Monday, 14 May 2012

தமிழ் சினிமாவின் ரியல் ஹீரோக்கள் ...


     70-80 களில் தமிழ் சினிமா ஹீரோன்னா இப்படித்தான் இருக்கணும்னு ஒரு ட்ரென்ட் இருந்தது.படத்தின் க்ளைமாக்சிலோ அல்லது ஹீரோ-ஹீரோயினோட முதல் சந்திப்பிலோ இப்படி ஒரு காட்சி கட்டாயம் இருக்கும்.

        அதாவது நம்ம வில்லன்(அது பழுத்த கிழமா கூட இருக்கும்) ஹீரோயினை அம்பாசிடர் காருல லவட்டிகிட்டு போயிடுவார்.இதை பல தொழில்நுட்ப உதவியுடன் தெரிந்துக்கொண்ட நம்ம ஹீரோ பின்னாடியே பைக்கில சேஸ் பண்ணிட்டு போவாரு.பத்தடி தூரத்திலிருந்து அப்படியே ஜம்ப் பண்ணி நூறு  கிலோமீட்டர் வேகத்துல போற கார்ர தாவிப் புடிப்பாரு.அதிலும் கரக்டா காருக்கு முன்னாடி உள்ள பேனட் மேல விழுவாரு.அதுல குப்புற படுத்துட்டு ஒரு கதகளி ஆடுவாரு பாருங்க.அத பாக்கிறப்போ நமக்கு உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை இருக்கிற முடி எல்லாம் சும்மா நட்டுகிட்டு தான் நிக்கும்.அப்படியே பக்கவாட்டுல ஒரு கையா இறுக்கி புடிச்சுகிட்டு மறு கையால ஓங்கி ஒரே குத்து.கண்ணாடியை டைச்சிகிட்டுப் போற நம்ம ஹீரோவோட கை,கார் ஓட்டுற வில்லன் முகத்துல குத்தி,ரத்தம் பாத்துட்டுதான் நிக்கும்.

        அட இதுகூட பரவாலீங்க.அடுத்து நம்ம ஹீரோ சர்கஸ் வேலை எல்லாம் கண்பிப்பாரு.காரோட பேனட்ல தலைகீழா படுத்துகிட்டே ஸ்டீரிங்கை புடிச்சி இவரு இந்தப்பக்கம் திருப்புவாரு...வில்லன் அந்தப்பக்கம் திருப்புவாரு... (மவனே அந்த காருக்கு மட்டும் உசுரு இருந்துச்சி..ரெண்டு பேரோட கையையும் இழுத்து வச்சி கடிச்சி வச்சிருக்கும்)இத பாத்துகிட்டு  இருக்கிற நமக்கு டென்சன்,பிபி,வீசிங்,சுகர்,சால்ட் எல்லாம் ஏறிப்போயி பேதியாகிர நிலைமைக்குத் தள்ளப்படுவோம்.ஒரு வழியா காரு ஒரு மரத்தில மோதியோ அல்லது மணல்ல சிக்கியோ நின்னுடும்.அப்புறமென்ன..இவ்வளவு  நடந்தும்  கொஞ்சம் கூட சோர்வடையாத நம்ம ஹீரோ, அந்த செத்தப்பாம்ப அடிச்சிப் போட்டுட்டு,அவரு(வில்லன்) என்னா செய்யணும்னு நெனைச்சாரோ அத அடுத்ததா நம்ம ஹீரோ நடத்திக்கிட்டு இருப்பாரு.இதுல இன்னொரு பாலிசி வேற.ஹீரோயினை ஹீரோதான் ரேப் பண்ணனும்.வில்லனோட கை சுண்டு விரல் கூட ஹீரோயின் மேல பட்டு விடக்கூடாதுனு நாம தவியாய் தவிக்கிற தவிப்பு இருக்கே...ஸ்.. அப்பாடா.. அது அந்த ஹீரோயினைப் பெத்த அவுங்க ஆத்தாவுக்குக் கூட இருக்காது. 

