பொதுவாகவே ...இசைக்கென்று ஒரு தனித்துவம் உண்டு....ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எங்கேயோ ஒரு பாடலைக்கேட்டிருப்போம்.பல வருடங்களுப்பிறகு அந்தப் பாடலைக் கேட்கும் போது , பழைய நினைவுகள் திரும்ப வந்து ஒரு இனம் புரியாத சந்தோசத்தைக் கொடுக்கும்.
நான் எட்டாவது முழுப்பரிச்சை முடிந்து எங்க தாத்தா ஊருக்கு போயிருந்த சமயம் ...அப்போ ராமராஜனோட பாடல்கள் ரொம்பப் பிரபலம்.அங்க இருந்த டேப் ரெகார்டர்ல ' ராசாவே உன்னை நம்பி' பாடல்களை அடிக்கடிக் கேட்ட ஞாபகம் இன்னும் இருக்கு.... ஸ்கூல் முழுப்பரிச்சை லீவு ன்னாலே குதூகலம்தான் .அதிலேயும் தாத்தா-பாட்டி ஊருக்குப் போறோம் னா அளவிடமுடியாத மகிழ்ச்சிதான். இப்ப அந்த 'ராசாவின் மனசில இந்த ரோசா உன்னேனப்புதான் ......','வாசலிலே புசணிப்பூ வச்சிப்புட்டா...' பாடல்களை எங்கேக் கேட்டாலும் அங்க இருக்கிற மாதிரி ஒரு.......'.பீலிங் ....( ப்ச்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு .'. பீலிங் )....
நம்ம ஊர்ல FM வருவதற்கு முன்பே இங்க (சிங்கப்பூர்ல ) ஒலி-96 .8 னு FMஅலைவரிசை ரொம்பப் பிரபலம். இங்க டிவி பார்க்கிறவர்களை விட ரேடியோ கேட்கிறவர்கள் ரொம்ப அதிகம். அதிலும் நாம கேட்டே இருக்காத 70 ,80 களில் வந்த நிறையப் பாடல்களை தேடிப்பிடிச்சிப் போடுவாங்க. இது நம்ம ஊர்லே நடக்காத அதிசயம்.அதிலும் பாடல்களுக்கு சென்சர் போடுறது இங்கதான்னு நினைக்கிறேன். 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா','கட்டிப்பிடி கட்டிப்பிடிடா' போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடல்களுக்கெல்லாம் இங்குத் தடை. இவர்களின் ஒலிச்சேவை இரவில் தான் தூள் கிளப்பும். நைட் 9 மணிக்கு ஆரம்பித்து காலை 6 மணி வரை இருக்கும். 60 களில் ஆரம்பித்து லேட்டஸ்ட் பாடல்கள் வரை இவர்கள் தொகுத்து வழங்கும் அழகே தனி...நம்மவர்கள் இங்கு பெரும்பாலும் நைட் ஷிப்ட் பார்ப்பதால் (நைட் ஷிப்ட் அலவன்ஸ் இருக்குல ......)அவர்களுக்கு நைட்ல FMமே துணை. ரேடியோ கேட்காம இங்க நிறைய பேருக்கு வேலையே ஓடாது. அதிலும்' பிரேக் டைம்' ல ஒரு ' டீ' யைப் போட்டுட்டு 'இன்னும் எத்தன நாளைக்குடா இந்தவாழ்க்கை'னு கல்யாணமான ஆளுங்க நினைச்சிகிட்டு இருக்கும் போது,.'கொத்தும் கிளி இங்கிருக்க... கோவைப்பழம் அங்கிருக்க' னு டைமிங் சாங் போட்டு நோகடிக்கவும் செய்வாங்க.
பல வருடங்களுக்கு முன்பு...அப்படி ஒரு சந்தர்ப்பத்தில ..அரதூக்கத்தில கேட்ட பாடல்.துயிலையும் மறந்து ரசித்த பாடல் ...இப்பவரைக்கும் என்னோட ஆல் டைம் .'.பேவரைட்.!!. இந்தப்பாட்டுக்காகவே படத்த தேடிப்பிடிச்சிப் பார்த்தேன். இசை, வரிகள் ,குரல், காட்சியமைப்பு என்று அனைத்தும் அமர்க்களப்படுத்தியிருக்கும்..70களில் வந்த 'அவள் அப்படித்தான் ' படத்தில், ராகதேவன் ராஜாவின் இசையில் K.J.யேசுதாஸ் பாடியிருக்கும் இந்த பாடல்,காலங்களை கடந்து இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.
இந்தப்பாடலை யார் எழுதியது னு அறிய இணையத்தில் தேடியபோது,நிறைய இடங்களில் கங்கை அமரன் என்றும் ,சில இடங்களில் கண்ணதாசன் என்றும் இருந்தது.70 களில் இளையராஜாவின் இசையில் வந்த நிறைய படங்களில் ..பாடல்-கண்ணதாசன்,உதவி-கங்கைஅமரன் னு இருக்கும். (இ.ராஜாகிட்ட டியூன சுட்ட மாதிரி கவியரசுகிட்ட பாட்ட சுட்டுட்டாரோ ?)
பொதுவாகவே ..கவியரசு மற்றும் கவிப்பேரரசு வோட பாடல் வரிகளில மேலோட்டமா ஒரு அர்த்தம் இருக்கும்.அந்த வரிகள திரும்பத் திரும்ப கேட்டால் ,சொல்ல வந்தது வேறு ஒரு அற்புதமான விஷயமா இருக்கும்...அது இந்த இரண்டு மகா கவிஞர்களுக்கே உள்ள தனிச்சிறப்பு !!!!...அது போலத்தான் இந்த பாடலில் வரும்,'நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது'.......
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...
வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாதம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..
Heared this song in Super singar program first time. Very nice song and lyrics also your writeup!!
ReplyDeleteThanks for your comment Mr.Naga
ReplyDeleteAlso the song is sung by Jayachandran and not Jesudas
ReplyDelete