Friday 3 July 2015

பாபநாசம்..- பாசப்போராட்டம்..!

கொலைக்குற்றத்தில் சிக்கிக் கொண்ட தன் மகளைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தந்தையின் பாசப்போராட்டம் தான் பாபநாசம். ஏற்கனவே த்ரிஷ்யம் படம் பார்த்தவர்களுக்கு பாபநாசம் படத்தின் கதையை திரும்பவும் சொல்லவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் கடமை என்று ஒன்று இருப்பதால்......

பாபநாசம் என்கிற கிராமத்தில் கேபிள் டிவி ஆபரேட்டராக சுயதொழில் செய்கிறார் சுயம்புலிங்கம் (கமல்). மனைவி ராணி (கவுதமி) மற்றும் இரு மகள்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை. தொழில் தவிர, தொலைக் காட்சியில் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது அவரின் பொழுதுபோக்கு.

பள்ளியில் நடக்கும் கேம்ப் ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அவரது மூத்த மகளை, குளிக்கும்போது ஒருவன் செல்போனில் வீடியோ எடுத்து விடுகிறான். அதை வைத்து தனது ஆசைக்கு இணங்கும்படி அவர்கள் வீட்டிற்கே வந்து மிரட்டுகிறான்.

இந்த விஷயம் சுயம்புவின் மனைவிக்கு தெரியவர, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றுகிறது. இதில் அவன் கொல்லப்படுகிறான். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தை மறைக்க அவர்கள் வீட்டு தோட்டத்திலே குழி தோண்டி அவனைப் புதைத்து விடுகிறார் சுயம்புவின் மனைவி.

மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பும் சுயம்புவிடம் நடந்ததை சொல்கிறார்கள். கொல்லப்பட்டவன் ஐ.ஜி யின் மகன் எனத் தெரியவர, ஒட்டுமொத்தக் குடும்பமே உடைந்து போய் என்ன செய்வதென்றே தெரியாமல் பரிதவிக்கிறது.

பிறகு சுதாகரித்துக் கொள்ளும் சுயம்பு, சட்டப்படி இது கொலையல்ல என்பதை விளக்கி அவர்களைத் தேற்றி ஆறுதல் சொல்கிறார். அதன்பின்பு ஒவ்வொரு தடையமாக அழிக்கிறார். ஆனால் விதி, அவர்களைக் காட்டிக் கொடுக்கிறது. கடைசியில் அவர்கள் அதிலிருந்து தப்பித்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

 
சல் த்ரிஷ்யத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதால் இதன் ஒவ்வொரு காட்சியையும் அசலோடு மனம் ஒப்பீடு செய்துக்கொண்டே வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.  மலையாள த்ரிஷ்யத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் பாபநாசம் படத்தின் இயக்குனர். கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளையும் அப்படியே நகல் எடுத்திருக்- கிறார். மலையாள த்ரிஷ்யத்தில் குளியல் வீடியோவை வைத்து மிரட்டும் ஐ.ஜி யின் மகனை இரும்புக் கம்பியால் தாக்குவார் ஜார்ஜ் குட்டியின் மகள். இதில் அவன் வைத்திருக்கும் செல்போனைத் தாக்க முற்படும் போது அந்தக் கம்பி தவறுதலாக தலையை தட்டிவிடுவதாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர். தன் அம்மாவையே இச்சைக்கு அழைக்கும் ஒருவனை மகள் கொலை செய்ய முடிவெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது..? பின்னே எதற்கு தமிழில் இந்த சமரசம்..?

வெகு இயல்பாக அறிமுகமாகிறார் உலகநாயகன். படத்தில் ஒரு இடத்தில் கூட ஹீரோயிசம் இல்லை. இப்படி ஒரு கதையில் நடிக்க சம்மதித்ததிற்கே அவரைப் பாராட்டலாம்.இரு குழந்தைகளுக்கு அப்பா என்கிற பாத்திரம் கமலுக்கு புதிதல்ல. அப்பா- மகள் கெமிஸ்ட்ரி நன்றாகவே வந்திருக்கிறது. கமல் பேசும் பாபநாச பாசையை புரிந்து கொள்ளவே சிறிது நேரம் எடுக்கிறது. என்றாலும் எல்லாவற்றிலும் பெர்பெக்சன் எதிர்பார்க்கும் ஒரு கலைஞனின் முயற்சியை பாராட்டத்தான் வேண்டும்.

மோகன்லால்-கமல் ஒப்பீடு தேவையில்லைதான். ஆனால் ஜார்ஜ் குட்டி என்கிற பாத்திரத்தினுள் தெரிந்த ஒரு அக்மார்க் கேபிள்டிவி ஆபரேட்டர், அன்பான அதே நேரத்தில் கண்டிப்பான அப்பா, பிரியமான கணவன், பாசமான மருமகன் எல்லாம் சுயம்புலிங்கத்தின் பாத்திரத்தில் ஏனோ தெரியவில்லை. ஆனால் இறுதியில் கொலை செய்யப்பட்ட ரோஷன் பஷீர் பெற்றோரிடம் கமல் உருகிப் பேசும் அந்த ஒரு காட்சியில் ஜார்ஜ் குட்டியையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் சுயம்பு லிங்கமான கமல். உலக நாயகன் உக்கிரமாக ஜொலிக்கும் இடமது.

நிஜத்தில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் திரையில் கமல்- கவுதமியை தம்பதியினராகப் பார்க்கும் போது ஏதோ ஒன்று நெருடுகிறது. பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவியின் தாய் இந்தளவுக்கா டொக்கு விழுந்து போயிருப்பார்..?.ஒருவேளை நிஜத்தில் இருக்கலாம். சினிமா என வருகிற பொழுது ஒரு முன்னணி  நடிகரின் மனைவியாக நடிப்பவர் என்பதால் கொஞ்சம் 'வெயிட்டான' அம்மாவைப் போட்டிருக்கலாமே..?  கமல்-கவுதமி ரொமான்ஸ் காட்சிகள் கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லை...

படத்தின் முதல்பாதி ஜவ்வாக இழுக்கிறது. டீக்கடையில், போலீசாக வரும் கலாபவன்மணியை கமல் கலாய்ப்பது, கமல்-கவுதமி உரையாடல்கள் , பாடல்கள் என்று சுவாரஸ்யமில்லாமல் முன்பாதி நகர்கிறது. ஆனால் பின்பாதியில்தான் திரைக்கதை வேகமெடுக்கிறது. கொலையை மறைக்கும் கமலின் தந்திரங்கள், விசாரணையை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று மகள்களுக்கு கமல் எடுக்கும் வகுப்பு, போலிஸ் புலன் விசாரணை என்று தடதடவென்று சிக்கல் இல்லாமல் சீறிப்பாய்கிறது திரைக்கதை.

படத்தில் பாராட்டப்படவேண்டிய மற்றொரு கதாபாத்திரம், கொலை செய்யப்பட்டவனின் அம்மாவாக வரும் ஐ,ஜி. கீதா பிரபாகர் (ஆசா சரத்). புலன்விசாரணை செய்யும் காவல் உயரதிகாரியாக அவர் காட்டும் கம்பீரமாகட்டும், தன் மகனுக்கு என்ன ஆயிற்று என்பதே தெரியாமல் ஒரு அம்மாவிடமிருந்து வெளிப்படும் தவிப்பாகட்டும், கமலுக்கு அடுத்து செம்மையாக ஸ்கோர் செய்வது இவர்தான்.

படம் முழுவதும் பச்சை பசேலென இருக்கும் ரம்மியமான மலைப்பிரதேசங்களைப் பளிச்சென பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ். ஜிப்ரனின் பின்னணி இசை அவ்வளவாக காட்சிகளோடு பொருந்தவில்லை. பாடல்கள் சுத்தம்..!

முன்பாதியில் கோட்டைவிட்டு பின்பாதியில் கொடியை நட்டு இருக்கிறார்கள். மலையாள த்ரிஷ்யம் ஒரு வருடம் ஓடியதாக சொல்கிறார்கள். ஆனால் பாபநாசம் படத்திற்கு 'ரிப்பீட் ஆடியன்ஸ்' வருவதற்கு சாத்தியமே இல்லை. ஒருமுறை பார்க்கும்படி தான் உள்ளது.


                        ப்ளஸ்                   மைனஸ்
சிக்கலில்லாமல் சீறிப்பாயும் பின்பாதி திரைக்கதை.                                        சுவாரஸ்யமில்லாமல் நகரும் முதல் பாதி.... 
உலக நாயகனின் எதார்த்த நடிப்பு. பின்னணி இசை, பாடல்கள்.
காவல் உயரதிகாரியாக வரும் ஆசா சரத் நடிப்பு  விசாரணையின் போது  நடக்கும் வன்முறைக் காட்சி.
சுஜித் வாசுதேவ்வின் ஒளிப்பதிவு  கவுதமி.  ( சிம்ரன், அபிராமி,நதியா எல்லாம் பரிசீலனையில் இருந்தார்களாம். கமலின் தேர்வுதான் கவுதமி)
இறுதிக் காட்சியில் ஜெயமோகனின் வசனம்.
ஹீரோயிசம் இல்லாத இயக்கம்




22 comments:

  1. palarum malayalathil paarkka parinthuraitha padam,
    namakku language problem apdingurathala
    paarkama vittuten.

    tamil la paapanasam peyaril remakeaavathai kezvi paddapothu
    tamil la paarkalam irunthavanukku.
    unga vimarsanam vasikkumpothu

    'adadaa ithuthaaan antha padamaa.'
    samipathil oru telugu channel la pottirunthanga appo taan paarthen.
    vimarsanam vasicha piraku
    wiki thedina
    2013 malayalam, 2014 telugu and finala 2015 tamil
    Drushyam remake..


    ---

    ungal vimarsana sevai thodarungal sir.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்... பாசப் போராட்டத்தை பார்த்துடுவோம் இந்த வாரம்...

    ReplyDelete
    Replies
    1. தமிழில் இதுபோன்ற ஹீரோயிசம் இல்லாத படங்கள் வருவது அரிதுதான் . கண்டிப்பாக பாருங்கள் DD. நன்றி ..

      Delete
  3. படத்தின் முதல்பாதி ஜவ்வாக இழுக்கிறது. டீக்கடையில், போலீசாக வரும் கலாபவன்மணியை கமல் கலாய்ப்பது, கமல்-கவுதமி உரையாடல்கள் , பாடல்கள் என்று சுவாரஸ்யமில்லாமல் முன்பாதி நகர்கிறது. - How was that in Malayalam?

    You yourself written first - "மலையாள த்ரிஷ்யத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் பாபநாசம் படத்தின் இயக்குனர். கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளையும் அப்படியே நகல் எடுத்திருக்கிறார்."

    ஜிப்ரனின் பின்னணி இசை அவ்வளவாக காட்சிகளோடு பொருந்தவில்லை. பாடல்கள் சுத்தம்..!
    - ????!!! what to say about your taste

    No mention about Kamal's effort for Nellai Tamil...

    Looks like you went with 'critic' view

    ReplyDelete
    Replies
    1. ஒரு காட்சியை அப்படியே நகலெடுக்கும் போது அசலில் இருக்கும் சுவாரஸ்யம் நகலில் இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்பாதி திரைக்கதை கேரளப் பின்னணியில் லாலேட்டனுக்காக எழுதப் பட்டதா இருக்கலாம். பின்பாதிதான் படத்திற்கு முக்கியமான கட்டம் என்பதால் முன்பாதியில் தமிழ் சினிமாவுக்காக சின்னச்சின்ன மாறுதல்கள் செய்திருக்கலாம். அப்படியே நகல் எடுப்பதற்கு டப்பிங் செய்துவிட்டு போகலாமே...

      காட்சியமைப்புகள் எல்லாம் அதேதான். ஆனால் வசனங்கள், கதாபாத்திரங்கள் எல்லாம் வேறுபடுகிறதே பாஸ்... லாலேட்டனுக்கும் மீனாவுக்கும் இருந்த அன்யோன்யம் இதில் இல்லை. இசையைப் பற்றி நான் சொன்னதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

      Delete
    2. கேரளாவில் சாயா போடும் சேட்டாவுக்கும் தமிழ்நாட்டு டீக்கடை அண்ணாச்சிக்கும் நிறைய வேறுபாடு உண்டு.. அதேப்போல கலாபவன் மணி ஏற்றிருக்கும் போலிஸ் வேடம். கமல் பேசும் ஸ்லாங், வெளிப்புற சூழல் , நடிகர்கள் எல்லாமே படம் கேரளாவில் நடப்பது போல இருப்பதால் முன்பாதி கொஞ்சம் அன்னியப்பட்டு நிற்கிறது.

