Monday, 16 April 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி -சந்தானத்தின் காமெடி சரவெடி வசனங்கள்




உதயநிதி:  பாண்டிச்சேரி போறோம். கல்யாணத்த நிப்பாட்டுறோம். பொண்ணத் தூக்குறோம். இதான் மச்சான் பிளான்.

சந்தானம்:  என்னது பொண்ணத் தூக்குறதா?...டேய்,அவங்க சீர்வரிசையா குடுக்கிற கட்டில் பீரோவக் கூட என்னாலத்  தூக்கமுடியாது. மீசை வளந்தா பெரிய பசங்களெல்லாம் சண்டைக்கு கூப்பிடுவானுவோனு பயந்துதான்  மீசையே வைக்காம இருக்கிறேன்.

உதயநிதி: டேய் என்னடா பன்னுவானுவோ..ஆளு வச்சி அடிப்பாங்களா? இல்ல போலீசுகிட்ட  போவாங்களா...என்ன ஆனாலும் சரி ..எவன் குறுக்க வந்தாலும் சரி..................மச்சான் நீ பாத்துக்கோ..!

சந்தானம்:   ???????????
--------------------------------------------------------------------------

உதயநிதி: டேய் ..கல்யாணத்த நிப்பாட்ட கார் கேட்டா.. இதப்போயி எடுத்துட்டு வந்திருக்க.

சந்தானம்: ஏன் மச்சான் கல்யாணத்த நிறுத்திறதுக்குன்னே ஏதாவது புது மாடல் கார் விட்டிருக்காங்களா? 

---------------------------------------------------------------------------
பூக்கடைக் காரரிடம்..

சந்தானம்: யோவ்...ஏதாவது டிஸ்கவுன்ட் கொடுய்யா..

பூக்கடைக்காரர்:  டிஸ்கவுன்ட் எல்லாம் கிடையாது சார்...வேணா  இந்தப் பூவ வச்சுக்கிங்க..

சந்தானம்:  காதுலையா?
-----------------------------------------------------------------------------
சிக்னலில் ஒரு பெண்ணிடம்..

உதயநிதி: எக்ஸ்கியுஸ்மி..ஒரு கப் காபி சாப்டலாமா?.ஏனா.எந்த நல்லக் காரியம் பன்றதுக்கு முன்னாடியும் காபி சாப்டனும்னு எங்க அம்மாசொல்லியிருக்காங்க.

பெண்: காபி சாப்டர பழக்கம் இல்லீங்க..

சந்தானம்: வாங்க அப்ப பீர் சாப்டலாம். ஏனா எந்த நல்ல காரியம் செய்யுறதுக்கு முன்னாடியும் பீர் சாப்டனும்னு எங்க ஆயா சொல்லியிருக்காங்க...  

பெண்: லெகரா.?..ஸ்ட்ராங்கா ?

-------------------------------------------------------------------------------

(ஹன்சிகாவை சந்தானத்திடம் அறிமுகம் செய்யும் போது....)

சந்தானம்: பசங்க பாக்கனுன்னே பால்கனியில சுத்துராளுகளே  

சந்தானம்: வாவ்...

உதயநிதி: டேய் என்னடா உன் சிஸ்டர இப்படி பாக்கிற? 

சந்தானம்:???????? .. இட்ஸ் ஓகே மச்சான்.. கேரி ஆன்
 --------------------------------------------------------------------------------

 உதயநிதி: மனிதனாகப பிறந்தால் ஏதாவது ஒரு தீயப் பழக்கம் இருக்க வேண்டும்.அப்போதுதான் அவனது வாழ்க்கை முழுமையடையும் 

சந்தானம்: இந்தப் பொன்மொழியை காலையில காலேண்டர் கிழிக்கும் போதுதான படிச்ச..?


-----------------------------------------------------------------------------------


சந்தானம்:  ஏண்டா, சரக்குல ஆ.'.ப் போட முடியலுனு பேசுறதுல ஆ.'.ப் போட்டு பேசுறியா..

-----------------------------------------------------------------------------------

 சந்தானம்: திட்டுறதுக்கு வார்த்தையில்லாம திட்டுற வார்த்தையையே திருப்பி திருப்பித் திட்டிகிட்டு இருக்கிற..

