இது என்ன தமிழ்த் திரையுலகத்துக்கு பேய் வருடமா?.அம்மையாரின் இலவச அறிவிப்புகள் போல் வாரத்திற்கு ஓன்று ரிலீசாகிறது. சில வாரங்களுக்கு முன்பு அரண்மனை, யாமிருக்க பயமேன் வந்து மிரட்டியது. பிறகு, 'இருக்கு ஆனா இல்ல ' வந்து கிச்சு கிச்சு மூட்டியது. சென்ற வாரம் 'ரா' பார்த்தேன். அதற்கு முதல் வாரம் 'ஆ..'. நேற்று பிசாசு. நைட் பாத்ரூம் எழுந்து போகக் கூட அச்சமாக இருக்கிறது. ஜன்னல் கதவு அசைந்தாலே மனது கலவரமாகிறது.
பொதுவாக ஹாரர் படங்களில் உள்ள பிளஸ் என்னவென்றால் விறுவிறுப்பான திரைக்கதைக்கு நிறைய யோசிக்க வேண்டியதில்லை. தானாகவே அமைந்துவிடும். எந்த நேரத்தில் என்ன நிகழும் என்கிற சிறு படபடப்பே மொக்கைப் படத்தையும் சுவாரஸ்யமாக்கிவிடும்.
அதிலும் சொதப்பிய படங்களும் இருக்கிறது . இருக்கு ஆனா இல்ல, ரா அந்த வகைப் படங்களே. இந்த வருடத்தின் கடைசி ஹாரர் படமான பிசாசு எப்படி இருக்கிறது..?
மணிரத்னம் , ஷங்கர் படங்களின் ஒவ்வொரு காட்சிகளிலும் அவர்களது தனித்துவமான முத்திரை தெரியும். மிஷ்கினும் அவர்கள் வரிசையில் இணையக் கூடிய ஆளுமைதான். சம கால இயக்குனர்களில் தனித்து தெரிபவர். எங்கிருந்து சுடுகிறார் எனத் தெரியாது. ஆனால் விஷுவல் மீடியாவான சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் திறமையாக கையாளக் கூடிய விற்பன்னர். அவரது வழக்கமான குறியீடுகளுடன் வந்திருக் கிறது பிசாசு.
ரொம்ப சிம்பிளான கதைதான்.
வயலின் கலைஞரான சித்தார்த் (புதுமுகம் நாகா), சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை காப்பாற்ற போராடுகிறார். துரதிஷ்டவசமாக அவள் இறந்து விடுகிறாள்.
இறந்துபோன அப்பெண்ணின் ஆவி சித்தார்த் மீது காதல் கொண்டு அவர் வீட்டில் மையம் கொள்கிறது. அங்கு அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது.
ஆரம்பத்தில் அவனை அழிக்க வந்த கெட்ட ஆத்மா என நினைத்திருக்கையில் கடைசியில் அவனைக் காக்க வந்த நல்ல ஆத்மா என தெரியவருகிறது. அந்த ஆவி அவனை விட்டுச் செல்ல வேண்டுமானால் அவளை காரில் இடித்து கொன்றவனை கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தரவேண்டும் என முடிவு செய்கிறார்கள் சித்தார்த்தும் அவரது நண்பர்களும் .
இதற்கிடையில், அப்பெண்ணின் தந்தையான ராதாரவியும் காரில் இடித்தவனை பழி தீர்க்க துடிக்கிறார். இவர்கள் எல்லோரும் அவனை கண்டுபிடித்தார்களா என்பதே மீதிப்படம்.
அந்த Color blind மேட்டர் எங்கிருந்து பிடித்தார் எனத் தெரியவில்லை. ஆனால் அதை கிளைமாக்ஸ் ட்விஸ்ட்-ல் வைத்திருப்பது தமிழ் சினிமாவில் புதிது.
ஹீரோ நாகா ஒரு புரடியூஸரின் மகன் என மிஸ்கின் ஒரு பேட்டியில் சொன்னதாக ஞாபகம். இந்தக் கதைக்கு சுமாரான ஃபேஸ் இருந்தால் போதும் என நினைத்திருக்கிறார். ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறார். அதிர்ச்சியான காட்சிகளில் கண்களில் தெரியும் பயம் பர்ஃபெக்ட். வாய்ஸ் மாடுலேஷன் மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. அது என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல், ஒத்தக் கண்ணை மறைத்துக் கொண்டு...? மிஸ்கினின் எல்லா படங்களிலும் ஒருவர் இந்த வகை சிகை அலங்காரத்துடன் வருகிறாரே.
புதுமுக நாயகி கேரளத்து பைங்கிளி பிரயுகா செம கியூட் . ஆரம்பக் காட்சிகளோடு அவர் தரிசனத்திற்கு தடா போட்ட இயக்குனர் மிஸ்கினுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும். ராதாரவி சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிறைகிறார். தன் மகளை பேயாக பார்க்கும் அந்தத் தருணத்தில் மண்டியிட்டு தவழ்ந்துக் கதறும் அந்த ஒரு காட்சியே போதும்.
