Friday 13 September 2013

சீமானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்கு...?



      ' தேசிய துணைத்தலைவர் ' என்று எங்களைப்போன்ற தம்பிமார்களால் அன்போடு அழைக்கப்படுகிற செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் திருமணம் சென்ற வாரம் இனிதே நடந்தேறியது.அண்ணன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு திருமண நிகழ்வு என்று கூட கருதாமல் இணையத்தில் உலாவும் சில உடன்பிறப்புக்கள் இதை கிண்டல் செய்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தா ஒரு உடன்பிறப்பு வந்திருக்காரு பாருங்க...ஒரு நிமிஷம் அப்படியே இருங்க. என்னைய்யா வேணும் உங்களுக்கு...?

அண்ணன் சீமான் அப்படியென்ன தவறிழைத்துவிட்டார் ..? தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை திருமணம் செய்வது ஒரு குற்றமா....?

அப்படியென்றால்,ஒரு ஈழ அகதிக்குத்தான் வாழ்வு கொடுப்பேன் என  வீரமாக பேசினாரே..என்ன ஆயிற்று?  இதைத்தானே கேட்க வாறீங்க... என்னய்யா விவரம் புரியாத ஆட்களா இருக்கீங்க. அப்போதிருந்த பிரச்சனை உங்களுக்கு தெரியுமா..?

விஜயலட்சுமினு ஒரு பொண்ணு,"என்னை திருமணம் செய்யப்போவதாகக் கூறி இரண்டு வருடங்கள் 'பழகிவிட்டு' இப்போ முடியாதுனு சொல்றாரு" என அண்ணன் மீது காவல் நிலையத்தில புகார் செய்ததே ஞாபகமிருக்கா?. அதைப்பற்றிக் கூட அண்ணனிடம் பலர் கேட்டபோது," த..த..ப..அது..கஷ்டப்படுற பொண்ணுனு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினேன் " என சமாளித்தாரே. அந்த நேரத்தில தம்பிமார்களின் மனதில் ஏற்பட்ட குழப்பத்தைப் போக்க வேற வழியில்லாம அப்படி சொல்ல வேண்டியதாச்சு.

அதற்காக அதையே பிடித்து தொங்கினால் எப்படிப்பா...?  நாங்களும் கல்யாணம் பண்ணி லைஃ ப்பில் செட்டில் ஆகவேண்டாமா?. அதுமட்டுமில்ல. அப்போ அம்மா ஆட்சிவேற.கலைஞர் அய்யாவா இருந்தா கவிப்பேரரசுடன் சென்று காரியத்தை கச்சிதமா முடிச்சிருக்கலாம். அம்மாவை கூல் பண்ண நாங்க பட்ட பாடு இருக்கே..! மனசாட்சியை கழட்டி தூர எறிந்துவிட்டு அம்மாவுக்கு "வீரமங்கை வேலுநாச்சியார்"  பட்டம் கொடுத்து, 'புரட்சித் தலைவி என ஏன் அழைக்கிறோம்' என்பதற்கு கோனார் நோட்ஸ் எல்லாம் போட வேண்டிய நிலைமையாச்சி....

சரி,அப்போ விஜயலட்சுமி சொன்னதெல்லாம் உண்மையானு கேட்க வாறீங்க. திரும்பவும் உங்களுக்கு விவரம் பத்தல. இதுமட்டுமல்ல,சிங்கள பொண்ணு பூஜாவை எப்படி ஹீரோயினானு கேட்டாலும் நாங்க ஒரே பதில்தான் வச்சிருக்கோம்.அப்போ அண்ணன் டைரக்டருங்க.. இப்போ எழுச்சித் தமிழன்ங்க. " வீழ்ந்து விடாத வீரம்....  மண்டியிடாத மானம் ".. இதெல்லாம் கேள்விபட்டதில்ல நீங்க..

