Friday 21 December 2012

பாலியல் வன்புணர்வு..பதறுது நெஞ்சே...



கேட்கும்போது நெஞ்சே பதறுகிறது.........

"என் வாழ் நாளில் இப்படி ஒரு ரேப் செய்யப்பட்ட பெண்ணை பார்த்தது  இல்லை..உள்ளே இருக்கும் குடலையும் கூட சிதைத்து விட்டார்கள்..."  டெல்லியில் சில காமுகன்களால் சிதைத்து எறியப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் சொன்னதாக இன்றைய ஊடகங்களில் வெளிவந்த செய்தியைப் படித்த போது நெஞ்சே பதறுகிறது.

பாலியல் வன்முறை நிறைந்த திரைப்படங்களில் கூட இப்படியொரு காட்சியமைப்பை சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.எந்த பழிவாங்கும் பின்புலம் கூட இல்லை.வெறுமனே,அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவு நடந்து சென்றதால் பாடம் கற்பிக்கவே அப்படி செய்ததாக சொல்லியிருக்கிறார், அந்தப் பேருந்தை ஓட்டிய டிரைவர்.

டிரைவர்,டிரைவரின் தம்பி உட்பட மொத்தம் ஆறுபேர் அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்து, பின்பு இரும்பு ராடால் அவளது உறுப்பை சிதைத்திருக்கிறார்கள்.அந்தப் பெண்ணின் கதறலை சுமந்துக்கொண்டே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரில் வட்டமடித்துப் பயணித்திருக்கிறது அந்தப் பேருந்து. கடைசியில் மொத்த ஆடையும் உருவப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாய் சாலையில் வீசப்பட்ட அந்த பெண், போலிஸ் வரும்வரை சீந்துவாரின்றி அனாதைபோல கிடந்திருக்கிறாள்.நம் தலைநகரில் மருத்துவப் படிப்பு படிக்கும் ஒரு பெண்ணுக்கு, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு  இப்படியொரு கொடூரம் நடந்தேறியிருக்கிறது.

இன்று  இந்தியாவின் ஒட்டு மொத்த ஊடகங்களும் இந்த வன்கொடுமையைக் கண்டு அலறுகின்றன. இந்தியாவில் ஒரு வருடத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தலையே சுற்றுகிறது.

கடந்த வருடம் பிப்ரவரியில் கூட இப்படிப்பட்ட ஒரு சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்ட
து.கேரளாவில் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பிக்பாக்கெட் பொருக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான்.முயற்சி பலிக்காததால் அந்தப்பெண்ணை தூக்கி ரயிலில் இருந்து வெளியே வீசியுள்ளான்.தலையில் பலமாக அடிபட்டு உயிர்போகும் நிலையிலும் அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறான்.சில மாதங்களிலேயே அவனுக்கு கோர்ட் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.இரண்டு வருடம் முடியப்போகும் நிலையில் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இன்னும் சில காலங்கள் கழித்து அவனுக்கு மன நிலை சரியில்லையென மருத்துவ சான்றிதல் அளித்து தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம்.நம் துருப்பிடித்த சட்டம் எப்போதும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.

கேரளா ரயில் சம்பவம்

இதற்கிடையே தினமணி போன்ற சில ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் கோபத்தையும் எரிச்சலையும் தான் ஏற்படுத்துகிறது.இந்தச் சம்பவத்திற்கு அடிப்படைக் காரணத்தை அறியாமல், சுயக்கட்டுப்பாடு இல்லாத பெண்கள்தான் என பிற்போக்குத்தனமான காரணத்தை சொல்கிறது தினமணி தலையங்கம்.

நவ நாகரிக உடைகளும்,மேற்கத்திய கலாச்சாரமும் தான் ஆண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி தவறு செய்ய வைக்கிறது என்றால் கேரளாவில் ரயிலில் நடந்த பாலியல் பலாத்காரம் சம்பவமும்,கோவையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் எந்த வகையில் வன்புணர்வு செய்ய தூண்டியது..? 

நியாயமான ஆதங்கம்.!!!

