Friday, 13 July 2012

ரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...

  திரைச்சிதறல்கள்....  

துரையில் இருந்து 1978-ம் வருடம், நடிப்பதற்காக சென்னை வந்த நடிகர் ராமராஜன் இங்கு வாய்ப்பு ஏதும் கிடைக்காததை அடுத்து டெல்லிக்கு சென்று அங்கு இருந்த அவரது சித்தி மகன் கோபால்தாஸ் வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். அப்போது வயிற்று பிழைப்புக்காக பல வீடுகளில் பாத்திரம் கழுவியதோடு, எடுபிடி வேலைகளையும் பார்த்திருக்கிறார்.

எண்பதுகளில் சினிமாவில் நுழைந்து, துணை இயக்குனராக பணி புரிந்து, பெரிய போராட்டத்திற்கு பின் அவர் ஆசைப்பட்டபடி கதாநாயகனாகி, 1988-ம் வருடம் மட்டும் எட்டு படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார். இதில் பெரும்பான்மை படங்கள் பெரு வெற்றி படங்கள் வேறு.


'வாலி'பக் கவிஞர்..
 ழக்கமாக "ஐட்டம் சாங்கில்" பிரபல நடிகைகள் நடிப்பதுண்டு. ஆனால் பிரபல கவிஞர் ஒருவர் "ஐட்டம் சாங்கில்" நடிப்பது என்பது அபூர்வமான நிகழ்வு. கவிஞர் வாலி சத்யா படத்தில் இடம்பெற்ற "நகரு நகரு" என்ற சாங்கில் நடித்த காட்சி .....
 

கமல், ரஜினிக்கு ஆற்றிய உதவி..
           முள்ளும் மலரும் படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டுமே படம்பிடிக்க வேண்டிய சூழலில் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும்,ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவுக்கும் பிரச்சனை ஏற்பட பிலிம் வாங்கித்தர தயாரிப்பாளர் மறுத்து விட்டாராம்.விஷயத்தை கேள்விப்பட்ட கமலஹாசன் நிதி உதவி செய்து அந்த பாடல்காட்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த பாடல் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்".

இந்த பாடல் ஒலிப்பதிவின் போது எடுத்த படம் .இளையராஜா அருகில் அமர்ந்திருப்பவர் தாடியில்லாத கே.ஜே.ஜேசுதாஸ்.



உதிர்ந்த ' பூ'


நகைச்சுவை நடிகர் "செந்திலின்" முதல் படம் "பசி".
பாக்யராஜின் முதல் மனைவி "பிரவீனாவின்" முதல் படம் "பசி".
குணச்சித்திர நடிகர் "பசி நாராயணனின்" முதல் படம் "பசி".
குணச்சித்திர நடிகை "பசி சத்யாவின்" முதல் படம் "பசி".

தேசிய விருது வாங்கிய "பசி" படத்திற்கு இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் சேரியில் வாழும் பெண்ணாக வாழ்ந்து காட்டி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டிச்சென்ற "ஷோபா" இந்த படத்தின் வெற்றி விழா நடக்கவிருந்த அன்று காலையில் தற்கொலை செய்து கொண்டதுதான் சோகத்திலும் சோகம்.
 

வாலி VS  உடுமலை
ற்பகம் ஸ்டூடியோவில் ஒரு பாடல் கம்போசிங்கில் இருந்த வாலியை பார்க்க பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவி வந்துள்ளார்.

வந்தவர் வாலியை பார்த்து ‘‘நான் ஆணையிட்டால்’னு பாட்டு வரி எழுதின... சரி. அப்புறம் என்ன ‘அது நடந்துவிட்டால்’ னு ஒரு வரி ???.

நாம ஒண்ணு சொன்னா, அது நடக்கும்னு நினைக்கறவன் தானே ஆணையிடற இடத்துல இருக்க முடியும்?. நடந்துவிட்டால்
னு நினைக்கிறவன், என்ன ம_த்துக்கு  ஆணையிடணும்?’ என்று கேட்டுள்ளார்.