அதற்காக,பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு அம்மையார் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய பொழுது சட்டமன்ற சபாநாயகராக வீற்றிருந்த 'சொல்லின் செல்வர்' காளிமுத்து அவர்களின் புதல்வியை மணப்பது சரியா என கேட்க வாறீங்க..?.

உங்களுக்கு தெரியாது, தமிழ் இனத்திற்கு காளிமுத்து அவர்கள் என்னென்ன செய்திருக்கிறார் என்று. ஆரம்பம் காலந்தொட்டே கட்சியே மாறாமல்(!!!) கண்ணியம் காத்தவர் காளிமுத்து. "கருவாடு மீனாகாது... கறந்தபால் மடி ஏறாது...கழுவிவச்ச பாத்திரம் அழுக்காகாது.." போன்ற உவமைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்தவர். அதுமட்டுமல்ல... எம்ஜியார், ஜெயலலிதாவுக்கு தெரியாமலே ரகசியமாக புலிகளுக்கு உதவியுள்ளார் அன்னார் காளிமுத்து.( எவன்டா அவன் வண்டலூர் ஜூ-விலானு கேக்குறது...)


போதும்.. போதும்... அடுத்தது என்ன கேட்க வரீங்கன்னு புரியுது. கடந்த தேர்தலில், கலைஞர் ஆட்சியை அகற்ற எவ்வித அழைப்புமில்லாமல் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது எங்க அண்ணனும் அணிலும் தான். "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என ஊர் ஊராக போயி ஓட்டுப்பிச்சை கேட்டதும் நாங்கள்தான்.அப்படிப்பட்ட எங்கள் அண்ணனின் கல்யாணத்துக்கு அதிமுகவிலிருந்து யாருமே வரவில்லைனு கேக்குறீங்க.. அந்த பீலிங் எங்களுக்கும் லைட்டா இருக்கு. அதானால என்ன, சசிகலாவின் மனைவி நடராசன் வந்தாரே.. அண்ணன் கூட டக்குனு காலில விழுந்துட்டாரே..

சரி வேறென்ன...? பெரியாரை தமிழினத் துரோகி என சொல்லிட்டு அவர் படத்தை கல்யாணப் பந்தலில் எப்படி வச்சீங்க... ? இந்த சந்தேகம் வந்திருக்குமே... அதான் எங்க அண்ணன் தெளிவா பேட்டி கொடுத்திட்டாரேப்பா. 'நான் கட்சி ஆரம்பித்ததே முதல்வர் ஆவதற்குத்தான் '. முதல்வர் ஆக வேண்டுமென்றால் கொள்கையிலேயும், நிலைப்பாட்டிலேயும் கொஞ்சம் நெளிவு சுளிவு வேணும்யா... இது என்ன... இன்னும் போகப் போக பார்க்கத்தான போறீங்க..


ஓஹோ...  கல்யாணம் முடிந்த உடனையே தேனிலவுக்கு போகாம,மணம் முடித்த கையோடு நேரா இடிந்தகரை போனாங்களேனு சீன் போடுறீங்களே... தேனிலவு புதுமணத் தம்பதிகளுக்குத்தானே... உங்க அண்ணன் தான் ஒரு வருசமா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறாரேனு கேட்க வரீங்க...? அதான..?

" இல்ல..."

"பின்ன..எதுக்குத்தான்யா வந்த ?"

"அரசியல் ரீதியாக ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர் பண்பாடுனு ஒன்னு இருக்கு. அதன் அடிப்படையில உங்கள் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்."

"சீமானுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்."




42 comments:

  1. நல்லா வாழ்த்திட்டிங்க.

