Monday, 23 July 2012

ஜனாதிபதி தேர்தலில் செல்லாத ஓட்டுக்கள் போட்ட அதிமுக அப்ரசண்டிகள்...

இந்திய முதல் குடிமகன்..!!!

       உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் இந்தியாவின் 13 வது குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு.பிரணாப் முகர்ஜிக்கு ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் என்ற வகையில் என் வாழ்த்துக்கள். ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது உலக நாடுகளை சுற்றிய அனுபவம் இருப்பதால் திரும்பவும் 'டூர் பேக்கேஜ்' எதுவும் போடமாட்டார் என நம்புவோம்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழி நடத்துபவராகவும் ஆலோசனை வழங்குபவராகவும் இருந்ததால்,நீட்டும் இடத்தில் கையெழுத்து போடும் ரப்பர் ஸ்டாம்பாக இருக்கமாட்டார் எனவும் நம்புவோம்.மூன்று அப்பாவி உயிர்களின்மீது கருணை கொள்வார் எனவும் நம்புவோம்.இனியாவது ஈழ விசயத்தில் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அட்லீஸ்ட் ஆதரவாக ஒரு அறிக்கையாவது விடுவார் எனவும் நம்புவோம்..... நம்புவோம்..... 
  
************************************************************************************************************************************************

ஜனாதிபதி தேர்தலில் செல்லாத ஓட்டுக்கள் போட்ட அதிமுக அப்ரசண்டிகள்...

அட அப்ரசண்டிகளா ..உங்களுக்கெல்லாம் அம்மா என்ன ட்ரைனிங் கொடுத்தாங்கனே தெரியிலையே... நாட்டின் முதல் குடிமகனையே தேர்ந்தெடுக்கிற முக்கியமான தேர்தலில்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு அப்ரசண்டிகள் செல்லாத ஓட்டுகளை போட்டிருக்கு.உங்களைச்சொல்லி குற்றமில்லை.உங்களை நம்பி ஓட்டு போட்டாங்களே...........

அந்த செல்லாத நான்கு ஓட்டும் அதிமுக அப்ரசண்டிகள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்னு கேட்கிறீங்களா...

இந்த தேர்தலில் தமிழகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 45 வாக்குகளும் பி.ஏ.சங்மாவுக்கு 148 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.அதாவது பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்த வாக்குகளின் மதிப்பு 7920தான். பி.ஏ.சங்மாவுக்கோ மொத்தம் 26,048 வாக்குகள் கிடைத்தன.அதேசமயம், தமிழ்நாட்டில் 4 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரணாப் முகர்ஜியை திமுக கூட்டணி ஆதரித்தது. அதேபோல் புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

DMK       -----  23
CPI(M)      ---  10
INC         ------- 5 
PMK         ------ 3 
PT             ------2 
MnMK       ----- 2 

TOTAL         -  45

இந்த  45 வாக்குகளும் அப்படியே பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்து விட்டன.

AIADMK    -- 151   (சித்தப்பு கட்சியும் சேர்த்து)
AIFB           --   1

 TOTAL       --152

ஆக.. இதிலிருந்துதான் அந்த நான்கு செல்லாத ஓட்டுக்கள் விழுந்திருக்கிறது. ஒரு கட்சிக்குள் எத்தனை சேடப்பட்டியார்கள்..!!! ஒருவேளை வாக்குச்சீட்டில் ரெட்டைஇலை சின்னம் இல்லாததால் குழம்பி போயிருப்பார்களோ.... எல்லாம் கொடநாட்டு கோமாதாவுக்கே வெளிச்சம்.!!!

************************************************************************************************************************************************
ஒரு காங்கிரஸ்காரன், இன்னொரு காங்கிரஸ்காரனுடன் பேசுவதில்லை. - முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி.

-முன்னூறு சதுர கிலோமீட்டருக்கு மூணு பேர் தான் இருக்கீங்க.ஒவ்வொரு தடவையும் பஸ் ஏறி அடுத்த ஊருக்கு போய் பேசணும்னா யாரால ஆகும்.