வாலி கோபப்படாமல் பொறுமையாக உடுமலையார் மகன் ராமகிருஷ்ணன் பற்றி கேட்க ‘அவன் எங்கே என் பேச்சைக் கேக்குறான்?’ என்று சலித்துக் கொண்டாராம் உடுமலை. உடனே வாலி "அண்ணே! நீங்க அப்பா, அவரு உங்க மகன். ஆணையிடற இடத்துல நீங்க இருக்கீங்க! ஆனா நீங்க ஆணையிட்டாலும் உங்க பேச்சை உங்க மகன் கேட்கல அதனாலதான் ஆணையிட்டால் கூட, அது நடந்தால்தான் உண்டுன்னு நான் பாட்டு எழுதினேன்!’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

உடுமலையார் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு ‘ஒத்துக்கறேன்! உன் பாட்டு கரெக்ட்!’ என்று பாராட்டினாராம். 


ரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...
தேவர் படங்களின் வசனகர்த்தாவாக இருந்த கலைஞானம், ஒரு படம் தயாரிக்க விரும்பியுள்ளார். இதற்கு ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் உதவுவதாக சொல்ல, உடனடியாக தன் கையில் இருந்த 5000 ருபாயை அட்வான்சாக கொடுத்து அந்த புதிய படத்திற்கு ரஜினியை ஒப்பந்தம் செய்துள்ளார் கலைஞானம். பிறகு இந்த படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பு உதவியில் இருந்து அந்த நிறுவனம் விலகிவிட்டது.
 
 இந்த திடீர் சூழ்நிலையை சமாளிக்க தெரியாமல் கலைஞானம் திகைத்த நேரத்தில், அந்தப் பட கதை மீது இருந்த நம்பிக்கை காரணமாக உங்கள் படத்தை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கிட்டத்தட்ட கைவிடப்படும் தருவாயில் இருந்த அந்தப் படத்திற்கு15 ஆயிரம் ருபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் காதர் மொய்தீன் என்ற டிஸ்ட்ரிபியூட்டர். அந்த 15 ஆயிரம் ருபாய் பணத்தை கொண்டுதான் படத்தை துவங்கி உள்ளார் கலைஞானம். 

     அதேபோல் 16வயதினிலே படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த சூழ்நிலையில் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க விரும்பவில்லை."விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சி- கிட்டு இருந்த கமலஹாசனை இப்படி கோவணம் கட்டி வெத்தல பாக்கு போட வச்சி அசிங்கப்படுத்திட்டாங்க. ப்புறம் எப்படி படம் ஓடும்"என்பது தான் அவர்கள் சொன்ன காரணம்.

அப்படி இருந்தும் ஒரு விநியோகஸ்தர் மிகப்பெரிய "NSC" (வடக்கு, தெற்கு ஆற்காடு, செங்கல்பட்டு) ஏரியாவை வாங்க முன் வந்துள்ளார். ஆச்சர்யம் தாங்க முடியாத பாரதிராஜா," நெசமாத்தான் வாங்கப்போறீங்களா? நெசமாவே உங்களுக்கு படம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டுள்ளார்.

"ஒரு அடிப்படையான கருத்தைச் சொல்லியிருக்கீங்க. ஆளப் பாக்காதே. ஆடையப் பாக்காதே.மனசப் பாரு. இது கிராமத்துலயிருந்து பட்டணம் வரைக்கும் எல்லாருக்கும் தேவையான ஒரு கருத்து. எல்லா ஜனங்களுடைய மனசுக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால இந்தக் கருத்து ஜெயிக்கும். எனக்கு நம்பிக்கையிருக்கு" என்று அந்த விநியோகஸ்தர் பதிலளித்துள்ளார்.