    ReplyDelete
    Replies
    1. அன்னார் சீமார் அவர்களுக்கு அடியேனின் வாழ்த்துக்கள் என்றுமே உண்டு.. :-)

      Delete
  2. //அரசியல் ரீதியாக ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர் பண்பாடுனு ஒன்னு இருக்கு. அதன் அடிப்படையில உங்கள் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிட்டு போவலாம்னு வந்தேன//
    அதை நான் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  3. எப்பா ஏன் இப்படி.. ஏன்னா வரு வாருறீங்க.. ஆமா உங்களுக்கு மட்டும் எப்படி இம்புட்டு டீடெயில் கிடைச்சது.. நாம் தமிழன் ல ஏதும் உளவாளி இருக்காங்களா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு.அண்ணனில் புகழ் அகிலம் முழுவதும் பரவி கிடக்கிறதே... கலைஞர் ஏன் மூணு பொண்டாட்டி கட்டினாருன்னு ஐம்பது வருசத்துக்கு முன்னே நடந்ததை கிளறு கேள்வி கேப்பாங்க தம்பிமார்கள். ஆனால் இப்போ நடந்த அண்ணனின் சாகசங்கள் அவர்களுக்கு நினைவிருக்காது.

      Delete
  4. //காபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...//

    ஹா ஹா ஹா இத இன்னிக்குத்தான் பாக்குறேன்

    ReplyDelete
  5. காய்த்த மரத்துக்குத் தான் கல்லெறி விழும். :)))

    ReplyDelete
    Replies
    1. சரிதான்.. ஆனால் கண்ணாடி வீட்டிலிருந்து அடுத்தவன் வீட்டு மேல் கல்லெறிய கூடாதல்லவா..

      Delete
  6. சீமான் பேச்சுகளை கேட்டு மெய்சிலிர்க்காம சரியா சிந்திச்சு எழுதியிருக்கிங்க.

    ReplyDelete
  7. //விஜயலட்சுமினு ஒரு பொண்ணு,"என்னை திருமணம் செய்யப்போவதாகக் கூறி இரண்டு வருடங்கள் 'பழகிவிட்டு' இப்போ முடியாதுனு சொல்றாரு" என அண்ணன் மீது காவல் நிலையத்தில புகார் செய்ததே ஞாபகமிருக்கா?//

    மணிவண்ணன் அமைதிப்படையில் அல்வா கொடுக்கிற சீனை, அண்ணனை பார்த்துத்தான் வச்சாரோ என்னமோ?


    …புலி ஆதரவு இலங்கைத் தமிழர்கள் ரொம்ப பாவங்க. இவரை எல்லாம் இன்னும் நம்புறாங்க. நம்பிக் கொண்டே இருக்காங்க.

    ReplyDelete
    Replies

    1. நன்றி குட்டிபிசாசு. இலங்கைத் தமிழர்கள் தெளிவானவர்கள். சீமானின் புரட்டு பேச்சுக்களை அவர்கள் நம்பமாட்டார்கள்.

      Delete
  8. வஞ்ச புகழ்ச்சியில் வாழ்த்து பாடிவிட்டீர்கள்! நானும் வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  9. தல.. செம பதிவு இது.. சீமான் எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கதைக்கவும், கொஞ்ச நாளா தான் பர பாப்பா இருக்கனும்னும் பண்ற ஆளு போல தான் பட்டாரு, படறாரு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஹாரி...உங்களைப் போன்றவர்களிடமிருந்து வரும் இந்த உண்மையான உணர்வுதான் அவருக்கு சவுக்கடி.

      Delete
  10. my wholehearted wishes to the couple!
    r.k.seethapathi naidu
    pathiplans@sify.com

    ReplyDelete
  11. மணிமாறன்அவர்களும் குட்டிபிசாசும் ஒரு உண்மையை தெளிவா சொல்லியிருங்கிறார்கள்.
    மணிமாறன் - இலங்கைத் தமிழர்கள் தெளிவானவர்கள். சீமானின் புரட்டு பேச்சுக்களை அவர்கள் நம்பமாட்டார்கள்.
    குட்டிபிசாசு - புலி ஆதரவு இலங்கைத் தமிழர்கள் ரொம்ப பாவங்க.