-----------------------------------------------------------------------------------

சந்தானம்:  மச்சான்...செட்டாகாத பிகரு பின்னால சேவிங் பண்ணிட்டு பிரண்டு ஒருத்தன் சுத்துறானா,கூட இருக்கிற பிரண்டு  தாண்டா உள்ள போயி கெடுக்கணும்.இதெல்லாம் பெருமையில்ல..கடமை..!.

-------------------------------------------------------------------------------------
 ஹலோ ..அஞ்சி ஈ (5E) பஸ் வருமா..?.

சந்தானம்:  அழுகிப்போன பழம் மாதிரி மூஞ்ச வச்சிருந்தா,அஞ்சி ஈ இல்ல பத்து ஈ ,பதினஞ்சு கொசு, இருபது வண்டு கூட வரும்.
-------------------------------------------------------------------------------------

உதயநிதி: உனக்கு விரலு சூப்புற பழக்கம் இருக்குனு உங்க அம்மா உன் விரலுல வேப்பெண்ணையை தடவி விடுவாங்க ,அப்ப நீ என் விரலதான சப்பின..

--------------------------------------------------------------------------------------
 அய்யோ.... பார்த்தா(பார்த்தசாரதி) ஏன் இந்த காவி டிரஸ்?

சந்தானம்: காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாம, பின்ன நேவி டிரஸ்ஸா  போடுவான்?
---------------------------------------------------------------------------------------
சாமிநாதன் : சீடா..

சந்தானம்:     இருடா... ஐயோ குருஜி 

சாமிநாதன் : மீண்டும்  லவ்கீக வாழ்க்கை என்னும் குழியில் விழத்தான் போகிறீர்களா... 

சந்தானம்:   ஆமாம் குருஜி.

சாமிநாதன் : முதலில் அவள் உன்னை மெட்டி போட வைப்பாள் ..பிறகு முட்டி போட வைப்பாள் 

சந்தானம்:  அவ என்னை  ஜட்டி போட வச்சாலும் பரவா இல்ல குருஜி!

----------------------------------------------------------------------------------------- 

சந்தானம் கேர்ள் பிரன்ட்:அந்த குருஜி ஒரிஜினல் இல்ல...
 
சந்தானம்:அவரு ஒரிஜினலு இல்லாம அசெம்பல் செட்டா

------------------------------------------------------------------------------------------

உதயநிதி: என் ஆளு மீரா ஏர் ஹோஸ்டஸ் டிரைனிங்க்காக சென்னை டு மும்பை போறாங்க.. 

சந்தானம்: அதுக்கு..முதல் முதல்ல பிளைட்ல போறதால பிளைட் டயருல எலுமிச்சப்பழம் வைக்கச் சொல்றீங்களா.. இல்ல மொட்ட மாடியிலிருந்து டாட்டா காட்ட சொல்றீங்களா?


-----------------------------------------------------------------------------------------------
(சினேகா  அறிமுகமாகும்  போது ...)
.
உதயநிதி: டேய்... புன்னகை அரசிடா...!

சந்தானம்: நான் என்ன... புழுங்கல் அரிசின்னா சொன்னேன்.

 ----------------------------------------------------------------------------------------------

சந்தானம்: DC சார் எதுக்கு.. நாட்டு கோழி முட்டையை நல்ல பாம்பு பாக்கிற மாதிரி அப்படி பாக்குறீங்க..

-----------------------------------------------------------------------------------------------

சந்தானம்: டேய்... மொட்டையப்பாத்து இது வெய்யிலுக்கு அடிச்ச மொட்டையா வேளாங்கண்ணிக்கு அடிச்ச மொட்டையானு சொல்ற ஆளு நானு.உன் முழிய பாத்தாலே தெரியுது நல்ல மூடுல இருக்க.பிரண்ட்சிப் பத்தியெல்லாம் பேசி ரியாக்சன கெடுத்துக்காத.

----------------------------------------------------------------------------------------------

ஹைலைட்டான .'.பிளைட் காமெடி.

(ஏர்போர்ட்டில் )

சந்தானம்:எக்ஸ்கியுஸ்மி.. நீங்க கிங் பிசர்ல ஒர்க் பண்ணுறீங்களா..

                   : எஸ்.......  

சந்தானம்: எந்த ஒயின் ஷாப்பிலும்  உங்க கம்பெனி பீர் கூலிங்காகவே  கிடைக்க மாட்டேங்குது.இது விசயமா உங்க எம் டி கிட்ட நான் கொஞ்சம் பேசமுடியுமா?


 (.'.பிளைட்டில்....)


