Friday 17 April 2015

தாலியை எடுத்துக் கொடுப்பவரே எப்படி அறுக்கச் சொல்லலாம் ..?

னது முந்தைய பதிவைப் படித்த தமிழ் தேசிய டம்ளர்.. ஸாரி.. நண்பர் ஒருவர், வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பிப் பார்க்கச் சொல்லியிருந்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது கைகளால் தாலியை எடுத்துக் கொடுத்து ஒரு திருமணத்தை நடத்தி வைக்கும் நிகழ்வு அது.

" இதுதான் இணையப்போராளிகளால் நேற்று பேஸ்புக்கில் பரப்பப்பட்டு மூத்திரக் குடுவையோடு தனது இறுதி மூச்சுவரை போராடிய ஒரு கிழவனின் இயக்கத்தையே கொச்சைப்படுத்தி கழுவி ஊற்றினார்களே.. இதை எப்படி பார்க்காமல் இருப்பேன்..." என்று பதிலனுப்பினேன். 

"அப்படி என்றால் அன்று தாலியை எடுத்துக் கொடுத்து கட்டச் சொன்னவர் இன்று எப்படி தாலியை அகற்ற சொல்லலாம்.. இது பச்சைப் பொறுக்கித்தனம் இல்லையா.. " என்று பொங்கினார்.  

" தாலியை கட்ட சொன்னவரால் தானே அதை அகற்று என்று சொல்லமுடியும்..." என்று ஆரம்பித்து பெரிய விளக்கத்தை சொல்ல ஆரம்பித்தவுடன் செம்ம கடுப்பாகிவிட்டார்.

" தாலியே கூடாது என்றுதானே தாலி அறுப்பு விழா நடத்துகிறார்கள்.. பின்ன என்ன மயித்துக்கு தாலியை கட்ட சொல்லணும்.. நாங்க எல்லாம் கேனையன்களா... இந்த வந்தேறி திராவிட நா....." என்று ஏக வசனத்தில் திட்ட ஆரம்பித்துவிட்டார்.

இப்படித்தான்.. டம்ளர் பாய்ஸ்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. இணையத்தில் டம்ளர் குரூப் எங்கேயாவது தற்குறித்தனமான கேள்விகளை கேட்டு வைக்கும். இவர்கள் அங்கு சென்று, 'அதானே.. இந்த திராவிட வடுக வந்தேறி நாய்களை தமிழ் நாட்டை விட்டே விரட்டவேண்டும்... என்று ஆரம்பித்து 'சுந்தரத் தமிழில்' சில வார்த்தைகளையும் சேர்த்து வாந்தி எடுத்து வைப்பார்கள். அத்தோடு விடுவார்களா.. அந்தக் கேள்விகளை 'காப்பி' செய்து எங்கெல்லாம் இவர்களுக்கு எதிராக நிலைத்தகவல் பதியப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அதை 'பேஸ்ட்' செய்து வைப்பார்கள். அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றால், தான் ஐநா சபையிலே கேள்வி கேட்டது போல காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வார்கள் ஐந்து நிமிடம் ஐநா சபையில் பேசி ஈழம் பெற்றுத்தரும் சீமானின் அருமைத் தம்பிமார்கள்.

தப்பித்தவறி அவர்களையே மடக்குவது போல பதிலளித்துவிட்டோம் என்றால் அவ்வளவுதான். பதிலளித்த நாம் திராவிட வந்தேறிகளாகிவிடுவோம். மொத்த அர்ச்சனையும் நம் மீது கொட்டிவிடுவார்கள். இதுபோன்ற அரைவேக்காடுகள் நிறைய இணையத்தில் உலவுகின்றன. அவர்களிடம் வாதிடுவது நமக்குத்தான் டென்சன்.

தெரியாமத்தான் கேட்கிறேன்....

தி.க தலைவர் கி.வீரமணி ஏதோ யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமண ஏற்பாடு செய்து, எவரும் பார்க்காத நேரத்தில் தாலியை எடுத்து மணமகனிடம் கொடுத்து கட்டச்சொன்னது போலவும், அப்போது இவனுக அவர்களுக்கு தெரியாமலே  மறைந்திருந்து வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் உலவ விட்டது போலவும் தைய தக்கான்னு குதிக்கிறாங்களே...

ஏம்பா டம்பளர் பாய்ஸ்களா... திராவிடர் இயக்கம் தோன்றியபோது நாமெல்லாம் பிறந்திருக்கவே மாட்டோம். ஆட்சி அதிகாரத்தில் ஆர்வமில்லாமல் மக்கள் நலனை மட்டுமே கொள்கையாகக் கொண்டு போராட்ட உரத்தில் வளர்ந்த ஒரு இயக்கம், ஊரறிய தாலியை எடுத்துக்கொடுக்கிறது என்றால் அதற்குப் பின்னால் உள்ள சூட்சமத்தை புரிந்துகொள்ள வேண்டாமா..! உங்கள் சிந்தனைகள் எல்லாம் எப்போதும் அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருக்குமா..?

