Monday 25 February 2013

வித்யாவின் கொலையில் இருக்கும் நிஜ பின்னணி...!



ரு வழியாக ஆசிட் கலாச்சாரமும் நம் வாழ்வியல் சூழலோடு மிக ஆழமாக ஊடுருவ ஆரம்பித்திருக்கிறது. நேற்று வினோதினி..இன்று வித்யா...!

கடந்த சில நாட்களாக வித்யாவின் ஆசிட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெவ்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்து.இருவரும் தீவிரமாக காதலித்ததாகவும், திருமணம் செய்ய வித்யாவின் தாய் மறுத்ததாகவும் அந்த ஆத்திரத்தில் ஆசிட் ஊற்றிவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் வித்யாவின் வீட்டிற்கு இன்று (24.02.2013) தொல்.திருமாவளவன் அவர்கள் சென்றபோது பல அதிர்ச்சித் தரத்தக்க தகவல்கள் வித்யாவின் பெற்றோர்,உறவினர்களின் மூலம்  வெளிவந்திருக்கிறது.இதற்கு பின்புலமாக ஒரு தலித் பெண் மீது ஏவப்பட்ட வன்முறைத் தாக்குதல் என்றே தோன்றுகிது.

முகநூளில் வெளிவந்த அந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.   

 வித்யாவிற்கு 22 வயது. ஆசிட் ஊற்றிய விஜய பாஸ்கர் என்ற அந்த கொடுரனின் வயது 37. இதனால் வித்யா பாஸ்கரின் காதலை ஏற்கவில்லை. தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். ஆனால் அவன் அந்தப் பெண்ணை விட்டபாடக இல்லை.

வித்யா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஸ்கர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவன்.

இதனால் ஒருதலைக் காதலாகவே அவன் அலைந்திருக்கிறான். வயதும் சாதியும் ஒத்துப்போகாத நிலையில் மிகுந்த ஏழ்மையில் வாடிய வித்யா என்ன செய்ய முடியும்...?

வித்யாவின் அப்பா 2000ஆம் ஆண்டு இறந்தபோது வித்யாவிற்கு பத்து வயது மட்டுமே. பிறகு அவரது அம்மா வீட்டு வேலை செய்து தமது மூத்த மகனையும், இளைய பெண்ணான வித்யாவையையும் காப்பாற்றி வந்துள்ளார்.

குடும்பத்தில் கொஞசம் அதிகமாக சம்பாதிக்கும் பெண் வித்யா மட்டுமே. மாத சம்பளம் ரூ-4000.

இவ்வளவு வறுமையில் வாடும் குடும்பத்தை எளிதில் வளைத்துவிடலாம் என்று பாஸ்கர் செய்த சூழ்ச்சி அந்தப் பெண் இணங்க விரும்பவில்லை.

எனவே சம்வத்தன்று வித்யா வேலை செய்யும் இணைய மையத்திற்கு வந்த பாஸ்கர் திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்த அவர் மறுக்கிறார். உடனே கையில் மறைத்து வைத்த ஆஸிட்டை எடுத்து வித்யாவின் முகத்தை குறிவைத்து ஊற்ற வித்யா திரும்பிக் கொள்ள முதுகு முழுவதும் ஆசிட்டால் நனைந்து துணி கருகி கீழே விழுகிறது. பின் முன்பக்கம் ஊற்றுகிறான், அதற்குள் ஆசிட் தீர்ந்துவிட தலையை பிடித்து கீழே சிந்தியிருந்த ஆசிட்டில் வித்யாவின் முகத்தை அழுத்தி தரையில் தேய்க்க முகம் முழுதும் வெந்துக் கருகிப் போகிறது.

அடுத்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை.உடம்பு முழுதும் ஊற்றிய ஆசிட்டால் உடலின் மேலுள்ள சதைகள் உருகி கரைந்து உதிர்கின்றன, எலுப்புகள் வெளியேத் தெரிய நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன, காயங்கள் தீவிரமாகி இன்று காலை 4 மணிக்கு வித்யா மரணத்தைத் தழுவுகிறார்.

