Monday, 2 February 2015

இசை-விமர்சனம்

சை என்று google-லில் தட்டினால் நாயகனும் நாயகியும் பரவசநிலையில் இருக்கும் படங்கள் 'ஏ'ராளமாக வருகிறது. இது வழக்கமான S.J.சூர்யா படம் என நினைத்திருக்கையில், நண்பர்களின் விமரிசனங்கள் வேறு மாதிரியாக இருந்தது.சீனுவோ ஒருபடி மேலே சென்று இப்படியொரு படம் பார்த்து நீண்ட நாட்களாயிற்று என எழுதியிருந்தார். எப்படியாகினும் படத்தை பார்த்து விடுவது என்று கம்பெனி முடிவு செய்து விட்டது.

" வெற்றி ஒவ்வொரு மனிதனும் வேண்டி பெற இருக்கும் வரப்பிரசாதம். அதற்காக தாய், தந்தை, மனைவி, மக்கள் என அனைத்தையும் மனிதன் தூக்கி எறிய தயாராகிறான். ஏன் சிலநேரம் தன்னையே அந்த வெற்றிக்காக இழக்கத் தயாராகிறான். இப்படி தன்னையே இழந்து பெற்ற வெற்றியை இன்னொருவன் தட்டிப்பறித்து செல்லும் போது எவ்வளவு வலியாக இருக்கும்...?  அந்த வலிக்கு எந்த மருத்துவனும் மருந்து கொடுக்க முடியாது. எந்த மருந்து கடையிலும் இதற்கு மருந்து கிடையாது. தாமே அந்த வலியை அனுபவித்து ஜீரணித்து  சந்தோசமாக வாழவேண்டும். ஒரு வகையில் பார்த்தால் இது வலியல்ல வழி. இன்னொருவர் நமக்கு விட்டுக்கொடுத்த வலியை நாம் இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கிறோம். இப்படித்தான் நம் முன்னோர்கள் வெற்றிகளையும் தோல்விகளையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்..".

விமரிசனம் எழுத வந்தவன் தத்துவம் பேசுறான்னு பாக்குறீங்களா.. இது படத்தின் டைட்டிலில் S.J.சூர்யா கக்கின வாழ்க்கைத் தத்துவம். அதோட விடல... அன்பே ஆருயிர் போல கதையையும் சொல்லிவிடுகிறார்.

மேலே சொன்ன தத்துவத்தின் தொடர்ச்சியாக, ' இசை உலகத்தை, இசை சாம்ராஜ்ஜியத்தை 30 வருடங்கள் கட்டி ஆண்ட 'இசைவேந்தன்' வெற்றிச்செல்வனின்(சத்யராஜ் ) இடத்தை புதிதாக வந்த இசையமைப்பாளர் ஏ.கே.சிவா (S.J.சூர்யா) இரண்டே வருடத்தில் தட்டிப் பறித்து விடுகிறார். தான் இழந்த இடம் தனக்கு மீண்டும் வேண்டும் என்பதற்காக தவறான பாதையை வெற்றிச்செல்வன் தன் கையில் எடுத்ததன் மூலமாக என்னென்ன நிகழ்ந்தது என்கிற கற்பனை வடிவமே இந்தப் படத்தின் கதை.." என முடிக்கிறார். கடைசியில் சொன்னதை கவனமாகக் கேட்கவும். "கற்பனை வடிவமே..!". இதைக் கவனிக்காமல் விட்டவர்கள், படத்தின் இறுதியில் 'அஆ' படத்தின் இயக்குனர் S.J.சூர்யா உருட்டி வாயில் வைத்த அரை கிலோ அல்வாவை ஜீரணிப்பது கடினம்.

