அப்பாடா....அப்படிஇப்படினு ஒருவழியா கனிமொழிக்கு ஜாமீன் கிடைச்சாச்சு.. இந்தக் கன்னித்தீவு கதை கூட முடிஞ்சுடும் போல. ஆனால் கனிமொழிக்கு எப்பப்பா ஜாமீன் கிடைக்கும்னு பேசப்படாத டீ கடைகளே தமிழ்நாட்டில் இல்லன்னுதான் சொல்லணும். உடன்பிறப்புகளுக்கும் கனிமொழியால் அரசியலுக்கு வந்த குஷ்பு, பூங்கோதை உள்ளிட்ட அடிபொடிகளுக்கும் சந்தோசம்தான். தலைவருக்கும் 'மட்டற்ற மகிழ்ச்சி'
கலைஞரோட அரசியல் வரலாற்றிலேயே இதுதான் அவருக்கு மோசமான காலகட்டம்னு நினைக்கிறேன். பல அரசியல் தலைகளைப் பாத்தவரு. தலைவரைப் பத்தி எதிர் முகாம்லே.."நாதரித்தனம் செஞ்சாலும் நாசுக்கா செய்யிரவராச்சே... கோக்கு மாக்கு வேலையையும் கொஞ்சம் நீக்குபோக்கா செய்யிரவராச்சே... இந்த ஸ்பெக்ட்ரம் மேட்டர்ல இப்படி வசமா மாட்டிக்கிட்டாரேனு பேசிகிறாங்க.
திமுகவிற்கும் தன்மானத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. கலைஞரே 'தன்மானத்தலைவர்' என்று அழைக்கப் பட்டவர்தான். அந்தத் தன்மானத்தை விட்டுக்கொடுத்துதான் கனிமொழியை மீட்டெடுத்திருக்கிறார் கலைஞர்.
குடும்ப அரசியல்தான் தி.மு.க.வின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றாலும் குடும்ப ஆதிக்கத்தை விட அதன் அரசியல் தலையீடுதான் தி மு க விற்கு இந்த மரண அடியைக் கொடுத்திருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
2001ல் ஜெயா இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், அம்மையாரின் இமேஜ் முதலில் டேமேஜ் ஆனது கலைஞரின் கைதின் போதுதான். ஆனால் இது கலைஞருக்கு மிகப்பெரிய இமேஜ் கொடுத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.. கலைஞரை எதிர்ப்பதையே தன் மூச்சாகக் கொண்டவர்களைக் கூட அனுதாபப்பட வைத்தது அந்த நள்ளிரவுக்கைது. அதுதான் கலைஞரின் இமேஜின் உச்சம். அதிலிருந்து அவருக்கு இறங்குமுகம் தான்.அது காங்கிரஸ் உடனான கூட்டணியிலிருந்து ஆரம்பித்தது.
2004 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், அம்மையாரின் அடாவடித்தனத்தால் அதிமுக வின் முதுகிலிருந்து திமுக வின் முதுகில் ஏறி சவாரி செய்ய எத்தனித்தப்போது அதை திமுவும் ஆமோதித்தது. அதற்கு முக்கியமான காரணம் ஒன்று அப்போது இருந்தது. ராஜீவ்காந்தியின் கொலைக்குப் பிறகு திமுகவிற்கு விடுதலைப் புலிகளின் தொடர்பு+ஈழத்தமிழர்களின் ஆதரவுக்கட்சி என்ற சாயம் பூசப்பட்டிருந்தது. இதைத் துடைத்தொழிப்பதற்கான சந்தர்ப்பமாக திமுக அப்போது பயன்படுத்திக்கொண்டது.
சரி..பழையன கழியட்டும்...மத்தியில கிங்மேக்கரா இருந்த கலைஞருக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ யிடமிருந்து தன் அருமை மகளை மீட்க இவ்வளவு போராட்டமா?.. காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தப் பிறகு, தலைவர் தடுமாறி, உடன்பிறப்புகளுக்கு மனக்கசப்பை ஏற்படுத்திய விசயங்கள் என்னன்ன ......
- 2004 பாராளுமன்றத் தேர்தல் முடிந்து முடிவு வருவதற்கு முன் 'மந்திரிசபையில் திமுக சேராது.வெளியிலிருந்து ஆதரவு' னு வீரமா அறிக்கை விட்டுட்டு, அடுத்த நாளே டெல்லிக்கு பறந்து, கடுமையான பேரத்திற்குப் பின் 'வளமான' துறைகளைப் பெற்றுத் திரும்ப, 'சிதம்பர ரகசியத்தால்' விமானத் துறை தெலுங்கானா சந்திரசேகரராவுக்கு போக, உடனே 'மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்' னு தலைவர் பல்டி அடிக்க, 'எனக்கு தெலுங்கானா தான் முக்கியம் மந்திரி பதவி தேவையில்ல ' (நோட் திஸ் பாய்ண்ட்) னு அந்த மானஸ்தன் பதவி விலக, அதையும் ஓடிச்சென்று 'லபக்' கிக் கொள்ள, இங்கதான் சரியத்தொடங்கியது தலைவரின் இமேஜ் .(தலைவரின் மனசக் கெடுத்த பாவி யார்னு தெரியில...)