    ReplyDelete
  12. ஆமா...கருணாநிதி என்ற ஆள் மூணு பொண்டாட்டிதான் கட்டினார் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. கருணாநிதி மூணு பொண்ட்டாட்டி என்ன முப்பது பொண்டாட்டி கட்டினா எனக்கென்னங்க..? ஆனா அவர் வீட்டு பெட்ரூம் வரைக்கும் மூக்கை நுழைத்து அவர் யார் யார் கூட என்னென்ன பண்ணினார் என இட்டுக்கட்டி அருவருப்பா சமூக வலைத்தளங்களில் எழுதும் டம்ளர் பாய்ஸ் முதலில் தன் தலைமை கரை படியாததா என்பதை முதலில் சிந்தித்து பார்க்கட்டும். மல்லாக்க படுத்து எச்சில் துப்பினா அது உங்கள் மேலதான் விழும்.

      Delete
    2. ராவணன்,

      …ரொம்ப பொங்காதிங்க. மஞ்சதுண்டு கதைதான் ஊரறிந்ததாயிற்றே. டம்ளர் சீமான் போடுகிற வேஷத்துக்கு முதல்ல ஒரு பதிலை சொல்லுங்க.

      Delete
    3. ராவணன்,

      …மஞ்சதுண்டு கதை தான் ஊர் அறிந்ததாயிற்றே. டம்ளர் சீமான் போடுகிற வேஷத்துக்கு பதிலை சொல்லுங்க.

      Delete
  13. சீமான் நாடாரை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்...அதற்காக கனிமொழிநாடார் என்ற அம்மையார் தாயின் துணைவன் உத்தமன் என்று கூறவந்தால் நாறிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. செபாஸ்டின் சைமன் என்கிற நிஜப்பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். ஆமா அது என்னங்க நாறிடும்...? ஏதோ இவ்வளவு நாட்கள் அவரை எல்லோரும் தலையில் தூக்கி வச்சி கொண்டாடின மாதிரி..... அவர் பிறப்பிலிருந்து இன்றுவரை அவரின் ஒவ்வொரு அசைவையும் நாராச பாணியில் நக்கலடிப்பாங்களாம்... ஆனா தன் தலைமை செய்யும் தவறை சுட்டி காட்டினால் மட்டும் பொங்கி எழுவாங்களாம்.. முதல்ல ஈழ அகதியைத்தான் திருமணம் செய்வேன் என வீரமாக முழங்கி கைத்தட்டல் வாங்கினாரே அது என்னாச்சின்னு கேளுங்க....

      Delete
    2. கனிமொழி "நாடாரா"? இதென்ன புது கதை.

      Delete
    3. குட்டிபிசாசு ராஜாத்தி அம்மாள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

      Delete
    4. மணிமாறன்,

      …"பணம் பணத்தோட சேரும்" என்று சொல்லுவார்கள். இவர்கள் எல்லாம் ஜாதி மதம் பார்க்காமல் ஊழல் செய்பவர்கள். திருமணத்திற்குக் கூட இவர்கள் பெரும்பாலும் சாதி பார்ப்பதில்லை. எல்லாம் பணந்தேன்.

      Delete
  14. //செபாஸ்டின் சைமன் என்கிற நிஜப்பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்//

    கலைஞர் கருணாநிதி மட்டும் அவரது நிஜப் பெயரான தட்சிணாமூர்த்தி என்பதைக் குறிப்பிடுகிறாரா? ஒரு தமிழ்க்கிறித்தவன் தமிழ்நாட்டை ஆளக் கூடாதா? அவருக்கு அந்த தகுதி கிடையாதா? ஐயாமாரே! சீமானின் மீது மட்டும் ஏனிந்த கொலவெறி? :)

    ReplyDelete
    Replies
    1. என் பதிவில் சீமான் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். அவர் என்ன மதம் ,சாதி என்பது எனக்கு தேவை இல்லாதது. சீமான் நாடார் என்று நண்பர் குறிப்பிட்டதால் இன்னும் விளக்கமாக சொல்லலாமே என்று அவ்வாறு குறிப்பிட்டேன்...

