'காரை வச்சிருந்த சொப்னசுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா' என்பதை கூட ஈசியா கண்டுபிடித்து விடலாம்யா. ஆனா நம்ம சிம்பு கரண்ட்ல யாரை வச்சிருக்காரு என்பதைத்தான் யாராலயும் கண்டுபிடிக்க முடியலையாம். ஆனா ஒரு விஷயத்தை பாராட்டியே ஆகணும். சிம்பு சீசனுக்கு ஒன்னு மாத்தினாலும் சீக்ரெட்டா எதையும் வச்சிகிறதில்ல. எப்படியோ மீடியாவுக்கு தெரியப்படுத்தி, எங்கப்பனைப் போல இல்ல, நான் ஒரு மச்சக்கார மன்மதன் என்று காட்டிக் கொள்வதில் அவருக்கு அப்படி ஒரு அலாதி.
லேட்டஸ்டா, ஆண்ட்ரியா போட்ட பாலில்(ஐ மீன்..பந்து) சிம்பு கிளீன் போல்டானாதாக கோலிவுட்ல பேசிக்கிறாங்க. இரண்டு பேருமே கிரவுண்டில் நின்று அடித்து ஆடுவதில் வல்லவர்கள் என்பதால் யார் பாலில் யார் போல்டானார்கள் என்பதுதான் தெரியில.. போகட்டும்...
அதன் பிறகுதான் சுவாரஸ்யம். இந்த தெய்வீக காதல் பணால் ஆக காரணமான அந்த சப்பாத்தி மாவு, பின்னர் முதல் காதலில் பணால் ஆனவரோடு தற்போது லவ்விக்கொண்டு இருக்கிறார். இப்போ இந்த 'சர்க்யூட்' பக்காவா முழுமையடைத்திருக்கு இல்லையா... ? அதாவது நான் லவ்வியவளை அவர் 'கீப்'பினார்... அவர் லவ்வியவரை நான் 'கீப்'பிகிறேன். இதிலிருந்து என்ன தெரியுது... வாழ்க்கை என்பது மட்டும் ஒரு வட்டம் அல்ல... காதல் கூட ஒரு வட்டம்தான்..
ஆகக்கடைசியா எனக்கு என்ன தோனுதுனா... இதைவைத்து ஏன் தமிழில் ஒரு சினிமா எடுக்கக் கூடாது...? இப்படியொரு காதல் கதை இதற்கு முன் தமிழ் சினிமாவில்.. ஏன் இந்திய சினிமாவில் வந்திருக்கிறதா..? ஏக்துஜே கேலியே வுக்குப் பிறகு நல்ல காதல்கதை எதுவும் வரவில்லை என்கிற குறையை இந்தப்படம் போக்கும் என்பது என் கணிப்பு. :-))
வேண்டுமானால் சுவாரஸ்யத்திற்கு சின்ன மாற்றம் செய்துக்கொள்ளலாம். பிரபுதேவா-நயன்தாராவை பிரிக்க சிம்பு அனுப்பிய அம்புதான் ஹன்சிகா என்கிற உண்மையை கிளைமாக்சில் சொல்றமாதிரி வைத்துக் கொள்ளலாம்.
அப்புறம் இடைவேளையின் பொழுது , பிரபு தேவாவைப் பார்த்து சிம்பு இப்படி பன்ச் டயலாக் பேசுற மாதிரி வச்சிக்கலாம்..
"இன்னிக்கு இந்தியாவிலே பெரிய டான்சர் என்கிற திமிர்ல என் பிகர நீ உஷார் பண்ணி எனக்குள்ள இருக்கிற மன்மதனை தட்டி எழுப்பிட்ட. தேவா...இதுவரை இந்த சிம்புவை விரல் சூப்பிரவனா பாத்திருக்க. இனிமேல விரல்வித்தைக்காரனா பாக்கப்போற. இந்த நாள்........, உன்னுடைய காலண்டர்ல குறிச்சி வச்சிக்க. இன்னியிலிருந்து உன் அழிவுகாலம் ஆரம்பிச்சிடிச்சு. எனக்கும் உனக்கும் தர்மயுத்தம் தொடங்கிடிச்சி. இந்த யுத்தத்தில, நீ எப்படி என் பிகர உஷார் பண்ணி என்னை முச்சந்தில நிக்க வச்சி பொலம்ப விட்டியோ, அதே மாதிரி நானும் நீ பிக்கப் பண்ற எல்லா பிகரையும் உஷார் பண்ணி உன்னையும் என்னைப்போல முச்சந்தில நிக்க வச்சி பொலம்ப விடல.. நான் எங்க கரடிக்கு... ச்சீ..எங்க டாடிக்கு பொறக்கலடா ..."