@ Vijaya Lakshmi 

************************************************************************************************************************************************

டெசோ மாநாடு வெறும் கண்துடைப்பு தான் : இளைஞர் காங்கிரஸ் யுவராஜ்

 # # உள்ளாட்சி தேர்தல்ல மக்கள் பூசுன கரி இன்னும் அப்படியே இருக்கு.மொதல்ல உன் மொகரையில இருக்கிற கரியை தொடப்பு....

************************************************************************************************************************************************

கட்சியிலும், ஆட்சியிலும் பெரிய பொறுப்பை ஏற்க தயார்: ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு

 # # அய்யய்யோ.... கைப்புள்ள அரிவாளோட கெளம்பிட்டானே...இன்னிக்கு எத்தன தலை உருளப்போவுதே தெரியிலையே...

************************************************************************************************************************************************
குடியரசுத் தலைவர் தேர்தலில் தவறுதலாக சங்மாவுக்கு வாக்களித்தார் முலாயம்- செய்தி

 # # காங்கிரஸ்காரங்களை கடுப்பேத்த எப்படியெல்லாம் யோசிக்கிரங்கப்பா ....

************************************************************************************************************************************************

அமெரிக்காவில் மர்ம மனிதன் துப்பாக்கிச்சூடு; சினிமா பார்த்து கொண்டிருந்த 14 பேர் பலியாயினர்.

 # # அடுத்து தமிழ்நாட்டில் துப்பாக்கி ரிலீசாகும் போது எத்தன பலி விழுமோ?

************************************************************************************************************************************************

 செங்கோட்டையன் பதவி பறிப்பு - தோப்பு வெங்கடாசலம் புதிய அமைச்சர்

     # # பெயரில் 'செங்'(குத்து) இருப்பதால் என்னவோ குனிவதற்கு சிரமப்படுவதால்,தோப்பு(கரணம்) வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளதாக கோட்டையிலிருந்து கசிந்த ரகசிய தகவல்.

************************************************************************************************************************************************

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்டது ரொம்ப பெருமையா இருந்துச்சு - சரத்குமார்.

# # அதாவது சொம்பு தூக்ற தம்பிக்கு இப்படி ஒரு வாய்ப்பானு எல்லாருக்கும் உன் மேல பொறாம...அதனால நீ சொன்ன வாக்கியத்தை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வச்சுட்டு பக்கத்துலே நீ உக்காந்துக்க...உனக்கு பின்னால வர்ற சந்ததிகள் பாத்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க...

************************************************************************************************************************************************

இனி எவனுக்காவது கொடும்பாவி எரிக்கும் எண்ணம் வருமா?  சீரியசான விசயம்தான். ஆனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை...

************************************************************************************************************************************************

கொஞ்சம் கடி.... 

நடிகை : என் நாய்க்கு நன்றி விசுவாசம் ஜாஸ்தி.

நிருபர்: எப்படி சொல்றீங்க..?

நடிகை: என் பழைய கணவரை தேடிப்புடிச்சு கடிச்சி வச்சுட்டு வந்திருக்குன்னா பாருங்களேன்..
-------------------------------------------------X ----------------------------------------

டாக்டர்...போன வாரம் என் கணவரை நாய் கடிச்சதால அவருக்கு ஏதேனும் பாதிப்பு எற்பட்டிருக்குமொனு பயமா இருக்கு...

எத வச்சி அப்படி சொல்றீங்க?

இப்போல்லாம் பூரிக்கட்டையவிட கல்லை தூக்கினால்தான் ரொம்ப பயப்படுறார்..
-------------------------------------------------X ----------------------------------------

ஏன் சார் பையனைப் போட்டு  இந்த அடி அடிக்கிறீங்க..

பின்ன என்னங்க..முக்கியமான லெட்டரைக் குடுத்து தபால் பெட்டியில் போட்டுட்டு வாடான்னா பெட்டி பூட்டி இருக்குன்னு திரும்பி வந்துட்டான்.

-------------------------------------------------X ---------------------------------------

அப்பா :  ராஜா... உனக்கு தம்பி பாப்பா வேணுமா இல்ல,தங்கச்சி பாப்பா வேணுமா?

மகன் :  எதுவுமே வேணாம்னு சொன்னா மட்டும் நீங்க என்ன சும்மாவா இருக்கப்போறீங்க?

(இந்தக்காலத்து பசங்க எல்லாம் என்னா விவரம்?! )

************************************************************************************************************************************************

29 comments:

  1. ஹா ஹா ஹா அப்பா அதி மு க இங்கயும் ஔட்டா

    பயபுள்ளைங்க என்ன விவரமா இருக்கு... வலைபாயுதே அருமை நண்பா

    ReplyDelete
  2. பாவம் அப்ரசண்டிகள்... ஒருவேளை கை நடுக்கமா கூட இருக்குமோ..... பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  3. 13 வது குடியரசு தலைவர் தானே..?