      //தமிழ்க்கிறித்தவன் தமிழ்நாட்டை ஆளக் கூடாதா? //

      தமிழ் நாட்டை யார் ஆள்வது என முடிவு செய்ய நீங்களும் நானும் யாரு பாஸ்... அது மக்களின் முடிவு. கருணாநிதி தெலுங்கன் என கூப்பாடு போடும் இதே டம்ளர் பாய்ஸ் தான் (அவர்கள்பாணியிலே சொல்ல வேண்டுமானால்) கன்னடக்காரி என உங்களால் சொல்லப்படும் ஜெயாவை முதல்வராகவும், தெலுங்கன் என்று உங்களால் அழைக்கப்படும் விஜயகாந்தை எதிர்கட்சித்தலைவராக அமர்த்த அயராது பாடுபட்டீங்க..

      Delete
    2. //கன்னடக்காரி என உங்களால் சொல்லப்படும் ஜெயாவை முதல்வராகவும்//

      ஜெயலிதாவை கன்னடக்காரி என்று நான் சொல்லவில்லை ஏனென்றால் அவர் கன்னடக்காரி அல்ல, அவரது பூர்வீகம் திருவரங்கம், அது கர்நாடகாவில் இல்லை, ஆனால் விஜயகாந்த தெலுங்கன் தான். :)

      Delete
    3. ஜெயலிதாவின் பூர்வீகம் திருவரங்கம் என்று ஜெயாவுக்கே ஐந்து வருடத்திற்கு முன்புதான் அவருக்கு தெரியுமாமே... அது எப்படி திடீர் பூர்வீகமானது என்று அந்த ரங்கநாயகிக்கே வெளிச்சம்.

      \\ஆனால் விஜயகாந்த தெலுங்கன் தான். \\

      வெறும் ஜாதியை வைத்து யாரையும் தரம்பிரிக்க எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை அப்படித்தான் பார்க்கவேண்டுமென்றால் இவ்வளவு நாட்களாக ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்து வரும் வைகோவும் அந்த வட்டத்திற்குள்தான் வருகிறார்.

      தமிழ்நாட்டுக்கு எல்லை நிர்ணயிக்கப் பட்டபோது ஒருவேளை திருப்பதி நமக்கும் மெட்ராஸ் ஆந்திராவுக்கும் சென்றிருந்தால் என்ன ஆயிருக்கும் என யோசித்துப் பாருங்கள்.

      Delete
    4. வியாசன்,

      …தனி ஈழ ஆதர்வாளர் வைகோ கூட தெலுங்கு தான். அவரை எப்படி பார்க்கிறீர்கள்.

      …//அவரது பூர்வீகம் திருவரங்கம்//

      …உங்கள் விளக்கப்படி திருவரங்கத்தில் பிறந்தவர்கள் எல்லாம் தமிழர்களா?

      …//ஒரு தமிழ்க்கிறித்தவன் தமிழ்நாட்டை ஆளக் கூடாதா? அவருக்கு அந்த தகுதி கிடையாதா? ஐயாமாரே! சீமானின் மீது மட்டும் ஏனிந்த கொலவெறி? :)//

      …மேடையில் இந்து மதத்தை மட்டுமே தாக்கிப்பேசிய முற்போக்கு சீமான். கிருத்துவத்தைப் பற்றி வாய் திறந்ததில்லை.

      Delete
    5. மணிமாறன்,

      …வியாசன் அப்படித்தான். இவர்கள் தான் உண்மையான தமிழர்கள், மற்றவர்கள் இல்லை என கோடுபோட்டு பிரிப்பார்.