ஆரம்பம் படத்திற்கு இணையத்தில் முதல் விமர்சனம் நான் தான் எழுதினேன் என நினைக்கிறேன். இதைப் பெருமைக்காக சொல்லவில்லை, ஒரு குற்ற உணர்வை சுட்டிக்காட்டுவதற்காகக் குறிப்பிடுகிறேன்.
ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். எனது ஆபிசிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் அமைந்திருக்கிறது தமிழ் சினிமாக்கள் ஓடும் அந்த சினி பிளெக்ஸ். சிங்கையில் நிறைய சினி பிளெக்ஸ் இருந்தாலும் இரண்டே இடத்தில்தான் தமிழ் படங்கள் திரையிடுவார்கள்.அதிலொன்று என் ஆபிஸ் அருகில் உள்ளது. பெரும்பாலான புதுப்படங்கள் முதல் நாள் இரவே இங்கு திரையிடப்படும். தற்போதெல்லாம் படம் வெளிவந்த மறுநாளே இணையத்தில் கிரிஸ்டல் கிளியரில் காணக்கிடைப்பதால், எவ்வளவு சீக்கிரம் திரையிட வேண்டுமோ அவ்வளவு லாபம் என்கிற வகையில் முதல் நாள் இரவிலிருந்தே திரையிடப்படும். எனது ஆபிஸ் ஷிப்ட் 12 PM - 9.00 PM . இங்கு இரவு 9-30 மணியளவில்தான் முதல் காட்சி ஆரம்பிப்பார்கள். ஆக, மிகச்சுலபமால ஆபிஸ் முடிந்து படம் பார்த்துவிட்டு,அன்று இரவே முதல் விமர்சனம் போட்டுவிடலாம். சரி..சரி. இதெல்லாம் ஒரு பொழப்பானு கேட்க வாறீங்க...அதானே...?. நானும் அதையேத்தான் கடைசியாக சொல்ல வருகிறேன்.
இப்படியாக, நிறைய படங்கள் முதல் நாள் இரவே பார்த்தாலும், முதல் விமர்சனம் என்று இரண்டு படத்திற்குத்தான் எழுதியிருக்கிறேன். தலைவா மற்றும் ஆரம்பம் படத்திற்கு. தலைவா படத்திற்கு மட்டும் ஆறாயிரம் ஹிட்ஸ் கிடைத்தது. சில பதிவர்கள் முதல் காட்சி பார்த்துவிட்டு அடித்துப் பிடித்து விமர்சனம் எழுதுவதின் சூட்சமம் அப்போதுதான் புரிந்தது. அதன்பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின் 'ஆரம்பம்'.
நானெல்லாம் எங்கெங்கோ தகவல்கள் திரட்டி, முக்கி முக்கி பதிவு போட்டாலும் முந்நூறு ஹிட்ஸ் வாங்குவதற்குள் மூச்சே போய்விடுகிறது. ஆனால் ஆரம்பம் விமர்சனத்திற்கு, படம் ரிலீஸ் ஆன அன்று மட்டும் எட்டாயிரம் ஹிட்சுக்கு மேல் கிடைத்தது. பொதுவாக என் பதிவை தமிழ்மணத்தைத் தவிர்த்து வேறு எதிலும் இணைப்பதில்லை. என் பேஸ்புக் சுவரில் ஒன்றிரண்டு பதிவுகள்தான் இணைத்திருப்பேன். அன்று இணைத்தது தமிழ்மணம் மற்றும் வெட்டி பிளாகர்ஸ் -ல் மட்டும்.அதன் பின்னர் ட்விட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ்-ல் நிறைய பேர் ' ஷேர்' செய்திருக்கிறார்கள் போல.இதில் என்ன கொடுமை என்றால், என் விமர்சனத்தை காப்பி செய்து டிவிட்டரில் அவர்கள் எழுதியாக சிலர் போட்டிருக்கிறார்கள். அதை வேறுசிலர், ட்விட்டரில் வெளியான முதல் விமர்சனம் என்று திரும்பவும் பேஸ்புக்கில் அப்படியே பதிந்திருந்தனர். இதைப் பார்த்தபோது அல்பத்தனமாக கோபமெல்லாம் வரவில்லை. ஏனெனில், காப்பி பேஸ்ட் செய்யும் அளவுக்காவது என் எழுத்துக்கள் மதிக்கப்படுகிறதே என்கிற சந்தோசம்தான். அதனால்தான் என் வலைப்பூவில் "காபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்..." என்று குறிப்பிட்டிருப்பேன்.