யார் கண்டது. பின்நவீனத்துவ இலக்கியம் போல இதை பிற்காலங்களில் திரைப்படங்களின் பின் நவீனத்துவ வடிவம் என்று கூட சொல்வார்கள். KTVI -ல் பார்த்திபன் படத்தின் முடிவை பார்வையாளர்களாகிய நம் கையில் கொடுத்திருந்தார். இசை படத்தில் இதுதான் முடிவு என யூகித்தால்,கடைசியில் அது முடிவல்ல என்கிறார்கள். ஒருவேளை அதுவா இருக்குமோ என்றால் அதுவும் இல்லை என்கிறார்கள். பின்ன என்னதான்யா சொல்ல வருகிறீர்கள் என்றால், ' யோவ்..இது படமே இல்லய்யா..' என்கிறார்கள். அதனால்தான் என்னவோ படத்தின் பிளஸும் மைனஸும் அதுவேயாகிறது. ஆனால் பாருங்கள்.. கடைசியில் S.J.சூர்யா உருட்டி திரட்டி வாயில் வைத்த அல்வாவை பெரும்பான்மையினர் சுவைக்கவே செய்கிறார்கள். இங்குதான் நிற்கிறது படத்தின் வெற்றி.

தலைக்கனம், கர்வம், ஈகோ என்பதின் ஒட்டு மொத்த வடிவமாக இசைக்கடல் சத்யராஜ். வில்லன் பாத்திரம் என்றாலே வெறும் வாயில் அல்வா விழுங்குவது போலல்லவா அவருக்கு. வில்லத்தனத்திற்கு உகந்த அதே நக்கல்,பகடி எல்லாம் அந்த கேரக்டரையே வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. கஞ்சாகருப்பை வைத்துக் கொண்டு அவரது ஈகோவை வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியிலும் அப்ளாஸை அள்ளுகிறார்கள் இயக்குனரும் வில்லாதி வில்லனும். நீண்ட இடைவெளிக்குப் பின்னால் நிறைவான,கனமான பாத்திரம் அவருக்கு. இனி இப்படி நடித்தாலே இன்னொரு ரவுண்டு வரலாம்.

ஏ.கே.சிவாவாக வரும் S.J.சூர்யா மரம்,செடி,கொடி எல்லாவற்றிலும் இசையைத் தேடுகிறார்.இசை எங்கிருந்து வருகிறது தெரியுமா என்று வகுப்பெதுவும் எடுக்காமல் காட்சிகளின் மூலம் விளக்குவது சிறப்பு. இருக்கு, ஆனா இல்லை....இல்ல, ஆனா இருக்கு... போன்ற குழப்ப மனநிலை தாங்கிய பாத்திரம் இந்தப் படத்திலும். ஆனால் அந்த ஹெக்சகனல் மண்டைக்கு குளோசப் ஷாட் வைக்கும் போதுதான் பீதி கிளம்புகிறது.

ஜெனிபராக 'சுலக்ன பனிக்ராஹி'(தமிழில் சாவித்திரியாம்.மனசாட்சி இல்லையா உங்களுக்கு) முற்பாதியில் ஆள் பாதி ஆடை பாதியாக வருகிறார். அம்மாதிரி தாவணி எந்தூர்லய்யா கிடைக்குது.? அந்த உருட்டி வைத்த சப்பாத்தி மேனியில் கருப்பு நிற transparent தாவணியை தவழவிட்டு, உடன் தழுவிக்கொண்டு, அதை சூடேற்றி, அவரும் சூடேறியதுமில்லாமல்,ஏசி குளிரில் நம்மையும் சூடேற்றி விடுகிறார். இதுபோன்ற கலை ரசனைமிக்க விசயத்தில் S.J.சூர்யாவை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

கதாநாயகன் ஆசையால் இருந்த சில்லறை வாய்ப்புகளையும் இழந்த காமெடியன்களின் ரீஎன்ட்ரி இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே அமர்க்களப்படுத்துகிறது. சந்தானம், கருணாஸைத் தொடர்ந்து கஞ்சா கருப்பு. பவ்யமாக சத்யராஜிடம் நடித்துக் காண்பிக்கும் அந்தக் காட்சியில் தனது மறுபிரவேசத்தை ஆணி அடித்தாற் போல் அழுத்திச் சொல்கிறார். சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிய சூரி எல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கப்பா..!   