      Delete
  4. விமர்சனம் அருமை... பார்க்கணும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..பரிவை சே.குமார்..!

      Delete
  5. Review from Sify:

    First things First! Remaking a well received, cult classic movie like Drishyam into another language is definitely not a cake walk.


    And when you are going to replace an exceptional actor like Mohanlal with an equally talented Kamal Haasan there must have been huge pressure on Jeethu Joseph, the director of the both the films.


    Thankfully, Papanasam –the Tamil version is even tighter and there is absolutely no room for error in the writing. Flawless is the word!

    Suyambulingam (Kamal Haasan) is a local cable TV operator living happily with his family comprises of wife Rani(Gautami), daughters—Selvi (Niveda Thomas) and Meena (Baby Esther). When an uninvited guest enters into their family to cause heavy havoc, they stand together and send him to a place where he can never comeback.


    But the irony is that they actually messed up with the son of a powerful and sharp IG Geetha Prabhakar (Asha Sarath) who does her best to bring the truth out from them. Does she succeed? Watch out the film.

    Drishyam was perhaps one of the tightest scripts in Indian cinema but Papansam is also impeccable and it is note worthy that Jeethu Joseph has corrected all those unidentifiable minor logic loopholes in the remake which indeed gives a fresh feel to the audience who have already seen the original.




    Another interesting aspect of Papanasam is the nativity—writers Jeya Mohan and Suka have penned the dialogues in such a way that the film gives us a feel of being there in Papanasam for three hours.


    All the actors have delivered the nellai slang with sheer perfection, they have also followed the mannerisms and body language of the people lives in the particular locality which deserves a huge applause!




    Performance wise, Kamal Haasan is amazing and he has not followed the acting style of Mohanlal, so there is no way that we compare both the actors. The way Kamal speaks the nellai Tamil is a treat to watch, needless to say, his emotional outburst in the climax would even move a stone heart! But the question to be asked is being a perfectionist, why Kamal has opted for the fake mustache? Which is sadly the one and only distraction in the whole movie.




    Gautami has once again proved her acting prowess while Asha Sharath has brilliantly reproduced her powerful performance from the original. The rest of the actors including Niveda Thomas, Baby Esther, Kalabavan Mani, MS Baskar and Anant Mahadevan who have also excelled in their performances.




    Technically, Ghibran's background score is a big asset to the movie which brings the audience to the edge of the seat while cinematography by Sujith is brilliant.




    Overall, Papanasam is a faithful remake of Drishyam with an authentic local flavor and more detailing from the original!

    ReplyDelete
    Replies

    1. அதில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லாம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை...தேவலோகத்திலிருந்து வந்தவர்கள்... பணிபுரிந்து டெக்னிசியன்கள் எல்லாம் ஹாலிவுட்டையே மிஞ்சக் கூடியவர்கள்.. மொத்தத்தில அது படமே இல்லை.. உலக மகா காவியம்னு சொல்ல வரீங்க...

      Delete
    2. அந்த மீசையை தவிர படத்தில் வேற எந்தக் குறையும் தெரியவில்லை போல.. இந்தப் படத்திற்கு குறைந்தது பத்து தேசிய விருதாவது கொடுத்தே ஆகவேண்டும்..:-)

      Delete
  6. ஆம்..முதல் பாதியை இன்னும் தமிழ்ப்படுத்தியிருக்கலாம். மலையாளத்திற்கு அந்த ஸ்லோ, ஓகே. தமிழில் கொட்டாவி வருகிறது. நாம் எல்லா மொழிப்படங்களையும் ஒரே எதிர்பார்ப்புடன் பார்ப்பதில்லை.

    ReplyDelete
  7. Hindu Review


    The fear that Kamal Haasan, the star could be too hot for the role of a villager has been proved unreasonable.

    There were two main topics of discussion among the fans of Mohanlal’s recent superhit, Drishyam and its proposed Tamil remake by actor Kamal Haasan. The most obvious one being whether the Tamil remake would be able to stand on its own leg. The other point of discussion was if Kamal Haasan could slip into the role of nondescript villager, a feat that Malayalam superstar Mohanlal achieved without batting an eyelid.

