Friday, 30 December 2011

சிதறல்கள்-3

  

 சரி.....மூணு நாளா கண்ணு முழிச்சி முல்லைப் பெரியாறுப் பற்றி எழுதினேனே ..நாலு  நண்பர்கள் கிட்ட      பகிர்ந்துகிட்டா தானே  நம்ம திறமை(சரி.... சரி... ) வெளிய தெரியும்  என்கிற நப்பாசையில..   முதல்ல  ஒரு நண்பருக்கு   .'.போன்   போட்டு, நேரா விசயத்துக்கு  வந்தேன்...

"நான் ஒரு ப்ளாக் ஓபன் பண்ணிருக்கேன்...அதுல முல்லைப் பெரியாறுப் பத்தி எழுதியிருக்கேன்.. . '.ப்ரீயா இருந்தா கொஞ்சம் படிச்சு பாருங்க..." 

"அவரப்பத்தி நீங்க என்ன புதுசா எழுதியிருக்கீங்க ?...." என்று நண்பரிடமிருந்து  பதில் வர, சற்றுக் குழம்பிய நான்....பிறகு சுதாரித்துக் கொண்டு,

"தந்தை பெரியாரு இல்லப்பா....முல்லைப் பெரியாறு...... " என்று அழுத்தமாக சொன்னவுடன்,

"ஓ....முல்லைப்பெரியாரா....."என்று நண்பர் கொஞ்சம் இழுக்க, அப்பாடா ஒரு வழியா நம் கொள்கை பரப்பும் வேலையை  கச்சிதமாக செஞ்சுட்டோமேனு  பட்ட சந்தோசம்  கொஞ்சம்    நேரம் கூட நிலைக்கல..     அடுத்ததா அங்கிருந்து ஒரு   வினா வந்தது..


" ஆமா .....இவரு யாரு?..."

(ப்ளாக் ல எழுதினோமா ...கம்ப்யூட்டர இழுத்து மூடினோமா   ...படுத்தோமா ... காலையில    ஆ.'.பிஸ்   போனோமான்னு இருக்கணும் அதவிட்டுட்டு இது மாதிரி அதிகப்பிரசங்கி வேலையெல்லாம் செய்யக்கூடாது.)

--------------------------------------((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))----------------------------


    ஒரு அழகான அசத்தலான சிறுகதை. அது...'எங்கள் கறுந் தமிழ்'   கவிப்பேரரசு  வைரமுத்துவின் சிந்தனையிலிருந்து வைரங்களாய் ....முத்துக்களாய் ...சிதறிய கவிதை .......
 

சிறுமியும் தேவதையும் -கவிப்பேரரசு வைரமுத்து

திடீரென்று 
மேகங்கள் கூடிப் 
புதைத்தன வானை

ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று

பூனையுருட்டிய கண்ணாடிக் குடமாய்
உருண்டது பூமி 
மருண்டது மானுடம்

அப்போதுதான் 
அதுவும் நிகழ்ந்தது

வான்வெளியில் ஒரு 
வைரக்கோடு 

கோடு வளர்ந்தது
வெளிச்சமானது 

வெளிச்சம் விரிந்து 
சிறகு முளைத்த  தேவதையானது

சிறகு நடுங்க
தேவதை சொன்னது

'48 மணிநேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது
ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்'
 
இரண்டே இரண்டு 
நிபந்தனைகள் ;
'எழுவர் மட்டுமே ஏறலாம்
உமக்கு பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்'

புஜவலிவுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான் 
அவன் கையில் 
இறந்த காதலியின் 
உடைந்த வளையல் 
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு 

'இன்னொரு  கிரகம் கொண்டான் 
என்றென்றும் வாழ்க '
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி 
தங்கக்கடிகாரம் கழற்றிஎரிந்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்
உள்ளே துடித்தது-
சுவிஸ் வங்கியின்
ரகசிய கணக்கு

இறந்துவிடவில்லையென்ற சோகத்தை 
இருமி இருமியே 
மெய்பித்துக் கொண்டிருக்கும் 
நோயாளி ஒருவர் 
ஜனத்திரள் பிதுக்கியதில் 
சிறகொதுங்கினார்
அவர் கையில் 
மருந்து புட்டி
அதன் அடிவாரத்தில் 
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள் 

அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்
ஜோல்னாப் பையில்
அச்சுப்  பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை 

தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி
கலைந்த ஆடை மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்
கைப்பையில் 
அமெரிக்கன் வங்கிக் கடன் அட்டை

கசங்காத காக்கிச் சட்டையில் 
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி 
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்
லத்தியை வீசி எறிந்தாள்- ஒரு 
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்

ஒருவர் 
இன்னும் ஒரே ஒருவர்
என்றது தேவதை 

கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய
சிறுமியொருத்தி
பூவில் ரத்த ஓட்டம் 
புகுந்தது போன்றவள் 
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் ஏறினாள்

'நாய்க்குட்டிஎன்பது
பொருள் அல்ல- உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை 

'நாய் இருக்கட்டும் 
நானிறங்கிக் கொள்கிறேன் '
என்றனள் சிறுமி 

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு 
சிலிர்த்த வேகத்தில் 
சிதறிவிழுந்தனர் சிறகேறிகள்

வான் பறந்தது தேவதை 
சிறுமியோடும் செல்ல நாயோடும்.

-------------------------------------------------((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))--------------------------

1 comment: