Wednesday 7 August 2013

சேரனை புரிந்துகொள்ளுங்கள்...!



யக்குனர் சேரன் மகளின் காதல் சம்மந்தமாக எல்லோரும் கருத்து கந்தசாமியாக மாறி ஆளுக்காளு ஒரு கருத்தை சொல்லிகிட்டே இருக்காங்க.. அப்படினா நம்ம பங்குக்கு ஏதாவது சொல்லித்தானே ஆகணும்.. இல்லனா சமூக அக்கரையற்றவன்(!?) என்ற பழிச்சொல்லை இந்த உலகம் நம்மீது சுமத்திவிடும் அல்லவா....!

இணையத்தில் இருவேறுவிதமான விமர்சனங்கள எழுப்பப்படுகின்றன. ஒரு சாரார் காதலுக்கு ஆதரவாகவும் மற்றவர்கள் பிள்ளையை பெற்ற அப்பா ஸ்தானத்திலிருந்து கருத்துரைக்கின்றனர்.

எனக்கு சேரன் என்கிற தனிப்பட்ட மனிதர் மீது நிறைய விமர்சனங்கள் உண்டு.தன்னை ஒரு புரட்சி இயக்குனராக காதலுக்கு தனி இலக்கணம் வகுத்த படைப்பாளனாக சமூகத்தில் காட்டிக் கொள்ளும் சேரன்,தன் மகளின் காதல் பிரச்சனைக்காக 'என்னைப் புரிந்துகொள்ளுங்கள்' என தொலைக்காட்சி யில் அழுவது எவ்வளவு அபத்தமாக உள்ளது..! அதைக் கண்டு எத்தனை திரைப்பிரமுகர்கள் சேரனுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளனர்.!.இணையத்தில் கூட அவர் மகளின் காதலனைப்பற்றி தவறான செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. சரி..சேரனை புரிந்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு பெரிய உத்தமனா அவர்...? 

15 வருடத்திற்கு முன் திருச்சியில் நிஷா என்கிற இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட சம்பவத்தில், போலிஸ் விசாரணையில் அந்தப்பெண் வெளியிட்ட இரண்டு பெயர்கள் இயக்குனர் சேரன்,தங்கர் பச்சான். அந்தப்பெண் சொன்ன அதே நேரத்தில் இவர்கள் திருச்சியில் இருந்தது உண்மை என்றாலும் பிறகு எப்படியோ சரி கட்டப்பட்டு மூடி மறைக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் தந்தை ஐந்து வருடம் கோர்ட்டுக்கு நடையாக நடந்து கடைசியில் வழக்கு ஒன்றுமில்லாமல் போனது. அந்தத் தகப்பனை யார் புரிந்து கொண்டார்கள்...?

ஒருமுறை எழுத்தாளர் பாலகுமாரன்,உதவி இயக்குனர்களின் நிலையைப்பற்றி பத்திரிகையில் ஏதோ சொல்லி வைக்க, நிறைய உதவி இயக்குனர்களைத் திரட்டிக்கொண்டு பாலகுமாரனின் வீட்டின் முன்பு கோசம் போட்டு பொங்கு பொங்குனு பொங்கினார். இதை எதிர்பார்க்காத பாலகுமாரன் எல்லோரின் முன்பும் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொண்டது எல்லா பத்திரிக்கையிலும் வந்ததே... அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டாரா சேரன்...?

ஒரு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை 'பாடுகளா' என திட்டியவர், இன்று டிவியில் கதறி மக்களிடம் சிம்பதி தேடுகிறார். இருதரப்பிலும் ரகசியமாக பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை இப்படி தமிழகம் முழுவதும் பேச வைத்திருப்பது  'ஒரு வெளம்பரம்....' போலல்லவா தெரிகிறது.

காதலை வெறுக்கும் கதாநாயகியின் தந்தையை வில்லனாகவே நம் தமிழ் சினிமா தொடர்ந்து சித்தரித்து வந்திருக்கிறது.அதற்காக ரவுடியிசம்,கொலை மிரட்டல் என்கிற எந்த எல்லைக்கும் அவர்கள் போவார்கள். அதை அப்படியே ரியல் ஃலைப்பில் செய்துவிட்டு என்னைப் புரிந்துகொள்ளுங்கள் என தொலைக்காட்சியில் அழுதால் நாமும் கண்கலங்கி உருகிவிடுகிறோம்... இந்த சமூகத்தில் சினிமாகாரனின் அழுகைக்குத்தான் எவ்வளவு வலிமை...!!

அதேநேரத்தில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து,ஒரு சாராசரி தந்தையாக அவர் பக்கம் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை டீலிங் செய்த விதம்தான் தவறு.மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் அதன் வலி.இல்லையென்று சொல்லவில்லை.திரையில் காதலின் புனிதத்தைப் பற்றி பாடமெடுத்தவர் தன் சொந்த வாழ்க்கையில் எந்த காதலையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாதுதான். ஆனால் 'முன்பு நல்லவனா தெரிந்தான். இப்ப கெட்டவனா தெரியிறான்' என்கிற வழக்கமான விளக்கத்தை இவரும் கொடுக்கும்போதுதான் கொஞ்சம் சறுக்குகிறார்.

சேரன் அவர்களே.. உங்கள் ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தால் எங்களுக்கும் அதே படபடப்புதான் வருகிறது. ஆனால் 20 வயது என்பது நல்ல பக்குவப்பட்ட நிலை.மூன்று வருடம் காதலித்தவர் அந்தப் பையனின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருப்பார். உங்கள் மகள் மீது நம்பிக்கை வையுங்கள். இவ்வளவு கடந்த பின்னும் இந்தக் காதலை பிரித்து வைப்பது சமூகத்தில் உங்கள்மீது தவறான பிம்பத்தை உருவாக்குவதுடன் அது கடைசி வரை உங்கள் ஆழ்மனதை  உறுத்திக்கொண்டே இருக்கும். "இந்தியா காதலின் பூமி தான்..காதலர் பூமியல்ல.!" என்று கவிப்பேரரசு சொன்னதை மீண்டும் நிருபித்துவிடாதீர்கள். 