இந்த நான்கு கேரக்டர்களைத் தவிர்த்து படத்தின் அசுர பலம் வசனமும் ஒளிப்பதிவும். வசனங்களை இழைத்து இழைத்து கோர்த்திருக்கிறார். வசனங்களில் காமநெடி அதிகமில்லாதது ஓரளவு ஆறுதல். பிற்பாதியில் ஒவ்வொரு முடிச்சுகளையும் அடுத்தடுத்து அவிழ்ப்பது சுவாரஸ்யம்.


ஒரு இசை ஜாம்பவானின் ஈகோ தனத்தின் கோர வெளிப்பாடுதான் இசை திரைப்படம். அப்படியானால் இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்..?!.  30 ஆண்டுகள் தமிழ்த் திரையிசையில் கோலோச்சிய ஒருவர் இசை ஞானமே இல்லாதது போல் காண்பிக்கப்பட்டிருப்பது ஏன்..?  " த்தூ..த்துத்தூ.. த்துத்தூ.. த்தூ."  என்று மெட்டுப் போடுகிறார். வில்லத்தனத்திற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு இசை மேதையின் குரலில் வந்தது போல் இல்லையே.. அவருக்கு சூர்யா மேல்தான் ஈகோவே தவிர, இசை மீதல்ல..! அவர் இசைக்கருவிகளை மீட்டுவது போலவோ அல்லது இசைக் கச்சேரிகள் செய்வது போலவோ ஒரு நிமிடக் காட்சியாவது வைக்க வேண்டாமா..?. ஒரு தேர்ந்த இசைக்கலைஞன் தன் கோபம் ,சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் தான் நேசிக்கும் இசையோடு பகிர்ந்துக் கொள்வான். நான்தான் இசை, இசை என் உயிர் என் வாய் ஜம்பம் மட்டும் அடிக்கிறார் சத்யராஜ். அவர் இசையமைத்ததாய் ஒரு மென்மையான மெட்டு கூட மருந்துக்கும் காண்பிக்கப்படவில்லை.

S.J.சூர்யாவைச் சுற்றி சத்யராஜ் சதிவலைப் பின்னுவதாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அது எப்படி உடம்பு முழுக்க வில்லத்தனம் உடைய ஒருவருக்கு அத்தனை விசுவாசிகள், எவ்வளவு அடித்தாலும் குட்டிப்போட்ட பூனைபோல காலைச் சுற்றிவரும் கஞ்சா கருப்பு போன்றவர்கள் இருக்க, சூர்யா அருகில் நம்பகமான ஒருவர் கூடவா இருக்க மாட்டார்...?. அட்லீஸ்ட் ஒரு நன்றியுள்ள நாய் கூடவா இருக்காது..?. சூர்யாவைத் தவிர அவரைச்சுற்றியுள்ள அத்தனையும் சத்யராஜின் செட்டப்புதான் என்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் வித்தியாசமாக நடக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அவர்களை வெளியேற்றாமல் கூடவே வைத்திருந்து ஹீரோ குழம்புவது ஏனோ...?

ஒரு திறமையான ஆளுமையை கவிழ்க்க,நிர்மூலமாக்க மனைவி என்கிற பவர்புல் ஆயுதம் ஒன்று போதுமே. மனைவியின் டார்ச்சரால் கணவன்மார்கள் மெண்டலான கதை எவ்வளவு இருக்கிறது..!. அதற்காக ஒரு ஊரையே செட்டப் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா...? இப்படியெல்லாம் கேட்போம் என தெரிந்தே படத்தில் லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது என்று கடைசியில் 'அவர் வாயாலே ' சொல்கிறார்.

பாடல்கள் இரண்டு தேறுகிறது. ஒன்று திருச்சபையில் திருடியது போல் உள்ளது. இப்போதுதான் பியானோ கற்றுக்கொண்டிருக்கிறார் போல.. பின்னணி இசை பெரும்பாலும் பியானோவை வைத்தே சமாளிக்கிறார்.

