நேற்றுதான் மாரி பார்த்தேன்..
விஜய் டிவியில் மிமிக்கிரி செய்து சிரிப்புக் காட்டிக்கொண்டிருந்த சிவகார்த்தியகேயனை காமெடியனாக அறிமுகப்படுத்தி, பிறகு மாஸ் ஹீரோவாக்கி எப்படி தெருமுக்குல கிடந்த ஆப்பை எடுத்து தெனாவெட்டாக செருகிக் கொண்டாரோ, அதேப்போல் விஜய் டிவி புகழ் ரோபோ சங்கரை திரும்பவும் சோலோ காமெடியனாக வாய்ப்பளித்து அடுத்தாக ஹீரோவாக்கி இன்னொரு ஆப்பையும் செருகிக்கொள்ள தனுஷ் எடுத்திருக்கும் மற்றொரு முயற்சியே இந்த மாரி.
புறாப் பந்தயம்தான் படத்தின் மையம். அதன் மூலம் இரு குழுவுக்குள் நடக்கும் அடிதடியே படத்தின் ஒன் லைன். இதில் சம்மந்தமில்லாமல் சமீபத்திய பரபரப்பு நிகழ்வான செம்மரக் கடத்தலை இடைச்செருகியிருக் கிறார்கள்.
திருவில்லிக்கேணி பகுதியின் ' ஒன் மேன் தாதா ' மாரி. தொழில்- மார்கெட்டில் கட்டாய வசூல் & அடிதடி. பொழுதுபோக்கு- புறாப் பந்தயம். மாரியின் இடத்தைப் பிடிக்க முயல்கிறான் இன்னொரு தாதா ' பேர்ட் ' ரவி. இந்நிலையில் அப்பகுதிக்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் அர்ஜுன், பேர்ட் ரவியை கையில் போட்டுக் கொண்டு மாரியை ' உள்ளே ' தள்ளி அந்த இடத்தைக் கைப்பற்றுகிறார். இழந்த தனது இடத்தையும் அடையாளத்தையும் திரும்பவும் அடைந்தானா மாரி என்பதே படத்தின் கதை..
வித்தியாசமான கதைக்களம் என்று கூட சொல்ல முடியாது. சேவல் சண்டையை
மையப்படுத்தி அதன் மூலம் மானிட உணர்வுகளிலிருந்து வெடித்துக் கிளம்பும்
வன்மம், ஈகோ, துரோகம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் தாக்கங்களை நேர்த்தியாக சொல்லி தேசிய அளவில் பாராட்டை அள்ளிய ஆடுகளம் போல இதில் புறாப் பந்தயத்தைக் கையிலெடுத்திருக்கிறார் தனுஷ்.
தன் உடல் வாகுக்கும் தனக்கிருக்கும் ' நம்ம வீட்டு பிள்ளை ' இமேஜுக்கும் கொஞ்சம் கூட செட் ஆகாத 'தாதா' கேரக்டர் தனுசுக்கு. ஹீரோ ஒரு லோக்கல் தாதா. அவரோட கெட்டப் எப்படி இருக்கணும்..? தமிழ் சினிமாவில் அவரை எப்படி அடையாளப்படுத்தணும் ..? இது கூடவா தெரியாது. எத்தனை தமிழ் சினிமா பாத்திருக்கோம்.. சின்னக் குழந்தைகிட்ட கேட்டா கூட சொல்லிடுமே..!
சைக்கிள் செயின் சைஸில் கழுத்து நிறைய ஜொலிக்கும் தங்கம், லோக்கல் கூலிங் கிளாஸ், தடதடக்கும் புல்லட், முண்டா பனியன் முக்கால் வாசி தெரியும்படி பட்டன் இல்லாத ஜிகுஜிகு சட்டை, கூட ரெண்டு அல்லக்கைகள்.. இது வெளிப்புற அடையாளம். ரொம்ப கெட்டவன்தான்; ஆனால் கொஞ்சம் நல்லவன், முரடன்தான்; ஆனால் கல்லுக்குள் ஈரம்போல காதல், கருணை இருக்கும், அடிச்சிப் புடுங்கனும்; ஆனா யாருக்கும் தெரியாம படிப்பு செலவுக்கு உதவி பண்ணனும், இதை அப்படியே காப்பி பண்ணி யாரெல்லாம் ரவுடி கெட்டப்புல ஹீரோவா நடிக்கிறாங்களோ அவுங்க மேல பேஸ்ட் பண்ணி போடணும்..
அஜித் மேல பேஸ்ட் பண்ணினா அது ரெட், விக்ரம் மேல பண்ணினா ஜெமினி, சிம்புவுக்கு காளை, சூர்யாவுக்கு ஸ்ரீ...இந்த வரிசையில கடைசியா ஒல்லிபிச்சான் தனுஷ் மேல பேஸ்ட் பண்ணியிருக்காங்க.. கூட கொஞ்சம் 'ஹேய்.... செஞ்சிடுவேன்..." என்ற பஞ்ச டயலாக்கை சேர்த்துவிட்டால், முடிந்தது மாரி கெட்டப்.
' செஞ்சிடுவேன்....' என்றால் எங்கூர் பக்கம் வேறொரு அர்த்தம். அதுவும் பொண்ணுங்க கிட்ட சொன்னா தோலை உரிச்சி தொங்க போட்டுடுவாங்க..
ஒரு தாதாவுக்குரிய மிரட்டலான குரலும், பாடி லாங்குவேஜும் திரையில் வருவதற்கு நிறையவே மெனக் கெட்டிருக்கிறார் தனுஷ். அவரைப் போன்ற பிறவி நடிகனுக்கு இதெல்லாம் சப்பை மேட்டர். ஆனால் அதை மட்டும் வைத்துகொண்டு அவரை ஏரியாவுக்கே தாதா என்று சொன்னால் அந்த ஏரியா பிச்சைக்காரன் கூட நம்பமாட்டான் ஸாரே..
ரோபோ ஷங்கருக்கு இவ்ளோ ' வெயிட் ' கொடுத்ததற்கான காரணம் புரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் ரோபோ சங்கரின் 'பன்ச்' சோடுதான் முடிகிறது. பாரில் தண்ணியடிக்கும் காட்சியும், வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றும் காட்சியில் மட்டும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் ரோபோ. மற்ற இடங்களில் மொக்கை போடுகிறார்.
காஜல் அகர்வால் நடத்தும் பேஷன் டிசைன் கடையில் தனுஷ் பார்ட்னராக சேர்ந்து அவருக்கு தனுஷும் ரோபோ ஷங்கரும் குடைச்சல் கொடுப்பது போல நிறைய காட்சிகள் வைத்திருக்கிறார் இயக்குனர். கொடுமை என்னவென்றால் அதெல்லாம் காமெடியாம். ஸ்ஸ்ஸப்பா..முடியில. நிலக்கடல வேர்க்கடல பொட்டுக்கடல.. இதுக்கெல்லாம் எனக்கு சிரிப்பே வரல..
போலீஸே பொறுக்கியாக மாறும் வில்லன் கேரக்டர் விஜய் யேசுதாசுக்கு. வெட்டு சங்கராக 'தில்' காட்ட வேண்டியவர் அமுல் பேபியாக அசடு வழிகிறார். வாட்ட சாட்டமான உடல்வாகுதான். ஆனால் ஒரு பொறுக்கி போலிஸுக்கான விறைப்பு, திமிரு, அதட்டல், மிரட்டல் கொஞ்சமாவது வேண்டாமா..?
ஓபனிங் சாங்கில் ஆண்ட்ரியா புகழ் அனிருத் என்ட்ரி கொடுக்கிறார். ஹீரோவுடன் டான்ஸ் வேற. சகிக்கல பாஸ்....
