(எந்திரனையும் விஸ்வரூபத்தையும் ஒண்ணா கலக்கி,நடுவுல கொஞ்சம் தசாவரதத்தை மிக்ஸ் பண்ணி, சைடுல லைட்டா அந்நியனை சொருகி, மேல அப்படியே ரமணாவை தூவி, புதுசா படம் எடுப்பதைப் பற்றி தீவிர சிந்தனையில் இளைய தளபதி.) |
முதல்லே சொல்லிடுறேன் விஜய்க்கும் நமக்கும் எந்த வாய்க்கா தகராறும் கிடையாது. படம் வெளிவந்து அடுத்த நாளே இணையத்தில் ரிலீஸ் ஆகும் இன்றைய சூழலில், துப்பாக்கியை இரண்டுமுறை தியேட்டரில் பார்த்தவன். ஒரு விதத்தில் நானும் விஜய் ரசிகன்தான். அவரின் நல்ல படங்களை மனதார பாராட்டும் ரசிகன்...
ஆக-15 தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தேன். ஆனால் 23ஆம் தேதி என எங்கேயோ படித்தேன். இப்போ விஜய் உண்ணாவிரதமெல்லாம் வேற இருக்க போறாராம்.(அப்பாடா...இத வச்சி இன்னும் அஞ்சு பதிவு தேத்திடனும் ) சரி..நம்ம விசயத்துக்கு வருவோம்.
தலைவா படத்தை பார்த்தவர்கள் எல்லோருமே சமூக வலைத்தளங்களில் இயக்குனர் விஜய்யையும், நடிகர் விஜய்யையும் துவைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் இயக்குனர் சறுக்கி இருக்கலாம்.. ஹீரோ சொதப்பியிருக்கலாம்... ஆனால் தயாரிப்பாளர்..?
அவரைப்பத்தி யாராவது யோசிச்சிப் பாத்தீங்களாயா...?
பாவம்.. இவங்க அடிச்ச கூத்துல அந்த மனுஷன் எப்படி இருக்கிறாரோனு நினைக்கும் போதுதான், அவரின் அறிக்கை வந்திருக்கு.தலைவா படம் வெளிவரவில்லை என்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என அறிக்கை விட்டுருக்கிறார்.ஆனால் அப்படி ஆவதற்கு வாய்ப்பில்லை.விஜய் சம்பளத்தில் பாதி திருப்பிக் கொடுத்தாலே போதும்.ஓரளவு சரிகட்டிவிடுவார்.
அதேவேளையில், தமிழ் நாட்டில் படம் ரிலீஸ் ஆகவில்லையே தவிர உலகம் முழுவதும் ரிலீசாகி படம் பிய்த்துக்கொண்டு 'ஓடு'கிறது அல்லவா...!
கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் தலைவாவின் வசூலைப் பற்றி பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. முகநூளில் இதற்கென்று தனி பேஜ் உருவாக்கி நூல் நூலாக விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதாவது பரவாயில்லீங்ண்ணா. நம்ம இளைய தளபதி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் பாருங்க....
அதாவது ''நான் நடித்து எந்த படம் வந்தாலும்,அது நன்றாக வந்திருக்கிறது என்று நானே சொல்வதில்லை. ஆனால், தலைவா படத்தை மற்ற நாடுகளில் பார்த்தவர்கள் கூறும் தகவல்கள் சந்தோஷத்தை அளிப்பதாக உள்ளது.'' (ஆய்...ஏ..ச்சூ...சிரிக்கப்படாது..என்ன சின்னப்புள்ளத்தனமா...)
ஆத்தா கோபத்துக்கு இதுதான் காரணமா..!? |
ஆக்சுவலா என்ன நடந்ததுனா......
(அலைபேசியில்...)
ஒரு ரசிகர்: தியேட்டர்ல உட்கார முடியிலீங்ண்ணா. (செம கடி)
விஜய்: அப்போ என் டான்சை பாத்து தியேட்டரே எழுந்து ஆடியிருக்குனு சொல்றீங்க..! தேங் யூ..தேங் யூ.
