ஆறு கோடியும் மூன்று உயிர்களும்.......
கடந்த வாரம் சிங்கப்பூரில் பரபரப்பாகப் பேசப்பட்ட நிகழ்வு!.எல்லையில்லா அறிவியலின் வளர்ச்சியை அசுர வேகத்தில் முன்னெடுத்துச் செல்லும் மனித சக்தியை,அதன் ஆக்கமே அழித்துவிடும் என்பதை ஆணித்தரமாக உணரவைக்கும் சம்பவங்களில் இதுவும் ஒரு SAMPLE.கடுமையான போக்குவரத்து விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு அதன் மூலம் விபத்துகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்ட நிலையிலுள்ள இந்த 'ஹைடெக்' நகரத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சாலை விபத்து,பார்ப்போர் அனைவரின் நெஞ்சங்களையும் உருக்குலைய வைத்தது.கசக்கப்பட்ட காகிதம்போல் விபத்துக்குள்ளான வாகனங்களும்,சுக்கல் சுக்கலாக சிதறிக்கிடக்கும் அதன் பாகங்களும் நமக்கு நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறது... வரையறுக்கப்படாத வேகத்தில் சென்றால், என்னைப்படைத்த பிரம்மாவேயானாலும் உனக்கு படையல்தான்.!!!

எனக்குத்தெரிந்து இப்படியொரு கவனக்குறைவான அதேநேரத்தில் இவ்வளவு மோசமான ஒரு விபத்து இங்கு நடந்ததாக கேள்விப்பட்டதேயில்லை.அதுவும் இந்தியர்கள் அதிகமாக வந்து செல்லும் 'லிட்டில்இந்தியா'- விற்கு மிக அகுகாமையில் உள்ள புகிஸ் என்னுமிடத்தில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட்-ல் இது நிகழ்ந்துள்ளது. போக்குவரத்து விளக்கின் வழிகாட்டுதலின் படி வந்த டாக்ஸியின் மீது,சிவப்பு விளக்கின் எச்சரிக்கையை மதிக்காமல் மின்னல் வேகத்தில் வந்த .'.பெராரி கார் (விலை இந்திய ரூபாயில் ஆறுகோடி) வெறித்தனமாக மோத, கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது அந்த கொடூர விபத்து. டாக்ஸி ஓட்டுனர்,டாக்ஸியில் பயணம் செய்தவர், .'.பெராரி காரை ஓட்டி வந்த அதன் உரிமையாளர் அனைவரும் 'ஸ்பாட் அவுட்'. இந்த வழியாக நானும் நிறையதடவை குடும்பத்துடன் டாக்ஸியில் பயணித்திருக்கிறேன். இந்தச் சம்பவத்தை கானொளியில் பார்த்தபோது கொஞ்ச நேரம் என் சப்த நாடியும் அடங்கிப்போனது. சிங்கப்பூரில் அவ்வப்போது அங்குமிங்கும் சிற்சில விபத்துகள் நடைபெறுவதை ஊடகங்களின் மூலம் அறிந்திருக்கிறேன்.அதில் பெரும்பாலும் வாகனம் மட்டுமே சேதமடையும். உயிர்ப்பலி மிகக்குறைவே. ஆனால் இந்த ஒரு சம்பவம் தான் சிங்கப்பூர் முழுவதிலும் மிகப்பெரிய அதிர்ச்சியலையை ஏற்படுத்தியிருக்கிறது.அதன் காணொளி கீழே....
முற்றிலுமாய் உருக்குலைந்து போன இந்தக்கார்களின் விலை கோடிகளில் இருக்கலாம்.....ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் காலன் வீசிய பாசக்கயிறுக்குப் பலியாகிப் போன இவர்களின் உயிர்களின் மதிப்பு...?
(மயிரிழையில் உயிர்பிழைத்த-இந்த நிகழ்வை படம்பிடித்த காரின் ஓட்டுனர், "லக்கிலே..."என்று சொல்லும் வார்த்தையில் எமனின் வீட்டு வாசல் வரை சென்று திரும்பிய மரணபயம் தெரிகிறது பாருங்கள்.... # உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டிலே ...)