       ஆனால் 80-90களில் 'பா' வரிசை இயக்குனர்கள் கோலோச்சியிருந்த காலகட்டத்தில் வேற ஒரு ட்ரென்ட் இருந்தது.இங்கு கார் சேசிங் இருக்காது. ஓடுற காருல தாவுற சீனு இருக்காது.ஏன் க்ளைமாக்சில பைட்டே இருக்காது. ஆனால் அம்பாசிடர் காருக்குப் பதிலா ஒரு அப்ராணி இருப்பாரு.இந்த அப்பாவி அப்ராணிய அரவான் ஸ்டைல்ல குத்த வச்சி கழுத்த வெட்டினாக் கூட பரவாயில்ல.ஆனால் அதை விட்டுவிட்டு அவர் மீது இவர்கள் ஏவிய அடக்குமுறையும்,மன-பாலியல் ரீதியான வன்கொடுமையையும் பார்க்கும் போது இந்த மனித உரிமைக் கமிசன் என்ன மல்லாக்கப்படுத்து மலையாள படம் பார்த்துக் கொண்டிருந்ததா என்ற எண்ணமே எல்லோருடைய மனதிலும் மேலோங்கி நின்றது .
  
       தனக்கு நிச்சயம் பண்ணின பெண்ணை தாலிகட்டும் கடைசி நேரத்தில் பட டைட்டிலில் முதலாவதாக போடப்பட்டு-அந்தப்படத்திற்கு ஹீரோ என்று  சொல்லப்ப
டும் அந்த 'டூப்'புக்கு தாரைவார்த்துவிட்டு,தன் மனசு தன்னைத் திட்டும் கெட்டகெட்ட வார்த்தைகள் கூட  வெளியே கேட்டுவிடக்கூடாதென்று தாலி ஏந்தின அந்தக் கரங்களை  நெஞ்சில்மேல் இறுகக் கட்டி,தன் பிஞ்சு போன முகத்தை முப்பது டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொண்டு 'வடைபோச்சே' என்ற சோகத்தை நெஞ்சில் சுமந்துக்கொண்டு ஒரு 'தியாகச்செம்மல்' போல் காட்சித்தருவாரே......அவருதாங்க 'நம்ம ரியல் ஹீரோ'.சில படங்களில அந்த 'டூப்' ஹீரோக்கள் சப்பிப் போட்ட மாங்கொட்டைக்குகூட இவர்கள் உயிர்கொடுத்து,வாழ்வளித்து ஒரு கருணைக்கடவுளா நமக்கு காட்சியளிப்பாங்க...  
 
     இந்தக் காலகட்டத்தில் இருந்த இந்த 'ரியல்' ஹீரோக்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், பெருந்தன்மையையும்,இரக்கக்குணத்தையும் பற்றி புல்லரித்துப்போய் எழுதுவதற்கு கூகுள் பிளாக்கரே பத்தாது.படத்தில் இவர்களின் பங்களிப்பு குறைவுதான்.ஆனால் இவர்களின் 'சேவை'யும் தியாகமும் அளப்பரியது.படத்தின் டைட்டிலில் பத்தோடு பதினொன்றாகத்தான் இவர்களின் பெயர் இருக்கும்.ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ் இவர்கள் இல்லாமல் நிறைவடையாது.இவர்கள் மட்டும் முரண்டு பிடித்தால்... படத்தின் கதையே கருச்சிதைவாகி,திரைக்கதையே திக்குத்தெரியாமல் தற்கொலைக்கு தயாராகிவிடும் 
     
இதுல நம்ம ரியல் ஹீரோவுக்குனே சில காட்சிகள் இருக்கும்...

ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் சின்னப்புள்ளத்தனமா எதோ சண்டை வர, அந்த ஹீரோவ பழிவாங்கறதா ஹீரோயின் சபதம் போட,இவங்க சண்டைக்கு ஊறுகாயா நம்ம ரியல் ஹீரோ மாட்டிப்பாரு.'மேயிற மாட்டை நக்குற மாடு கெடுத்த மாதிரி ' சிவனேனு இருந்த இவருக்கு ஆசையைக்காட்டி,திடீர் மாப்பிளையாக்கி, மணவறையில கழுத்துக்கு முதல் முடிச்சி போடுறதுக்கு சில மைக்ரோ செகண்டுக்கு முன்னாடி,நம்ம ஹீரோயின் மனசு மாறி இவரு தலையில கல்லைத்தூக்கிப்  போட்டுருவாங்க....

இல்லேனா..ஹீரோ தனியா ஒரு ஸ்டெப்னி வச்சிருப்பாரு.படத்தோட க்ளைமாக்ஸ் வரை அதோட குடும்பம் நடத்திட்டு,ஒருத்தனுக்கு ஒருத்தி என்கிற நம் தமிழ்நாட்டுப் பண்பாடு-பாரம்பரியத்தை நிலை நாட்டும் பொருட்டு, அந்த ஸ்டெப்னிய கடைசியில் நம்ம ரியல் ஹீரோ தலையில் கட்டி வச்சிடுவாங்க.நம்மாளும் பெருந்தன்மையோடு(?) இத ஏத்துப்பாரு..


இத எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இவங்க பேசறதுக்குனு சில வசனங்கள் இருக்கு...

ஆம்பளைங்க தப்பு பண்ணா...பொம்பளைங்க ஏத்துக்கிறது இல்லையா... அது மாதிரிதான் இதுவும்.(ஏண்டா நாயே..வாழ்க்கை கொடுக்கிறதுன்னு முடிவாகிப்போச்சி...எதுக்கு இந்த வெட்டி வசனம்?)

ரு உண்மையான காதலை சேத்து வச்ச சந்தோசம் ஒன்னே போதும். இந்த நினைவுகளோட கடைசி வரையில கல்யாணமே செஞ்சிகாம இருந்திடுவேன்.(அது எப்படிடா.....குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத மாதிரியே பேசுறிங்க....)

ரெண்டு ஒடம்பும் ஒன்னு சேர்றத விட ரெண்டு மனசும் ஒன்னு சேருறதுதான் உண்மையான தாம்பத்தியம்.(வசனமெல்லாம் நல்லாத்தான் இருக்கு...ஆனா வடைபோச்சேய்யா....)

என்னால உனக்கு 'அந்த' சந்தோசம் தரமுடியாது.ஆனா ஒன்ன கடைசிவரை கண்கலங்காம வச்சி காப்பாத்துவேன்.('வக்கு' இல்லைன்னாலும்  நல்லா வக்கனையாப்பேசுடா.....)

நான் கட்டினது வெறும் கயிறுதான்...ஆனா அவ மனசுபூரா நீங்கதான் இருக்கீங்க...அவ ஓங்க கூட வாழுறதுதான் சரி. (மனசுல பெரிய தர்ம பிரபுன்னு நெனைப்பு..நீ விட்டுக் கொடுக்கலனா ரெண்டு நாலு கழிச்சி அதுவே ஓடிப் போயிடும் நாயே...)

என்னுடைய அப்பா யாருக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பாவோ அவருடைய மகனோட ரெண்டுவிட்ட சித்தப்பாவோட கொழுந்தனாரோட  மச்சான் எனக்கு  தாத்தான்னா அவருக்கு எனக்கும் என்ன உறவு? (அட பிக்காளிப்பசங்களா...இதக் கண்டுபிடிக்கப் போயி..கடைசில என் பொண்டாட்டிக்கும் எனக்கு
ம் என்ன உறவுன்னு தெரியாம குழம்பி போயி நாலு மாசம் தள்ளி வச்சிட்டேண்டா...ஏண்டா நாயே..ஆத்தாளையும் மகளையும் நீயே கரக்ட் பன்றதுக்கு இப்படி ஒரு ஐடியாவா...நீ போட்ட புதிருக்கு விடை தெரியாம முப்பது வருசத்துக்கு முன்னால வீட்டை விட்டு ஓடிப்போனவன் இன்னும் திரும்பி வரவேயில்லையாமே.. )


 இவ்வளவு சொல்லிட்டு நம்ம ரியல் ஹீரோக்கள் யாருன்னு சொல்லாமல் விட்டால் சரியாயிருக்குமா?.....