ஒரு ரசிகர்: மூணு மணிநேரம் போனதே தெரியிலீங்ண்ணா ( தூங்கிட்டேன்)
விஜய்: எனக்கு தெரியும். படம் செம விருவிருப்பா இருக்கும்னு... ஆங்..ரொம்ப நன்றிங்ண்ணா...
ஒரு ரசிகர்: பாப்கார்ன், பப்ஸ், டீ, காபி சேல்ஸ் அபாரம் ( மொத்த கூட்டமும் வெளியதான நின்னது)
விஜய்: புரியுது... புரியுது... இதுவரை எந்தப்படத்துக்கும் வராத கூட்டம்னு சொல்றீங்க... தேங்ஸ்ங்ண்ணா
ஒரு ரசிகர்: சோல்டரை குலுக்கி ஒரு டான்ஸ் ஸ்டெப் வரும் பாருங்க..செம கிளாப்ஸ்(சாம் ஆண்டர்சன்..)
விஜய்: என்னை ரொம்ப புகழாதீங்க... ஆக்சுவலா அது நானே கொரியோகிராஃபி பண்ணினது. இது வரையில நான் போட்ட ஸ்டெப்ஸ்ல இதுதான் பெஸ்ட்...
ஒரு ரசிகர்: இந்த படம் நாயகன்,பாட்சா ,தேவர் மகன்,பம்பாய் , தளபதி....
விஜய்: போதும்..போதும்...எனாஃப்...எனாஃப். இதுக்குமேல ஒரு வார்த்தை சொல்லாதிங்க ...
ஒரு ரசிகர்: இல்லீங்ண்ணா..அது வந்து...
விஜய்: வேணாம்..வேணாம்.இந்தப் படத்தையெல்லாம் விட தலைவா சூப்பரா இருக்குனு சொல்லவாறீங்க. எனக்கு புரிஞ்சிடுச்சி.. போதும்...போதும்...
ஒரு ரசிகர்: ங்ண்ணா.. போனை வச்சிடீங்களா...அடச்சே...அதையெல்லாம் எப்படி அட்டக்காப்பி அடிக்க மனசு வந்ததுனு கேக்கலாம்னு பாத்தேன்.அதுக்குள்ளே வச்சிட்டாரே..
- இதுதாங்க நடந்தது...!
தமிழ்நாட்டின் 'தலையாயப் பிரச்சனை'யில் முதல்வர் தலையிட்டு தீர்த்து வைக்கும்படி வேண்டும் 'எதிர்கால இந்தியா' |
சரி அடுத்த முக்கியமான மேட்டருக்கு வருவோம்.வெளிநாடுகளில் எந்திரன் வசூலையே தலைவா மிஞ்சி -விட்டது என தகவல் வருகிறதே உண்மையா... ? அது உண்மைதாங்கண்ணா(அணில் ரசிகர்களே சந்தோசமா.. ). ஆனால் அதைவைத்து படத்துக்கு பில்டப் கொடுக்கிறது கொஞ்சம் ஓவர்ங்ண்ணா.. அது எப்படினு சொல்றேன்..
இது தலைவா படத்திற்காக சொல்லவில்லை.. பொதுவாக வெளிநாடுகளில் வரும் வசூலை வைத்து எந்தப் படத்தின் வெற்றியையும் தீர்மானிக்க முடியாது. ஏன்னா, எந்த பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆனாலும் முதல் வாரக்காட்சிகள் ரிசர்வேசனில் ஹவுஸ்ஃபுல்லாகி விடும். பொதுவாக வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு என்டர்டெயின்மென்ட் என்பதே இது போன்ற புதுப்படங்கள் வரும்போதுதான். அந்தப்படம் படுமொக்கை என்றாலும் பிளாக்பஸ்டர் மூவி என்றாலும் எல்லோரும் ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம்.
