அள்ளியள்ளி கொடுப்பாங்கனு நெனைச்சிருந்தேன்...ஆனா இவ்வளவு பெரிசா தூக்கி வைப்பாங்கனு எதிர் பார்க்கல...
பரதேசி படத்தைதான் சொல்றேன்..
அது என்னவோ தெரியில..பாலாவின் படங்களுக்கு எல்லாம் சொல்லி வச்ச மாதிரி ஒத்த அவார்டு மட்டும் கொடுத்து சோலிய முடிச்சிடுறாங்க... ஏன் அதற்கு மேல கொடுத்தா வாங்கமாட்டேனா சொல்லப்போறாரு ...?
ஒருவேளை மணிரத்னம்,கமல் படங்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக தேர்வுக்குழுவுக்கு யாரோ சொல்லியிருப்பாங்க போல...சரி இவ்வளவு அவசரமாக படத்தை தேசிய விருதுக்கு பாலா ஏன் அனுப்பினார்? ஒருவேளை நிறைய விருதுகள் கிடைக்கும் பட்சத்தில் அதுவே படத்திற்கு எதிர்பார்ப்பை உருவாக்கி நல்ல ஓபனிங் கிடைத்துவிடும் என நினைத்திருப்பார் போல..படத்திற்கு இவ்வளவு பாராட்டுக்கள குவியும் இந்த நேரத்தில், இந்த ஒரே ஒரு அவார்டு... அதுவும் ஆடை வடைவமைப்புக்கு என்பது படத்திற்கு பெரும் பின்னடைவு மட்டுமில்லாமல் படம் குப்பை என இங்கே விமர்சனம் எழுதி, தான் ஒரு அறிவு ஜீவியென தம்பட்டம் அடிக்கும் பல இலக்கிய சிகாமணிகளின் வாய்-க்கு அவல் போட்டது போல ஆகிவிட்டது.
பொதுவாகவே ஒரு படத்தை தேசிய விருதுக்கு அனுப்பும் போது திரையில் ஓட்டிய படத்தை அப்படியே அனுப்புவதில்லை. கொஞ்சம் டிங்கரிங், பட்டி, பெயிண்டிங் எல்லாம் செய்து தேசியத் தரத்தில்(?!) அனுப்புவார்கள். சப்-டைட்டில்,ஒரிஜினல் வாய்ஸ் ரெக்கார்டிங் போன்ற வேலைகள் எல்லாம் நடக்கும். பிதாமகன் படத்தில் கூட லைலாவுக்கு விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிபட்டபோது அவரது சொந்தக்குரலில் திரும்பவும் மாற்றியமைத்துதான் விருதுக்கு அனுப்பிவைத்தார் பாலா...ஆனால் பரதேசி படத்தில் அவர் காட்டிய இந்த அவசரம்தான் இந்த ஒத்த விருதுக்கு காரணம் என்று நினைக்கிறேன். தவிர, ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் கூட தேர்வுக் குழுவினரின் பார்வையை திரும்ப வைக்கும்.
விகடனும் குமுதமும் கூட வரிந்துக் கட்டிக்கொண்டு பரதேசியை புகழ்ந்துத் தள்ளியிருக்கிறது.அதேப்போல வழக்கமாக எல்லாப் படத்தையும் தயவு தாட்சண்யமின்றி அடித்துத் துவைத்தெடுக்கும் வலைப்பூ நண்பர்களும் வானளாவப் புகழ்ந்திருக்கிறார்கள்.இந்தி சினிமாவில் தேவ்.டி, கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூர் போன்ற அற்புதமான படங்களை எடுத்த அனுராக் காஷ்யப்பே பரதேசி ஒரு காவியம் என்கிறார்.
இவ்வளவு பாசிடிவாக ரெஸ்பான்ஸ் இருக்கும்போது ஏன் அவசரப்பட்டு தேசிய விருதுக்கு அனுப்பினார் எனத்தெரியவில்லை.எனக்கென்னவோ அடுத்த வருடத்திற்கான பரிந்துரைக்கு அனுப்பியிருந்தால் குறைந்தது ஐந்து விருதாவது கிடைத்திருக்கும்.பாலா,வேதிகா,நாஞ்சில் நாடன்,சி.எஸ்.பாலச்சந்தர் என விருதுப் பட்டியல் நீண்டிருக்கும்.....