வெளிநாடுகளில் குறிப்பாக நான் வசிக்கும் சிங்கப்பூரில்,உடைகளைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு நூறு சதவீத சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.ஆண்கள் லுங்கி கட்டிக்கொண்டு ரோட்டில் நடந்தால் சந்தேகப் பார்வையோடு கொஞ்சம் கடுமையாக விசாரிக்கும் போலிஸ்,கொஞ்சம் பெரிய சைஸ் ஜட்டி,பிராவோடு திரியும் பெண்களிடம் எதுவுமே கேட்பதில்லை.பாலியல் உணர்ச்சிகளோடு எந்த ஆண்களும் அவர்களை நோட்டம் விடுவதும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் நள்ளிரவில் கூட பெண்கள் இதுமாதிரி உடைகளைப் போட்டுக்கொண்டுதான் பொதுவெளியில் சுற்றுகிறார்கள்.கவர்ச்சியான உடைகளால்தான் பாலியல் குற்றங்கள் நடக்கிடது என்றால் இங்கு தினம் நூற்றுக்கு மேற்பட்ட பலாத்காரங்கள் அரங்கேறியிருக்கவேண்டும்.நான் அறிந்தவரையில் இங்கு வசித்த பத்தாண்டுகளில் எந்தவித பாலியல் வன்புணர்வு சம்பவத்தையும் கேள்விப்பட்டதில்லை.சிறு சிறு குற்றங்கள்தான்.அதுவும் ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து இங்கே வேலைப்பார்க்கும் ஒரு சில வேலையாட்களால் மட்டும்தான். அதற்கும் கடுமையான தண்டனைகள் இங்கே விதிக்கப்படுகிறது.


வெளிநாடுகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைவாக இருப்பதற்கு அங்கே நடைமுறையில் இருக்கும் கடுமையான தண்டனைகள்தான் முக்கிய காரணம்.மேல் கோர்ட்,கீழ் கோர்ட் என்று இழுத்தடிக்கும் வேலையெல்லாம் இல்லாமல் குறுகிய காலத்திலேயே தீர்ப்பளித்து அதற்கான தண்டனையையும் நிறைவேற்றிவிடுவார்கள்.கருணை மனுவுக்கெல்லாம் கடைக்கண் பார்வை கூட கிடைக்காது.  

இரண்டு வருடத்திற்கு முன்பு நம்ம ஊரிலிருந்து இங்கே 'ப்ளம்பிங் (plumbing) வேலைப் பார்ப்பதற்காக வந்த ஒருவர், இங்குள்ள ஒரு பள்ளியின் டாய்லெட்டில் வேலை
ப் பார்த்துக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த ஒரு சிறுவனிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.அந்த சிறுவன் தன் பெற்றோர் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து,பின்பு அந்த பிளம்பர் கைது செய்யப்பட்டார்.அடுத்த சில வாரங்களிலே குற்றம் நிருபிக்கப்பட்டு, அவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.அவருக்கு தற்போது 25 வயது என வைத்துக் கொண்டால்,தனது 45 வது வயதில்தான், அதாவது கிட்டத்தட்ட தன் இளமைப் பருவத்தைக் கடந்துதான் விடுதலை செய்யப்படுவார். சிறுவன் மீதா பாலியல் குற்றத்திற்கே இந்தத் தண்டனை என்றால் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் என்றால்....ஸ்ட்ரைட்டா தூக்கு மேடையில போயி உட்காந்துக்க வேண்டியதுதான்.

இந்த செய்தியைப் படிக்கும் போது நமக்கு அடிவயிற்றில் சொர சொரப்பு எடுப்பது உண்மைதானே... அப்படியொரு பயம் நம் நாட்டு சட்ட திட்டங்கள் மீது நமக்கு இருக்கிறதா..?.குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டாலும்,'உனக்கு எதிரான சாட்சிகள் சரியில்லாததால் உன்னை விடுதலை செய்கிறேன்' னு ஜட்ஜ் அய்யாவே  தீர்ப்பை மாற்றி எழுதிவிடுவார்.

சௌதி அரேபியாவில் பாலியல் வன்புணர்வுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாம்..

கடுமையான சட்டங்களால் கிடைக்கப்போகும் தண்டனைகள் ஏற்படுத்தும் பயம் மட்டுமே இது போன்ற வன்செயல்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்த முடியும்.

"தீர்ப்பு என்கிறது ஒரு மனுசன திருத்திறதுக்குதானே தவிர அழிக்கறதுக்காக இல்ல.." என அந்தக்கால ஆலமர சின்ன கவுண்டர் தீர்ப்பை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு..பாலியல் பலாத்காரம் என்றால் ஒன்னு இழுத்து வச்சு வெட்டுங்க.. இல்லைனா நம்ம ஊரு வெள்ளைத்துரைகிட்ட கேசை ஒப்படைச்சுடுங்க....   