குறிப்பாக சிங்கையை மட்டும் எடுத்துக்கொண்டால், ஒரு டிக்கெட்டின் விலை $15. இந்திய ரூபாயின் மதிப்பு 700. அங்கிருந்து பார்த்தால் இது கொஞ்சம் அதிகமாக தெரியும். ஆனால் இங்கு சலூனில் முடிவெட்டிக்கொள்ளும் பணம். மதுரை முத்து,ரோபோ சங்கர் வகையறாக்களை அழைத்து வந்து நடத்தும் கலை நிகழ்ச்சிக்கு $100, $150 என டிக்கெட் இருக்கும்போது, அதையே வாங்கிப் பார்க்கும் நம் மக்களுக்கு 15 டாலர் ஒன்றும் பெரிய விசயமில்லை.
தலைவா படம் ரிசர்வேசன் இருக்கிறதா என காலையில் விசாரிக்கும் போது, இன்னும் முடிவாகவில்லை என சொன்னார்கள். மாலை போய் கேட்டபோது நான்கு நாட்களுக்கு ஹவுஸ்புல். சிங்கையில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அப்படித்தான் இருந்திருக்கும். அதற்க்கு காரணம் அடுத்த நான்கு நாட்கள் விடுமுறை.
படம் புதன்கிழமை நைட்டே இங்க ரிலீஸ். நைட்டு 8 மணியிலிருந்து 10மணி,12 மணி, 3 மணி என தொடர்ந்து ஷோ. அடுத்தநாள் ஹரிராயா, அதற்கடுத்து நேசனல் டே ,சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. விடுமுறை தினங்களில் இரவு விடிய விடிய காட்சி உண்டு. அப்படியென்றால் நான்கு நாட்களில் எத்தனைக் காட்சி ஓட்டியிருப்பார்கள் என கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
இது தலைவா படத்திற்காக சொல்லவில்லை.. பொதுவாக வெளிநாடுகளில் வரும் வசூலை வைத்து எந்தப் படத்தின் வெற்றியையும் தீர்மானிக்க முடியாது. ஏன்னா, எந்த பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆனாலும் முதல் வாரக்காட்சிகள் ரிசர்வேசனில் ஹவுஸ்ஃபுல்லாகி விடும். பொதுவாக வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு என்டர்டெயின்மென்ட் என்பதே இது போன்ற புதுப்படங்கள் வரும்போதுதான். அந்தப்படம் படுமொக்கை என்றாலும் பிளாக்பஸ்டர் மூவி என்றாலும் எல்லோரும் ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம்.
குறிப்பாக சிங்கையை மட்டும் எடுத்துக்கொண்டால், ஒரு டிக்கெட்டின் விலை $15. இந்திய ரூபாயின் மதிப்பு 700. அங்கிருந்து பார்த்தால் இது கொஞ்சம் அதிகமாக தெரியும். ஆனால் இங்கு சலூனில் முடிவெட்டிக்கொள்ளும் பணம். மதுரை முத்து,ரோபோ சங்கர் வகையறாக்களை அழைத்து வந்து நடத்தும் கலை நிகழ்ச்சிக்கு $100, $150 என டிக்கெட் இருக்கும்போது, அதையே வாங்கிப் பார்க்கும் நம் மக்களுக்கு 15 டாலர் ஒன்றும் பெரிய விசயமில்லை.
தலைவா படம் ரிசர்வேசன் இருக்கிறதா என காலையில் விசாரிக்கும் போது, இன்னும் முடிவாகவில்லை என சொன்னார்கள். மாலை போய் கேட்டபோது நான்கு நாட்களுக்கு ஹவுஸ்புல். சிங்கையில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அப்படித்தான் இருந்திருக்கும். அதற்க்கு காரணம் அடுத்த நான்கு நாட்கள் விடுமுறை.
படம் புதன்கிழமை நைட்டே இங்க ரிலீஸ். நைட்டு 8 மணியிலிருந்து 10மணி,12 மணி, 3 மணி என தொடர்ந்து ஷோ. அடுத்தநாள் ஹரிராயா, அதற்கடுத்து நேசனல் டே ,சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. விடுமுறை தினங்களில் இரவு விடிய விடிய காட்சி உண்டு. அப்படியென்றால் நான்கு நாட்களில் எத்தனைக் காட்சி ஓட்டியிருப்பார்கள் என கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
TOP 5 All Time Kollywood Opening Weekend in Malaysia & Singapore..
