Monday 4 November 2013

தமிழ் சினிமாவில் சாதிய வன்மங்கள்...(பகுதி -1)


தீபாவளியன்று சன் டிவியில் 'திரைப்படங்களால் நிகழ்ந்துள்ள சமூக மாற்றங்கள்' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடந்ததை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இருபுறமும் பொங்கித் தள்ளினார்கள். குறிப்பாக எதிரணியில் சினிமா ஏற்படுத்திய சமூக சீர்கேடுகள் பற்றி பல ஆதாரங்களுடன் பாரதி பாஸ்கர் உள்ளிட்ட அவரின் சகாக்கள் உணர்ச்சிப் பொங்கக் கதறிக் கொட்டினர்.அவர்கள் பட்டியலிட்ட சீர்கேடுகளில் முக்கியமான ஒன்றை விட்டுவிட்டனர். அது, நமக்கே தெரியாமல், நம் சமூகப் பரப்பில் திரைப்படங்கள் மறைமுகமாக விதைத்துள்ள சாதிய வன்மங்கள்.
 

சில வருடங்களுக்கு முன்பு சிங்கையில், தமிழ் சினிமா 75 வருட நிறைவையொட்டி தமிழ் திரைப்படக் கலைஞர்கள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அதில் ஒரு பகுதியாக இதேமாதிரி ஒரு பட்டிமன்றம் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

' தமிழ் சினிமா,சமூகத்திற்கு கேடுவிளைவிக்கிறதா இல்லையா..' என்பது போன்ற தலைப்பு. ஆம் என்று வாதிட, ராஜா, பாரதி பாஸ்கர், உள்ளூர் கலைஞர்களான வடிவழகன் மற்றும் இன்னொரு பெண்மணி. இல்லை என்று பேச பாரதிராஜா, சத்யராஜ், 'சிந்தனைச்செல்வி' குஷ்பு, இன்னொருவர்(ஞாபகமில்லை ). கண்டிப்பாக எவரும் கேடு விளைவிக்கிறது என்று அடித்துப் பேசப்போவதில்லை. பட்டிமன்ற முடிவும் சாதகமாகத்தான் இருக்கும். ஏனெனில், அது தமிழ் சினிமாவைக் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா.    

முதலில் 'சிந்தனைச்செல்வி,நாளைய தமிழகம்' குஷ்பு பேச அழைக்கப்பட்டார்.அவருக்கு மைக் பிடித்து பேசத்தெரியும் என்பதே அப்போதுதான் தெரியும். அவரது கன்னிப்பேச்சில் பிரதானமாக இருந்தது இதுதான்.  "டமில் சினிமாவிலே ஷாதி இல்லே. மதம் இல்லே. எங்களுக்குள்ள வேறுபாடு இல்லே. ஷாதி, மதம் எல்லாம் கடந்து ஒற்றுமையா இருக்கோம். நாங்கள் மக்களுக்கு சொல்வதும் இதுதான். இது மாறி வேறு துறைகள் இருக்கா." அப்படினு பேசி கைதட்டல் வாங்கினாங்க. (கைதட்டினது எல்லாம் நம்ம பயபுள்ளைகதான் ).

அடுத்ததாக, இந்தப் பக்கத்திலிருந்து வடிவழகன் பேச அழைக்கப்பட்டார். வடிவழகன் சிங்கப்பூர்வாசி. அவர் இப்படி ஆரம்பிக்கிறார்... "குஷ்பு மேடம் சொன்னாங்க,தமிழ் சினிமாவில் சாதி இல்லைனு.உண்மையிலேயே எங்களுக்கெல்லாம் சாதி என்றால் என்னானு தெரியாது. ஆனால், தமிழ்ச் சமூகத்தில் எத்தனை சாதிகள் இருக்கிறது என்பதை நாங்கள் தமிழ் சினிமாவைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம்."என்று சொல்லி முடிக்கக் கரகோஷம் அரங்கக் கூரையைப் பிளந்தது( இப்ப கைத்தட்டினதும் அதே பயபுள்ளைகதான்). ஆகா.. பார்க்க வேண்டுமே..! இயக்குனர் இமயத்தின் முகத்தில் ஈயாடவில்லை.