- அடுத்து 2006ல நடந்த சட்டமன்றத் தேர்தலில,ஆளே இல்லாத கட்சிக்கெல்லாம் அள்ளிக்கொடுத்துட்டு, தலைவர் அம்போ னு வானத்தைப்போல விஜயகாந்த் ரேஞ்சுக்கு நிக்க,சந்தடி சாக்ல காங்கிரஸ் 40 சீட் க்கு மேல ஜெயிக்க ,வேற வழியில்லாம காங்கிரசோட கூட்டணி ஆட்சி அமைக்க, அங்கதான் சனியன் சடு குடு ஆட ஆரம்பித்தது.
- வண்டி நல்லாதான் போய்கிட்டிருந்திச்சு... . குடும்ப பிரச்சனையில, 'இந்தியாவிலே நான் தான் டாப் டக்கரு மினிஸ்டர்'னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச தயாநிதி மாறன தூக்கி கடாசிட்டு அந்த இடத்துக்கு நம்ம ராசாவ போட்டீங்களே...அங்கதான் தலைவரே உங்களுக்கு ஏழரை ஆரம்பிச்சது.
- ராசாவுக்கு உள்ளங்கை அரிப்பெடுக்க, அவரும் லைசன்ஸ் தர்றதா சொல்லிட்டு, 'காஞ்ச மாடு கம்புல பூந்த கதையா'கொஞ்சம் (!!!!!) கமிஷன் அடிக்க, அது கனிமொழியின் மேற்பார்வையில் நடக்க,பிறகு 'TRAI' மூலம் மீடியா வுக்கு இந்த விஷயம் லீக் ஆக, என்ன செஞ்சிருக்கணும் தலைவரே ?...குடும்பப் பிரச்சனைக்காக தயாநிதி மாறன ஒரே நாளுல மினிஸ்டர் பதவியிலிருந்து தூக்கி எறிஞ்ச நீங்க ..குற்றமற்றவர்னு நிருபிக்கும் வரை ராசா அமைச்சர் பதவில் இருக்கமாட்டார் னு அறிவிக்கிறத விட்டுட்டு 'அவர் தாழ்த்தப்பட்டவர், பழைய முறையில்தான் லைசன்ஸ் கொடுத்தார்,இழப்பு அம்புட்டு இல்ல இம்புட்டுதான்'னு ராசாவுக்கு ஒத்து ஊதுனத பாத்து,குடும்பமே கொள்ளையடிச்சிதுனு பேசுற அளவுக்கு ஆயிடிச்சே தலைவரே....
- நம்ம மாநிலத்துக்கு வருவோம். அம்மையாரை விடுங்க.. இந்த ஈ.கொசு.இளங்கோவனும், கைப்புள்ள யுவராஜாவும்,ஏதோ தமிழ்நாட்ல காங்கிரஸ்னு ஒரு கட்சி இருக்கிறதா நெனச்சிகிட்டு..பேசினப் பேச்சு இருக்கே..நொந்து போகாத திமுக தொண்டனே கிடையாது.அவங்கள அடக்க அட்லீஸ்ட் ஒரு 'கேள்வியும் நானே!பதிலும் நானே!'அறிக்கையாவது விட்டிருக்கலாமே?
- திராவிட உணர்வோடு தனி ஈழ உணர்வையும் தொண்டர்களுக்கு ஊட்டி வளர்த்த உங்களுக்கு,ஈழப் பிரச்சனையில் ஏன் இந்தத் தடுமாற்றம்? அரசியலும் பதவியும் முக்கியம்தான். அதற்காக கொள்கையில் மாற்றம் வரலாமோ ? முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழினம், சிங்கள வெறியர்களால் ஒடுக்கப்பட்டு சிதைந்துக் கொண்டிருக்கும்போது..'ஜம்'னு .'.பிளைட்ஏறி டெல்லிக்குபேரம் பேச புறப்பட்டுப் போனீங்களே இது ஓட்டுப் போட்ட மக்களுக்கு மகிழ்ச்சியையா ஏற்படுத்தியிருக்கும்?