    ReplyDelete
  4. ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி, 69 சதவீத ஓட்டுகளை பெற்று, அபார வெற்றி பெற்றார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, அவர் பதவியேற்கவுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. /// Pranab Mukharjee as the 14th President of India

      Category: India
      Published on Sunday, 22 July 2012 12:43
      Written by Shruti Chopra

      Today, Pranab Mukherjee was chosen as the 14th President of India. In a nearly one-side election that saw divisions in the opposition NDA, the 76-year-old UPA nominee held a vote value of 7,13,763, garnering 69.3 per cent of the total 10,29,750 valid votes polled ///

      சாரி பாஸ் ..ஒரு சில ஆங்கில பத்திரிகைகள் 14 வது என்று எழுதியிருந்தது...இதோ மாற்றிவிடுகிறேன்.நன்றி..

      Delete
    2. நக்கீரனும் 14 வது என்று கன்.'.பியுஸ் செய்கிறார்கள். :-((

      Delete
  5. ஹி ஹி ஹி ஹி.., அந்த கொண்டும் பாவி எரிப்பு முடியலை ஹி ஹி ஹி அப்ரண்டீஸ் பயலுகளா இருப்பானுக போல ஹி ஹி ஹி!

    ReplyDelete
  6. ட்வீட்கள் அனைத்தும் அருமை! சரவெடி!

    ReplyDelete
  7. நண்பா அந்த நடிகை+நாய் ஹி ஹி ஹி விழுந்து விழுந்து சிரிக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூடத்திற்கும் மிக நன்றி நண்பா..

      Delete
  8. சூப்பர் கலாய்....கைப்புள்ள ஜோக் அருமை....சிங்கம் ராகுல்காந்திக்கு அப்படியே மேட்ச் ஆகுது....

    ReplyDelete
  9. பாஸ், கபடி விளையாட்டில்... புகுந்து ஏறி விளையாடி உள்ளீர்கள்

    அத்தனையும் அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. என்னது கபடியா ?? பாஸ் இது அதைவிட டேஞ்சரஸ் கேம்...

      Delete
  10. //இந்திய முதல் குடிமகன்..!!!//

    பாஸ் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அசைச்சிக்க முடியாது

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நம் விதி என்றால்.....?

      Delete
  11. //செல்லாத ஓட்டுக்கள் போட்ட அதிமுக அப்ரசண்டிகள்...//

    இவுகல்லாம் எம் எல் ஏ ஹி ஹி ஹி வெளங்கிரும்

    ReplyDelete
    Replies
    1. நான்கு சேடப்பட்டியார்கள்... ஆத்தா மலை ஏறப்போகுது ..!

      Delete
  12. //கட்சியிலும், ஆட்சியிலும் பெரிய பொறுப்பை ஏற்க தயார்: ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு//

    அண்ணே சீக்கிரம் வாங்கன்னே....எம்புட்டு நாளைக்குதாம் பிலிம் காட்றது.. ஷ் யபா

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... நீங்களே நொந்து போயிடீங்களா பாஸ்..

      Delete
  13. செங்கு தோப்பு போட்டு இருந்தா - புட்டுகாது, செங்கு தோப்பு போடல தோப்பு ஆப்பு வச்சிடுச்சி

    ReplyDelete
    Replies
    1. பாவம் மனுஷன் நெஞ்சை பிளந்து காண்பிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாயிடுச்சி...... நன்றி பாஸ்..

      Delete
  14. ட்வீட்கள் அனைத்தும் கலக்கல்...
    செய்திக்கு ஏற்ற படங்களை கொடுத்து, அதற்கு உங்களின் விளக்கமும், கடிகளும் ஹா... ஹா... நன்றி...
    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி

      Delete
  15. கொடும்பாவி வீடியோ பகிர்வு சிரிக்கவும்
    சிந்திக்கவும் வைத்தது :) ஏனைய நகைச்சுவைகளும்
    அருமை!..வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பின்னூடத்திற்கும் மிக்க நன்றி..

      Delete
  16. துப்பாக்கீ மேட்டர் ரொம்ப ஓவர்ப்பா........

    அப்புறம் மனசாட்சி பாணில உங்க பதிவிடல் இருக்கு தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இணைந்ததற்கு மிக்க நன்றி நண்பரே..மனசாட்சியும் எனது நண்பர்தான்.

      Delete