Thursday 23 August 2012

இப்படியும் ஒரு பெயரா?... அதிசயவைக்கும் அழகிய தீவும் தமிழர்களின் அரிய கண்டுபிடிப்பும்...


       "அண்ணே...பூவ..பூவுன்னும் சொல்லலாம்..புய்ப்பம்னும் சொல்லலாம்..நீங்க சொல்லுற மாதிரியும் சொல்லலாம்..... " 

      இந்த தீவுக்கு போயிட்டு வருகிற நம்ம ஆளுங்க கிட்டபோய் 'எங்கே போனீங்க'-னு கேட்டா இது மாதிரிதான் எதையாவது சொல்லி நெளியிறாங்க.இதுல கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், சிங்கபூரின் மூலைமுடுக்கு,இண்டுஇடுக்கு, சந்துபொந்துகளில் கூட தமிழில் பெயர்ப்பலகை ஜொலிக்க, இங்கு மட்டும் பெயர்ப்பலகை தமிழில் இல்லை!.

   ஒருவேளை இந்தத் தீவின் பெயரை தமிழில் எழுதியிருந்தால்,"ஒரு காலத்தில எல்லாரும்........." அப்படீன்னு நம்ம ஆளுங்க கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு ஏதாவது கதை கட்டி விட்டுருப்பாங்க. அப்படியென்ன அதிசயத்தீவு..? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்....  

இதுதான் அந்தத்தீவு.
பயணம் செய்த .'.பெர்ரி...
கைக்கெட்டும் தூரத்தில் கப்பல்..

  சிங்கப்பூரைச் சுற்றியுள்ள குட்டித்தீவுகளில் இதுவும் ஓன்று.சென்னை தீவுத்திடல் அளவுக்குத்தான் இதன் பரப்பளவு இருக்கும்.வருடத்திற்கு இரண்டு முறையேனும் குடும்பத்துடன் இந்தத் தீவுக்குச் சென்று ரசித்து,சுற்றிப்பார்த்து வருவதுண்டு.சிங்கபூரிலிருந்து இந்தோனேசியாவிற்கு செல்லும் கடல் மார்க்கத்தில், சிங்கையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்தக் குட்டித்தீவு.தகதகக்கும் வெளிர்நீல கடல் நீருக்கு மத்தியில் வைரக்கல் பதித்தது போல் ஒரு குட்டி தேவதையாக எழுந்து நிற்கிறது இந்த அழகான தீவு.


  மெரீனாபயர் என்னுமிடத்திலிருந்து .'.பெர்ரியில் முக்கால் மணி நேரப்பயணம்.அந்தத் தீவைவிட .'.பெர்ரியில் பயணம் செய்வது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.கடல்நீரைக் கிழித்துக்கொண்டு கைக்கெட்டும் தூரத்தில் செல்லும் ராட்சத கப்பல்களுக்கிடையே பயணிக்கும்போது கொஞ்சம் திரில் கலந்த சிலிர்ப்பு.சிங்கப்பூர் என்ற 'குட்டிசொர்க்கத்தின்' புறஅழகை இந்தத்தீவுலிருந்து பார்க்கும்பொழுது அதன் பிரமாண்ட அழகு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.ரயில்வண்டி போல் தொடர்ச்சியாகச் செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள் இன்னும் பிரமிப்பூட்டும்.



சரி...எதனால் இந்தத்தீவிற்கு இப்படியொரு பெயர்? இதற்கு வித்தியாசமான ஆச்சர்யம் கலந்த பின்னணி எதுவும் கிடையாது.எல்லாம் மொழிப் பிரச்சனைதான்.சீன மொழியில் ஆமையை இவ்வாறுதான் அழைப்பார்களாம். ஆமைத் தீவு என்பததைத் தான் இப்படி விளிக்கிறார்கள்.

   

  இந்தப்பெயரின் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்பொரு காலத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மலாய் மற்றும் சீன மீனவர்களை கடுமையான புயல் தாக்க,கடலில் தத்தளித்த அவர்களைக் காக்க மந்திர சக்தி கொண்ட ஒரு ராட்சத ஆமை தீவாக மாறி காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது (கதைக்கட்டுவதில் இந்தியர்களுக்கு சளைத்தவர்களல்ல சீனர்கள் என்பது உலகறிந்த விஷயம் ).அதன் காரணமாகத்தான் இந்தத் தீவிற்கு இப்படியொரு பெயராம்.

 சரி..இதனால் நான் என்ன சொல்லவருகிறேன்னு கேட்கிறீங்களா.? எதுவும் கிடையாது... நீங்கள் எப்போதாவது சிங்கப்பூர் வரும் வாய்ப்பு கிடைத்தால் இந்தத்தீவின் பெயரைப்பார்த்து,தயக்கப்பட்டு பார்க்காமல் போய் விடாதீர்கள் என்பதுதான் நான் சொல்ல வரும் செய்தி. 