என்னைப்பொறுத்தவரையில் சினிமா விமர்சனம் என்பது, வெறுமனே அது நல்லா இருக்கு...இவரு நல்லா நடிச்சியிருக்காரு..., இந்தக் காட்சி அற்புதமாக இருக்கிறது... சிகரெட் பிடிக்கிறப்போ புகை ஏன் வரல... என்பதுபோல சிபித்தனமாக எழுதுவதில் உடன்பாடு கிடையாது. கதைக்கருவிலிருந்து ஆக்கம் வரை உள்ள குறீயீடுகள்,குறைபாடுகள், கதைக்களமும் தளமும் எதன் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளது என்பதைப் பற்றி விரிவாக இருக்கவேண்டும்.உதாரணத்திற்கு , ஆரம்பம் படம் பார்த்துவிட்டு முதல் விமர்சனம் எழுதவேண்டும் என்கிற அவசரத்தில் வெறும் SWORDFISH படத்தை மட்டும் ஒப்பீடு செய்து விமர்சனம் எழுதி பதிவேற்றி விட்டேன். ஆனால் இந்தியாவில் நடந்த முக்கியமான சம்பவத்தை அதில் கையாண்டிருக்கிறார்கள் என்கிற விஷயம் என் மரமண்டைக்கு அப்போது ஏறாமல் போய்விட்டது . இவ்வளவுக்கும் அதைப்பற்றி முன்பு ஒரு பதிவு எழுதி இன்னும் டிராப்டில் கிடக்கிறது. ஆனால் அச்சம்பவத்தைப் பற்றி மிகத் தெளிவாக, விரிவாக உண்மைத்தமிழன் எழுதியிருந்தார். அதைப் படித்தபொழுதுதான் உரைத்தது. சினிமா விமர்சனம் எழுதிவதில் இன்னும் நான் 'ஒன்னாங்கிலாஸ்'யே தாண்டவில்லை என்று.
சமீபத்தில் சுட்டகதை விமர்சனம் லக்கிலுக் யுவா எழுதியிருந்தார். எவ்வளவு தகவல்கள்..! விமர்சனம் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்..!
தீபாவளிக்கு முதல்நாள் இரவே பாண்டிய நாடும், அழகு ராஜாவும் இங்கே ரிலீஸ் ஆகிவிட்டது. தியேட்டர் வழியாகத்தான் நான் பயணிக்கும் பஸ் போகும். ஒருபுறம் கால் பரபரவென்று இழுக்க, மனது ஏனோ மறுத்துவிட்டது. பிறகு படம் பார்த்து விட்டோமே என்பதற்காக இரவோடு இரவாக விமர்சனம் எழுதத் தூண்டும்... எதுக்கு தற்குறி என்பதை நாமே தம்பட்டம் அடித்து நிருபிக்கவேண்டும்...?
(எக்ஸ்கியூஸ்மீ...."அப்பாடா இவன் தொல்லையிலேருந்து தப்பிச்சாச்சிப்பா "என்று பெருமூச்சு விடாதீங்க. நவ 22, இரண்டாம் உலகம் ரிலீசாமே...?. 21 இரவே இங்க ரிலீசாமாம். ராவோடு ராவா போட்டுடவேண்டியதுதான். பின்ன நாங்கல்லாம் எப்போ பாஸ் பிரபல பதிவரா ஃபார்ம் ஆகுறது..? )
ஒரு அடல்ட் ஒன்லி மேட்டர்... பெண்கள் இந்த லிங் -கை திறந்து பார்க்க வேண்டாம்( சில ஆண்களும் கூட..). பட்.. வெரி இன்ட்ரஸ்டிங்..!
வாரக்கடைசியில் எங்கேயாவது பார்க்-க்கு போகலாம்னு கூகுள்ல டைப் செய்து தேடிப் பார்த்தேன். இது வந்தா என் கண்ல மாட்டனும்..? ஏதோ புதுவகையான செடிபோலனு நெனைச்சி உற்றுப்பார்த்தா, கருமம்.. கருமம் ... இதுக்கு கூடவா பார்க் வச்சி மெய்ண்டைன் பண்றாங்க...? ஆனால், சும்மா சொல்லக் கூடாது கொரியாகாரனுவ கில்லாடிகள்தான். என்னவொரு கலை நுணுக்கம்... !!!