  அந்த காதர் மொய்தீன் வேற யாருமில்லை நடிகர் " ராஜ்கிரண்". மேலே சொன்ன அந்த ரஜினி படம் "பைரவி"




ராகதேவன்...!!!
   க்னி நக்ஷத்திரம் படத்தின் ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் பதிவு ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது.அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டது அந்த பாடல்.அந்த ராகத்தை முறையாக பாடினால் மழையையே வரவழைக்கலாம்.

   
மாதிரிப்பதிவை (Track) கேட்டவுடனேயே,ஜேசுதாசும் ஜானகியும் அமிர்தவர்ஷினியை கண்டு சிரித்துக் கொண்டு ராஜாவை கேலி செய்தனராம். "மழை வரலன்னா, எங்களைத் திட்டாதீங்க" என்று கூட சொன்னார்களாம். பாடல் பதிவும் முடிந்தது.Studio-வை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி. யாரும் வீட்டுக்கு கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை,அந்த மதியத்தில்.அதுவும் யாருமே எதிர்பார்த்திருக்காத மே மாதத்தின் ஒரு நாளில்.   இது எஸ்.ஜானகி ஒரு நேர்காணலில் சொன்னது.



  


க்ஸ் விளம்பரத்தில் நீண்ட காலம் தோன்றிய ஒரே தமிழ் நடிகை, ஜெயலலிதா

 ஜெயலலிதா இடம் பெற்ற அந்த லக்ஸ் விளம்பரம் .


 
 மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஒரு இசை மேதை என்பது அனைவருக்கும் தெரியும்.சிறு வயதில் அவர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது பரவலாக தெரியாது. கண்ணகி படத்தில் பால முருகனாக மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் தோன்றிய போட்டோ .

மல் & விஜயகாந்த் சேர்ந்து நடிச்ச ஒரே ஒரு சினிமா..."மனக் கணக்கு" அதுல இயக்குனர் வேஷத்துல ஒரே ஒரு சீன்ல வருவார் கமல்.அந்த சீன்ல..விஜயகாந்த் நடன இயக்குனரா வருவார்.

 
டைநிலை பள்ளி மாணவியாகவும், உயர்நிலை பள்ளி  மாணவியாகவும் "கன்னடத்து பைங்கிளி" 



************************************************************************************************************************************************
நன்றி...தெரிந்த சினிமா தெரியாத விஷயம்..



@ FACEBOOK....

  • ''ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் போர்க்கொடி தூக்கி 50 ஆண்டுகள் ஆகிறது'' -கருணாநிதி!...

            ## அய்யா கொடி புடிச்சுட்டு போற பெரியவரே வணக்கம். ஹ்ம்ம்,.. இவரையா கும்பிட்டோம். வீட்டுக்கு போன உடனே அடுப்புல கைய வச்சு கருக்கிட வேண்டியது தான்..

 
@ டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

************************************************************************************************************************************************
  • இப்போதைக்கு உலகிலேயே மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பு லஷ்கர் ஏ தொய்பா தான்: அமெரிக்கா வேதனை.

       # # தீவிரவாதிகளுக்குள் போட்டி இருக்கலாம்.. பொறாமை இருக்க கூடாது..


************************************************************************************************************************************************
  • ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன்.மகிழ்ச்சியாக இருக்கிறேன்: சதானந்த கவுடா

       
# #தெரியும் பாஸ் எங்களுக்கு ..மனசுக்குள்ள ஊர்பட்ட கெட்ட வார்த்தை போட்டு எடியுரப்பாவை திட்டிகிட்டு இருப்பீங்க...

************************************************************************************************************************************************
  • ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு

          # #வருஷம் 16 ஆச்சு...இன்னும் இந்த கேசு வயசுக்கு வரலியாம்...

************************************************************************************************************************************************
  • அதிமுகவுடன் கூட்டணி வைக்க எனக்குப் பிடிக்கவேயில்லை. தொண்டர்கள் வற்புறுத்தலால் கூட்டணி வைத்தோம் -விஜயகாந்த்