பொதுவாகவே திராவிடர் கழகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று, மூட நம்பிக்கைகளை தெளிவாக மக்களிடையே விளக்கிச் சொல்லும் வாய்வழிப் பிரச்சாரம். இன்னொன்று நேரடியாக களத்தில் இறங்கி, அந்த மூடநம்பிக்கையே தவறு என நிரூபிக்கும் செயல் பிரச்சாரம்.

உதாரணம் சொல்கிறேன். தீ மிதிப்பதும், உடலில் அலகு குத்துவதும் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று ஊருக்கு ஊரு மேடை போட்டு முழங்குவார்கள் கருஞ்சட்டை தோழர்கள். அது தெய்வ செயல் அல்ல. கடவுள் மறுப்பாளனும் செய்யலாம் என்று விளக்குவார்கள்.  இது ஒருவகை பிரச்சாரம்.



இன்னொன்று, கழக தோழர்களே பிரும்மாண்ட தீமிதி திருவிழாவை ஏற்பாடு செய்து 'கடவுள் இல்லை.. கடவுள் இல்லை ' என்று முழங்கிக்கொண்டே தீ மிதித்துக் காண்பிப்பார்கள். அதுபோலவே அலகு குத்துதலும். இரண்டுமே பக்தியால் வருவதல்ல.. பயிற்சியால் வருவது என்பதை மக்களுக்கு நிரூபித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். அந்தப் புகைப்படம்தான் மேலே உள்ளது. அந்தப் படத்தை வைத்துக் கொண்டு கடவுள் இல்லை என்று சொல்கிற தி.க கட்சிக்காரங்களே தீ மிதிப்பது சரியா என கேட்பது எப்படி முட்டாள்தனமான சிந்தனையோ அதேப் போலத்தான் கி.வீரமணி அவர்கள் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வையும் நக்கலடிப்பது.

எப்படி இரண்டும் ஒன்றாகும் எனக் கேட்கிறீர்களா..? எனக்குத் தெரிந்து சுயமரியாதைத் திருமணங்கள் இரு முறைகளில் செய்யப்படுகிறது. ஒன்று தாலி கட்டாமலே செய்யப்படுவது. மற்றொன்று தாலி கட்டுவதற்கான அனைத்து சம்பிராதயங்களையும் உடைத்து செய்யப்படுவது. இரண்டுமே சுயமரியாதைத் திருமணங்கள்தான். முதலில் சொன்னது பெரியார் காலத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது சொன்னதை நானே நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன்.

தெளிவாகச் சொல்கிறேன். திராவிடர் இயக்கத்தின் போராட்ட முறையே, இருக்கும் மூடநம்பிக்கைகளை தவறு என்று நிரூபிப்பதுதான். அப்படியானால் அதை அவர்கள் வழியில் சென்றுதானே நிரூபிக்க முடியும்..!. இந்துக்களின் திருமணங்களில் 'தாலி' என்பதை நினைத்த நேரத்தில் கட்டிவிட முடியாது. வேதங்கள் சாஸ்திரங்களின் அடிப்படையில் நிறைய நடைமுறைகள் உள்ளது. அதை தவறென்று நிரூப்பிப்பது தானே இவர்களது வேலை..!.

ராகுகாலம் , எமகண்டத்தில் தாலி கட்டக் கூடாது... கிழக்குத் திசையில் பார்த்துதான் கட்டவேண்டும்.. வானத்தில் ஏதோ தெரியுமாம். அது தெரிந்தால்தான் கட்ட முடியும். பார்ப்பனர் வந்து வேதம் ஓதி, சமஸ்கிரதத்தில் மந்திரம் சொல்லவேண்டும். அக்னி ஏற்றவேண்டும்.. அட்சதை தூவ வேண்டும்.. மேளம் கொட்டவேண்டும்.. அதாவது எப்படி வேதங்கள் மந்திரங்கள் ஓதி ஒரு கற்சிலையில் கடவுளை கொண்டுவந்து அடைப்பதாக சொல்கிறார்களோ (அது களவு போனால் சிலை காணாமல் போய்விட்டது என்பார்கள்) அதுபோல் வெறும் நூல் கயிற்றில் மொத்த சங்கதியையும் கொண்டுவந்து அடைக்கிறாங்களாமாம். இதையெல்லாம் செய்யவில்லை என்றால் இவர்கள் அல்பாயுசில் சென்றுவிடுவார்களாம். எந்த செல்வமும் பெருகாது. இருவரும் சேர்ந்து வாழவே முடியாது.சந்ததி விருத்தி ஆகாது... இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். இந்தக் கொடுமையெல்லாம் பொய் என்று எப்படியய்யா நிரூபிப்பது..?

