தமிழகத்தின் நம்பர் ஒன் வார இதழ்.எல்லாப் பெட்டிக் கடைகளிலும் எட்டிப் பார்க்கும் தமிழ் என்சைக்ளோபிடியா!.உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வரும் கையடக்க கணினி!.ஊழல்வாதிகளின் விலா எலும்பையே உடைத்த பத்திரிக்கைகளின் முதுகெலும்பு!. ம்ஹும்......இதெல்லாம் ஒரு காலத்தில்......நினைவு தெரிந்த நாளிலிருந்து வாரம் தவறாமல் நான் படிக்கும் ஒரே 'வாரஇதழ்' இது தான்.ஆனால் இப்போது அரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா போட்டு, அவர்கள் குட்டுவதற்கு முன்பே குனிந்து....குனிந்து....இதன் முதுகெலும்பே முறிந்து போய் விட்டது.
குமுதம்..ஒரே வரியில் சொன்னால்..ஒவ்வொரு தேர்தலுக்கும் நிறம் மாறும் பூ.கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு முன் மு.க குடும்பத்தையே நடு வீதிக்கு கொண்டு வந்து நாறடித்த பத்திரிகை.என்ன ஆயிற்றே தெரியவில்லை.தேர்தல் நேரத்தில் திடீரென்று கலைஞர் மீது பாசம்.வசைபாடி வாரி இறைத்த பத்திரிக்கை சட்டென்று புகழ்பாடி பூத்தூவின மர்மமென்ன?...குமுதத்தின் சர்குலேசனையே அதிகரித்த ஞானியின் 'ஓபக்கங்கள்' திடீரென்று நிறுத்தப்பட்டதின் நோக்கம் என்ன?...இது ஒன்றும் புரியாத புதிரல்ல.ஆனால்........
இதோ இந்த வார குமுதத்தில்....ஒரு ஆளுங்கட்சி இடைத் தேர்தலில் அதுவும் தமிழ் நாட்டில் வெற்றி பெறுவது ஒன்றும் உலக அதிசயம் அல்ல..அதற்காக முதல் பக்கத்தில் பத்திரிக்கையின் சேர்மேனே இப்படி துதிபாடியிருப்பது, கிட்டத்தட்ட எதிர்கட்சியே இல்லாமல் இருக்கும் தமிழகத்தில் அவர்கள் சார்பாக அந்தப் பணியை தன் தோளில் சுமந்து, ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் முன்னணி நடுநிலைமை பத்திரிக்கையில் ஒன்றான குமுதத்திற்கு இது அழகல்ல.
இந்தச் செய்தி முதல் பக்கத்திலே வரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடனும்,அதீத கவனத்துடன் இருந்ததால் நிறைய விசயங்கள் விடுபட்டு போய்விட்டதாம்.அதை,குமுதம் நிர்வாகத்தின் அனுமதி பெற்று இங்கே பிரசுரிக்க கடமைபட்டுள்ளேன்.(இதை எப்படியாவது முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு சொம்போடு.ச்சீ..அன்போடு விழைகிறேன்.)
விடுபட்ட அந்த செய்(து)திகள்...
தமிழத்தின் விடி வெள்ளியாய் பல தடைகளைத் தாண்டி பொடிநடை போட்டு வந்த வறட்சி..ச்சீ...புரட்சித் தலைவியே!!!!!
உங்கள் வருகையால் தமிழகம் நட்டநடு நிசியிலும் பட்டப் பகல் போல் வெட்ட வெளிச்சமாக ஒளிருகிறது. ஆட்சிக்கு வந்த ஒரேமாதத்தில் மின்சாரத் தடையை அகற்றுவேன் என்று சூளுரைத்து அதை செயல் வடிவம் தந்து வெற்றி கண்ட ஸ்ரீரங்க நாயகியே..
மின்சாரம் இருந்தால் தானே தடையே.மின்சாரமே இல்லை என்றால்? என்று அறிவுப் பூர்வாக சிந்தித்து தமிழர்களின் 'நெஞ்சில் வேலை பாய்ச்சிய' ச்சீ....'வயிற்றில் பாலை காய்ச்சிய' போயஸ் தோட்டத்துத் புயலே.!!!!
மின்சாரத்தடைக்கு காரணமே தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்தவர்கள்தான். இந்த உண்மையை,கடந்த மூன்று மாதமாக போயஸ்தோட்டத்தில் ரூம் போட்டு ராப்பகலா யோசித்து கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்திய ஒளிவிளக்கே!.
உங்களை மட்டுமே நம்பி தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிய கூடங்குள மக்களை,உங்களின் இரும்புக்கரங்களால் ச்சீ.அன்புக்கரங்களால் அரவனைத்துச் சென்ற கருணையுள்ளம் கொண்ட அன்னையே..!
கடந்த ஆட்சியில் பேசினால் தான் சிறை.உங்கள் ஆட்சியில் பேச்சு சுதந்திரத்திற்கே சிறை.சீறிய சீமானையும் பொட்டிப்பாம்பாய் அடங்கச்செய்த கெட்டிக்கார முதல்வர் நீங்கள்.
'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதையுணர்ந்து தன்னை சுற்றியிருந்த கும்பலை துரத்தியடித்தப் பின் மீளா துயரத்தில் இருந்த நீங்கள்,அதிலிருந்து மீள ஒவ்வொருவரையும் தோட்டத்தின் பின் வாசல் வழியே திரும்ப வரவழைக்கும் உங்கள் இரக்க குணத்தை என்னவென்று புகழ்வேன்?