படத்தில் பரிசுத்தம் கேரக்டர் அபத்தம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.ஆனால் இது மதம் சார்ந்தப் பிரச்சனையாகப் போனதுதான் எதிர்பாராதது.சற்று உன்னிப்பாக நோக்கினால் வேறொரு உண்மை புலப்படும். விளிம்புநிலை மக்களின் அறியாமையையும்,அடிமைத்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆன்மிகப் போர்வையில் இருக்கும் சிலர் எவ்வாறு அவர்களை தன்வயப்படுத்துகிறார்கள் என்பதைத்தான் அவர் படம்பிடிக்க முனைந்திருப்பார் என நினைக்கிறேன். தவிர, அவர் இங்கே கிருஸ்துவத்தை மட்டும் சாடவில்லை. 'தாயத்து கட்டனும், ,சாமிக்கு ரெண்டு சேவல் வேண்டிக்கணும்' என வேறு சில விசக்கிருமிகள் அவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதையும் கூட பாலா இதில் படம் பிடித்திருக்கிறார்.
சரி.. இதைப் பற்றி என்னிடம் யாராவது வாதிட வந்தால் கிறிஸ்துவர்களின் மனதை புன்படுத்தியிருக்கிறார் என நிஜத்தை ஒப்புக் கொள்வேன்.ஏனென்றால் 'பரிசுத்தம்' மூலமாக உருவாகியிருக்கும் பிம்பம் அப்படி...!
இதையும் தாண்டி இந்தப் படத்திற்கு வேறொரு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அது சமகாலத்திய
இலக்கியவாதிகளிடமிருந்து.
விஸ்வரூபம் படத்தை குப்பை என விமர்சித்த மனுஷ்யபுத்திரனுக்கு கிடைத்த விளம்பரம் போல, தமக்கும் கிடைக்கனும்னு, 'எனக்கு ஏன் பரதேசியைப் பிடிக்கவில்லை' என்ற ரீதியில் பல இலக்கிய சிகாமணிகள் இணையத்தில் விமர்சனம் எழுதிகிட்டு இருக்கு.
எனக்குத் தெரிந்து எந்தப் படத்தையும் இந்த அளவுக்கு சாரு விமர்சித்திருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். அதிலும் பகுதி பகுதியாக பிரித்து தன் முகநூலில் விமர்சனம் என்ற பெயரில் விளாசியிருக்கிறார் சாரு. அராத்து,கருந்தேள் உட்பட அவரின் அடிபொடிகளின் விமர்சனமும் அப்படியே.எரியும் பனிக்காடு நாவலை சரிவர படமாக்கவில்லை என சாரு தன் விமர்சனத்தில் சாடியிருந்தாலும் அவரின் வன்மத்திற்கு காரணம் வேறு.
ஜெயமோகனுக்கும் சாருவுக்கும் ஆகாது என்பது இலக்கிய உலகில் யாவரும் அறிந்ததுதான்.பரதேசி படத்தில் வசனம் எழுதிய நாஞ்சில் நாடன்,ஜெயமோகனின் நெடுநாளைய நண்பர் என்பதால்தான் இந்த வன்மம். தவிர, தான் வசனம் எழுதிய கடல் படத்தையே காட்சிப் படிமங்கள்,கன்றாவி விழுமியங்கள் என விமர்சித்து தன்னையே தன் கையால் குத்திக்கொண்ட ஜெயமோகன்,பரதேசி படத்தை ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளியிருந்தார். இதுதான் சாருவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் போல...
ஞாநியின் விமர்சனம் கொஞ்சம் சரியெனப் பட்டாலும் அவர் விமர்சிக்க எடுத்துக்கொண்ட சாராம்சம் மிக வேடிக்கையாக இருக்கிறது. அவரும் அதே இத்துப் போன காரணத்தைதான் சொல்கிறார்...எரியும் பனிக்காடு நாவலை சிதைத்து விட்டாராம் பாலா...
எனக்கு இந்த அறிவுக் கொழுத்துகளிடன் கேட்க விரும்புவது இதுதான்...
Red Tea நாவல் P.H.டேனியல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,முதல் பிரதி வெளியானது 1969-ல்.பிறகு இது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது 2007-ல்.கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்,அதுவும் தென்தமிழ் நாட்டில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை,ரத்தம் தோய்ந்த வரலாற்றை தமிழில் மொழிபெயர்க்க எந்த இலக்கியவாதிகளும் முன்வரவில்லை. அதாவது இந்த நாவலை கண்டுகொள்ளவில்லை.
மரியோ பர்கஸ் யோசா,போர்ஹெஸ்,அருந்ததி ராய் நாவல்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் சாருவுக்கு இந்த Red Tea நாவல் அவரின் கண்ணில் படாமால் ஜெயமோகனின் அடிப்பொடி யாரோ மறைத்து விட்டார் போல..உலகத்தில் சிறந்த கதைகளை தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக போட்டிருக்கிறேன் என பெருமைப் பீத்திக்கொள்ளும் சாருவுக்கு இந்த நாவலை மொழி பெயர்க்க அலுப்பாக இருந்திருக்கும் போல... அதேப்போல் ஞாநி எத்தனை மேடையில் இந்த நாவலைப் பற்றி சிலாகித்து பேசியிருப்பார் எனத் தெரியவில்லை.
எனக்கென்னவோ ஏதோ ஒரு பழைய புத்தகக்கடையில் எடைக்குப் போடப்பட்டு,காராசேவ் போண்டா மடிக்க டீக்கடைக்கு செல்லும் இடைப்பட்ட நொடிப்பொழுதில்தான் Red Tea நாவல் இரா.முருகவேளின் கண்ணில் பட்டிருக்கும் என நினைக்கிறேன்.எரியும் பனிக்காடும் திரும்பவும் எடைக்குப் போடும் முன் பாலா கண்ணில் பட்டிருக்கிறது.
இன்று தமிழ் சினிமாவில் மட்டுமல்ல,எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விமர்சனர்கள் என எல்லோர் வாயாலும் உச்சரிக்கப்படுகிறது எரியும் பனிக்காடு. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அவல வாழ்வை,எரியும் பனிக்காடு நாவலில் சொல்லப்பட்டது போல பாலா எடுக்கவில்லை என சிலர் குமுறுகிறார்கள்.அவர்களுக்குப் பின்னால் ஒரு அவல வாழ்வு இருந்ததே எங்களுக்கு பரதேசி படம் மூலம் தானே தெரியும்.அதன் பின்பு தானே அப்படியொரு நாவல் இருந்த விஷயம் பல பேருக்குத் தெரிந்திருக்கிறது.
பொன்னியின் செல்வனை திரைக்காவியமாக எடுக்க எத்தனைப் பேர் முயன்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்தானே..எம்ஜியார்,மணிரத்னம்,செல்வராகவன் என மூன்று தலைமுறைகள் முயன்று தோற்றுதானே போனார்கள்....எரியும் பனிக்காடு நாவலை திரைப்படமாக எடுக்கும் தைரியம் எத்தனைப் பேருக்கு வரும்..? தனது முந்தையப் படம் அட்டர்பிளாப் ஆன நிலையில்,அடுத்தப் படத்தில் வணிக ரீதியாகத்தான் எல்லா இயக்குனர்களும் எஸ்கேப் ஆகவேண்டுமென நினைப்பார்கள்.கமர்சியல் ரீதியாகப் பார்த்தால் இது ஒரு வறண்ட கதைக்களம். அதையும் மீறி இதை எடுக்கத் துணிந்த பாலாவை வாயார பாராட்ட வேண்டாம்... நாற்றம் பிடித்த உங்கள் இலக்கிய வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும்...
இதை பாலாவின் விசிறியாக சொல்லவில்லை...நல்ல தரமான தமிழ்படங்களை கைதட்டி வரவேற்கும் ஒரு சராசரி ரசிகனாக என் மனதில் பட்டதை சொல்லனும்னு தோணிச்சி...அவ்வளவுதான்...!
வணக்கங்களுடன்.....
மணிமாறன்
-------------------------------------------------------------((((((((((((((()))))))))))))))))-------------------------------------------
1. மனதை பாதித்து இருந்தால்...
ReplyDelete2. வயித்தெரிச்சல் இருந்தால்...
3. பாராட்ட மனம் இல்லாவிட்டால்...
4. 5. 6.....
இப்படி தான் விமர்சிப்பார்கள்...
கவனிக்க : மேலே சொன்ன அனைத்தும் அவரவர், தனது மனதில் பிடிக்காதவர்களுக்கு மட்டும்...
மிக்க நன்றி நண்பரே..