1.Thalaivaa -4.2 crore
2.Endhiran -4 crore
3.Singam 2 -3.8 crore
4.Thuppaki -3.5 crore
5.Nanban -3 crore
இப்படியொரு தகவலை முகநூளில் Vijai Fans Club வெளியிட்டிருந்தார்கள். இது உண்மைதான்.முதல் நான்கு நாட்களுக்கான வசூல் இதுவாக இருக்கலாம். ஆனால் எந்திரன் வசூலை மிஞ்சிவிட்டதுன்னு சொல்றது கொஞ்சம் ஓவருங்ண்ணா... அது எப்படினா....
.
இப்போ ஒரு ஷோவை எடுத்துக்கிங்க...
மொத்த 1200 சீட்டுன்னு வச்சிக்குங்க... 1200X $15 = $18,000. அதாவது எந்திரன் வெளியான போது இந்திய ரூபாய் மதிப்பு படி $18,000 X 35 =₹6,30,000 ( ஒரு ஷோ வசூல்)
அதே தியேட்டர்ல தலைவா படத்துக்கு இன்றைய இந்திய ரூபாய் மதிப்பு படி $18000 X 48 = ₹8,64,000 (ஒரு ஷோ வசூல்)
.
இப்போ ஒரு ஷோவை எடுத்துக்கிங்க...
மொத்த 1200 சீட்டுன்னு வச்சிக்குங்க... 1200X $15 = $18,000. அதாவது எந்திரன் வெளியான போது இந்திய ரூபாய் மதிப்பு படி $18,000 X 35 =₹6,30,000 ( ஒரு ஷோ வசூல்)
அதே தியேட்டர்ல தலைவா படத்துக்கு இன்றைய இந்திய ரூபாய் மதிப்பு படி $18000 X 48 = ₹8,64,000 (ஒரு ஷோ வசூல்)
ஆக எந்திரனையே தலைவா முந்திவிட்டதுனு சொன்னா நீங்க நம்பலாம். ஆனா நாங்க நம்பமாட்டோங்ண்ணா.. அதே மாதிரிதான் அமெரிக்காவிலும். எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உலகம் முழுவதும் வசூல் இப்படித்தான் இருக்கும். இதில் மாற்றமிருக்காது.ஆனால் இந்திய ரூபாயில் கணக்கிடும்போது அன்றைய Exchange rate -க்கு அதிகமாகக் காண்பிக்கும்.
இது பொதுவாக சொல்லப்பட்ட விஷயம்.. வெளிநாடுகளின் புதிதாக வெளிவரும் படங்களின் ஓபனிங் வசூல் பழைய படங்களின் சாதனைகளை முறியடிப்பது இப்படித்தான்.ஆனால் சிவாஜியும் எந்திரனும் தசாவதாரமும் ஐம்பது நாட்கள் இங்கே வெற்றிகரமாக ஓடியது.அந்த சாதனையை எந்தப்படம் முறியடிக்கும்..?
கார்த்திக் என்கிற நண்பர் பின்னூட்டத்தில் அளித்த லிங்க்லிருந்து பெறப்பட்டது இந்த தகவல். கடந்த ஆறு ஆண்டுகளாக மலேசியாவின் டாப் 20 படங்களின் வசூல் இது. (MYR = Malaysian Ringgit ).
(நன்றி - ரசிகன் karthik)
இது தலைவா ரிலீசுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் என்றாலும் துப்பாக்கியை விடவா வசூல் மழை பொழிந்துவிடப்போகிறது தலைவா..? இதில எந்திரனை தலைவா மிஞ்சிவிட்டதாக பில்டப் வேற...! அசைக்க முடியாத இடத்தில் அல்லவா இருக்கிறது எந்திரன்..!
இது தலைவா ரிலீசுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் என்றாலும் துப்பாக்கியை விடவா வசூல் மழை பொழிந்துவிடப்போகிறது தலைவா..? இதில எந்திரனை தலைவா மிஞ்சிவிட்டதாக பில்டப் வேற...! அசைக்க முடியாத இடத்தில் அல்லவா இருக்கிறது எந்திரன்..!