இந்திய மண் வாசனையையே அறியாத வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் சாதி பாகுபாடு அறவே கிடையாது. பலருக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது. சிங்கை வந்த புதிதில், எவரிடமும் சாதியைக் கேட்கும் ஈனப்புத்தியும் அடித்துக் கேட்டாலும் சாதியை சொல்லும் பழக்கமும் இல்லாத நான், சில சிங்கை,மலேசியா வாழ் தமிழர்களிடம் அங்குள்ள வாழ்வியல் முறைகளைப் பற்றி விசாரிக்கும்போது, சாதி பற்றிய அவர்களின் புரிதல் எப்படிப்பட்டது என அறிந்துகொள்வதற்காக சில கேள்விகளை வைத்தேன்.  நல்லவேளை எவரும்  'யார்ட்ட வந்துடா சாதியை கேட்ட..? ' என்று சட்டையைப் பிடிக்கவில்லை.

ஆனால் எவருக்குமே அவர்களின் சாதி தெரிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். ஒருவேளை அதற்கான அவசியமும் இல்லை போல. மாறாக, " சாதினா...கவுண்டரு, தேவருனு சொல்லுவாங்களே.. அதுவா..?  சினிமாவில பாத்திருக்கேன்ல்லா.." என்று அவர்கள் சொன்னபோதுதான், தமிழ்சினிமா எந்தளவு சாதி பற்றிய சிந்தனைகளை கடல்கடந்து விதைத்திருக்கிறது என்பதை உணரமுடிந்தது.

இதிலென்ன இருக்கிறது...?. சாதி கட்டமைப்புகள் நம் தமிழ்நாட்டுப் பாரம்பரியத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்று தானே. அதைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்வதில் என்ன தவறு இருக்கிறது.... தவிரவும் இதில் வன்மம் எங்கே வருகிறது... என்ற மேம்போக்கான எண்ணம் கொண்டவராக இருப்பின், உங்களுக்கான அலசல்தான் இது. 

தமிழ் சினிமாவில் சாதிய வன்மம் என்கிற கண்ணோட்டத்தில் அலச முற்பட்டால், அதை 1990-களுக்கு முன், 1990-களுக்குப் பின் என்று முதலில் வகைப்படுத்தவேண்டும். எதன் அடிப்படையில் இந்தப் பிரிவு என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.சாதிப் பெயர்களைத் தாங்கி வந்தத் திரைப்படங்களையும் சாதிப் பெருமிதங் -களைத் தாங்கிவந்த திரைப்படங்களையும் வகைப்படுத்தவே இந்தப் பிரிவு. இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை தற்போது குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்தப் பதிவு முடியும்போது அதற்கான தெளிவு கிடைக்கும்.

குறத்தி மகன்
முதலில் 1990 க்கு முன் வந்தத் திரைப்படங்களை அலசுவோம்.

90-களுக்கு முன்பு, தமிழ் சினிமாவில் சாதிப் பெயர்களைத் தாங்கி வந்தத் திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால் இரட்டை இலக்கத்தைக் கூடத் தொடாது என்பது என் கணிப்பு. ( நன்றி wikipedia)

ஹரிஜனப் பெண் (1937)
சந்தனத் தேவன்(1939)
ஹரிஜன சிங்கம்(1940)
பாண்டித்தேவன்(1959)
சங்கிலித் தேவன்(1960)
புரட்சி வீரன் பூலித்தேவன்( 1963)
மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966)
குறத்தி மகன்(1972)
நாயக்கரின் மகள்(1982)

நான் தேடிய வகையில் 1931-1990 வரையிலான அறுபது ஆண்டுகள் தமிழ் சினிமா வரலாற்றில் சாதிப் பெயர்களைத் தலைப்பில் தாங்கி வந்த நேரடித் தமிழ்ப் படங்கள் இவை. (1948 -ல் ராமதாஸ் என்கிற தலைப்பில் ஒரு படம் வந்திருக்கிறது. தெரியாமல் முதலில் அதையும் இந்தப்பட்டியலில் சேர்த்துவிட்டேன்..)

இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம், இத்திரைப்படங்கள் யாவும் தலைப்பில் மட்டும் சாதிப் பெயர்களைத் தாங்கி வந்ததேயொழிய கதைக்கருவைப் பொருத்தவரையில் சமகால சாதிப் பெருமிதங்களைத் தூக்கிப் பிடிக்கும் திரைப்படங்களோடு ஒப்பிடத் தக்கவைதானா என்பதை யோசிக்கவேண்டும்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன்,தேவர் மகன் படத்திற்கு முன்பு தன் சாதி அடையாளத்தைத் தாங்கிவந்த எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றுதான் தெரிகிறது. அதேவேளையில், என் மகன்(1974) படத்தில் "நான் ராமையாத் தேவன்டா...",  பட்டிக்காடா பட்டணமா(1972) படத்தில் "நான் சேர்வைடா....", முதல் மரியாதை படத்தில் "நான் சுத்தமான தேவன்டா... " என்று தனது சிம்மக்குரலில் சாதிப் பெருமையடித்ததையும் மறுக்க முடியாது.