S.J.சூர்யா படம் என்றாலே குடும்பத்துடன் பார்க்க முடியாத விரசக் காட்சிகள் நிறைய இருக்கும் என்கிற பொதுவான கருத்து நம் சமூகத்தில்(!) ஏற்கனவே நிலவுகிறது. அதை மாற்றிக் காட்டுவேன் என்று முன்பு சபதம் எடுத்தார். திரும்பவும் வேதாளம்....... .... .... !   முன்பாதியில் வரும் காதல் காட்சிகள் எல்லாம் 'ஏ' ரகம். அத்தனையும் குளோசப் காட்சிகள்.விரல் சப்புவதெல்லாம் ஓவர்..!. வரவர தம்பி ராமையாவும் போரடிக்கிறார். ஓவர் சவுண்டு அவருக்காகாது என்பதை யாராவது தெரியப்படுத்துங்கள்.

அதெல்லாம் சரி. இந்த வெற்றிச்செல்வம் கேரக்டர் யாரையோ பிரதிபலிக்கிற மாதிரி இருக்கிறதே. நேராகவே வருகிறேன். இளையராஜாவிடம் கிட்டார் வாசித்துக் கொண்டிருந்த கங்கை அமரனை இப்படியொரு கசப்பான சூழ்நிலையில் ஒருவர் இசையமைப்பாளராக்கினார். அதை பத்திரிகை செய்தி மூலம் தெரிந்துகொண்ட இளையராஜா, உனக்கு இசையைப் பற்றி என்ன தெரியும்..உன்னால் தனியாக இசையமைப்பாளராக முடியுமா என சவால் விட்டதாக கங்கை அமரனே சொல்லியிருக்கிறார். ஆனால் 'இசைக்கடல் ஏ.கே.சிவா' கேரக்டர் கங்கை அமரன் இல்லை, அது இசைப் புயலைக் குறிக்கிறது என்பதை சின்னக் குழந்தைக் கூட சொல்லிவிடும். 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் ஆஸ்கார் மேடையில் சொன்னதை இன்னொரு மேடையில் 'புகழை நமக்கு அளிப்பவனே இறைவன்தான். அவன் கொடுத்த புகழை அவனுக்கே திருப்பிக் கொடுப்பது சரியா ' என்று  இளையராஜா நக்கலடித்தார். இன்னும் சில சம்பவங்களை  கோர்த்துத்தான் இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கிறது. இசைஞானியிடம் இயக்குனர்கள் தவம் கிடந்தது, 20 வருடங்கள் கோலோச்சியது, அவரது இசைக்காகவே பல படங்கள் சூப்பர் ஹிட்டானது, தன்னை இசை அவதாரமாகவே அவர் நினைத்துக் கொள்வது ... இப்படி பல விசயங்கள்  படத்திற்கும் அவருக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிற மாதிரியே தோன்றுகிறது.  என்னமோ போடா மாதவா..!

படத்தில் தர்க்கபிழைகளை கவனிப்பவர்களுக்கு கடைசியில் அவர் கொடுக்கும் அல்வா கசப்பாக இருக்கலாம். ஆனால் சாராசரி ரசிகர்களுக்கு அவர் சொந்த ஊரான திருநெல்வேலி அல்வாவை திகட்டத் திகட்டப் புகட்டியிருக்கிறார்.

படம் ஆஹா.. ஓஹோ.. என்றெல்லாம் சொல்ல முடியாது. இதுவும் ' ஒரு தடவை பார்க்கலாம் ' என்கிற category -யில் தான் வருகிறது.

                        ப்ளஸ்                   மைனஸ்
சத்யராஜ் வில்லத்தனம்
முன்பாதி விரசக் காட்சிகள்..
தொய்வில்லாத திரைக்கதை கடைசியில் கொடுத்த அல்வா..
வசனம், ஒளிப்பதிவு நம்பகத்தன்மையில்லாத சில காட்சிகள்.
S.J.சூர்யாவின் இயக்கம்

17 comments:

 1. விமர்சனம் ரசிக்கும்படியே உள்ளது.. நகைச்சுவையாகவும்..
  எனக்கு எஸ்.ஜே.சூரியா படம் பிடிக்கும். நிதர்சனப்பார்வை அவரிடம் உண்டு. அவரின் அப்பாவியான(!) அலட்டல் ரகளையாக இருக்கும். பார்த்துவிட்டுச் சொல்கிறேன். கள்வனின் காதலியும் வாலியும் அதிகம் கவர்ந்த படங்கள். இசை பார்ப்போம்.. (கேட்போமே.)