உள்ளாட்சி தேர்தளுக்குப்பிறகு பஸ்கட்டணம்,பால்விலை,மின்சாரக்கட்டணம் உயர்வு.இடைத்தேர்தலுக்குப் பின் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆப்பு... என்னே ஒரு ராஜதந்திரம்....தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரைக்கும் அனைத்து திட்டங்களுக்கும் எங்களின் பரிபூரண சொம்பு..ச்சீ அன்பு என்றும் இருக்கும்.

(இந்த வாரம் 'குமுதம்' படித்து முடித்திருப்போர் கவனத்திற்கு...அது பத்தல அப்படீன்னு பீல் பண்ணினா இதையும் கொஞ்சம் சேத்துக்குங்க..'கும்'முன்னு இருக்கும்.
-----------------------------------------------------(((((((((((()))))))))))))))))))))))))--------------------------
மணிமாறன்,
ReplyDeleteகுமுதம் சங்கதி தான் ஊருக்கே தெரியுமே, எப்பாடுப்பட்டாவது சுருட்ட துடிக்கிறார் வரதன், வாய்ப்பு கிடைச்சா கட்சி உறுப்பினராக கூட ஆகி போஸ்டர் ஒட்டுவார் :-))
எஸ்.ஏ.பி வளர்த்த குமுதத்தின் வாசகன். இப்பொழுது அல்ல.
பதிவுலக மக்களும் ஊருல கொசுத்தொல்லைனா கூட பதிவு போடுவாங்க,ஆனால் இதெல்லாம் கண்டுப்பதில்லை(காரணம் இவங்க எழுதினது அதுல வரணும்ல)
கலகக்காரன் பதிவிலும் இச்செய்தி வந்துள்ளது.
நீண்ட கால வாசகர்கள் என்ற முறையில் நம் கண்டனத்தை தெரிவித்துதான்ஆகவேண்டும். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே...
Deleteவெட்கக்கேடு .
ReplyDeleteம்ம்ம்...என்ன செய்வது?வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே...
Deleteதன்னுடன் பயின்ற நல்ல நண்பர் என்பதற்காக, பார்த்தசாரதிக்கு ஒரு பங்கு கொடுத்து, குமுதத்தின் பதிப்பாளராக்கி, தன் திறமையாலும் கடுமையான உழைப்பாலும் பத்திரிகையை வளர்த்து, நம்பர் 1 ஆக்கினார் எஸ். ஏ. பி.
ReplyDeleteஅவர் மகன் ஜவஹர் அயல் நாட்டில் டாக்டர். பத்திரிகைத் துறையில் அனுபவம் இல்லாதவர்.
அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, இதழைத் தன் தனிச்சொத்தாக்கிக் கொள்ளத் துடிக்கிறார் பார்த்தசாரதி மகன் வரதராசன். தற்காலிக வெற்றியும் பெற்றிருக்கிறார்.
குமுதத்தின் நீண்ட கால வாசகர்களுக்கு இதெல்லாம் தெரியும்.
ஒரு துரோகியின் வெற்றி நிரந்தரமானதா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
முதல் தர பத்திரிகை.. மூன்றாம் தர பத்திரிக்கைபோல் ஆகிவிட்டது.நண்பரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..
Delete//தமிழகத்தின் நம்பர் ஒன் வார இதழ்.எல்லாப் பெட்டிக் கடைகளிலும் எட்டிப் பார்க்கும் தமிழ் என்சைக்ளோபிடியா.உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வரும் கையடக்க கணினி.ஊழல்வாதிகளின் விலா எலும்பையே உடைத்த பத்திரிக்கைகளின் முதுகெலும்பு.ம்ஹும்.....இதெல்லாம் ஒரு காலத்தில்.நினைவு தெரிந்த நாளிலிருந்து வாரம் தவறாமல் நான் படிக்கும் ஒரே "நாளிதழ்" இதுதான்.ஆனால் இப்போது அரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா போட்டு, அவர்கள் குட்டுவதற்கு முன்னே குனிந்து....குனிந்து....இதன் முதுகெலும்பே முறிந்து போய் விட்டது// kumudam is not a daily paper. As you said before it is weekly. Correct this typo.
ReplyDeleteதவறு திருத்தப்பட்டது.நண்பரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..
Deleteஅடுத்தவர் சொத்தை அபகரிக்க நினைக்கும் வரதராஜன் ஆட்சியாளர்களின் காலை கூட கழுகி குடிக்க கூட தயங்க மாட்டார்.ஒண்ட வந்த பிடாரி வூர் பிடாரியை விரட்ட பார்க்கிறது .
ReplyDeleteWHEN KUMUDAM WAS SUPPORTING DMK, WHEN VARADARAJAN WAS ALMOST ARRESTED BY DMK GOVT, YOU DID NOT CONDEMN IT. WITHOUT MUCH EFFORT JAWAHAR WANTED TO BECOME SOLE PROPERITER YOU DID NOT OBJECT IT. BECAUSE YOU WANT TO SUPPORT "MUDALALI" AT THAT TIME.
ReplyDeleteWHEN KUMUDAM WAS PRAISING STALIN AS THE BEST LEADER, YOU ACCEPTED IT!
WE DO NOT KNOW WHAT IS YOUR YARDSTICK?
GOPALASAMY BANGALORE
thanks for your comment sir.
DeleteYou are right Mani.Kumudam "Koojamudam" Aagivittathu.
ReplyDeletecorrect balaji.thanks for your comment.
Delete