      Delete
  15. #சசிகலாவின் மனைவி நடராசன் வந்தாரே..#
    எதுக்கும் ஜாக்கிரதையாய் இருங்க மணிமாறன் !
    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. நன்றி Bagawanjee sir.. இதெல்லாம் ரொம்ப சாதாரணம் சார்... இதைவிட நாராச பாணியில் எவ்வளவு பேர் சமூக வலைத்தளத்தில் எழுதுறாங்க.

      Delete
  16. மிகச் சிறந்த பதிவு. இதைத்தான் எங்க அப்பத்தா வஞ்ச புகழ்ச்சி என சொல்லுவாங்க. பார்த்து சகா, இதைப் படிச்சிட்டு நீங்க தமிழனே இல்லை, ஆந்திரா, ஆப்பிரிக்கா காரவுக என கிளம்பிடப் போறானுவ. :))

    ReplyDelete
    Replies

    1. ஹா..ஹா... நன்றி இக்பால் செல்வன்... கூட்டிக் கழிச்சிப் பாத்தீங்கனா பல லட்சம் வருசத்துக்கு முன்னால ஆப்பிரிக்க நாட்டில் இருந்த குரங்கிலிருந்துதான் நாமெல்லாம் தோன்றியிருக்கிறோம்... அந்த வகையில் நமக்கு தாய் நாடு ஆப்பிரிக்காதான்... :-) அதனால ஆப்பிரிக்காகாரன் என சொல்லிட்டு போகட்டுமே.. :-))

      Delete
  17. //தமிழ் நாட்டை யார் ஆள்வது என முடிவு செய்ய நீங்களும் நானும் யாரு பாஸ்... அது மக்களின் முடிவு. //

    சீமான் தமிழ்நாட்டை ஆள்வதா இல்லையா என்பதை முடிவு செய்வதும் மக்கள் தானே. அவருக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு. கருணாநிதி தன்னுடைய நிஜப்பெயரை பாவிக்காத போது, "செபாஸ்டின் சைமன் என்கிற நிஜப்பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்" என்று நீங்களே கூறி விட்டு இப்பொழுது "என் பதிவில் சீமான் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்" என்று மழுப்புகிறீர்கள். :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சீமான் கிருஸ்துவரா, நாடாரா என்பது முக்கியமில்லை நண்பரே... ஆனால் மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து தன்னை அவர் எவ்வாறு வேறுபடுத்திக் காண்பிக்கிறார் என்பதுதான் என் வாதம்...

      தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால் உங்களின் பின்புலத்தையும் பார்க்க வேண்டும் அல்லவா...

      தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த அரசியல்வாதியும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால் சீமான் அவர்களின் கண்ணியமும் இங்கே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்தானே...

      கலைஞர், எம்ஜியார், ஜெயா இவர்களின் தனிப்பட்ட அந்தரங்கத்தை இணையத்தில் அடித்துத் துவைத்துத் தொங்கப்போடும் டம்ளர் பாய்ஸ் கொஞ்சம் தன் அண்ணன் கடந்து வந்த பாதையும் திரும்பிப் பாருங்கள் என சொல்கிறோம்.

      Delete
    2. //"செபாஸ்டின் சைமன் என்கிற நிஜப்பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்" என்று நீங்களே கூறி விட்டு இப்பொழுது "என் பதிவில் சீமான் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்" என்று மழுப்புகிறீர்கள். :)//

      சீமானை கிருஸ்துவர் என வெளிக்காட்டவேண்டும் என்பது என் பதிவின் நோக்கமல்ல.... அது சரியான வாதமும் அல்ல.. ஆனால் அவரும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை உணர்த்தவே இந்தப் பதிவு. ஆனால் அவரை நண்பர் 'சீமான் நாடார்' என்கிற அடையாளத்துக்குள் கொண்டுவந்ததால் அப்போ இதையும் சொல்லிடுங்களேன் என்பதற்காக அவ்வாறு சொல்லப்பட்டது.

      Delete