Saturday, 24 December 2011

மன்னார்குடி மா.'.பியா...ஊரப்பாக்க போவியா.....



     -  திரை விமர்சனம்  -     
       
   ஜெயாவின் அதிரடி ஆக்சன் கலந்த அடுத்த மசாலா  படம்  ரிலீஸ் ஆயிருக்கு. இவரே நடித்தும்  இயக்கியும் இருக்கிறாரு.சண்டைக் காட்சியில தனி ஆளா நின்னு பறந்து பறந்து அடிக்கிறாரு.  நேர்த்தியான  டைரக்சன். படத்தின் ஒப்பனிங்கும் நல்லாத்தான் இருக்கு. கதை  திரைக்கதை வசனம்  எல்லாமே  'சொம்பு சோ' எழுதனதா சொல்றாங்க. ஒரு சில பேர் 'கேடி மோடி' எழுதி யிருக்கலாம்னு     நம்புறாங்க.(விட்டா...அமெரிக்கவிலிருந்து ஒபாமா   எழுதனது...  ஜப்பானிலிருந்து ஜாக்கிசான் எழுதனதுன்னு  கதை கட்டுவாங்க  போல....) இதன்  பின்னணி  இசையை  வழக்கம்    போலவே   ஜெயாவுக்கு துதிபாடும் அவங்க ஆத்து பத்திரிக்கைகள்   கச்சிதமா  செஞ்சிருக்காங்க... இடை இடையே  ரத்தத்தின்  ரத்தங்கள்  செம குத்தாட்டம் வேற போடுறாங்க..   சீரியசான படத்தில   பி.எச்.பாண்டியன் கொஞ்ச நேரம் வந்து  காமெடி  பண்ணிட்டு போறாரு. 



                    கதை....வழக்கமான கொள்ளைக் கூட்ட கதை தான். ஆராம்பத்துல எல்லாரும் ஒன்னா சேர்ந்து தான்   கொள்ளையடிக்கிறாங்க.கொள்ளையடிச்சத  மொத்தக் கும்பலும் சமமா பங்கிட்டுகிறாங்க........     இதுல கொள்ளைக்கூட்ட பாஸ் மட்டும் கொஞ்சம் உஷாரா... தான் பேருல எதுவும் வச்சிக்காம தன் தோஸ்து  பேருல இருக்கிற மாதிரி செட்டப் பண்ணிடுறாரு. இங்கதான் ஆரம்பிக்குது பிரச்சனையே.....இதுல அந்த கும்பலுக்கு உள்ளேயே ஈகோ பிரச்சனையாயி அவங்களுக்குள்ளே அடிச்சிகிறாங்க....கடைசியில நாமெல்லாம் ஒரே குடும்பம் னு சமாதானமாயி இதற்கெல்லாம்  காரணமான அவங்க 'பாஸ'பழிவாங்க  ரகசியமா  ஒரு திட்டம் போடுறாங்க....... அது என்ன திட்டம் னு சொல்றதுக்குள்ள இடைவேளை வந்திடுது......




         படத்தின் ஆரம்பமே    படு   த்ரில் !!. படம் ஆரம்பித்த உடனே ஒரு குழந்தைபிறக்குது. என்ன ஒரு ஆச்சர்யம்!!!.அதுக்கு பெரிய்ய்ய...... மீசை முளைச்சிருக்கு..அத சோதிச்ச டாக்டர் 'வாட் எ மிராக்கில்! ..     இந்த   கொழந்தைக்கு இப்ப 26 வயசு ஆகுது...' னு சொல்ல, உடனே நம்ம பாஸ் அந்த குழந்தைய 'வளர்ப்பு மகனா' தத்தெடுக்கிறார். அப்போ .. ஒரு தாலாட்டு பாட்டு ஒன்னு வருது.  இதுதான் இந்த  வருஷ சூப்பர் ஹிட் ....

                            "நீ தான்டா என் வளர்ப்புப் பிள்ளை...
                              உன்னை விட்டா எனக்கு யாருமில்ல 
                             உங்க குடும்ப இம்சை தாங்க... முடிய வில்ல 
                             நான் கண் அசந்தா என்சொத்து எனக்கே இல்ல...." அப்படின்னு நம்ம பாஸ் பாட ..
                             