இந்த 'பார்க்'(Haeshindang Park) தென்கொரியாவில் இருக்கிறது.இதன் பின்னணியில் ஓர் சுவாரஸ்யமான கதை உள்ளது .
முன்னொரு காலத்தில் மீனவன் ஒருவன் தன் 'கன்னிக்' காதலியை ஒரு பாறை மீது அமரச்செய்துவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றானாம். அப்போது கடுமையான புயல்தாக்கி அவள் இறந்துவிட்டாளாம். அதன் பின்னர் அந்தப் பகுதி மக்களால் மீன் பிடிக்க முடியவில்லையாம். பிறகுதான் அதற்கான காரணத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த கன்னியை தன்னந்தனியாக அங்கே விட்டுச்சென்றதுதான் அதற்குக் காரணமாம். அதனால் அதற்குப் பரிகாரமாக, இறந்துபோன அந்த கன்னி ஆவியை சமாதானப்படுத்தும் பொருட்டு மிகப்பெரிய சைசில் 'அதை' மரத்தால் செய்து அங்கே நட்டுவைத்து விடவேண்டும் என தீர்மானித் -திருக்கிறார்கள்.
ஆனால் என்ன ஆச்சர்யம்... அதன் பின்னர் அவர்கள் வலையில் மீன்கள் சிக்கோ சிக்கு என்று சிக்கியிருக்கிறது. பிற்பாடு அவர்களும் 'அதையே' கடவுளாகப் பாவித்து பூஜை செய்து(!) வணங்கி வருகிறார்களாம்...
இதுக்கு நம்ம ஊரு கன்னி ஆவிகள் எவ்வளவோ தேவலையப்பா... :-))
கலாட்டூன் கார்னர் :
உணர்ச்சியின் உச்சத்துக்குப் போன ஒரு ரத்தத்தின் ரத்தம், இப்படி போஸ்டர் அடிச்சி ஒட்டியிருந்திருக்கு.. நெஞ்சைப் பொளந்து அம்மாவை காண்பிக்கிறாராராமாம் . நான் விடுவேனா...? அந்த அப்ரசண்டியின் உணர்ச்சிக்கு உயிர் கொடுத்திட்டேன்... ! :-))
கிரிக்கெட்டின் ஆல்டைம் கடவுளாக மதிக்கப்படுகிற டொனால்டு பிராட்மேனை, அவரது வீட்டின் பூஜை -யறையில் தற்போதைய கடவுள்களான வார்னேவும், சச்சினும் சந்தித்தபோது... :-))
அருமை!///கலாட்டூன் கார்னர்.........செம!!'இரண்டாம் உலகம்' விமர்சனத்துக்காகக் காத்திருக்கிறேன்(றோம்!).
ReplyDeleteநன்றி பாஸ்.....
Deleteநீங்க சொன்னமாதிரி பிரபு தேவா-சிம்பு லவ்வை எடுத்தா கில்மா படமா ஆயிடாது?!! சினிமா விமர்சனங்கள் எழுதினால் பக்க பார்வைகள் அதிகரிப்பது உண்மைதான்! கலாடூன்ஸ் கலக்கல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்.... இதுமாதிரி கில்மா படம்தானே இப்போ சக்கைப் போடு போடுகிறது :-))
Deleteபிரபுதேவா- சிம்பு கதையை படமா எடுத்தா அது கில்மா படமா ஆயிடாது?!! சினிமா விமர்சனங்கள் அதிக பக்கப்பார்வைகளை பெறுவது உண்மைதான்! கலாடூன்ஸ் கலக்கல்!
ReplyDeleteஷோக்கா சொன்ன தல உண்மைதான் நாம தகவல்கள திரட்டி போட்டா ஒரு புள்ளயும் படிக்காது அதே சினிமா செய்திய படிச்சு போடு கூட்டம் மொய்க்கும்ண்ணே
ReplyDeleteசரிதான் சக்கர கட்டி.. இணையத்தில் சினிமா செய்திகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற செய்திகளுக்கு கிடைப்பதில்லை.