நம்ம ரியல் ஹீரோக்கள் சங்கத்தலைவரே இவருதான்.இவருக்காக இந்தக் கேரக்டர் படைக்கப்பட்டதா அல்லது இந்தக் கேரக்டருக்காக இவர் படைக்கப்பட்டாரா என்று கல்யாணமாலை நிகழ்ச்சியில ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.அப்படியொரு சாந்தமான பாந்தமான காந்தமான முகம்.இவருக்கு ஹீரோயினை கல்யாணம் முடிக்கப் போறங்கனு சொன்னவுடனே இவருக்கே நல்லாத் தெரியும் ' நாம அதுக்கு சரிபட்டு வரமாட்டோம் '-னு.இருந்தாலும் தாலி கட்டுற நேரத்தில ஹீரோவுக்கு ஏதாவது ஆக்சிடண்டாகி அல்லது பேதியாகி அல்லது எதோ ஒரு எழவு ஆகி ரெண்டு நிமிஷம் லேட்டா வந்தாக்கூட போதும் தாலியக் கட்டிடலாம்னு இவரும் காலங்காலமா காத்துகிட்டு இருந்தாருங்க. ம்ஹும்...அதிலும் இவரு தாலிய கையிலெடுத்த அடுத்த நொடியிலே அந்த சனியம்புடிச்ச ஹீரோ வந்து முன்னாடி நிப்பான்.அவன் இவளை
ப்பாக்க...இது அவனப்பாக்க..நம்மாளு தாலியை மொரைச்சி மொரைச்சி பாக்க....கடைசில அந்தப் பொண்ணு கழுத்துல இருந்த மாலையை கழட்டி ஐயரோட மூஞ்சி மேல தூக்கி போட்டுட்டு ஓடிப்போயி அவனக் கட்டிக்கும். அப்ப... நம்ம ரியல் ஹீரோ தாலிய ரெண்டு கையிலேயும் புடிச்சிகிட்டு இத யாரு கழுத்துல கட்டுறதுன்னு தெரியாம குழம்பிபோய் முகத்தில ஒரு ரியாக்சன் கொடுப்பாரு பாருங்க..அதுக்கே அஞ்சு ஆஸ்கார் அவார்ட் தரலாம்.

  ஆனா எனக்கு தமிழ் சினிமா மேல பயங்கர கோபமுங்க...இப்படியொரு சிச்சுவேசன்ல்ல ஹீரோ-ஹீரோயின் கட்டிப்புடிச்சிக்கிறதையும்,முத்தம் கொடுத்துக்கிறதையும்,கூட இருக்கிறவங்களெல்லாம் ரெண்டு போரையும் அலேக்கா தூக்கி ஹே...ஹே...னு கத்துறதையும் மட்டுமே ஒளிப்பதிவாளரின் கேமரா பதிவு செஞ்சிருக்கு. ஆனால்
ங்க ஒரு ஜீவன் கையில தாலிய வச்சிக்கிட்டு பின்னாடி இருக்குற சுவத்தில தலையால முட்டிகிட்டு தேம்பி தேம்பி அழுவுதே....அதை இதுவரைக்கும் எந்தக் கேமராவாவது பதிவு செஞ்சிருக்கா??..

அட அத வுடுங்க.. ஒரு மீன்கார ரவுடிக்கு, இவரு எந்த விதத்திலங்க கொறஞ்சி போயிட்டாரு? அட அதக்கூட விடுங்க... பாக்காமலே லவ் பன்ற பையன கல்யாணம் பண்ணிப்பாங்கலாம்..பக்கத்திலே இருக்கிற இவர கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களாம்...இது எந்த ஊரு ஞாயம்ங்க?