ஒரு தலைக் காதலில் வித்யாவைத் மிரட்டி திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்ற அவனின் நம்பிக்கை பொய்த்துவிடுமோ என தெரிந்துக் கொண்ட பாஸ்கர் முழு குடி போதையில் நடத்திய கொடூரமான படுகொலை இது.

தொல்.திருமாவளவன் அவர்கள் மருத்துவமனைக்கும் பின்பு வித்யாவின் வீட்டிற்கும் சென்று பார்க்கும் போது கிடைத்த உண்மைத் தகவல்கள் இவை.

மேலும் மாவட்ட ஆட்சியருடன் அவர் பேசியதும் அவர் உடனே கிளம்பி வந்து மலர் வளையம் வைத்தார். அப்போது வித்யாவின் உடலை வைத்துக் கொண்டே அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் முன்வைத்தக் கோரிக்கைகள்.

1. வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும். குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

2. வழக்கை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்து உரிய இழப்பீட்டினை உடனடியாகத் தரவேண்டும்.

3. வித்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும்.

4. ஈமச்சடங்கினைச் செய்வதற்கு உடனடி செலவை அரசு ஏற்க வேண்டும்.

5. அதை சிறப்பு வழக்காக எடுத்து உரிய நிவாரணத்தை முதல்வர் வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன்வைத்தார். மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார். உடனடியாக ஈமச்சடங்கிற்கான தொகை வழங்கப்பட்டது. மற்றவை உடனே நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

மனசாட்சியுடன் இங்கே எழுப்பப்படும் கேள்விகள்.....

1. டில்லியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது மனசாட்சியோடு வந்து வீதிக்கு வந்து போராடிய இளைய சமுதாயம் ,விநோதினி ஆசிட் வீச்சில் கொல்லப்பட்டபோது வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய தமிழ்நாட்டுப் போராளிகள்,வித்யா ஆசிட் வீச்சின் போதும் அவர் இறந்தபோதும் தமது மனசாட்சியை எங்கே கொண்டுபோய் அடகு வைத்தார்கள்.

2.தலித் இளைஞர்கள்தான் ஜீன்ஸ் போட்டு எங்கள் இனப் பெண்களை மயக்குகிறார்கள் என அறிய கண்டுபிடிப்பை வெளியிட்ட
ஜாதி சங்கத் தலைவர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்...?

3.ஒரு காதல் பிரச்னையை சாதித்தீ மூட்டி,அதில் அரசியல் பொடிதூவி வடதமிழகத்தில் பதட்டமான சூழலை ஏற்படுத்திய பிற்போக்குவாதிகள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்
கள்.....?

4. இதை எந்த ஊடகமும், சமூக ஆர்வலர்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லையே....ஏன் தலித் என்பதற்காகவா..?


5.முகநூல் உள்ளிட்ட இணைய ஊடகங்களிலும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லையே..?

6.சரியான சிகிச்சையளித்திருந்தால் என் மகளைக் காப்பாற்றியிருக்கலாம் என அந்த அப்பாவிப் பெண்ணின் தாய் கதறி அழுதாரே...ஏன் அவர் சமூகத்திற்கு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெருவதற்கெல்லாம் தகுதி இல்லையோ..?

இதில் இன்னொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.இந்த சம்பவத்தை அரசியலாக்காமல்,மூன்று ஊரைக் கொளுத்தாமல்,குடிசைகளை எரித்து சாம்பலாக்காமல், பொருட்களைக் கொள்ளையடிக்காமல், அப்பாவி பொதுஜனங்களின் மீது தாக்குதல் நடத்தாமல் மிக அமைதியாக தனக்கேயுரிய அரசியல் முதிர்ச்சியோடு செயற்பட்ட தொல்.திருமாவளவன் அவர்கள் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் ஜாதி சங்கத் தலைவர்களுக்கு
ம் நிச்சயமாக ஒரு முன்னுதாரணம்.  




