Monday 20 August 2012

சின்னதிரைக் குழப்பமும் சிரிப்பு எம்ஜியாரும்

             நாம்  தமிழில் தொலைக்காட்சியைப்பற்றி எழுதும் போது 'சின்னத் திரை' என்று குறிப்பிடுவோம். ஆனால் இது தவறு.சின்னத்திரை என்று நடுவில் 'த்' போட்டு எழுதினால் small screen என்று பொருள் வராது.சின்னம் பொறிக்கப்பட்ட திரை (screen with an emblem) என்றுதான் பொருள்படும்.சின்ன(சிறிய), பெரிய ஆகிய வார்த்தைகளுக்குப் பின் ஒற்று மிகாது என்பதால் தான் சின்னதம்பி,பெரிய புராணம் என்று எழுதுகிறோம். அதேப்போல் தொலைக்காட்சியைச் 'சின்னதிரை'  என்றே எழுதவேண்டுமாம்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால்...

சின்னக்கொடி/சின்னகொடி இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.சின்னக்கொடி என்றால் சின்னமுள்ள கொடி.சின்ன கொடி என்றால் சிறிய கொடி.

" இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி
அது-பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி..



    கவிஞர் அ.மருதகாசி எழுதிய இப்பாடலில் வரும் 'சின்னக்கொடி' என்பது சின்னமுள்ள கொடியைக் குறிக்கிறது.ஆனால் சிறிய கொடி என்பதை நடுவில் 'க்' போடாமல் 'சின்ன கொடி' என்றுதான் எழுதவேண்டும். அதைப்போல 'சின்ன கலைவாணர்'  என்று எழுதுவதே சரி.'சின்னக் கலைவாணர்' என்றெழுதுவது பிழை.

************************************************************************************************************************************************
த்தியமா கீழே இருக்கிற இரண்டு படத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாதுனு சொன்னா நம்பவா போறீங்க?
************************************************************************************************************************************************

ப்போதிருக்கும் இசையமைப்பாளர்கள் "வாய்"ப்புகளை சரியாக பயன்படுத்துகிறார்கள் -நடிகர் பார்த்திபன்!! 

 # இப்படி குண்டக்க மண்டக்க பேசினா எப்படிண்ணே(அனிருத் மைன்ட் வாய்ஸ்)

னக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது.எனது பெற்றோர் என்னை நல்லமுறையில் வளர்த்திருக்கிறார்கள்.-அனிருத்

 #  இதுதான் அந்த நல்லமுறைனா... வேற வழியேயில்லை.ஒத்துக்குறோம்.

************************************************************************************************************************************************
 ரிலாக்ஸ் ......


  
சார்...டீ மாஸ்டர் டீ போடுறாரு...பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுறாரு... மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடுறாரு... நீங்க ஹெட்மாஸ்டர் தானே... நீங்க ஏன் சார் மண்டைய போட மாட்டேங்கிறீங்க?

************************************************************************************************************************************************
    ஒரு அலுவலகத்தில கறாரான  மேனேஜர் ஒருத்தர் இருந்தாரு.ஆபிசில் வேலை செய்பவர்கள் என்ன காரணம் சொல்லி யார் லீவு கேட்டாலும், " எனக்கு மட்டும் பிரச்சனையில்லையா..நான் ஆபிசுக்கு வரலியா " என்று சாதூர்யமாகப் பேசி லீவு தராமல் வேலை பார்க்க வைத்து விடுவார்.

தலைவலி என்று லீவு கேட்டால், "எனக்கும் தான் லேசாக தலைவலி, தைலம் தடவிண்டு ஆபிஸ் வரலையா? போய் வேலையைப் பார்...' என்பார்.

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை,ஆஸ்பத்திரியில் சேர்க்க லீவு கேட்டால், "என் அம்மாவுக்கும் முடியாமல் இருந்த போது, சீக்கிரமாக ஆஸ்பத்திரி சென்று,அட்மிட் செய்துவிட்டு,ஆபிஸ் வேலைக்கு வந்தும்,லீவு போடவில்லை; அதுபோல் செய். போ...' என்பார்.

மனைவிக்கு பிரசவ நேரம்,கூட இருக்கணும் என்று லீவு கேட்டால், "என் மனைவிக்கும் பிரசவ சமயம்,நான் லீவு போடாமல் அவளுக்கு உதவியாக இருந்து,ஆபிசுக்கும் வந்தேன்.அதுபோல பர்மிஷன் போட்டு சற்றுத் தாமதமாக வந்தால் போதும் லீவு கிடையாது, போ...' என்பார்.

இப்படியே யார் லீவு கேட்டாலும் தன்னைப்பற்றியே பேசி லீவு தராமல் வேலை பார்க்க வைத்துவிடுவார். ஆனால் ஒருத்தருக்கு மட்டும் கேட்ட உடனையே லீவு கொடுத்துட்டார் அந்த டேமேஜர்.

எல்லோரும் ஆவலுடன், "என்ன சொல்லி லீவு வாங்கின"-னு கேட்டாங்க..ஒரே ஒரு சின்ன பொய் சொன்னேன். அவ்வளவுதான் கொடுத்திட்டாருனு சொன்னான்..  

" என் பொண்டாட்டியை பக்கத்து வீட்டுக்காரன் தள்ளிக்கிட்டு போயிட்டான்.தேடி வர லீவு வேண்டும்..." -னு சொன்னேன்.அவரும் வழக்கம் போலவே, "என் பொண்டாட்டியை கூடத்தான் ...."-னு ஆரம்பிச்சவரு.. "அடச்சே...லீவு தாறேன்.போய்த் தொலை"-னு சொல்லிட்டாரு.  





வணக்கங்களுடன்....
மணிமாறன்.


************************************************************************************************************************************************

14 comments:

  1. ஹா.. ஹா... முடிவில் கலக்கிட்டீங்க....

    நன்றி...

    ReplyDelete
  2. முதலாவதாக வந்து முத்திரை பதித்ததற்கு நன்றி...

    ReplyDelete
  3. சூப்பர் பதிவி நண்பா நீங்க போட்டு கொஞ்ச நேரத்துல வாசிச்சன் ஆன்னா இன்னைக்கும் மறுபடியும் வாசிச்சன்.. சூப்பர்..

    ReplyDelete
  4. நண்பர் ஹாரிபாட்டரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. சின்னக் கொடி, சின்ன கொடி.. அக்கப் போரு கொஞ்சம் அதிகமாத் தான் இருக்கு

    /.போய்த் தொலை/ ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சீனுவுக்கு நன்றி...

      Delete
  6. கருப்பு எம்.ஜி.யார் படம் செம..கடைசி ஜோக் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ராஜ் அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  7. ஒரே ஒரு எழுத்துல (க்) ஒரு வாக்கியத்தின் பொருள் எவ்வளவு மாறுகிறது அல்லவே நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. ஆமா நண்பா.. தமிழ் ஒரு நுட்பமான மொழியல்லவா...

      Delete
  8. தொப்பி வச்சவன் எல்லாம் .............. அதுக்கே மேலே வேண்டாம்! :)

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா... பாய்ண்ட புடிச்சிடீங்க...அதேதான்...

      Delete
  9. மேனேஜர்..டேமேஜர் ஆனா கதை அருமை ஹி ஹி!

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டதிற்கு நன்றி நன்றி...

      Delete