------------------------------------((((((((((((((((())))))))))))))))))))))))))))))))------------------------------

10 comments:

  1. கண்டிப்பா செய்யனும்...சட்டம் கடுமையாக இருந்தால் தான் எவனும் தப்பு பண்ணமாட்டான்....கோவையில் சிறுவர்களை கொன்றவனுக்கு என்கவுண்டர் செய்தார்களே..அதுமாதிரி போடனும்....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ஜீவா அவர்களே..கடுமையான தண்டனை மட்டுமே இதுபோல பாலியல் அத்துமீறலைக் கட்டுப்படுத்த முடியும்.

      Delete
  2. அருமை தான். நீங்கள் சொல்வது போலும், இங்கு சவுதி அரேபியாவில் தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது என்ற படத்தையும் பார்க்கும் பொழுதும் சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக இருக்கும் நாடுகளிலும் பாலியில் கொடுமையில்லாமல் இல்லை.

    இதற்கு கடுமையான தண்டனையல்ல கொடூரமான தண்டனையைக் கொடுத்தாலும் இந்த நிலை மாறாது.
    நம்முடைய கல்வியமைப்பு,சமூகக் கட்டமைப்பு,வாழ்க்கை முறை இதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் சட்டங்களை இயற்றும் வரை இந்த பிரச்சினை என்றுமே தீராது.

    இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல நண்பரே, நீங்கள் இருக்கும் நாட்டிலும் நடப்பதாகவே சொல்லியிருக்கிறீர்கள்.ஒரு நாட்டு மக்களின் கல்வியை மேன்படுத்துவது ஒன்றே இதற்கான முழுமையான தீர்வாக அமையும்.ஏனெனில் நன்குப் படித்தவர்களும், ஆசிரியர்களும் கூட இந்த செயலில் ஈடுபடுவது உலகமெங்கும் பெருகி வருகிறது.
    இன்றைய கல்வி தரமான வாழ்க்கையை சொல்லித் தராத வரை இந்த பிரச்சினைக்கு உலகத்தில் எந்த தண்டனையும் தீர்வைத் தராது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.உங்கள் கருத்தோடு ஓரளவு நான் உடன் படுகிறேன்.குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்மையை மதித்து நடக்க ஆண்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.பாலியல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்றால் நூறு சதவீத கல்வியறிவை மக்களுக்கு கட்டாயப்படுத்தி சமூக கட்டமைப்பை மாற்றியமைத்தால் மட்டுமே முடியும்.ஆனால் இது நடைமுறை சாத்தியமா....? நூறுகோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நம் தேசத்தில் எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு காலம் பிடிக்கும்..? அப்படி முடியாத பட்சத்தில் தண்டனைகளை கடுமையாக்குவதில் என்ன தவறு இருக்கிறது..?

      Delete
  3. நெஞ்சு பொறுக்குதிலையே! இந்தப் பொறுக்கிகளை நினைத்து விட்டால்.

    ReplyDelete
  4. முதலில் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமாய் படுகிறது இங்கு.பாலிஅய்ல் வன்முறை சம்பந்தமாக வருகிற திரைப்படங்களிலிருந்தும்,எழுத்துக்கள் வரை அனைத்தையும் தடை செய்தாலே இவை மாறும் வன்முறைகளை மனதில் விதைக்கிற கலாச்சாரம் மனம் முழுவதும் பரவிக்கிடக்கிற போது இது மாதிரியான சம்பவங்களுக்கு அவை வித்திட்டு விடுகிறதுதானே?

    ReplyDelete
    Replies
    1. நன்றி.கண்டிப்பாக சார்.மக்களுக்கு சமூக அமைப்புகள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தலாம்.ஆனால் பலவீனமான நம் தண்டனை முறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டிய அவசியமும் இங்கே இருக்கிறது.படிப்பறிவு மிகுந்த பல வளர்ந்த நாடுகளில் கூட பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுக்கிறார்கள்.

      Delete
  5. கசாப்புக்கே மரண தண்டனை தரக்கூடாதுன்னு போராடுரவங்கதான் நம்ம ஊர்ல இருக்காங்க..என்ன பண்ணுறது? :(

    ReplyDelete
    Replies
    1. ந்ன்றி பாஸ்.குற்றத்தின் தன்மையைப் பற்றி யோசிக்காமல் கண்மூடித்தனமாக மரண தண்டனையை எதிர்க்கும் ஒரு சிலரின் கருத்து அது.ஆனால் அதே அன்பர்கள் டெல்லி சம்பவத்திற்கு வாயை மூடிக்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

      Delete