----------------------------------------------(((((((((((((((())))))))))))))---------------------------------

23 comments:

  1. வித்தியாவின் ஆசிட் வீச்சை யாரும் கண்டிக்காமல் இல்லை ,, அதன் வீரியம் சற்று குறைந்திருக்கிறது,, இதற்கு காரணம் அடுத்தடுத்து அதே போன்ற சம்பவதங்கதளின் தொடர்ச்சியால் நேர்ந்த அயர்ச்சி,, இனி அடுத்து இதே போன்ற தொருசம்பவம்( நிகழக்கூடது என்று ஆண்டவனை பிராத்திக்கிறேன் ) நிகழ்ந்ததெனில் நிங்களே கூட ஒரு பதிவு போடுவீர்களா என்பது சந்தேகமே ,,,நான் பிரான்சில் இருக்கிறேன் எனக்கு எப்படி வித்தியாவின் இறப்பு தெரிந்தது ,புதிய தலைமுறை அதை ஒளிபரப்பியது அது மட்டுமில்லை இன்னொரு தொலைக்காட்சியில் விவாத மேடைகூட நடந்தது ,,ஜாதி வித்தியாசம் பேசி நீங்களே அதை கெடுத்து கொள்ளாதீர்கள் ,, அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதே அனைவரின் எண்ணமும் ஆகும்,, அதற்காக நீங்கள் வைத்துள்ள கேள்விகளும் நியாயமானதே,, எதோ இந்த நல்ல காரியத்திற்கு வந்துவிட்டார் என்பதற்காக ஒரு பக்கா அரசியல் வியாபாரியான தொல்திருமாவளவனைத் தூக்கி வைத்து பேசுகிறீகள் பாருங்கள் அங்கே தான் பதிவின் வீரியத்தை குழி தோண்டி புதைக்கிறீர்கள்,,தொல் திருமாவளவன் எப்படி பட்ட அரசியல்வாதி என்பது உலகத்துக்கே தெரியும் முக்கியமாக பதிவுலகை சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும்,,கூட்டுகளவனி குடும்பத்துடன் செர்ந்து கொண்டு ராஜபக்‌ஷெவுடன் கை குலுக்கியவர்தான் இந்த அரசியல்வியாதி, எதோ இந்த அளவிற்காவது செய்தாரே என்று சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்

    ReplyDelete
    Replies
    1. நன்றி..Good citizen ...

      வித்யாவின் செய்தி உங்களுக்கு பிரான்ஸ் வரை தெரிந்திருப்பதையே ஆச்சர்யமாக சொல்றீங்களே..உங்களுக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டில் அனைவருக்கும் வித்யா சம்பவம் ஒரு செய்தி மட்டுமே...

      டில்லி பெண் பாலியல் வன்புணர்வால் இறந்தபோது இந்தியாவே அழுதது.வினோதினியின் இறப்புக்கு தமிழகமே கலங்கியது.ஆனால் வித்யாவின் இறப்பு ஒரு செய்தியாக மட்டுமே போனதுதான் இங்கே விவாதிக்கப்பவேண்டிய செய்தி.

      வித்யாவின் சம்பவத்தில் ஆரம்பத்திலிருந்தே திருமா மட்டுமே ஈடுபாட்டுடன் இருந்தார்.வினோதினிக்கு வந்த ஆதரவு குரல்கள் பத்து சதவீதம் கூட வித்யாவிற்கு வரவில்லை.அரசியல் கட்சிகள் கூட கண்டுகொள்ளவில்லை.இதற்கான பின்புலத்தைதான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

      மேலும்..இது தொடர்பாக திருமா அவர்கள் இதுவரை எந்த அறிக்கையும் விடவில்லை.அந்தப் பெண் தலித் என்று இணைய ஊடகங்கள் மூலமே அறிந்துகொள்ள முடிந்தது.நிச்சயமாக இதைவைத்து அவர் அரசியல் செய்திருக்கலாம்.தருமபுரி சம்பவத்தில் டாக்டர் ராமதாசின் சாதிய ரீதியான கடுமையான தாக்குதலுக்கு எவ்வளவு பொறுமையாக எதிர்வினையாற்றினாரோ அதே பொறுமை வித்யா சம்பவத்திலும் காண முடிந்தது.அவரின் மற்ற அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. ஒரு சாதி அமைப்பின் தலைவராக இருப்பவர்,ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக தன்னை முன் நிறுத்திக் கொண்டிருப்பவர் எவ்வளவு நிதானமாக இருக்கவேண்டும் என்பதற்கு திரு திருமா அவர்கள் மிகச்சிறந்த உதாரணம் .