கருத்தா எழுதி இருக்கீங்க.
ReplyDeleteஅனானியா முதல் கருத்திட்டதற்கு நன்றி..
Deleteஎந்திரனும் தசாவதாரமும் ஐம்பது நாட்கள் இங்கே வெற்றிகரமாக ஓடியது.அந்த சாதனையை எந்தப்படம் முறியடிக்கும்..?.. 5 nal odi irukkum house full innum oru 5 nlla teyttra vittu eduthida poranga. appo enga entiran record break panna pokuthu. good post
ReplyDeleteநன்றி..mahesh
Deleteஉண்மைதாங்க... இந்த வாரம் எல்லா ஷோவும் காத்து வாங்குதாம்..
கரீட்டா சொல்லி இருக்கீங்கண்ணா.
ReplyDeleteநன்றி..கும்மாச்சி
Deleteஉண்மையை போட்டு உடைத்துள்ளீர்கள்...
ReplyDeleteவிஜய் ரசிகர்கள் சண்டைக்கு வரப் போகிறார்கள்...
நன்றி வெற்றிவேல்....
Deleteஏற்கனவே தலைவா விமர்சனத்துக்கு 'மிக நாகரீகமான' கமெண்டை போட்டாங்க பாஸ்... கமெண்ட் மாடரேசன் இருக்கு...அதனால தப்பிச்சேன்,
exchange rate பற்றிய நல்ல தகவல்
ReplyDeleteநன்றி ரூபக் ராம்...
Deleteகம்மெண்டு மோடேரஷன் இருந்தாலும் அதை பிரசுரித்து அவர்களின் நாகரீகத்தை தோலுரித்துக் காண்பியுங்கள்.
ReplyDeleteஅனானிகள் வந்து அச்சிலேற்றமுடியாத சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு போகிறார்கள். பெருந்தன்மையுடன்(!?) அதை தவிர்த்துவிடுகிறேன்.
DeleteEndhiran 1st weekend Malaysia gross - $1.09Mill (5C)
ReplyDeleteThupakki 1st weekend $0.8M (4.3C) & at end of the 1st weekend $1.3Mil (film released on Tuesday)
Singam2 1st weekend -around $0.8M (4.8C, no official report)
Thalaivaa 1st weekend - around $0.7M (4.2C, no official )
Malaysia BO - Top 20
ReplyDeletehttp://www.glintcinemas.com/2012/12/top-20-all-time-tamil-grosser-in.html?m=1
Thanks for your info bro.....
Deleteநடிகர் விஜய்யும், இயக்குனர் விஜய்யும் என்னாவது பண்ணட்டும்! ஆனா நீங்க சொன்ன மாதிரி தயாரிப்பாளர் பாவம்யா!! விஜய்தான் அவரைக் காப்பாற்றணும்!! ( சம்பளத்தை மீள தந்து )
ReplyDeleteகரெக்டுதான் பாஸ்... பட பட்ஜெட்ல பாதி விஜய் சம்பளமாக இருக்கும். ஒருவேளை நஷ்டமானால் அதை விஜய் தான் ஈடு செய்யவேண்டும்( இவரு சொந்த பில்டப்புக்கு அடுத்தவன் காசுதான் கெடச்சுதா..)...அட்லீஸ்ட் அடுத்து ஒரு நல்ல படம்(!!!) அவருக்கு நடித்துக் கொடுக்கவேண்டும்
Deleteநண்பனைவிட சுறா கலெக்ஷன் அதிகம்
ReplyDeleteஇருக்கலாம் ..ஏற்கனவே 3 இடியட்ஸ் வந்து சக்கைப் போடு போட்டதால் நண்பனுக்கு சரியான ஓபனிங் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் விஸ்வருபம் எப்படி விட்டுப்போனது எனத் தெரியவில்லை.