 இதாவது பரவா இல்லை....இவரு ஒரு பொண்ண லவ் பண்ணுவாரு.அது திரும்பிக்கூட பாக்காது.நல்ல பணக்கார பையனாப் புடிச்சி செட்டில் ஆயிடும். கொஞ்சகாலம் வாழ்ந்து முடிச்சப்பரம்தான் தெரியும் இது அந்தாளுக்கு NO-2 னு. ஒடனே சண்டைப் போட்டுட்டு இந்தப்பொண்ணு பிரிஞ்சி வந்துடும்.இங்கதான் நம்ம ரியல் ஹீரோவோட தியாகத்தை புரிஞ்சிக்கணும்.இது எத்தனை வருஷம் கழிச்சி திரும்பி வந்தாலும் இதுக்காக கன்னிக் கழியாம கற்போட காத்திருப்பாரு நம்ம கம்..(நல்லா வாயில வருதுங்க...) கண்ணியமிக்க ரியல் ஹீரோ.

     இப்படியே பலபேருக்கு  வாழ்க்கைக் கொடுத்து வாழ்க்கைக் கொடுத்து த
ன் வாழ்க்கையையே தொலைச்சிட்டு நிக்கிறாரு.

 கொஞ்ச நாளுக்கு முன்னாடி கீழ்பாக்கத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற ஸ்தலத்திற்கு கீழே நின்னு இவரு எதோ புலம்பிகிட்டு இருந்தாரு.என்னான்னு நைசா காது குடுத்துக் கேட்டேன்...

கிடைக்கிறது கிடைக்காது.....கிடைக்காமல் இருப்பது கிடைக்காது..... கிடைச்சும் கிடைக்காமல் இருப்பது கிடைக்காது....கிடைக்காமல் இருந்து கிடைப்பது கிடைக்காது....கிடைத்ததே கிடைக்காமல் இருந்து கிடைக்காது ...கிடைச்சும் கிடைக்காமல் கிடைத்ததே கிடைக்காமல் இருந்து கிடைக்காது.....கிடைத்து கி.... 

   அடப்பாவிகளா....இந்த பாவம் ஒங்கள சும்மா விடாதுடா.....   
-------------------------------------------------------------------------------------------------------------------



இவரால எதுவுமே முடியலைனாலும் எல்லாமே முடியுங்கிற மாதிரி விரைப்பா இருக்கிறதுதான் இவரோட ஸ்பெஷாலிடியே!...

"எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனால் உங்க மனைவி எனக்கி திரும்ப காதலியாகாது சாரே,"- ஏன் ஆக முடியாது? கள்ளக் காதலியாகலாமே-னு படம் பாக்கிற நமக்கே தோணும்போது இவருக்கு தோணாமப் போச்சு பாருங்க...இதிலிருந்தே தெரிஞ்சிக்கலாம் இவரு எவ்ளோப் பெரிய அப்பிராணி-னு. அந்தாளு இந்த வசனத்த
ச் சொல்லி அந்த அம்மணிய இவரு தலையில கட்டிட்டு,சைடுல வேறொரு டிராக்குல நடத்தினது கடைசி வரை இவருக்கு தெரியாமப் போனதுதான் மிகப்பெரிய சோகம்.  
------------------------------------------------------------------------------
இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல...

 இவரு ஆரம்பத்தில பெரிய மச்சக்காருங்க...கமலே இறங்க முடியாத நைல் நதில இவரு டைவ் அடிச்சி நீச்சல் பழகுனவரு.ஆனா என்னங்க பன்றது.இவரு வெளிநாட்டுக்கு போன அந்த சைக்கிள் கேப்புல இவரு ஆளு நாலு பேரோட பழக ஆரம்பிச்சுடுச்சி..அது நட்பா...? காதலா..? நட்புக்குள்ள காதலா...? நட்பு+காதலா..? நட்பு/காதல்(காதல்Xநட்பு!)....? #&&%காதல்-(2Xநட்பு+^%$><@!/காதல்)....? இதுல எதுன்னு தெரியாம குழம்பிபோய் அன்னைக்கி பிச்சிக்க ஆரம்பிச்சவருதாங்க அவரோட தலைமுடிய..... 