ஓகே..கருத்து முடிந்தது.





10 comments:

  1. நல்லவரா, கெட்டவரா? சேரன்?

    ReplyDelete

  2. ஹி..ஹி... நல்லவர்போல் நடிக்கத்தெரிந்தவர்..

    ReplyDelete
  3. அதேநேரத்தில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து,ஒரு சாராசரி தந்தையாக அவர் பக்கம் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை டீலிங் செய்த விதம்தான் தவறு.மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் //

    உண்மை. சேரனை ஒரு தந்தையாக பார்க்கும்போது அவருடைய ஆதங்கம் புரிகிறது. ஆனாலும் அவர் இயக்குனர் பட்டாளத்தையே சேர்த்துக்கொண்டு தன்னுடைய மகளை காதலித்தவரை தாக்க சென்றதும் அந்த இளைஞனை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பப் பெண்களை தவறாக சித்தரிக்கும் தனுடைய சகோதர இயக்குனர் ஒருவரை கண்டிக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதும் நிச்சயம் சரி அல்ல.

    ReplyDelete
    Replies
    1. நன்றி..டிபிஆர்.ஜோசப்..

      சரிதான்... எவ்வளவோ காதல் பிரச்சனைகள் மிக சுமூகமாக பேசித் தீர்க்கப்படும் இந்த காலகட்டத்தில் இவர் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியையே உள்ளே இழுப்பதற்கான காரணம் புரியவில்லை... கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் சொல்வது போல் "ஒரு வெளம்பரம்......." அப்படித்தான் இருக்கிறது.

      Delete
  4. சேரனின் வலி நியாயமானதா இல்லையா என்பதை விட இதை மீடியாக்கள் அதிகமாக பப்ளிசிட்டி செய்வது ஏன் என்று புரியவில்லை! ஒரு பெண்ணை பெற்றவனாக யோசிக்கையில் சேரன் பாவம் என்றே தோன்றுகிறது! அவரை குறித்து நீங்கள் சொன்ன கருத்துக்கள்( திருச்சி சம்பவம், பாலகுமாரன்) எனக்கு புதிது! சினிமாக்காரர்கள் தான் இந்த காதலை வாழ வைத்தார்கள்! இப்போது அவர்கள் பக்கம் அதே பிரச்சனை வரும்போதுதான் இதன் தீவிரத்தை அவர்கள் உணர்கிறார்கள்! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி..சுரேஷ்..

      சினிமாக்காரங்க மீடியாக்காரங்க எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே... இவங்களால அவங்க பொழைக்கிறாங்க...அவங்களால இவங்க பொழைப்பு ஓடுது... இடையில நமக்குதான் வீணான டென்சன்..

      Delete
  5. எது எப்படியோ மீடியாவுக்கும் , அப்டியே பதிவுலகத்துக்கும் தீயா ஒரு செய்தி கெடச்சிருக்கு ... அடுத்த ஹாட் நியூஸ் கெடைக்குரவரைக்கும் சேரன் அன்ட் கோ பாடு பெரும்பாடுதான் ....!

    //மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் அதன்-"காதலின்" வலி.// செம்ம

    http://www.luckylookonline.com/2013/08/blog-post_506.html இதையும் பாருங்க பாஸ் ...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவன்சுப்பு...



      யுவாவின் அந்தக் கட்டுரையையும் படித்தேன். அவரும் மகள்களைப் பெற்ற அப்பா என்கிற ஸ்தானத்திலிருந்து எழுதியிருக்கிறார். எதிர்காலத்தில் அவருக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன முடிவு எடுப்பது என்று இப்போதே தெளிவாக இருக்கிறார்.

      ஆனால் எல்லா காதல் பிரச்சனைகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரியாகப் படவில்லை. ஆரம்பத்தில் சம்மதித்தாராம். தன் தந்தையே எந்த எதிர்ப்புமின்றி சம்மதிக்கும் போது எந்தப்பெண்ணும் காதலையும் தாண்டி திருமண வாழ்க்கை என்கிற கற்பனை உலகத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். அவன் கெட்டவனாக இருந்தாலும் நல்லவனாகத்தான் தெரிவான். அல்லது மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையு இருக்கும். திடீரென்று அவனை மறந்துவிடு என்று சொன்னால் யார்தான் ஒத்துக்கொள்வார்கள்..?

      Delete
  6. உண்மையிலேயே சேரன் தன் மகள் மீதும் குடும்பத்தின் மீதும் அக்கறை உள்ளவராக இருந்திருந்தால் குடும்ப கவுரவம் கருதி இந்த அளவுக்கு பிரச்சினையை வளர்த்து இருக்கக் கூடாது. ஆரம்பத்தில் சேரனின் குடும்பத்தாரே மகளின் காதலுக்கு ஆதரவாக இருந்துவிட்டு இப்போது திடீரென்று என்ன ஞானோதயம் என்று தெரியவில்லை. சேரன் தனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. சேரன் விஷயத்தில் இவ்வளவு அக்கறையோடு வரும் திரைப்பட உலகத்தினர் அன்று மஞ்சுளா மகள் செய்த புகாரின் போது எங்கே பதுங்கினார்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தி.தமிழ் இளங்கோ சார்...

      உங்கள் கருத்தோடு நூறு சதவிகிதம் ஒத்துப்போகிறேன் சார்...

      Delete