ஓபனிங் சாங்கில் தனுசின் ஆட்டம், ஆங்காங்கே சிரிக்க வைக்கும் ரோபோ, புறாப் பந்தய சுவாரஸ்யம், இறுதி சண்டைக்காட்சி, தனுசுக்கும் காஜல் அகர்வாலுக்கும் டூயட் சாங் இல்லாதது என்று சில பிளஸ்கள் இருந்தாலும், சப்பையான கதைக்கு மொக்கையான திரைக்கதையானதால் இன்னொரு சுள்ளானாக வந்திருக்கிறது இந்த மாரி.
மாரி.. ஐயாம் வெரி சாரி..!
ஆனாலும் பிறவி நடிகன்னு சொல்லிட்டீங்க... ரைட்டு...!
ReplyDeleteநல்ல நடிகர்கள் தவறான களத்தைத் தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் இருக்கும் .. நன்றி DD
Deleteaverage film
ReplyDeleteYES.. thanks
Deleteதனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று சொன்னார்கள்....
ReplyDeleteநானும் ஒருவிதத்தில தனுஷ் ரசிகர்தான்.. எதை எதிர்பார்த்து சென்றேனோ அது இப்படத்தில் இல்லை..:-) நன்றி கார்த்திக் சரவணன்
Deleteதனுஷூக்காக பார்க்கலாம் என்றாலும் மரண மொக்கை.
ReplyDeleteஆமாம்.. நன்றி பாஸ்.
Delete***விஜய் டிவியில் மிமிக்கிரி செய்து சிரிப்புக் காட்டிக்கொண்டிருந்த சிவகார்த்தியகேயனை காமெடியனாக அறிமுகப்படுத்தி, பிறகு மாஸ் ஹீரோவாக்கி எப்படி தெருமுக்குல கிடந்த ஆப்பை எடுத்து தெனாவெட்டாக செருகிக் கொண்டாரோ, அதேப்போல் விஜய் டிவி புகழ் ரோபோ சங்கரை திரும்பவும் சோலோ காமெடியனாக வாய்ப்பளித்து அடுத்தாக ஹீரோவாக்கி இன்னொரு ஆப்பையும் செருகிக்கொள்ள தனுஷ் எடுத்திருக்கும் மற்றொரு முயற்சியே இந்த மாரி.***
ReplyDeleteபொதுவாக எனக்கு தணுஷைப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் சிவகார்திகேயன், ரோபோ சங்கர் போன்ற யங் டாலெண்ஸை வாய்ப்ப்க் கொடுத்து வளரவிடுவதை ஏன் இத்தனை கேவலமாக விமர்சிக்கிறீங்கனு எனக்குத் தெரியலை! நீர் ஒரு மட்டமான ஆளு போல் தெரியுது. உம்மைச் சுத்தி உள்ள யாரையும் வளர விட்டமாட்டீரா? பகுத்தறிவு பேசும் உமது சிந்தனை, ஐ ஆம் சாரி.. படு கேவமாக இருக்கு! If Dhanush did not give the chance, someone else will give that chance. You can not control others' growth in this BIG F**KING world. You need to understand that "fake rationalist"!
என்னத்தையாவது ஆப்பு மண்ணாங்கட்டி போட்டு எழவைக்கூட்டுறதுக்கு ஒழுங்கா படத்தை விமர்சிங்க!
இது தனுஷ் point of view -லிருந்து எழுதியது.. நல்ல திறமையானவர்களை அவர் அறிமுகப்படுத்துறார் என்பதெல்லாம் சரி.. பிறகு ஏன் அவரைப் பார்த்து பொறாமைப் படணும் ? தனுசுக்கும் சிவாவுக்கும் சில வருடங்களாக சில ஈகோ பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறதே அது என்னவென்று தெரியுமா ..? சிவாவை ஏன் வளத்துவிட்டோம் என்று அவர் புலம்புவதாக பத்திரிகைகளில் செய்தி வந்ததே படித்தீர்களா ..?