   ஒரு வழியா அடுத்ததா ஒன்னு செட்டாச்சிங்க....ஆனா இவரோட கெட்ட நேரம் அது கடல்ல விழுந்து, தான் யார் என்பதையே மறந்துப் போச்சி....இத சாதகமாக்கின ஒரு பிரஸ்ஓனரு,தன் குழந்தைக்கு அம்மா வேணும்னு அத ரெண்டாந்தாரமாக்கிட்டாரு.இது எப்படியோ நம்ம ஆளுக்கு தெரிஞ்சி போக, வேற வழியில்லாம இவருக்கே கல்யாணம் பண்ண முடிவு செஞ்சாரு அந்த பிரஸ்ஓனரு.ஆனா அதுலதாங்க ஒரு சூட்சுமம் இருந்துச்சி....இவரு தாலி கட்டுற நேரமாப் பாத்து அந்த கொழந்தையை யாருக்கும் தெரியாம கிள்ளி விட்டாரு நம்ம பிரஸ்ஓனரு.அந்த கொழந்தைக்கு என்ன பேசவா தெரியும்? அதுக்கு மட்டும் பேசத்தெரிஞ்சிருந்ததுனா..."ஏண்டா..கண்ணாடி போட்ட கபோதி கம்முனு கிடடா"-னு திட்டியிருக்கும்.பாவம் அதுக்கு தெரிஞ்சது அம்மான்னு அழமட்டும்தான்.அது ஏதோ தன்னைத்தான் அம்மா-னு கூப்பிடுதுன்னு நெனைச்சிட்டு மாலையை கெழட்டி எறிஞ்சிட்டு பிரஸ்ஓனரு பின்னாடி போயிட்டு அந்த அம்மணி.அன்னைக்கி பிக்க ஆரம்பிச்சதுதாங்க மிச்ச முடியையும்.இப்ப அவரு எப்படியிருக்கிறாருனு உங்களுக்கே தெரியும்.

-------------------------------------------------------------------------------



                  இவரு பாக்குறதுக்குத்தான் லூசு மாதிரி இருப்பாரு...ஆனால் இவரு  பலேபலா பலேபலா கில்லாடி.இவர ஓடிப்புடிச்சி,ஒலியாங்கண்டு விளையாடச் சொன்னா...டைரக்டா அப்பா அம்மா விளையாட்டே விளையாடிடுவாரு.இவரு ஒருத்தரு மட்டும்தாங்க விட்டுக்கொடுக்கும் போது கூட சிரிச்சிகிட்டே கொடுப்பாரு.அதுல உள்ள உள்ளர்த்தம் இவருக்கு மட்டும் தான் தெரியும்.

இந்தப் பட்டியல் இன்னும் நீண்டுகிட்டேப்போகும்..........

ஸ்.. அப்பாடா....இதுக்கு மேல பதிவ நீட்ட வேணாம்னு  நெனைக்கிறேன்...

      சரி...நீங்க கேக்கிறது புரியுது.இவங்கள ஏன் ரியல் ஹீரோனு சொல்றேனுதான?..இன்னிக்கு பெரிய ஹீரோவா இருக்கிறவங்க எல்லாம் தொடர்த்து பத்துப் படத்தில காதல தியாகம் பன்ற மாதிரி நடிச்சவங்க.ஆனா நம்ம ஆளுங்க பண்ணின தியாகத்துக்கெல்லாம் அது ஈடாகுமா??????