      Delete
  2. இதைப் பெரிய விடயமாக ஆக்கவேண்டாம். அந்தப் பெண்ணின் இழப்பால் சமூகத்துக்கு ஒன்றும் நஷ்டமில்லை. உங்கள் வலைத்தளத்தை பிரகடனப்படுத்த இதைப் பயன்படுத்த வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. //அந்தப் பெண்ணின் இழப்பால் சமூகத்துக்கு ஒன்றும் நஷ்டமில்லை.//

      சரியாத்தான் சொல்லியிருக்கீங்க...தினம் தினம் பெண்கள் மீது நடக்கும் இதுபோன்ற வன்முறைத் தாக்குதலால் நம் சமூகம் என்ன நஷ்டப்படவா போகிறது.எத்தனையோ கோடிப் பெண்களில் ஒரு சில ஆயிரம் இழந்தால் நஷ்டமா என்ன..?

      என் வலைப்பூவை பிரபலப்பட்ட எந்த சில்லறைத் தனமான விசயங்களையும் நான் செய்வதில்லை.என் மற்றப் பதிவுகளைப் படித்தால் உணரலாம்.

      Delete
    2. //அந்தப் பெண்ணின் இழப்பால் சமூகத்துக்கு ஒன்றும் நஷ்டமில்லை.//

      Evlo keezh tharama pesuringa ... Unga veetla yarukavadhu ipadi annalum idhe pola than pesuvingala?

      Delete
    3. //அந்தப் பெண்ணின் இழப்பால் சமூகத்துக்கு ஒன்றும் நஷ்டமில்லை.//

      Epdi manasatchiye ilama ungalala ipdi pesamudidhu?

      Delete
    4. சாரி பிரதர், எந்த உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் குடும்பம்/நண்பர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். வித்யாவோ, வினோதினியோ ஏன் நாளை உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோ யாராயிருந்தாலும் இப்படி வெறித்தாக்குதல் நடத்துவது மாபெரும் தவறு.

      Delete
  3. "அந்தப் பெண்ணின் இழப்பால் சமூகத்துக்கு ஒன்றும் நஷ்டமில்லை. உங்கள் வலைத்தளத்தை பிரகடனப்படுத்த இதைப் பயன்படுத்த வேண்டாம்."

    என்ன வக்கிரமான சிந்தனை. மணிமாறன் எதற்க்காக இந்த வக்கிரம் பிடித்த மனிதர்களின் பின்னோட்டங்களை அனுமதிக்கின்றீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி....Ethicalist E

      இணையத்தில் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்ற ரீதியில்தான் அவர் கருத்தை அனுமதித்தேன்.

      இருந்தாலும் அந்த நண்பரின் //அந்தப் பெண்ணின் இழப்பால் சமூகத்துக்கு ஒன்றும் நஷ்டமில்லை....// இந்த வரிகள்தான் என்னை மிகவும் காயப்படுத்தியது.

      Delete
  4. இந்த சம்பவங்களுக்கு பாமக கட்சி இணைய கொள்கை பரப்பு செயலாளர் அருள் என்ன வக்காலத்து கூறப்போகின்றார் என்று தெரியவில்லை??

    முதலில் பின்னூட்டம் இட்ட சுமன் அவர்கள் வீட்டு பெண்களுக்கும் இப்படி ஏதாவது நடந்தால் இவ்வர்தான் கூறுவார் போலும். அவர்கள் வீட்டு பெண்கள் செத்தாலும் சமூகத்துக்கு ஒன்றும் நஷ்டமில்லை .

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டதற்கு நன்றி...

      மற்றவர்கள் என்ன விளக்கம் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். இதன் உண்மையான பின்னணியை தெரியப்படுத்த வேண்டிட அவசியத்தால் இங்கே பதிவிட்டேன். வினோதினியின் மருத்துவ செலவுக்கு உதவி கிடைக்க வழி செய்த சமூக அமைப்புகள் ஏன் வித்யாவை கைவிட்டது என்றுதான் புரியவில்லை.

      Delete
  5. Vinodhini, Vidhya 2 peroda maranamum namoda kaiyalagadha thanam than... Bt idhula kuda partiality pakuradhu than vedhanaiya iruku....