- டெல்லியில் அன்னையாரின் சகாக்களுடன் சிரித்துக்கொண்டே பேரம் பேசிய செய்தி TV யில் காண்பிக்க ,கீழே FLASH NEWS ல் PRABHAKARAN DEAD னு ஓட,தொண்டர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா?
- 'ஸ்பெக்ட்ரம் வழக்கு முடியும் வரை அன்னையை சந்திக்க மாட்டேன் ' என்று அறிக்கை விட்டுட்டு ,கடைசியில் கனிமொழியை மீட்டெடுக்க குடும்ப சகிதமாக டெல்லிக்கு சென்று 'இந்தா தாயி ...இதுவரையில் நாங்க கட்டிக் காத்த ஒட்டுமொத்தத் தன்மானத்தின் மிச்சமீதி..பிடி தாயி..' னு மூட்டைக் கட்டி கொடுத்துட்டு வந்துட்டிங்களே ....
தனியாகஅரசியல் பண்ணுவது என்பது கஷ்டம் தான். வாரிசு அரசியல் என்பது இந்தியாவில் எழுதப்படாத சட்டம். இதற்கு எந்த அரசியல் தலைவரும் விதி விலக்கல்ல. இதற்கு விதை போட்டதே காங்கிரஸ் தான். ஆனால் வாரிசு அரசியல் என்பது வேறு... குடும்ப அரசியல் என்பதுவேறு... தளபதியை நீங்கள் வாரிசாக உருவாக்கியபோது ஏற்றுக்கொண்ட தொண்டர்களின் மனப்பக்குவம், மற்றவர்களை முன்னிறுத்திய போது ஏற்படாமல் போனது ஒன்றும் ஆச்சர்யமில்லை.
திமுக வின் வரலாற்றில் வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் சந்தித்திருக்கிறது.எந்த ஒரு அனுதாப அலையும் திமுக வை ஆட்சிபீடத்தில் அமர்த்தியதேயில்லை.ஒவ்வொரு முறையும் போராடியே ஜெயித்திருக்கிறது.அந்தப் போராட்ட உணர்வு உடன்பிறப்புகளிடம் இன்னமும் இருக்கிறது.அரசியலில் நெளிவு சுளிவு,நீக்கு போக்கு எதுவும் இல்லாமல் மக்களின் பிரச்சனைக்காக நேரடியாகப் போராட வேண்டும்.திமுக வை வேரறுக்க இது ஒன்றும் வேலமரம் இல்லை.. லட்சோப லட்ச தொண்டர்கள் எனும் விழுதுகளால் தாங்கிப் பிடிக்கப் படும் விருச்சிக ஆலமரம்....இதை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்ந்துப் போவார்கள்
தமிழுக்காக வாழ்ந்துக் கொண்டிருக்கும் கடைசி அரசியல் தலைவர் நீங்கள் ..உங்கள் காலடித் தடம் நடந்துத் தொடர்ந்து வர லட்சோப லட்ச தொண்டர்கள் உங்கள் பின்னால் இப்பவும் இருக்கிறார்கள் ........
...
---------------------((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))--------------------
\\திமுகவிற்கும் தன்மானத்திற்கும் தொடர்பு.\\ பணம், பதவி இது தான் இவர்களுக்கு First, அப்போ தன்மானம்?- கிலோ என்ன விலை?
ReplyDelete\\ராஜீவ்கந்தியின் கொலைக்குப் பிறகு திமுகவிற்கு விடுதலைப்புலிகளின் தொடர்பு என்ற சாயம்\\ இது தான் இவங்க ஒரிஜினல் கலரே.
ReplyDelete\\திமுக வை வேரறுக்க இது ஒன்றும் வேலமரம் இல்லை.\\ "முல்லு மரம் சிறு செடியாய் இருக்கும் போதே அழிச்சிடனும், வளர்ந்தா அதை அழிக்க கோடரி மாதிரி ஆயுதம் தேவைப் படும், அப்படியும் வெட்ட முயன்றாலும் அதை வெட்டுபவருக்கே அந்த மரம் ஆபத்தை விளைவிக்கக் கூடும்" . -வள்ளுவன் கூற்று. அந்தக் கதை தான் இப்போ நடந்திருக்கு.
ReplyDelete\\லட்சோப லட்ச தொண்டர்கள் எனும் விழுதுகளால் தாங்கிப் பிடிக்கப் படும்.\\ யாரு, ஒவ்வொரு தடவையும் தில்லு முல்லு கட்சி ஆட்சிக்கு வரும் போது மணல் கொள்ளை, நில அபகரிப்பு, சாராய வியாபாரம் பண்ணு வானுன்களே அவனுங்க தானே இவனுங்க?
@Jayadev Das.சரியான பின்னூட்டம் ...நன்றி.
ReplyDelete