எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாத நம் இசைப் புயல் A.R. ரஹ்மான் தன் இசைத்துறையில் உள்ள ஒரு இசை அமைப்பாளரை பாராட்டிதால் தமிழ் அமைப்புகளின் அதிர்ப்தியை சம்பாதித்துள்ளார்.பாராட்டுவது நல்ல விஷயம் தானே இதில் என்ன தவறு இருக்கிறது என்று யோசிப்பவர்கள் மேலும் படிக்க....
முல்லைப் பெரியாறு அணையை வேட்டு வைக்க வளைகுடா நாடுகளில் உள்ள மலையாளிகளைத் தூண்டி அவர்களின் நிதி உதவியால்கேரள அரசின் பூரண ஆசியோடு தயாரிக்கப் பட்ட ஹாலிவுட் படம் தான் DAM999. இதில் 999 என்பது அவர்களோடு நாம் செய்துக் கொண்ட ஒப்பந்தக் காலத்தை நக்கல் செய்யும் உள்குத்து...ஆனால் இது முல்லைப் பெரியாறு சம்மந்தப்பட்ட படமில்லை என்று படத்தின் இயக்குனர் சோஹன் ராய் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தது பழைய கதை. விஷயம் இதுவல்ல...
இந்தப்படத்திற்கு இசை அமைத்ததற்காக அதன் இசை அமைப்பாளர் ஓஷிப்பச்சன் (பட்... காசு வாங்கிக்கிட்டுதான் மியூசிக் போட்டாராம்.) ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். இவறும் மலையாளிதான். இந்தப்படத்தில் உள்ள மூன்று பாடல்கள் பரிந்துரையில் உள்ளதால் எப்படியும் ஒரு பாடலுக்காவது ஆஸ்கார் கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்பப் படுகிறது. இசைப் புயலுக்கு அடுத்து ஆஸ்கார் சிகரத்தைத் தொடப்போகும் மற்றொரு இந்தியர் என்பதால் எதாவது சொல்லித்தானே ஆகவேண்டும் (வயிற்றெரிச்சல்?.......ச்சே.. ச்சே ).
'அவருக்கு ஆஸ்கார் அவார்டு கிடைப்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்' என்றா சொல்ல முடியும்?. ஒரு பாடலுக்காவது அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் னு சொல்லியிருக்கார்.(கவனிக்க..... ஒரு அவார்டு மட்டும்) இதை அவரைத்தவிர வேறு யாரும் சொல்ல முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் சொல்ல வேண்டியதாயிற்று
Music Director Ousephachan |
ஏ.ஆர்.ரகுமான் கேரளாவை பூர்வீகமாக்கொண்டவர் என்பதால்,அந்தப் பாசத்தில் பேசுகிறார் என்று அவரை வம்புக்கு இழுப்பது எந்த விதத்தில் நியாயம்?.மேடையில் ஏறினாலே தமிழை மறந்துப்போகும் சினிமாக் காரர்கள் மத்தியில் நம்ம இசைப் புயல் இரண்டு கைகளிலும் ஆஸ்கார் விருதை வைத்துக்கொண்டு 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொல்லியபோது பூரிக்காத தமிழன் உண்டோ ?அவர் என்ன மலையாளத்திலா பறஞ்சார் ?
உண்மையானப் பிரச்சனைய விட்டு விட்டு 'ஏ.ஆர்.ரகுமானை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்' என்பது சுத்த மடத்தனம்..........
No comments:
Post a Comment