  ReplyDelete
  Replies


  1. மிக்க நன்றி சகோ..

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி சார்

   Delete
 3. போக வேண்டாம்னு சொல்ற மாதிரி இருக்கு... அதுவும் சரிதான்

  ReplyDelete
  Replies


  1. குடும்பத்தோடு பார்க்கவேண்டும் என்றால் இன்டர்வெல் முடிந்துதான் போகவேண்டும் மேடம்.. :-)

   Delete
 4. சீனு ஒரு விதமாகவும் அரசன் வேறுஒருவிதமாகவும் விமர்சனம் எழுதி இருந்தனர். சற்று குழப்பமாக இருந்தது .எனக்கு ஏனோ எஸ்.ஜெ.சூ வின் நடிப்பும் அவர வசனம் பேசும் விதமும் சற்றும் படிப்பதில்லை டிவியில் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பதே என் முடிவு

  ReplyDelete
  Replies

  1. நன்றி..படம் மொக்கை எல்லாம் இல்லை.S.J.சூர்யாத்தனமான படங்களை விரும்புவர்களுக்கு இந்தப் படம்பிடிக்கும். லக்கிலுக் யுவா கூட சூப்பர் என எழுதியிருக்கிறார்

   Delete
 5. isai attakasam sir!
  antha kadaisi katchikkaaka:-))) avvv
  oru murai kandippaa paarkkalam.
  ---
  vimarsanam eppavum pola super.
  ninga solli irukkum kuraikal taan nanum yosichen.
  anaa avare ellathukkum vidai kadaisila sollittare:-)))
  ---

  ReplyDelete
  Replies

  1. நன்றி மகேஷ்..நல்ல திரைக்கதை....படம் நன்றாகத்தான் செல்கிறது. ஆனால் எடுத்துக் கொண்ட CONCEPT , அதை EXECUTE செய்த விதம்தான் சொதப்பல்

   Delete
 6. இசை என்றவுடன் பாடல்கள் ரசிக்க சென்றால்.... க்கும்... என்னத்த சொல்ல...?

  ReplyDelete
 7. பெற்ற வெற்றியை இன்னொருவன் தட்டிப்பறித்து செல்லும் போது எவ்வளவு வலியாக இருக்கும்...? அந்த வலிக்கு எந்த மருத்துவனும் மருந்து கொடுக்க முடியாது. எந்த மருந்து கடையிலும் இதற்கு மருந்து கிடையாது. தாமே அந்த வலியை அனுபவித்து ஜீரணித்து சந்தோசமாக வாழவேண்டும். ஒரு வகையில் பார்த்தால் இது வலியல்ல வழி. இன்னொருவர் நமக்கு விட்டுக்கொடுத்த வலியை நாம் இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கிறோம்.

  சரி தான்

  குழப்பமான விமர்சனங்களால் படம் பார்க்க வேண்டாம் என்று நினைத்தேன் உங்கள் விமர்சனம் பார்க்க தூண்டுகிறது பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி சார்

   Delete
 8. ஒரு மணி நேரம் பார்த்தேன்.நிறுத்தி விட்டேன்.விரசம் அளவுக்கு மீறி.............எனக்கே அப்படிஎன்றால்........சிறு வயதுக் குழந்தைகள்.....?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் பாஸ்... மகள்களோடு படம் பார்க்கச்செல்லும் ஒரு அப்பாவின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்

   Delete
 9. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியை 'செம டிவிஸ்ட்' என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து 'முதல் தேதி' என்ற சிவாஜி படத்தை பாருங்கள்.

  http://sivigai.blogspot.com/2015/02/2015.html

  ReplyDelete