போட்டோக்கள்..நான் 'கிளிக்'கியது......
************************************************************************************************************************************************
  புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் அரசுப்பேருந்து சில நாட்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.மீண்டும் விபத்து ஏற்படாமலிருக்க, பல பொறியியல் வல்லுனர்கள் ராப்பகலா கண்விழித்து ஆராய்ந்து யோசித்ததில் இறுதியாக அவர்கள் மூளையில் உதித்த அதி அற்புத யோசனைதான் இது. இந்தக் கண்டுபிடிப்பை உலக அளவில் செயல்படுத்த வல்லுனர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாம். கண்டிப்பாக 2020 -ல் நம் இந்தியா வல்லரசாகிவிடும்.   




வணக்கங்களுடன்....
மணிமாறன்.


-----------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))))))))))----------------------------------- 

18 comments:

  1. // சந்துபொந்துகளில் கூட தமிழில் பெயர்ப்பலகை ஜொலிக்க, இங்கு மட்டும் பெயர்ப்பலகை தமிழில் இல்லை!.//

    ஆமைத் தீவு என்று பெயர் வைக்கலாம், சீன மொழியில் ஆமைப் பெயரைத்தான் தீவிற்கும் வைத்திருப்பார்கள், நீங்கள் படிப்பது ஆமையின் மலாய் பெயர்

    ReplyDelete
    Replies

    1. நீங்கள் சொல்வதும் சரிதான்... lake side -ஐ எரிக்கரைன்னு மாற்றினமாதிரி இதற்கு ஆமைத்தீவுனு போர்டு வைக்கலாம்.ஊரிலிருந்து வர்றவங்களை இங்க கூட்டிட்டு போகும்போது அவுங்களுக்கு விளக்கம் சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது..

      Delete
  2. தீவு ரொம்ப அழகா இருக்கு!

    போட்டோக்கள் செம கிளியரன்ஸ் :))

    ReplyDelete
  3. 2012 ஆம் ஆண்டின் அதிரவைக்கும் கண்டுபிடிப்பாக கருதப்படும் இந்த இந்தியர்களின் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்தை தங்கள் நாடும் பயன்படுத்திக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் CNN-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்!

    இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், இதற்க்காக இளம் வல்லுனர்கள் கொண்ட குழு ஒன்று விரைவில் இந்தியா வரவிருப்பதாகவும், அவர்கள் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களிடம் பயிற்சி பெற இருப்பதாகவும் தெரிவித்தார்!

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா.... இது நல்லா இருக்கே....

      Delete
    2. பாஸ்.. இன்னும் அவுங்களுக்கு நாம வேப்பிலையை வச்சி பேயோட்டுற விஷயம் தெரியாது.தெரிஞ்சதுனா உலகலவில நம்ம கண்டுபிடிப்பு பட்டைய கிளப்பும்.

      Delete
  4. அட சூபரா இருக்கு அந்த தீவு பற்றி நல்ல விளக்கம்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஹாரி பாட்டர் அவர்களின் கருத்துக்கு நன்றி..

      Delete
  5. மீண்டும் விபத்து ஏற்படாமலிருக்க, பல பொறியியல் வல்லுனர்கள் ராப்பகலா கண்விழித்து ஆராய்ந்து யோசித்ததில் இறுதியாக அவர்கள் மூளையில் உதித்த அதி அற்புத யோசனைதான் இது///


    ஹா ஹா அப்படியே திருஷ்டி ஏதாச்சும் படாம இருக்க பூசணிக்காயை தொங்க விட சொல்லுங்க மணி....

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிரகாஷ்.... நீண்ட நாட்களுக்குப் பின் பதிவுலகத்திற்கு வருகை புரிந்ததற்கு நன்றி...

      Delete
    2. // அப்படியே திருஷ்டி ஏதாச்சும் படாம இருக்க பூசணிக்காயை தொங்க விட சொல்லுங்க மணி..

      ஹா..ஹா.. இதைப்பற்றிக்கூட விரைவில் விஞ்ஞானிகள் மாநாட்டைக்கூட்டி விவாதிக்கப் போறார்களாம்.

      Delete
  6. என்ன அழகான தீவு? சுத்தி பாக்குற அண்ணன்க எங்களை குலுக்கல் முறையில் கூட்டிட்டு போங்கப்பா..அப்புறம் அந்த வேப்பிலை கட்டின பிளைட்டில கூட்டிட்டு போய்டாதிங்க..பாவிபசங்க பேடன்ட் வாங்கிடுவானுங்க..அது நம்மூரு பேருந்துக்கு மட்டும் வைச்சுக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. ஹா.ஹா..அடுத்து சாட்டிலைட்ல வேற கட்டி விடப்போறதா பேசிக்கிறாங்க பாஸ்....

      Delete
  7. அருமையான பகிர்வு !!! ஒரு மொழியின் தூசணம் இன்னொரு மொழியில் பாசணம் !!! இதில் கவலைப்பட ஒன்றுமில்லை !!!

    வேப்பில்லை மேட்டர் பார்த்து சிரிப்புத் தாங்கவில்லை. முடியலடா சாமி !!!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் இக்பால் செல்வன் அவர்களின் பின்னூட்டதிற்கு நன்றி...

      Delete
  8. தீவு படங்கள் அருமை....

    /// போட்டோக்கள்..நான் 'கிளிக்'கியது.... ///

    எப்படிங்க இப்படியெல்லாம்...?

    பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே...

      Delete