(சிறுகதை)
நிர்மலா ஹாஸ்பிடல்.
பரபரப்புடன் காணப்பட்டாள் சுமதி.
"டாக்டர்... இப்போ எப்படி இருக்கார்.?"
"கொஞ்சம் சிவியர் அட்டாக்தாம்மா...நிறைய பிளட் கிலாட் இருக்கு.ஹெவியான இன்ஜெக்சன் போட்டிருக்கோம்.மானிடரிங் நடக்குது."
"ரொம்ப சீரியஸா டாக்டர்,,?"
"ம்ம்ம்...இதுக்கு முன்னாடி இதுபோல வந்திருக்கா..?"
"இதுதான் பர்ஸ்ட் டாக்டர்.காலையில ஆபிஸ் போறதுக்கு பைக்க எடுத்தாரு.அப்படியே நெஞ்சு வலிக்குதுன்னு உட்கார்த்து விட்டார்."
"சரி.நான் மாத்திரை எழுதித் தாறேன் .டெய்லி சாப்ட சொல்லணும்..."
"மாத்திரையில சரியாகிடுமா டாக்டர்."
"ஆகலாம்.ஆகாமலும் போகலாம்..."
"அப்படினா ஆபரேசன் செஞ்சிடுங்க டாக்டர். " தாமதிக்காமல் சொன்னாள்.
"நீங்கள் அவருடைய மனைவியா..? வாரிசு இருக்காங்களா..?"
தயக்கத்துடன், "ஆமா டாக்டர்.இரண்டாவது மனைவி.வாரிசு எதுவும் இல்லை.முறைப்படி விவாகரத்து வாங்கிட்டுதான் திருமணம் செய்தார்."
"ஆபரேசன் -னா நிறைய செலவாகுமேம்மா..."
"அதைப்பற்றி கவலையில்லை டாக்டர்.நீங்கள் உடனே ஆபரேசன் செய்யுங்கள்.முடிந்தவுடன் பணம் கட்டுகிறேன்."
"சாரிம்மா..இங்கே ஆபரேசன் செய்யும் முன்பே மொத்தப் பணத்தையும் கட்டவேண்டும்."
"இப்போ கையில ஏதும் பணமில்லையே டாக்டர்.."
"ஆபரேசன் முடிந்த பிறகு மட்டும் எங்கிருந்து பணம் வரும்...? "
"அவரை நான் பத்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ்யூர் செய்திருக்கேன்..."
(டாக்டர் மைன்ட் வாய்ஸ்.. "அடி நாசமத்துப்போறவ...என் 'கைராசி'யைப் பத்தி நாலு பேருகிட்ட விசாரித்துட்டுதான் வந்திருக்கா..." )
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அஸ்வின் ராக்ஸ்...(சும்மா அள்ளிவிடுவோம்..)
வணக்கங்களுடன்...
மணிமாறன்.
--------------------------------------------((((((((((((((()))))))))))))))))))))))))))----------------------------------------------
கலக்கல் கமென்ட் அன்பரே படத்துக்கு ,,
ReplyDeleteநண்பர் Prem Kumar.s அவர்களுக்கு நன்றி..
Deleteபாஸ்..சிறுகதையை சீரியஸ் ஆக கொண்டு போய் கடைசியில ஆனந்த விகடன் ஜோக் மாதிரி முடிசிட்டேன்களே...பட் நல்லா இருந்தது..
ReplyDeleteநன்றி பாஸ்...
Deleteசலாம் சகோ....உங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்....நேரமிருந்தால் பார்க்கவும்...http://blogintamil.blogspot.com/2012/12/blog-post_13.html
ReplyDelete
Deleteஇப்போதுதான் படித்து வருகிறேன்.வலைச்சரத்தில் என் வலைப்பூவைக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி நண்பரே..