                           "அம்மா நீ படாதே கவல....
                            நாங்களெல்லாம் கிணத்து தவள....
                            உங்களை ஒழிக்கிறத விட எனக்கு வேறென்ன வேல....
                            அப்படி  செய்யலன்னா நான் வளர்ப்புப்பிள்ளையே இல்ல..." னு எசப்பாட்டு பாடுறார்...



பிறகு அந்த பாலகனுக்கு கல்யாணம் பண்ண முடிவுசெஞ்சு ஊரையே அமர்க்களப்படுத்திடுறாரு...அந்த கல்யாண ஊர்வலத்தில ஒரு ராப் சாங் வருது...

                "ஒரு யானை... யய்ய... யய்யா....
                 தன் தலையில....தன்னனன்னா ..... 
                 மண்ண வாரி.....யம்மா யம்மா
                 போட்டுகிச்சி....   அய்யய்யையோ ...." 
  
இன்னும் கொஞ்ச நாளைக்கு இதுதான் 'டாப் டென்' ல 'நெ ஒன்'.......
(கடைசியில அந்த மகனே இவருக்கு எமனா வர்ற மாதிரி கிளைமாக்ஸ்ல ஒரு  ட்விஸ்ட் இருக்கு. )


        பாஸ 'உள்ள' தள்ளிட்டு அந்த இடத்துக்கு இவங்க வர்றதா போட்ட திட்டம் கடைசியில பாஸுக்கே தெரியவர...பிறகு பாஸு பொறுத்தது போதும்னு பொங்கி எழ.....இங்கதான் படம் சூடு பிடிக்குது....கொதிச்சி போயி  அவர் ஒரு பாட்டு படுறாரு....அப்ப... தியேட்டருல விசில் பறக்குது....


            "நம்பி.. நம்பி.. வெம்பி.. வெம்பி.. ஒன்றுமில்லை
             என்றபின்பு உறவு கிடக்கு போடீ...
             இந்த உண்மையை  கண்டவள் மாமீ........."

      கடைசியில பாஸு  இவங்கள    அதகளம் பண்ணினாரா? அல்லது இந்த கும்பல் கூட்டத்தை விட்டே துரத்தப்பட்டதா என்பதை கலைஞர் கொடுத்த இலவச டிவி யில் ஜெயா டிவி நியூஸ்-ல் பார்த்து தெரிந்து கொள்க.....

.  
       இது ஜெயாவின் 'ஜெயேந்திரருக்கு காப்பு ' படம்  போல் வெள்ளி விழா  கொண்டாடுமா? அல்லது   'சமச்சீர் கல்விக்கு சங்கு ' , 'அண்ணா  நூலகத்துக்கு  ஆப்பு' படம் போல் அட்டர்  .'.பிளாப் ஆகுமா என்பதை அப்பாவி மக்கள் தான் முடிவு செய்வார்கள்.....     



    
            

4 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு மணி... ஆச்சர்யமா இருக்கு....

    ReplyDelete
  2. நடராஜன்......இத நான் எதிர் பாக்கல..... ரொம்ப நன்றி.....

    ReplyDelete
  3. என்னதான் தோழி என்றாலும், "எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடிச்சிக்கோ" என்று விடும் அளவுக்கும், சசிகலா சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டு வதற்கும் அப்படி என்னதான் காரணமாயிருக்க முடியும்? சோ மாதிரி சோம்பு தூக்கிகள் கூடவே இருந்தும் இதை தப்பு என்று புரிந்துகொள்ள இத்தனை வருடங்களா ஆக வேண்டும்? அரசுக்கு சம்பந்தமில்லா ஒரு தனி கொள்ளைக் கூட்டத்தின் பிடியில் ஒரு மாநிலத்தை ஆள்பவர் இருந்தால் அந்த மாநிலம் எங்கே உருப்படும்? அதன் மக்கள் கதி என்ன? இவர்கள் வெளியில் தள்ளப் பட்ட செய்தி கேட்டு [இந்த நாடகம் எத்தனை நாளைக்கோ!!] தொன்டர்கள் உட்பட கட்சியில் அனைவருக்கும் மகிழ்ச்சி, அந்த அளவுக்கா மற்றவர்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் இவ்வளவு நாளும் அந்த அம்மா இருந்தார்?

    ReplyDelete
  4. @Jayadev Das உங்களின் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி.நண்பரே..உங்களின் கோபம் தான் எனக்கும் இருந்தது.

    ReplyDelete