---------------------------------------------------------((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))-------------------

17 comments:

  1. //அது அந்த ஹீரோயினைப் பெத்த அவுங்க ஆத்தாவுக்குக் கூட இருக்காது//

    சிரிச்சே ஆகணும் - பொருயா சிரிச்சிட்டு படிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாஸ் வாங்க...

      Delete
  2. சத்தியமா இவங்கெல்லாம் ரியல் ஹீரோக்கள் தான். ஒளிப்பதிவாளர் நமக்கு காட்ட மறந்ததை நீங்க சொல்லிக் காட்டிட்டீங்க.

    செம காமெடி பதிவு. அதிலும் அந்த ஏற்றுக் கொள்ளும் வசனங்களுக்கு நக்கல் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி நண்பா.

      Delete
  3. //மனித உரிமைக் கமிசன் என்ன மல்லாக்கப்படுத்து மலையாள படம்//\

    நிசம் நிஜம் அப்படி போடு

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி..அப்படியேத்தான்.

      Delete
  4. //ஹீரோக்கள் சப்பிப் போட்ட மாங்கொட்டைக்குகூட//

    ரொம்ப இன்டெர்ஸ்டிங்

    ReplyDelete
  5. செம நக்கல் நையாண்டி வரிக்கு வரி கமென்ட் போடலாம் - ரியல் ஹீரோக்கள் அடங்.. கொக்கமக்க கடைசில...புரியுது - நல்ல காமடி போங்க - மொத்தத்தில் நம்மளை எல்லாம் மென்டல்லாக்கிபுட்டார்களோ.

    ReplyDelete
  6. உங்க கமெண்டுக்காகவே நான் பதிவு போடனும் போல....மிக்க நன்றி...

    ReplyDelete
  7. //இவரு பாக்குறதுக்குத்தான் லூசு மாதிரி இருப்பாரு...ஆனால் இவரு பலேபலா பலேபலா கில்லாடி.இவர ஓடிப்புடிச்சி,ஒலியாங்கண்டு விளையாடச் சொன்னா...டைரக்டா அப்பா அம்மா விளையாட்டே விளையாடிடுவாரு.இவரு ஒருத்தரு மட்டும்தாங்க விட்டுக்கொடுக்கும் போது கூட சிரிச்சிகிட்டே கொடுப்பாரு.அதுல உள்ள உள்ளர்த்தம் இவருக்கு மட்டும் தான் தெரியும்//

    மீண்டும் மீண்டும் 6 வாட்டி படிச்சி படிச்சி சிரித்தேன்..முக்கியமாக -(சிரிச்சிகிட்டே கொடுப்பாரு.அதுல உள்ள உள்ளர்த்தம் இவருக்கு மட்டும் தான் தெரியும்)- பிரிச்சி மேஞ்சி புட்டீகளே

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்கவும் வச்சிபுட்டீங்க

      Delete
  8. (மவனே அந்த காருக்கு மட்டும் உசுரு இருந்துச்சி..ரெண்டு பேரோட கையையும் இழுத்து வச்சி கடிச்சி வச்சிருக்கும்///////

    ஹா..ஹா..... செம செம.....

    ReplyDelete
  9. இந்த ரியல் ஹீரோக்களால் ரொம்ப பாதிக்க பட்டு இருப்பீங்க போல...ஒவ்வொருத்தரையும் பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க...நைல்நதி...தெரிஞ்சு கிட்டேன் யாருன்னு...

    ReplyDelete
  10. கிடைக்கிறது கிடைக்காது.....கிடைக்காமல் இருப்பது கிடைக்காது..... கிடைச்சும் கிடைக்காமல் இருப்பது கிடைக்காது....கிடைக்காமல் இருந்து கிடைப்பது கிடைக்காது....கிடைத்ததே கிடைக்காமல் இருந்து கிடைக்காது ...கிடைச்சும் கிடைக்காமல் கிடைத்ததே கிடைக்காமல் இருந்து கிடைக்காது.....கிடைத்து கி....

    ReplyDelete