பாசத்துடன் தனது தந்தையான ராதாரவியின் கன்னங்களை தடவும் அந்தப் பிசாசு, 'உன்னைக் கொன்றவனை கொல்லாமல் விடமாட்டேன்' என்று ராதாரவி சொன்னவுடன் கோபத்துடன் கைகளை இழுத்துக்கொள்ளும். அந்த ஒரு சீனிலே யார் கொலையாளி என்பதை குறிப்பாக சொல்கிறார் இயக்குனர்.
படத்தில் கிளிசே வகை குறியீடுகள் ஆங்காங்கே வந்து சலிப்படைய வைத்தாலும் மறைமுகமாக அவர் சொல்லும் சில நல்ல மெசேஜ்கள் வரவேற்கப்படவேண்டியவை.குறிப்பாக செல்போனை நோண்டிக்கொண்டே கார் ஓட்டக்கூடாது. அதுதானே அவ்வளவு பெரிய பிரளயத்துக்கு காரணமாக அமைந்தது.
படத்தில் கிளிசே வகை குறியீடுகள் ஆங்காங்கே வந்து சலிப்படைய வைத்தாலும் மறைமுகமாக அவர் சொல்லும் சில நல்ல மெசேஜ்கள் வரவேற்கப்படவேண்டியவை.குறிப்பாக செல்போனை நோண்டிக்கொண்டே கார் ஓட்டக்கூடாது. அதுதானே அவ்வளவு பெரிய பிரளயத்துக்கு காரணமாக அமைந்தது.
படத்தின் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கிறது. மணிரத்தினத்துடன் இணையும் போது மட்டும் ஒளிப்பதிவா- ளர்கள் தனித்து தெரிவார்கள். அதே மேஜிக் மிஸ்கினுடனும் ஒர்க்அவுட் ஆகிறது. முக்கியமாக கேமரா கோணங்கள் உலகத் தரம். சபாஷ் ரவி ராய்.
இந்தப் படத்திற்கு இளையராஜா தேவையில்லைதான். ஆனால் ராஜாவிடம் கேட்டு வாங்குவது போல் அரோல் குரேலியிடம் மிரட்டி வாங்கியிருக்கிறார் மிஸ்கின். நிறைய இடங்களில் மௌனமாக இருந்தாலும் தேவையான இடங்களில் பின்னணி இசை மிரட்டுகிறது . குறிப்பாக 'போகும் பாதை தூரமில்லை' பாடலில் வரும் வயலில் இசை செம்ம..!
பொதுவாக பேய் என்றால் நள்ளிரவு , அமாவாசை, நிறைந்த பௌர்ணமி இப்படிப்பட்ட நேரங்களில்தான் உலாவரும் என்கிற தமிழ் சினிமாவின் விதியை மாற்றி எழுதியிருக்கிறார் மிஸ்கின். தவிர, பேயை விஷுவலாக காட்ட அவர் எடுத்திடுக்கும் சிரத்தையும் அதன் பெர்பெக்ஸனும் பாராட்டப்படவேண்டியது. முதல்முறையாக அந்த பேய் உருவத்தை காணும்போது உடம்பே சிலிர்க்கிறது. பிறகு அந்தரங்கத்தில் பறந்து வருவது எல்லாம் புளித்துப் போன பழைய ஐடியாதான்.
குறைவான கேரக்டர்கள். யாரிடமும் மிகை நடிப்பு இல்லை. பேயோட்ட வரும் அந்த பெண், நாகாவின் அம்மாவாக வரும் கல்யாணி, நாகாவின் நண்பர்கள், ஆட்டோகாரர் உட்பட எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் ஆறு நிமிடங்கள் ஓடும் குறும்படத்திலே இப்படிப்பட்ட கதையை கலை நுணுக்கத்துடன் நேர்த்தியாக சொல்கிறார்கள். அதை இரண்டு மணி நேரத்திற்கு நீட்டி முழக்கியிருக்கிறார் இயக்குனர். அதனால் ஏனோ ஒரு குறும்படத்தை பார்த்த எஃபெக்ட் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. டெக்னிகல் சமாச்சாரங்களைத் தவிர்த்து படத்திற்கான செலவு மிகக் குறைவுதான்.
மற்றபடி வழக்கமான தமிழ்ப் பேய் படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டுத்தான் நிற்கிறது பிசாசு. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.
ப்ளஸ் | மைனஸ் |
மிஸ்கின் இயக்கம் . | குறும்பட எஃபெக்ட் . |
இசை , ' போகும் பாதை தூரமில்லை ' பாடல் . | புளித்துப்போன குறியீடுகள். |
ராதாரவி நடிப்பு . | |
ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ். |
அருமையான விமர்சனம்...
ReplyDeleteபடம் பார்க்க வேண்டும்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே
Deleteம்........பார்ப்போம்.
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி yoga.s
Deleteகுழந்தைகளுடன் செல்லலாமா...?
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி DD .நிச்சயம் செல்லலாம். உடன் பெற்றோர்கள் இருப்பது நல்லது :-)
Deleteநல்ல விமர்சனம். பார்க்க நினைத்திருக்கும் ஒரு படம்.
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்..
Delete