எங்களைப் பொறுத்த வரையில் தாலி என்பது வெறும் கயிறுதான். நீ வேதங்களின் சாஸ்திரங்களின் அடிப்படையில் தாலியை கட்டச் சொல்கிறாய் என்றால் நாங்கள் எந்த சம்பிராதயமும் சடங்கும் இல்லாமல், அக்னி ,அட்சதை, மந்திரம் எதுவும் இல்லாமல் தமிழில் உறுதிமொழி எடுத்துத் தாலியைக் கட்டச்சொல்லி, எப்படி உன்வேதப்படி திருமணம் நடத்த தம்பதிகள் வாழ்கிறார்களோ அதைவிட ஒருபடி மேல எங்கள் வழக்கப்படி திருமணம் நடந்த தம்பதிகள் வாழ்ந்து காட்டல நான் பெரியார் தொண்டன் இல்லடா என்று அண்ணாமலையில் ரஜினி விட்ட சவால் போல நடைபெறுவதுதான் இரண்டாவது வகை சுயமரியாதைத் திருமணம். இதைத்தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்.

நீ கிழக்கு திசையில் பார்த்து தாலி கட்டுச் சொல்கிறாய் என்றால் நாங்கள் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து தாலி கட்டுவோம். நீ நல்ல நேரம் பார்க்கிறாய் என்றால் நாங்கள் எமகண்டத்தில் கட்டுகிறோம். நீ “மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்” என சமஸ்கிரத மந்திரம் ஓதுகிறாய் என்றால் நாங்கள் எங்கள்  தாய்மொழியில் உறுதிமொழி எடுப்போம். மொத்தத்தில் வேதங்களையும் சாஸ்திரங்களையும் பொய்யென்று நிரூபிக்க வேண்டும்.

சரி.. தாலி என்பது உங்களுக்கு வெறும் கயிறுதான் என்றால் எதற்காக தாலி அகற்றும் போராட்டம் நடத்த வேண்டும்..?

வருடா வருடம் மேடை போட்டு தாலி அகற்றும் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. தாலி என்பது வெறும் கயிறுதான் என்பதால் அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. ஆனால் தாலி பற்றிய ஒரு விவாதத்தையே பொறுத்துக் கொள்ளமுடியாமல் இந்துத்வா கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசும் அளவுக்கு துணிகிறது என்றால் தாலி என்பது அவ்வளவு புனிதமா என்கிற கேள்வி இங்கே எழுகிறது. அதை இன்னும் புனிதமாக்கி, தங்கத்தில் தாலி அணிவது இந்து மரபுப்படி தவறு. மஞ்சள் கயிற்றில்தான் அணியவேண்டும். அப்படி அணியாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்லாமிய தீவிரவாதிகள் போல இந்துத்வா வெறியர்களும் மாறிவிட வாய்ப்புள்ளது. அதை முளையிலே கிள்ளி எறியவேண்டும். எங்கள்  தோழர்கள் அணிந்திருப்பது வெறும் கயிறுதான் என்றாலும் அது புனிதமானது அல்ல என்கிற விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும் என்பதற்கே இந்த தாலி அகற்றும் நிகழ்வு.

17 comments:

  1. சுட்டிகளை சொடுக்கி படித்து
    சிந்திப்போமா?


    >>>>>1. இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7.b.ஆபாசமே ஆயுதமா?.ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

    >>>> 2.இந்துமதம் இந்திய மதமா?
    இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்


    >>>> 3.இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?

    ReplyDelete
  2. சரியான சவுக்கடி. நல்ல விளக்கம்.
    சுய மரியாதை என்பது சுயமாக சிந்தித்து செயல்பட்டு சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதே. இந்த சிந்தனை சக்தியை பெற்று வளர்த்து நம் சொத்தாக விட்டு சென்றவர்தான் நம் வெண் தாடி கிழவர். இதை புரிந்துகொள்ளாத தமிழ் தேசிய குடுகுடுப்பைகளிடம் என்னத்த சொல்லி எதை சாதிப்பது?
    கழகத்தோழர் வீரமணியின் துணிச்சலான இம்முயற்சியை ஆதரிப்போம்.

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி தோழர்..

      Delete
  3. கேள்வி கேட்காமலே, பதில் தெரியாமலேயே நாங்க காணாமல் போவோம்.....

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  4. PODA LOOSU PAYALE

    ReplyDelete
  5. poda poi unnoda akka thankachi thaaliya muchandhila vaichu aru

    ReplyDelete
    Replies
    1. டேய்...சொந்தப்பெயரில வரத்தெரியாத சோப்ளாங்கி ... உன் பெயரை முதல்ல சொல்லு. பதில் சொல்கிறேன்.

      Delete
  6. பெரியார் என்ற ஒருவர் இல்லையேல்
    இன்று நம் நிலை என்ன?
    நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் அய்யா... மிக்க நன்றி

      Delete
  7. தேவையற்ற விவாதங்கள்! சண்டைகள்! பி.ஜே.பி ஆட்சியில் அமர்ந்தாலே எழுந்துவிடுகிறது! அவர்களும் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. அவர்களின்(இந்துத்வா) தீவிரவாததிற்கு எதிராகத்தான் போராட்டமே.. இதை மக்கள் புரிந்துகொள்ளாதுதான் வேதனை ..

      Delete
  8. ம்ஹீம்... வீணா டென்சன் அதிகம் ஏற்றிக் கொள்ளாதீங்க...

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா.. டென்சனே ஆகாத நம்மையும் டென்சன் ஏத்துறாங்க

      Delete