.

      Delete
  7. // 'நம்பர் ஒன்' போறதா பொய் சொல்லிட்டு சுவரேறி குதிச்சி தப்பிச்சி போகமாட்டாங்கனு என்னய்யா நிச்சயம்.// ஹா ஹா ஹா என்னா நக்கலு

    //அதுல ரெட்டை இலை ஷேஃப்புல கறிவேப்பிலை எப்போதும் கிடக்கிற மாதிரி பாத்துக்கணும். // செம ஐடியா

    ReplyDelete