Deleteசகோ, சொல்கிறவர்கள் எதையாவது சொல்லட்டும். படம் பார்க்கும் அத்தனைபேரும் கொண்டாடுகிறார்கள் பரதேசியை. மக்கள் மனதில் ஒரு திரைப்படம் இடம் பிடிக்கிறதென்றால் சும்மாவா.! கோடிகோடியாய் பணத்தைக் கொட்டி செலவு செய்திருந்தாலும், மக்களை ’ஆஹா’ என்று எளிதில் சொல்லவைத்துவிட முடியுமா என்ன!. பரதேசி சொல்லவைத்தது. அது ரசிகனுக்கும் திரைக்கதைக்கும் இடையில் நடக்கும் ஓர் மெல்லிய உணர்வு. ரசிகனின் மனநிலையைப்பொருத்த விஷயம் அது. அதை எப்படி மற்றவர்களோடு ஒப்பிடமுடியும்.!?
ReplyDeleteகுழந்தைகளுக்கு சூப்பர்மேன், மிஸ்டர் பீன் படங்கள் பிடிக்கிறது, அதில் லொட்டு இல்லை லொசுக்கு இல்லை என்கிற லாஜிக் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதினால், எழுதியவரைத்தான் ஒரு மாதிரியாகப் பார்க்கும் இந்த உலகம். பரதேசி விஷயத்திலும் அதுதான் நடக்கிறது.
எவ்வளவோ திரைப்படங்களை அவர்கள் (இலக்கியவாதிகள்) கொண்டாடுகிறார்கள், அறிமுகம் செய்துவைக்கிறார்கள். மெனக்கட்டு அத்திரைப்படத்திற்குச் சென்றால், திகிலாகி பாதியிலே ஓடிவந்துவிடுகிறோமே.. அது என்னவாம்.!? ரசனை என்பது மனம் சம்பந்தப்பட்டது. யார் என்ன சொன்னாலும் அது கேட்காது. நம் மனதை முதலில் அது உலுக்கவேண்டும். அவ்வளவே.
சொன்னதுபோல், எரியும் பனிக்காடு என்கிற நாவலை படம் பார்த்த பிறகுதான் தேடவே ஆரம்பித்துள்ளேன்.
//ரசனை என்பது மனம் சம்பந்தப்பட்டது. யார் என்ன சொன்னாலும் அது கேட்காது.//
Deleteசரியாகச் சொல்லியிருக்கீங்க சகோ... உங்களது மனநிலைதான் இங்கு நிறைய தமிழ் ரசிகர்களுக்கு. படத்தின் விமர்சனம் நிறை குறைகளை சொல்லி இருக்கவேண்டுமேத் தவிர வன்மத்தின் வெளிப்பாடாக இருக்கக் கூடாது.
@ மணிமாறன், சாரு கக்குவது அப்பட்டமான வன்மம். இதை இன்று நேற்று அல்ல பல வருடங்களாக செய்து வருகின்றார். அங்காடி தெரு படத்தை சாக்கடை என்று சொன்னவர் இந்த வன்மம் பிடித்த சாரு தான்.
Deleteஆனா அப்போது எல்லாம் நாங்கள் சாருவை கண்டித்த போது சாருவுககு வக்காலத்து பாடியது இந்த அக்கா ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி தான் என்பதை நினைவு படுத்துகின்றேன்.
இப்போது எப்படி இவங்களுக்கு நல்ல புத்தி வந்தது என்பது புரியவில்லை.
அது சரிங்க ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி அக்கா,
நீங்க தானே சாருவை உலக இலக்கிய வாதி என்று புகழ் பாடிக்கிட்டு இருந்தீங்க.
சாரு கருத்துகள் கடவுளின் கருத்துகளுக்கு சமமானது என்று சொன்னேங்க.
இப்போ மாத்தி போட்டு அடிக்கிறீங்க.
//படத்தில் பரிசுத்தம் கேரக்டர் அபத்தம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.ஆனால் இது மதம் சார்ந்தப் பிரச்சனையாகப் போனதுதான் எதிர்பாராதது.// இது போன்ற ஒரு விமர்சனந்த்தை தான் எதிர்பார்த்தேன்.... ஆனால் நீங்கள் தான்...
ReplyDelete//வறண்ட கதைக்களம். அதையும் மீறி இதை எடுக்கத் துணிந்த பாலாவை வாயார பாராட்ட வேண்டாம்... நாற்றம் பிடித்த உங்கள் இலக்கிய வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும்...// அருமையான பார்வை.... உங்கள் எழுத்துகளுக்கு சபாஷ் நண்பா.... பலமான வலுவான சிந்தனை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சீனு....