        # # யாரு.அந்த வேனுக்குள்ள குனிய வச்சி வெளுத்து எடுதீங்கலே..அந்த தொண்டரா கேப்டன்..

************************************************************************************************************************************************
  • மடத்தில் யானையும் இல்லை; தந்தமும் இல்லை. புலியும் இல்லை; புலித்தோலும் இல்லை - ஆதீனம்

         # #  சூடும் இல்லை சொரணையும் இல்லை .வெக்கமும் இல்லை.மானமும் இல்லை....இதை சொல்ல மறந்துடீங்க சாமி
************************************************************************************************************************************************
  • 'ச்சே நிம்மதியே இல்லப்பா': வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகும் நித்யானந்தா!

       :
# #அங்கே போயி பாடுவாரு .."சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா"

************************************************************************************************************************************************
கேள்வி : அரசியலுக்கு வருவீர்களா ?
 

    இது ரஜினி......

      ஹா ..ஹா .ஹா .எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான் .
 

   இது கமல்.......

  நான் அரசியலுக்கு வரவேண்டுமென்பதை தீர்மானிப்பதில் உள்ள திறன் எனக்கும் என்னை போன்ற கருத்தாதிக்கம் கொண்ட சமூகத்துக்கும் நன்மை பயக்கும் என்று எண்ணுகிற அதே வேளையில், முடிவு செய்யும் முழு பொறுப்பும் என்னை மட்டுமே சாரும் என்று நான் சொல்லும் உரிமையை இந்த சமுதாயம் எனக்கு அளிக்க வில்லை என்றே எண்ணுகிறேன் ...

   ## எங்களுக்கு தலை சுத்துதுடா சாமி


ALL @ SURESH PERUMAL
----------------------------------------------------------------------------------------------------



25 comments:

  1. ஏராளமான சுவாரசியமான சினிமா தகவல்களை ஒரே பதிவில் சொல்லிட்டீங்க. புது தகவல்களே இருந்தது.

    இப்போதைக்கு உலகிலேயே மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பு லஷ்கர் ஏ தொய்பா தான்: அமெரிக்கா வேதனை.


    # # தீவிரவாதிகளுக்குள் போட்டி இருக்கலாம்.. பொறாமை இருக்க கூடாது..

    இது இன்னும் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...

      Delete
  2. அருமையான அறிய தகவலுக்கு நன்றி சார்!


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

      Delete
  3. || ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவுக்கும் பிரச்சனை ஏற்பட பிலிம் வாங்கித்தர தயாரிப்பாளர் மறுத்து விட்டாராம்.விஷயத்தை கேள்விப்பட்ட கமலஹாசன் நிதி உதவி செய்து அந்த பாடல்காட்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

    அந்த பாடல் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்".
    ||

    பிரச்னை வந்தது ஒளிப்பதிவாளருக்கும் தயாரிப்பாளருக்குமல்ல;இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும்....

    படத்தைப் பார்த்து சலித்த தயாரிப்பாளர்,நீ என்ன படம் எடுத்துக் கிழிச்சிருக்க..இது நிச்சயம் ஓடாது..என் பணம் வேஸ்ட்..இதுல மேல்கொண்டு பணம் போட்டு நஷ்டப் பட நான் தயாரில்லை' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்..

    திகைத்துப் போன இயக்குனர் விழிக்க தற்செயலாக இதைக் கேள்விப்பட்ட கமல் படத்தைப் பார்த்து விட்டு பாடல் எடுத்துச் சேர்க்கத் தேவையான 5000 ரூபாய் கொடுத்து உதவ பாடல் சேர்க்கப்பட்டு படம் ரிலீசானது..

    சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான அது இயக்குனர் எடுத்த எல்லாப் படங்களிலும் சூப்பர் ஹிட் படம்..