Deleteவிஸ்வரூபம் மலேசியாவில் முதலில் தடை செய்யப்பட்டு ஒரு மாதத்தின் பின்பு தான் திரையிட அனுமதிக்கப்பட்டது அதற்குள் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே பார்த்துவிட்டார்கள். விஸ்வரூபத்தினுடைய மொத்த மலேசியா வசூல் MYR 1,016,010
Deleteஎனெக்கென்னவோ தலைவா"ன்னு தலைப்பு வச்சதுதான் சம்பந்தப்பட்டவங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஎனக்கென்னவோ அது பிரச்சனையா படல நண்பா... படத்திற்கு 'U ' சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க.. ஜெயா பிரச்சனை பண்ணனும்னு நெனச்சிருந்தா இங்கேயிருந்தே பண்ணியிருப்பாங்க. வரிவிலக்கு கிடைக்க வில்லையென்பது ஒரு பெரிய விசயமே கிடையாது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு கூடத்தான் கிடைக்கவில்லை. ஆனால் படம் ஹிட் என்பதால் அது ஒரு பிரச்சனையாக தோன்றவில்லை.
Deleteஆனால் தலைவாவில், தயாரிப்பு தரப்பு வேறு மாதிரியா சொல்லுது. இதுவரை ஜெயாவையோ தமிழக அரசையோ எந்தக் குற்றமும் இவர்கள் சொல்லவில்லை. தியேட்டருக்கு குண்டுவைத்துவிடுவதாக யாரோ (செவ்வாய் கிரகத்திருந்து இருக்குமோ) போனில் மிரட்டினார்களாம்.. அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிட மறுக்கிறார்களாம். அதை முதல்வர் தலையிட்டு சரி செய்ய வேண்டுமாம். அவருக்கு இதுதான் வேலையா..?
ஏதோ விளம்பரத்துக்காக தெரியாம புலிவாலை புடிச்சிடாணுவ. விடுறதா புடிக்கிறதா என தெரியாம குழம்பிப் போயி கிடக்குறாங்க.
ரசிகர், டாகுடரோட உரையாடல் செம.....
ReplyDeleteTIME TO LEAD கேப்சன் ரிமூவ் பண்ண பிறகு தான் படம் ரீலீஸ் ஆகியிருக்கு. இதுவே அரசியல் தலையீடு இருந்ததை தெளிவு படுத்துது. ஆ ஊ னா பப்ளிசிட்டிக்காக தான் இப்படி நடக்குதுனு சொல்லிக்கிட்டு வந்துடுவானுங்க. அட போங்கய்யா
ReplyDelete//TIME TO LEAD கேப்சன் ரிமூவ் பண்ண பிறகு தான் படம் ரீலீஸ் ஆகியிருக்கு. இதுவே அரசியல் தலையீடு இருந்ததை தெளிவு படுத்துது.//
ReplyDeleteதம்பி TIME TO LEAD தான் பிரச்சனைன்னு உங்களுக்கு யார் சொன்னா...? தமிழக அரசிடமிருந்து ஏதாவது அப்படி அறிக்கை வந்ததா.... அல்லது போலிஸ் தரப்பிலிருந்து வந்ததா... இவங்களே TIME TO LEAD வச்சிபாங்கலாம்...அப்புறம் நீக்கியாச்சினு சொல்லுவாங்களாம்...
நீங்கள் சொல்றத பாத்தா கம்புயூடர்ல வைரஸ் வந்தது அதை தூக்கின உடனையே சரியாச்சினு சொல்ற மாதிரில இருக்கு.
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு நேரிடையாகவே தடை என அறிவித்தது. அதனால் திரையுலகும் மக்களும் கமலுக்கு சப்போர்ட்டா வந்தாங்க... இந்தப் படத்திற்கு தமிழக அரசு எங்கே தடை விதித்தது..?
கடைசியா ஒன்னு கேக்குறேன்.... படத்தை வெளியிட்டா பாம் வைக்கப் போவதாக ஒரு அமைப்பு மிரட்டல் விட்டது என எஸ்ஏசி சொன்னாரே...? அந்த அமைப்பு இப்போ எங்கே...? அவர்களுக்கும் இந்த TIME TO LEAD..தான் பிரச்சனையா..?