Deleteமுதல் விமர்சனம் போடும்போது, முக்கியமான விஷயத்தை சில நேரங்களில் கோட்டை விடுவதை தவிர்க்க முடியாது..மேலும், புதுப்பட விமர்சனம் என்பது பொதுவாக கமர்சியலாக படம் தேறுமா, தேறாதா என்று கணிப்பதையே பலரும் செய்கிறோம். வாட் டூ டூ!
ReplyDelete
Deleteஉண்மைதான் பாஸ்.. இந்த முதல் விமர்சனம் எழுதிறதில சிக்கலே இதுதான். நம்ம பார்வை உண்மையிலே சரிதானா என்பது சினிமா எடுத்த தயாரிப்பாளரைவிட பதட்டப்பட வைக்குது. அவசரப்பட்டு நம்ம மொக்கைனு சொன்ன படம் மத்தவங்களுக்கு சூப்பராக இருந்தும், நம்ம ஆகா ஓகோ னு புகழ்ந்த படம் மத்தவங்களுக்கு மொக்கையா இருந்துடா என்ன ஆகிறது என்கிற பதட்டம்தான். இதுதான் சிறந்த படைப்பு என்று முதல் பார்வையிலேயே உணர்வதற்கு அடியேன் இன்னும் வளரனும் போல.. பட்.. உங்க அலசல் எப்போதுமே டாப் தான்.
சிம்பு-ஆண்ண்டிரிய அந்த படத்தில் கௌரவ வேடம். படம் பிஸீனஸ் ஆவதற்காக இப்படி கிளப்பிவிட்டிருக்கிறார்கள். எனவே இன்னும் தலைவி விடுதலை ஆகவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஹ..ஹா... கௌரவ வேடத்திற்கே சிம்பு இந்த வேலை பார்த்திருக்காரே... ஆனா அந்தப் புயல் அரைக்கால் டவுசர் போட்ட அணிருத்தையே கவிழ்த்ததாச்சே... இங்க உரசாமலே பத்திக்கொள்ளும் .
Deleteஅனிமேட்டேட் ஃபோட்டூன்ஸ் சூப்பர்யா.
ReplyDeleteநன்றி பாஸ்.....
Deleteலைக் இட் ...! ( ச்சும்மா ஆடிச்சு விடுவோம் ....!)
ReplyDeleteநன்றி பாஸ்.....
Deletemulu pathivum rasichen sir.. muthal antha padam concept super... unga blog la potta antha varikal parthu iruken..
ReplyDeleteமிக்க நன்றி மகேஷ்
Deleteஓ பிரபலம் ஆகா இது தான் ஐடியாவா...
ReplyDeleteசினிமா பதிவுகளுக்கு அப்போதுமே கவர்ச்சி அதிகம் தான், தகவல் பதிவுகளுக்கு வாசகர்களும் கூகிள்ஆண்டவரும் மட்டுமே துணை...
யுவா பதிவு நானும் படித்தேன் அற்புதமாக எழுதி இருந்தார், ஒவ்வொருவரின் பார்வையிலும் படம் மாறுபடுகிறது..
கடைசி கிராபிக்ஸ் உங்கள் உழைப்புக்கு சல்யூட்
//ஓ பிரபலம் ஆகா இது தான் ஐடியாவா...//ப இந்த ரகசியத்தை இப்பத்தான் கண்டுபிடிச்சேன் சீனு.. :-)
Deleteநன்றி சீனு.
itha mattum ammayero, visayakantho partha,blogae tamilnatula ban panniruvanga
ReplyDelete
Deleteஅட நீங்க வேற...பேஸ்புக்ல இதைவிட கேவலமா கிண்டல் பண்றாங்க... :-))
கேப்டனை விடுங்க...இதை மட்டும் பிராட்மென் பார்த்தாரு... பார்த்த இடத்திலேயே தூக்குல தொங்கிடுவாரு :-)))
சும்மா கலந்து கலக்கி அடிச்சிருக்கிங்க.. கலக்கல் காமெடி செமையா அப்டேட் பண்ணிட்டிங்க உங்க எழுத்துக்கள்ல..
ReplyDeleteஉண்மைத்தமிழன் பதிவு நெஜமாவுமே வேர்ட் லெஸ்.. மனிதர் செமையா மெனக்கெட்டு பதிவு பண்றாரு.. சச்சின், கலாட்டூன் எல்லாமே கலக்கல்ஸ்..
மிக்க நன்றி ஹாரி....
Deleteவயிறே புண்ணாயிருச்சு தல...பட்டய கிளப்பிடீங்க...
ReplyDeleteமிக்க நன்றி தல...
Delete