    அந்த இயக்குனர் ... திரு.மகேந்திரன்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே...

      Delete
  4. // வாலி சத்யா படத்தில்// சமீபத்தில் தான் இதை மற்றொரு வலைப்பூவில் படித்தேன், நீங்கள் படத்துடன் காட்டி
    விட்டீர்கள்

    //தீவிரவாதிகளுக்குள் போட்டி இருக்கலாம்.. பொறாமை இருக்க கூடாது..//

    கலகிட்டீங்க பாஸ் எவ்வளவு தெரியாத தகவல்கள், உண்மையிலேயே சிறந்த சினிமா தகவல் தந்த பதிவு


    படித்துப் பாருங்கள்

    தல போல வருமா (டூ) பில்லா டூ

    http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ்...மிக்க நன்றி..

      Delete
  5. பசி நாராயணன், AVM தயாரித்து MGR சரோஜாதேவி நடித்த அன்பேவா பாடத்தில் ஒரு பாடலில் வருவார். நாடோடி போக வேண்டும் ஓடோடி எனும் பாடலில் நடனகலைஞராக வருவார். பசி படதின் மூலம் அடயாளம் காணப்பட்டார்.....

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே...

      Delete
  6. அம்மா.லக்ஸ் வியம்பரத்துல வந்தத இப்பத்தான் சாமி பாக்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா.ஹா...வரலாறு மிக முக்கியம் நண்பரே..

      Delete
  7. //
    கேள்வி : அரசியலுக்கு வருவீர்களா ?

    இது ரஜினி......

    ஹா ..ஹா .ஹா .எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான் .

    இது கமல்.......

    நான் அரசியலுக்கு வரவேண்டுமென்பதை தீர்மானிப்பதில் உள்ள திறன் எனக்கும் என்னை போன்ற கருத்தாதிக்கம் கொண்ட சமூகத்துக்கும் நன்மை பயக்கும் என்று எண்ணுகிற அதே வேளையில், முடிவு செய்யும் முழு பொறுப்பும் என்னை மட்டுமே சாரும் என்று நான் சொல்லும் உரிமையை இந்த சமுதாயம் எனக்கு அளிக்க வில்லை என்றே எண்ணுகிறேன் ...
    //

    இது சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...

      Delete
  8. என்ன பாஸ் வரிஞ்சி கட்டி களம் இறங்கிட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ் வணக்கும்...

      Delete
  9. சினிமா செய்திகள்..... ம்

    ReplyDelete
  10. முகநூல் கமண்டுகள் கலக்கல்

    ReplyDelete
  11. ரொம்ப நன்றி பாஸ்

    ReplyDelete
  12. கமல் & விஜயகாந்த் சேர்ந்து நடிச்ச ஒரே ஒரு சினிமா..."மனக் கணக்கு" அதுல இயக்குனர் வேஷத்துல ஒரே ஒரு சீன்ல வருவார் கமல்.அந்த சீன்ல..விஜயகாந்த் நடன இயக்குனரா வருவார்.


    மனக்கணக்கு ஆர் சி சக்தி இயக்கிய திரைப்படம்.சிறை, தவம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து வந்ததால் எதிர் பார்க்கப் பட்டது. நண்பருக்காக ஒரு சிறிய வேடத்தில் கமல் நடித்து கொடுத்தார். இதில் கமல் Director ஆகவும் விஜயகாந்த் Associate Director ஆகவும் நடித்திருந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. விஜயகாந்த் ஒளிப்பதிவாளர்

      Delete
  13. Replies
    1. Thanks balaji... yellam facebook mayam...

      Delete
  14. சூப்பர் பகிர்வு. இறுதியில் கமல் பாணி. ஹஹஹஹஹ

    ReplyDelete
  15. kamal answer 2013 feb 18 suit 'avthe' super you are correct judjment

    ReplyDelete