Deleteசிவாவுக்கு போட்டியாகத்தான் இதில் ரோபோவுக்கு வெயிட் கொடுத்து நிறைய காட்சிகள் வைத்து முக்கியத்துவம் கொடுத்தாதாக செய்தி படித்தேன்.. அதைத்தான் முதல் பத்தியில் குறிப்பிட்டேன். இதில் எனக்குப் பிடிக்கவில்லை என்று எழுதவில்லை. ஏற்கனவே புலம்பிக்கொண்டிருக்கும் தனுஷ் எதற்காக வேலியில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விடணும்னு கேட்டிருக்கேன்..
Btw...மைனஸ் ஓட்டு போட மறந்துட்டீங்க..( கடமைன்னு வந்துட்ட கன் மாதிரி இருக்கணும் பாஸ்..)
***தனுசுக்கும் சிவாவுக்கும் சில வருடங்களாக சில ஈகோ பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறதே அது என்னவென்று தெரியுமா ..? சிவாவை ஏன் வளத்துவிட்டோம் என்று அவர் புலம்புவதாக பத்திரிகைகளில் செய்தி வந்ததே படித்தீர்களா ..?***
ReplyDeleteEven in real life, it happens a lot. We help people, once they become bigger they behave differently. Meaning, they wont become what we wanted them to be. It is not uncommon in anybody's life.
I am not sure, KB knew Rajini would become this popular. People say Rajini could have helped more acting in movies of KB's production.
வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கத்தான் செய்யும்ங்க.
அதுக்காக ரோபோ சங்கர வளரவிடக்கூடாதுனு தனுஷ் இருக்க வேண்டியதில்லை. எங்க ஊரில் பெத்த அப்பனையே வய்தான பிறகு சொத்தை வேற யாருக்கும் எழுதி வச்சுடுவானேனு கொன்னு புடுறானுக! இதுதான் வாழக்கை! I know people those who killed their own dad when is really ill and incapable of doing anything.
ஒரு துறையில் ஜாம்பவனாக இருப்பவர் மற்றொரு துறையில் ஒருவரை வளர்த்து விடுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை பாஸ்... ஒரு இயக்குனர், ஒரு நடிகரை மாஸ் ஹீரோவாக வளர்த்து விட்டதற்கு நூறு உதாரங்களை நான் அடுக்குவேன்.. ஒரு நடிகர் இன்னொரு நடிகரை தொடர்ந்து வாய்பளித்து வளர்த்துவிட்டார் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள் பார்ப்போம்..
Deleteநடிகர் விஜயின் தம்பி என்று ஒருவர் வந்தார்.. விஜய் எத்தனைப் படங்களில் அவருக்கு வாய்ப்பளித்தார்.. ? கல்லூரி நண்பன் என்பதால் சூர்யாவுடன் இரண்டு படங்களில் விஜய் நடித்தார் .. ஆனால் விஜய் இடத்திற்கு சூர்யா வருவது போல் தெரிந்தவுடன் இருவருக்கும் பேச்சு வார்த்தையே இல்லை என்பதை திரையுலகில் உள்ளவர்கள் எல்லோரும் அறிவார்கள். அதுதான் சொந்த செலவில சூனியம் வச்சிக்கிறது.
ரஜினியும் கமலும் இந்தி சினிமாவில் ஏன் ஜொலிக்க முடியவில்லை.. ? அவர்களின் வளர்ச்சியை தடுத்த நடிகர் யாரென்பது உங்களுக்கு தெரியுமா..? இப்படி நிறைய உதாரணங்களை அடுக்கலாம் பாஸ்.. ரோபோ சங்கர் ஹீரோவாகும் தீவிர முயற்சியில் இருக்கிறார். ஒருவேளை இன்னும் சில வருடங்களில் அவர் சிவா அளவுக்கு பெரிய ஹீரோவாக ஆகி தனுசுக்கு போட்டியாக நின்றால் திரும்பவும் தனுஷ் புலம்புவார்.. அதைத்தான் இன்னொரு ஆப்பு என்று சொன்னேன்..