    ReplyDelete
  6. துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி இல்லை.. எஷிட் எப்படிக்கிடைக்கிறது? யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாமா..!! சொந்தமாக செய்யப்படுவதா? பயங்கரம்தான் போங்க.
    ஆனால் மேலே ஒருவர் போட்ட பின்னூட்டம், மனவேதனை. மற்றவர்களுக்கு வரும்போது வலிதெரியாது சகோ.. அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து பாருங்கள்.. நெஞ்சைப்பிளக்கும் வலி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ...

      உங்கள் வேதனை எனக்கும் இருக்கிறது.ஆனால் என்ன செய்ய..

      Delete
  7. //இதைப் பெரிய விடயமாக ஆக்கவேண்டாம். அந்தப் பெண்ணின் இழப்பால் சமூகத்துக்கு ஒன்றும் நஷ்டமில்லை. //

    எப்படிங்க இப்படில்லாம் ......சே ..ஒரு உயிர் கேவலமான ஒரு ஜந்துவால் கொல்லப்பட்டிருக்கு
    விருப்பமிலாட்டி பின்னூடம் இட வேணாம் ..ஆனா இப்படி பேசுவதா ...உங்க கையில் ஒரு சொட்டு ஆசிட் ஊற்றி பார்த்து வேதனை எப்படி என்று சுய பரிசோதனை செய்து பாருங்க ..நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா
    ....ப்ளாக் உரிமையாளரே மிக நன்றி உலகில் இப்படியும் கேவல ஜந்துக்கள் இருக்கின்றனா என்று அவரின் பின்னூடம் வெளியிட்டு காட்டியதற்கு

    ReplyDelete
  8. வித்யாவின் சாதி இந்த பதிவின் மூலமாக தான் தெரிகிறது. அதுவும் உங்களைப்போன்றவர்களால் தான்.

    அதற்காக, அவள் தலித் என்பதற்காகத்தான் யாரும் போராடவில்லை என்தெல்லாம் கேனைத்தனம்...

    ReplyDelete
    Replies
    1. சீனு அவர்களே...

      வினோதினி மருத்துவச் செலவுக்கு திரட்டிய பணத்தில் செலவு போக மீதமிறுக்கும் பணத்தை பெண்கள் மறுவாழ்வுக்காக செலவிடவேண்டும் என்ற செய்தி பத்திரிகையில் நான் படித்தேன். ஆனால் இங்கே வித்யாவின் ஈமச்சடங்கு செய்வதற்குக் கூட பணமில்லாமல் மாவட்ட ஆட்சித்தலைவரிடமிருந்து பெறப்பட்டு பின்பு அடக்கம் செய்திருக்கிறார்கள்.

      வினோதினிக்கு கிடைத்த அந்த உதவி வித்யாவிற்கு ஏன் கிடைக்கவில்லை...? விகடனும்,புதியதலைமுறையும் விநோதினியின் பேட்டியை மாறி மாறி வெளியிட்டு அதன் மூலம் பல வகையில் நிதிஉதவி கிடைக்க வழிமுறை செய்யப்பட்டதே...வித்யாவிற்கு ஏன் கிடைக்கவில்லை..?

      வினோதினி அளவுக்கு வித்யாவிற்கு ஆபத்து இல்லை...குனிந்து கொண்டதால் முதுகில் மட்டுமே காயம்.உயிருக்கு ஆபத்தில்லை என்றுதானே செய்தி ஆரம்பத்தில் வந்தது.அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாத KMC யில் சரிவர கவனிக்கப் படாமல்தான் இறந்துபோய் விட்டார் என தற்போது செய்தி வருகிறது.. விநோதினியை மருத்துவமனையில் சென்று பார்த்தவர்கள் எத்தனைப்பேர் வித்யாவைப் பார்த்தார்கள்...?

      திருமாவைத் தவிர்த்து வேறு எந்த தலைவர்களும் இதில் அக்கறைக் காட்டவில்லையே..? வித்யா எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என நேற்று எனக்கு முகநூல் மூலம் தெரியும்.இன்று உங்களுக்கு என் வலைப்பூ மூலம் தெரியும்.ஆனால் ஊடகங்களுக்கு முன்பே தெரியும்தானே. அவர்களின் ஏழ்மை நிலையை விளக்கி நிதிதிரட்ட உதவி செய்திருக்கலாமே...?