    Papanasam scores on both these accounts. But, the big question always was this: what could anyone add to a film which has been declared one of the best written screenplays in recent times? The creative team – Jeethu Joseph, writers Jeyamohan and Suka – along with Kamal Haasan, seem to have put their heads together to add as much retroactive meaning to the film.

    It is as if they have taken the engine of the original and built a shinier body around it. Whilst the original featured Mohanlal as a Christian living in a self-contained small village unit in Kerala, the Tamil remake features a Kamal Haasan as a Hindu Nadar, a community known for its entrepreneurial spirit in Tamil Nadu. Whilst Georgekutty goes on a pilgrimage, partly to create a coherent faux narrative that he could sell to the cops but also as a metaphorical journey to observe penance, the Tamil remake itself is set in a place called Papanasam, where the protagonist resides to rid himself of the sins his family has committed, making the actual journey to the temple merely a conduit to spin a seemingly truthful fantasy.
    Whilst the original featured a protagonist who is a film buff, the Tamil remake feels slightly more authentic when set in Tamil Nadu – taking into account Suyambulingam’s near hero-worship of Sivaji Ganesan – which boasts of a far more intense and a passionate film culture.

    The fear that Kamal Haasan, the star could be too hot for the role of a villager has been proved unreasonable. Speaking what seems like an impeccable Thirunelveli accent, Kamal Haasan has owned the role, never once showing off the star he naturally is.

    It is hard to shake off the feeling that the scenes, featuring Suyambulingam and Rani played by Gauthami making a comeback, have been slightly extended to milk the real-life partnership between the actors despite the film being largely faithful to the original. This film is many things: it is about violence against women, about police brutality, about paying for your sins, about small-town mentality of putting community before individual and family before everything. But it is also a meta-narrative about the nature of fiction itself: how, in the way it is structured, fiction reveals more truth than reality we perceive.

    ReplyDelete
  8. மலையாளத்தில் உருவான 'த்ரிஷ்யம்' தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ஹிட்டடித்து, தற்போது தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, ரிலீஸ் ஆகியிருக்கிறது.
    ஹிட் படத்தின் ரீமேக், கமல் நடிப்பு என்ற இந்த காரணங்களே பாபநாசம் படத்தைப் பார்க்க வைத்தன.

    சரி, படம் எப்படி?

    read:
    http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/article7383100.ece

    கமல் இந்த மாதிரி நடிச்சா போதும். பார்த்துக்கிட்டே இருக்கலாம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இதை யாராவது கமலுக்கு கொண்டு போய் சேர்க்கக் கடவது!

    ReplyDelete
  9. http://www.truetamilan.com/2015/07/blog-post.html

    ReplyDelete
  10. http://www.bollywoodlife.com/news-gossip/papanasam-movie-review-you-just-cant-miss-kamal-haasans-brilliant-performance-in-this-flawed-yet-riveting-thriller/

    If you are Kamal Haasan fan you won’t even need to read this review to watch Papanasam. If you are not a Kamal Haasan fan, please don’t miss it for anything in the world as it is very rare that a good script meets a great actor. And if you are thinking ‘ I have already watched Drishyam’, I would say give Papanasam a chance as it has the potential to blow your mind. Be a little patient in the beginning and it would pay rich dividends.

    Rating: 3.5 out of 53.5 Star Rating

    ReplyDelete
  11. It’s terrific to see Kamal Haasan play a ‘normal’ part, says Baradwaj Rangan

    http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/papanasam-movie-review/article7383788.ece

    ReplyDelete
  12. வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் பார்த்துவிட்ட என் மகள் என்னையும் பார்க்கச் சொல்லியிருக்கிறார். நான் இப்போதெல்லாம் விமர்சனங்கள் எப்படிப் போகின்றன என்று பார்க்காமல் -நான் பெரிதும் மதிக்கும் கமல் படமாக இருந்தால்கூட, படம்பார்க்க -திரையரங்கிற்கு- போவதில்லை. எனவே காத்திருந்தேன். உங்கள் விமர்சனம் படித்தபிறகு, திருஷ்யம் பார்த்துவிட்டுப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. இரண்டையும் பார்ப்பேன், நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  13. த்ரிஷ்யம் பாத்தவொடனே நாலுவரி எழுதிட்டேன்.

    நல்லா எழுதிரிக்கிய
    http://pandianinpakkangal.blogspot.in/2015/06/blog-post_28.html?m=1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

      Delete