-------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
வாழ்க பல்லாண்டு
செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லரை சிதரிவிடும்
செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்..... # பிரசன்னா
ஒரு வழியாக நட்பு நடிகைக்கும் பிரசன்னாவிற்கும் இனிதே நடந்து முடிந்திருக்கிறது சினிமாத்தனமான நிஜ கல்யாணம்.பார்த்திபன்கனவு வெளியான காலக்கட்டத்தில்,பெண்தேடும் படலத்திலிருந்த நிறைய கட்டிளம் காளைகளுக்கு சினேகாதான் கனவுக்கன்னி!. "சினேகா மாதிரி ஹோம்லியான பொண்ணாப்பாருங்க"-னு நான் கூட சொல்லியிருக்கிறேன்(பிறகு ஏண்டா இப்படிச் சொன்னோம்னு எண்ணி சுவத்தில முட்டிக்காத நாளே இல்ல).பெட்டிக் கடையிலிருந்து கல்யாணமண்டபம் வரைக்கும் இவங்க வந்து தான் திறந்து வைக்கனும்னு ஒரு ஐதீகமே இருந்தது.அதனாலவோ என்னவோ சைக்கிள்கடை அண்ணாச்சியிலிருந்து 'ஜவுளிக்கடைஓனர்' வரைக்கும் இவரை வைத்து கிசுகிசுக்கப்பட்டது.ஒருவழியாக பிரசன்னாவால் கால்கட்டு போடப்பட்டு, 'ரியல் ஹோம்லி' பெண்ணாக மாற்றப்பட்டுவிட்டார் சினேகா. ஆனால் இவர்கள் திருமணத்தைப் பற்றி பத்திரிகைகளில் அடுத்தடுத்து வரும் செய்திகள் ஒருவேளை இது சினிமாக் கல்யாணமோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.திருமணத்திற்கு முன் "நான் இரண்டு முறை தாலி கட்டுவேன்" என பிரசன்னா அறிக்கைவிட(பின்ன என்ன சிநேகாவா?) உடனே கண்கொத்தி பாம்பாக டெலஸ்கோப் கண்களோடு சமூக நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வரும் 'ட்வீட்டர்கள்' சும்மா விடுவார்களா.."பாத்துப்பா..அப்பறம் இரண்டு தடவை கோர்டுக்கு போற மாதிரி ஆயிடப்போகுது"னு அபசகுனமா ஆரம்பித்து வைத்துவிட்டார்கள். எனக்கென்னவோ"அழகான புள்ளி மானே" பாடலில் வரும் அந்த இரண்டு வரிகள்தான் ஞாபகம் வருகிறது.
எது எப்படியானா நமக்கு என்ன?..இரண்டு பேரும் இணைந்து பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.
---------------------------------------------------
வானம் வசப்படுமே........
வானம் வசப்படுமே........
----------------------------------------------------------------------------
3D CORNER
அப்பனே கணேசா...உன்னைப் பார்க்க முயற்சி செய்பவர்களுக்கு காட்சி தந்து அருள் புரிவாயாக...!
------------------------------------------------------------------------------
3D CORNER
அப்பனே கணேசா...உன்னைப் பார்க்க முயற்சி செய்பவர்களுக்கு காட்சி தந்து அருள் புரிவாயாக...!
------------------------------------------------------------------------------
டைரக்டர் : "ஆக்சுவலா கதைப்படி வில்லன் ஆரம்பத்தில சின்ன சின்ன திருட்டு, அப்பறம் பொய், பித்தலாட்டம், கொள்ளை, கொலை, கற்பழிப்பு..இப்படி படிப்படியா....."
தயாரிப்பாளர்: "பயங்கர தாதா ஆயிடுரானா?"
---------------------------------------------------------------------
வாத்தியார் 1:. " எதுக்கு சார் இந்தப் பையனைப் போட்டு இப்படி அடிக்கிறீங்க?"
வாத்தியார்2: "பின்ன என்ன சார்...ஆங்கிலத்தில மட்டும் பாஸாகி மற்ற சப்ஜெக்ட் -ல பெயிலாயிருக்கிறான்.ஏன்னு கேட்டா ஆதீனம் ஆகுறதுக்கு இது போதும்னு சொல்றான்."
-----------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------
ஜெயில் வார்டன் 1 : "அங்க என்ன ஒரே கலாட்டா?"
ஜெயில் வார்டன் 2 : "இந்த குருக்கள் ராமநாதன் தொல்லை தாங்க முடியில.."
ஜெயில் வார்டன் 1 : "அப்படி என்னதான் பண்றான்? "
ஜெயில் வார்டன் 2 : "இந்த குருக்கள் ராமநாதன் தொல்லை தாங்க முடியில.."
ஜெயில் வார்டன் 1 : "அப்படி என்னதான் பண்றான்? "
ஜெயில் வார்டன் 2 : "வேணும்னா என் வீடியோவையும் போட்டுப்பாரு..எந்த விதத்தில நான் நித்தியானந்தாவுக்கு குறைந்து போயிட்டேன்..என்னையும் ஆதீனம் ஆக்குங்கனு அடம்பிடிக்கிறான்."
நம்ம வண்டு முருகன் ஏதோ தத்துவம் சொல்றாரு..என்னானுதான் கேளுங்களேன்..
வண்டு முருகன் மேலே உள்ள அனைத்தையும் காலி செய்துவிட்டான்.தனி தனி பதிவா போட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.சிறப்பான பதிவு.
ReplyDeleteஎங்கேயும் எப்போதும் படத்தை சிங்கப்பூரிலும் எடுங்கப்பா...
நன்றி நண்பா ...
Delete