Deleteஉண்மை இப்படி ஒரு படம் வந்த பின் தான் சராசரி மனிதனும் இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிய பட்டது இதை ஒத்து கொள்ளவில்லைஎன்றால் எப்படி
ReplyDeleteவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது
உங்களின் அருமையான சிந்தனைக்கு மிக்க நன்றி சகோ..
Deleteநான் சாருவின் அடிபொடி அல்ல. சாரு விமர்சகர் வட்டத்தை சேர்ந்தவன். disclaimer போட்டாச்சு.உங்களுடைய விமர்சனத்தை படிக்கும் போது பாலாவின் அல்லக்கையின் விமர்சனம் போல் இருந்தது. (அராத்து,கருந்தேள் உட்பட அவரின் அடிபொடிகளின் விமர்சனமும் - நீங்கள் இப்படி போடும் போது நான் உங்களை பற்றி போடுவதில் தவறேதும் இல்லை0
ReplyDeleteஜெயமோகனுக்கும் சாருவுக்கும் ஆகாது என்பது இலக்கிய உலகில் யாவரும் அறிந்ததுதான். ஆனால் ஜெயமோகன் பதிவு போட முன் சாரு தனது விமர்சனத்தை போட்டு விட்டார்.
அத்துடன் ஜெயமோகன் வசனம் எழுதிய கடல் படத்தை பாராட்டி விமர்சனம் போட்ட போது எங்கே இருந்தீர்கள். அதில் ஜெயமோகன் வசனம் தான் சிறப்பாக இருந்தது என்று தனியாக பாராட்டியிருந்தார்.
இதற்க்கு முன் ஜெயமோகன் வசனம் எழுதி பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு சாரு எழுதிய விமர்சனத்தை ஒரு கணம் நினைவு கூறவும்.
அப்போது வராத வன்மம் இப்போது வர காரணம் என்ன பாலா அறிவுகொழுந்தே ???
Deleteநன்றி..நீங்க சாருவின் முகநூல் போய் பாருங்க....இரண்டு வாரமாக அவர் என்னத்த எழுதுகிறார் என்று...? பரதேசி படம் பார்க்கும் முன்பிலிருந்தே அவரின் விமர்சனம் ஆரம்பிக்கிறது. பகுதி பகுதியாக அவரின் விமர்சனத்தைப் படித்துப் பார்த்தாலே அதில் படிந்திருக்கும் வன்மங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
இரண்டு நாட்களுக்கு முன் அவர் போட்ட ஸ்டேடசை இங்கே பாக்கிறேன்...அவரின் கோபத்திற்கு காரணம் தெளிவாகப் புரியும்.
//காலையில் அராத்து போன் பண்ணி ஜெயமோகன் வாசகர் வட்டத்தில் சேரப் போவதாகச் சொன்னார். காரணம்? உங்களோடு இருந்தால் என்ன கிடைக்கும்? அடிக்கடி உங்க போனுக்கு டாப் அப் பண்ண சொல்வீங்க. ஆனால் ஜெயமோகனுக்கு ஜால்ரா அடிச்சா பாலாவோட அடுத்த படத்துக்கு வசன சான்ஸ் கிடைச்சு நானும் நாஞ்சில் நாடன் மாதிரி லைஃப்ல செட்டில் ஆகலாம்ல? என்றார். தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது... ம்... பத்து வருஷமா ஜெயமோகன் பின்னாடியே அலையிறாரேன்னு நாஞ்சில் நாடனை என்னமோ நினைத்தேன். சரியாத்தான் செஞ்சுருக்கார். நானும் இப்போது விஷ்ணு புரம் படிச்சிக்கினு இருக்கேன். நல்லாத்தான் இருக்கு. தமிழின் ஆகச் சிறந்த படைப்புன்னு தோணுது. போன வாரம் கொற்றவை படிச்சேன். அது சிலப்பதிகாரத்தை விட நல்லா இருந்துச்சு. நானா அராத்துவா லைஃப்ல யார் செட்டில் ஆகப் போறதுன்னு பார்த்துடுவோம்... ஜெயமோகனோட லேட்டஸ்ட் நாவல் என்னா சொல்லுங்க? அதையும் முடிச்சுர்றேன்...//
உங்களுக்கு பிடித்து போல் பட விமர்சனம் எழுத முடியாது. விமர்சகர் மனத்துக்கு நியாயமாக என்ன படுகின்றதோ அதைதான் விமர்சனமாக எழுதமுடியும்.