      இவர்கள் எல்லோரும் மொத்தமாக ஒதுங்கிக் கொண்டதற்கான காரணங்களை யோசித்தால் இதைத் தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை.

      Delete
  9. சமூக சிந்தனையில்அடிப்படை மாற்றம் தேவை. இது படித்தவர்களால் அதிகாரத்தில் இருப்பவர்களால் முடியுமா என்பது கேள்விக்குறியே?

    ReplyDelete
  10. இதற்கு மைனஸ் ஓட்டு போட்ட உத்தமர்களே ... இது போன்ற உண்மைகள் உங்களுக்கு கசக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
  11. தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ.மணிமாறன்,

    கொல்லப்பட்ட சகோதரி வித்யாவுக்கு எனது ஆழந்த இரங்கலை வருத்தமுடன் தெரிவித்துக்கொண்டு, கொலைக்காரனுக்கு அவனின் செயலுக்கு உரிய சரியான தண்டனையாக, ஆசிட் ஊற்றி மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்..! (இது தான் முன்பு இறந்த சகோதரி வினோதியினின் ஆசையும் கூட)

    இப்பதிவில் இரண்டு விஷயங்கள் எனக்கு புதிது..!

    //4. இதை எந்த ஊடகமும், சமூக ஆர்வலர்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லையே....ஏன் தலித் என்பதற்காகவா..?//--------'இந்த சம்பவம், ஏன், வினோதினி மாதிரி பெரிதாக வரவில்லை' என்று யோசித்தேன். காரணம் புரிந்தது. நம் நாட்டை பொறுத்த மட்டில் உரிமை மறுக்கப்படுவதில் தலித் சமூகம் இஸ்லாமிய சமூகம் மாதிரியேதான்..!

    //பாஸ்கர் முழு குடி போதையில் நடத்திய கொடூரமான படுகொலை இது.//--------டாஸ்மாக்கை உடனே இழுத்து மூடினால், பல மனிதர்களை... அவர்களின் மனித குணத்தை இழக்காமல் காப்பாற்றலாம் என எனக்கு புரிகிறது.

    ReplyDelete
  12. இன்றைய செய்தி:-
    "ஆஸிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம் : முதல்வர்.ஜெ."

    அப்படின்னா,
    மண்ணெண்ணை ஊத்தி எரிச்சுவிட்டா..? ரேஷனில் கெரசின் கட்டா..?
    பைக்கில் மோதி பொண்ண கொன்னா..? பைக் விற்பனை ரத்தாகுமா..?
    பிளேடாலே/கத்தியாலே கீறி-குத்தி கொன்னா..? கத்தி/பிளேடு விற்க தடையா..?

    நோய் நாடி நோய் முதல் நாடி...... ம்ஹூம்..!

    ஆனால்...


    //மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 வாலிபர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர போலீஸ்//
    இந்த 2008 சம்பவத்துக்கு அப்புறம்....
    ஆந்திராவுல ஆசிட் வீச்சு குற்றங்கள் நடந்ததா
    நானும் கேள்வி பட்டது இல்லை..!
    http://tamil.oneindia.in/news/2008/12/13/india-ap-police-gun-down-three-men-held-in-acid.html


    நம்ம தமிழ்நாட்டில் ஆசிட் கொலைக்குற்றவாளிகளை என்ன பண்றாங்கோ..?
    மரண தண்டனை தராம நம்ம பணத்திலே ஓசி சாப்பாடு போடுறாங்கோ..!

    ReplyDelete
  13. இது தொடர்பாக ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை. இணையத்தில் விளம்பரம் செய்திருந்தால் கூட கணிசமான நிதி உதவி கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு. இன்னும் தீவிர சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம்.
    ஆனால் தலித் என்று தெரிந்து யாரும் உதவ முன்வரவில்லை என்று நம்பமுடியவில்லை.
    இந்த விவரம் நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.பெண்ணுரிமை அமைப்புகளும் இன்னும் ஈடுபாடு காட்டி இருக்கவேண்டும்.
    இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது.

    ReplyDelete
  14. வித்யாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்..


    அமர்க்களம் கருத்துக்களம்
    http://www.amarkkalam.net/

    ReplyDelete