நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அந்த வயதில், தமிழ்சினிமாவில் பலகாலங்கள் பழம் தின்று கொட்டை போட்ட ஒரு முதிர்ந்த நடிகனின் உணர்வுகளை அந்த பிஞ்சு முகத்தில் கொண்டுவந்த சின்ன காக்கா முட்டையை பாராட்டுவதா அல்லது பெரிய காக்கா முட்டையை பாராட்டுவதா..
கூட மேல கூட வச்சி கிறங்கடித்த ஒரு நடிகை இரண்டு சிறுவர்களுக்கு தாயாக, ஒரு டிபிகல் குப்பத்து பெண்மணியாக வாழ்ந்தே காண்பித்து இருக்காரே அவரைப் பாராட்டுவதா..
தனது பேரக்குழந்தைகளுக்கு சக தோழியாக, மருமகளுக்கு ஒரு அம்மாவாக வாழ்ந்து, கடைசியில் தனது இயலாமையை எண்ணி உயிர்விடும் அந்த பாசக்கார கிழவியைப் பாராட்டுவதா..
'நாம் திருடுறோமா...' என்று அப்பாவியாய் அச்சிறுவர்கள் கேட்க, 'இல்ல எடுக்குறோம்...' என்று ஏகாதிபத்தியதிற்கு எதிரான சிந்தனையை ஒற்றை வார்த்தையில் உதிர்த்து, வரும் ஒன்றிரண்டு காட்சிகளிலே நம் மனதை நெகிழவைத்த பழரசத்தை பாராட்டுவதா...
படம் முழுக்க கெட்டவர்களாக காட்சிப் படுத்தப்பட்டாலும் 'இவர்கள் நல்ல கெட்டவர்கள்ப்பா...' என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு டீசண்டான திருடர்களாக வந்து கிச்சு கிச்சு மூட்டிய 'தல' ரமேஷ் திலக், யோகிபாபு -வை பாராட்டுவதா...
ரயில் பயணிகளிடம் செல்போன் திருடும் சிறுவர்கள் , பீட்சா ஓனர் பாபு ஆண்டனி, அவசரக்குடுக்கை கிருஷ்ணமூர்த்தி, பணத்துக்காக எந்த லெவலுக்கும் போகும் எம் எல்.ஏ., பழைய சாமான்கள் எடைக்கு வாங்கும் கடையிலிருக்கும் அந்தப் பெண்மணி என பெரிய பட்டியலே நினைவுக்கு வருகிறது...!
இதில் யாரைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை...!
அதைவிட திரைக்குப் பின்னாலிருந்து இவர்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு அந்த பீட்சா கடையையே எழுதிவைக்கலாம். கதை எளிமையானது என்றாலும் அதை நகர்த்திச்சென்ற விதம் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு புதிய பாதை.
படத்தின் பலம் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம். இது அத்தனையையும் ஒன் மேன் ஆர்மியாக தூக்கிச்சுமந்த இயக்குநர் மணிகண்டனுக்கு சிரம் தாழ்த்திய வாழ்த்துகள். நிச்சயமாக தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி இப்படத்தை தயாரிக்க முன்வராமல் போயிருந்தால் இதுவொரு குறும்படமாக எடுக்கப்பட்டு பத்தோடு பதினொன்றாக போயிருக்கும்.
படம் பார்த்து இரண்டு நாட்களாகிறது. இதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவே இல்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்குப் பிறகு இப்போதுதான் அப்படியொரு உணர்வு..!
உலகத்தரம் என்பது தொழில்நுட்பத்தில் இல்லை. சமூகத்தின் வாழ்வியலை நேர்த்தியாகப் படம் பிடிப்பதில் தான் இருக்கிறது..!
காக்கா முட்டை - தமிழ் சினிமாவின் தங்க முட்டை...!
உலகத்தரம் என்பது தொழில்நுட்பத்தில் இல்லை. சமூகத்தின் வாழ்வியலை நேர்த்தியாகப் படம் பிடிப்பதில் தான் இருக்கிறது..!//
ReplyDeleteintha single line pothum padathai nichaiyam paarkiren. onayum attu kutiyum ungalathu vimarsanam paditha pirakuthan paarthen sir. atha varisaiyil intha padamum pidikkum ninaikkiren.
Deleteநன்றி மகேஷ்... கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்..
happy indeed very happy to see your comments.
ReplyDeletesubbu thatha
Thank you sir..
Deleteஇப்படத்தின் விமர்சனத்தை பத்திரிக்கை ஒன்றில் படித்தேன். இப்படத்தை பார்க்க வேண்டும் என அப்போதே நினைத்தேன். ஆனால் தங்களின் விரிவான விமர்சனம் கண்டு உடனே பார்க்க வேண்டும் என ஆவல் வந்து விட்டது சகோ. நன்றிகள்.
ReplyDeleteதவறவிடாமல் காண வேண்டிய காவியம்.. நன்றி R.Umayal Gayathri ...
Deleteகுட்... தரமான விமர்சனம்...
ReplyDeleteமிக்க நன்றி DD
Deleteஅருமை! மணிமாறன் அவர்களே, இயந்திரவியல் மாணவர்களுக்கு தொடர்ந்து மெக்கானிகல் துறை சார்ந்த MASTERCAM மற்றும் 3D தொழில்நுட்ப பதிவுகளை பகிரவும். நன்றி
ReplyDeleteமிக்க நன்றி Chenthur Pandian...
Deleteகண்டிப்பாக காணவேண்டும். ஆர்வத்தை ஊட்டிய விமர்சனம்
ReplyDeleteநன்றி சகோ.. கண்டிப்பாக பாருங்கள். எங்கள் தேசத்தின் வாழ்வியலை தரிசியுங்கள். :-)
Deleteசிங்கார சென்னையின் இன்னொரு முகத்தைக் காணலாம்.
காக்கா முட்டை கட்டாயம் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம் . சினிமா காதலர்கள் பலமுறை பார்க்க வேண்டும் ரசிக்க கற்க நிறையவே இருக்கின்றது
ReplyDeletehttp://fasnidx.blogspot.com/2015/06/2015.html
மிக்க நன்றி fasnimohamad...
ReplyDelete