ReplyDeleteஅனானி சார்...விமர்சனம் என்பதே நிறை குறைகளை சுட்டிக் காட்டுவதுதான்... யாருடைய ரசனைக்கு ஒத்துப் போகிறமாதிரி எழுவதல்ல விமர்சனம். ஆனால் இந்தப் படத்திற்கு இலக்கியவாதிகளின் விமர்சனம் அப்படிப்பட்டதல்ல... வரி வரியாக ஒரு படத்தை கிழித்துப் போடுவதுதான் விமர்சனமா...?
Delete@Manimaran,
Deleteரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. படம் நல்ல படம் தான், ஆனா தமிழ் சினிமாவின் தலைசிறந்த சிறந்த படம் கிடையாது.
ஆனா சாரு போன்ற அரைவேக்காடு பரதேசி படத்தை பத்தி எழுதுவதை எல்லாம்
பெருசா எடுத்துக்க வேண்டாம் என்பது என்னோட கருத்து, இவர் படத்தோட வெற்றியை தீர்மானிக்கிற ஆள் கிடையாது. இவர் சொந்த
காசுல கூட படம் பார்த்து இருக்க மாட்டாரு. படத்தோட பாக்ஸ் ஆபீஸ் வெற்றி உறுதி படுத்த விட்டது. அடுத்து வர போற
பாலா படத்தை நாம் எதிர்பார்போம்.
நன்றி ராஜ்.
Delete"பாலாவை வாயார பாராட்ட வேண்டாம்... நாற்றம் பிடித்த உங்கள் இலக்கிய வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும்"
ReplyDeleteVery well Said Brother.
"பாலாவை வாயார பாராட்ட வேண்டாம்... நாற்றம் பிடித்த உங்கள் இலக்கிய வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும்"
ReplyDeleteVery well said Brother.
THANKS BROTHER...
Deleteஎன்ன ஒரு விரிவான அலசல். படம் பாக்குர வரையும் எதுவும் சொல்ல தோணல்லே.
ReplyDeleteநன்றி..நன்றி..பூந்தளிர்
Deleteசாமி, தியேட்டரில் சரியாக ஓடாமல் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பரதேசி, பன்னாடை போன்ற அழுவாச்சி காவியங்களைப் பற்றி பேசி என்ன லாபம்?
ReplyDeleteஇலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமையுமா என்பதைப் பற்றி யோசியும்.
பாலா சிறந்த டைரக்டர் என்பதில் மாற்று கருத்து எனக்கு இல்லை. ஆனால் அவர் கதா பாத்திரங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் உள்நோக்கம் கொண்டது போல் தோன்றுகிறது.
ReplyDeleteஅவன் இவன் - பசுவதை
பரதேசி -கிறித்தவ மதமாற்ற மோசடி
எப்படியாகினும் அடுத்த படத்தில் இதனை தெளிவு படுத்துவார் என நம்புகிறேன்.
மணி சார்...
ReplyDeleteவழக்கம் போல உமது கருத்துக்கள் அழுத்தமானவை...
அதனால் தான் விமர்சகர் வட்டம் நெளியுது....
நன்றி பிரகாஷ்.
Deleteஜெயமோகன் பாலாவை RSS பக்கம் கொண்டுசென்றார அல்லது பாலாவே RSS-தானா. நான் கடவுள்-படத்தை rewind பண்ணி பாருங்கள், you will understand.
ReplyDeleteThe film is motivated campaign for Hindutva agenda. இந்துதவா ஆட்கள் தேசியப்பரிசு கமிட்டி இருந்திருந்தால் நீங்கள் சொன்னமாதிரி ஏகப்பட்ட பரிசுகள் கிடைத்திருக்கும்.
ReplyDelete//படத்தில் நிறை, குறைகளைப்பற்றிச் சொல்வதுதான் விமர்சனம்//
ரொம்ப சரி. அப்ப்டியென்றால் நிறையைப்பற்றிச்சொன்னால் மட்டும் சரி, குறைகளைச்சொன்னால் வன்மங்களா?
விமர்சனம் எனபது ஒருவர் தன் நிலையில் இருந்து எழுதுவதுதான். அனைவருக்கும் அவ்வுரிமை உண்டு. ஒரு படம் குப்பை என்று ஒருவருக்குத் தெரிந்தால் அவர் சொல்லத்தான் செய்வார். உங்களுக்குப்பிடித்திருந்தால், அது சூப்பர் என்று சொல்லிக்கொள்ளவேண்டியதுதான். எவரும் தடுக்கமாட்டார்கள்.
ஏன் உங்களுக்கு வன்மம்?