ஆனால், 90 களுக்கு முன்பு வந்த எந்தத் திரைப்படத்திலும் ஆதிக்க சாதியினரை வானத்தைப் போல மனம் படைத்தவராகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை மேல்சட்டைப் போடாமல், துண்டை அக்குளில் செருகிக்கொண்டு மம்மியைக் கண்ட அமைச்சர்கள் போல பம்மியபடி கும்பிடு போடுவராகக் காண்பித்ததில்லை...

சாதிப்பெயர் சூட்டி,சாதிப்பெருமிதம் பேசும் திரைப்படங்களை எடுத்து தமிழ்த் திரைப்படத்துறையில் சீரழிவுப் பாதைக்கு வழி உருவாக்கிக் கொடுத்தப் பெருமை இயக்குனர் மனோஜ்குமார் அவர்களையேச் சாரும். அவர் உருவாக்கிய பாதையில் பயணித்து தமிழ் சினிமாவை இன்னும் அதல பாதாளத்துக்கு கொண்டு சென்றவர்கள் ஆர்.வி.உதயகுமாரும், கே.எஸ் ரவிக்குமாரும். இந்த இரண்டு சுமார் மூஞ்சி குமார்களின் முகத்திரையை அடுத்தப் பகுதியில் கிழித்தெடுக்கிறேன்.


25 comments:

  1. மறுக்க முடியாத உண்மைகள் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபக் ராம்..

      Delete
  2. Hello,

    Good start,Carry on..awaiting for your next post...

    ReplyDelete
  3. நல்ல அலசல் மணிமாறன். சாதி பார்க்காத துறை இல்லை என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முரளிதரன்...

      Delete
  4. நல்ல அலசல். தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நேர்கோடு..

      Delete
  5. செம்ம கட்டுரை கலக்குங்க ப்ரோ

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சக்கர கட்டி..

      Delete
  6. அருமை,தொடருங்கள் நண்பரே!கையளவு சுருங்கி விட்ட உலகில் இன்னமும்(ஜாதிப்) பெருமை பேசித் திரியும்,அதனை ஊக்குவிக்கும் இந்த தமிழ் சினிமா இயக்குனர்களின் போலி முகத் திரையைக் கிழித்தெறியுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. அடுத்தப் பகுதி விரைவிலே வரும் .மிக்க நன்றி Subramaniam Yogarasa

      Delete
  7. தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

    தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

    வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

    ReplyDelete
  8. அருமையான அலசல் கட்டுரை! உண்மையையும் தெளிவாக உரைக்கிறது! சுமார் மூஞ்சிக் குமார்களின் முகத்திரை விலகலை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி s suresh..

      Delete
  9. ம்ம்ம்ம் நல்ல அலசல்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி காயத்ரி தேவி madam..

      Delete
  10. Sivaji never acted in a character of low class. he acted only for higher class character. In ur list u have to add Kbalachander, Bharathiraja, Bagyaraj ,Kamalahasan with udaykumar & ks ravikumar

    ReplyDelete
    Replies
    1. thanks for your comment...
      உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்... அவர் காலத்தில் அப்படி எந்தப்படமும் வந்ததில்லை... ஆனால் 90 களுக்குப் பிறகு வந்தப் படத்தில் தேவர் மகனையும் கணக்கில் கொண்டு அடுத்தப் பகுதி வெளிவரும், அதில் சில காட்சிகள் சுட்டிக் காட்டப்படவேண்டிய அவசியம் உள்ளது.

      Delete
  11. நல்ல டாபிக்..அருமையான ஆரம்பம்..தொடருங்கள்.

    ReplyDelete
  12. நல்ல அலசல்.. எல்லா ஏரியாவிலும் கலந்து கட்டி அடிக்கிறீர்கள்..

    ReplyDelete
  13. நன்றி ஹாரி R.

    ReplyDelete
  14. சூப்பர் நல்ல பதிவு

    ReplyDelete
  15. very useful story . . . . congrats bro . . . .

    ReplyDelete