ஏர் ஹோஸ்: ஹலோ இங்க என்ன பிரச்சனை.

உதயநிதி:    வாழ்க்கையே பிரச்சனைதாங்க.நான் நினைச்சது எதுவுமே கிடைக்க  மாட்டேங்குது.லவ்வும் செட்டாகுல..அட்லீஸ்ட் இந்த ஜன்னல் சீட்டாவது எனக்கு குடுங்க. 

ஏர் ஹோஸ்: நீங்களாவது கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே.

சந்தானம்:  என்னது.. டிபன் சாப்றது ஒருத்தன்.டிப்ஸ் வக்கிறது ஒருத்தனா. அதுலாம் முடியாது.  

உதயநிதி:  அப்ப.. இதெல்லாம் ஒத்துவராது. நான் .'.புட்போர்ட் அடிச்சசிகிறேன்.

ஏர் ஹோஸ்: என்னது  பிளைட்ல புட் போர்டா ? அது மாதிரி எல்லாம் பண்ண முடியாது.

உதயநிதி:  என்னங்க நீங்க..ஜன்னல் சீட்டும் இல்லங்கிறீங்க..'.புட்போர்டும் முடியாதுங்குறீங்க.பின்ன என்ன டிரைவர் சீட்லயா ஒக்காருறது?

ஏர் ஹோஸ்: என்னது டிரைவர் சீட்டா?

சந்தானம்: அப்ப.. உங்க சீட்ல ஒக்கார வச்சுகிங்க... 

(ஒரு வழியா சமாதானம் ஆகி... )

உதயநிதி: எப்படியும் சாப்டறதுக்கு வழியில கேண்டீன்ல நிப்பாட்டுவீங்களே....  அப்ப மாறி ஒக்காந்துக்கலாம்.

ஏர் ஹோஸ்: என்னது கேண்டீனா?  சார்.. நாங்க கேண்டீன்ல எல்லாம்  நிப்பாட்டுரதில்ல.

சந்தானம்: ஓ..அப்ப பாய்ன்ட் டு  பாய்ண்டா  
 
ஏர் ஹோஸ்: இல்ல சார் எல்லாமே இங்கேயே கிடைக்கும். 
------------------

ஏர் ஹோஸ்:  சார்.. இட்ஸ் டைம் டு  டேக் ஆ.'.ப் .கேன் யு பிளீஸ் பாஸ்டன் யுவர் பெல்ட் .

உதயநிதி: பெல்ட்டா... நான் ஆல்ரெடி வீட்லே  போட்டுட்டு வந்துட்டேனே.

ஏர் ஹோஸ்:  நான் அந்த பெல்ட்ட சொல்லல ..சீட் பெல்ட்ட சொன்னேன். 

உதயநிதி: அய்யய்யோ நான் சீட் பெல்ட் எல்லாம் எடுத்துட்டு வரலியே
-------------------------------

உதயநிதி: ஹலோ மேடம். என் பெல்ட்ட அவுத்து விடுங்க.நான் டிரைவர பாக்கானும்.எனக்கு அவரு மேல டவுட்டா இருக்கு.

ஏர் ஹோஸ்: என்னது டிரைவரா ?

சந்தானம்: அப்ப கிளீனர வர சொல்லுங்க...
-------------------------------

ஏர் ஹோஸ்: உங்களுக்கு எதுவும் ஆகாது.பயப்படாதிங்க.அப்படியே எதுவும் ஆனா நாங்க உங்களுக்கு பாராசூட் தருவோம்.

சந்தானம்: ஏங்க.. உயிர் போற நேரத்தில தேங்கண்ணெய வச்சி நாங்க என்ன பன்றது?
----------------------------------------------------------------------------------------------------------------------



நடிகர் திலகத்தை கலாய்த்த இடங்கள்.....

சந்தானம்:  டேய்...மோந்து பாத்தாலே போதையாயிடுவாங்கனு கலாச்சிதாண்டா பார்த்திருக்கேன்.ஆனா.. கண்ணெதிரே இப்பதாண்டா பாக்குறேன்.தமிழ் நாட்டுல பீர் தட்டுபாடு வந்தப்ப மொத பஸ்ஸ புடிச்சி பாண்டிச்சேரி போயி பீர் வாங்கி குடிச்சது யாரு?. நம்ம பயலுகதான். அப்படியாப்பட்ட மண்ணுல பொறந்துட்டு, மோந்து பாத்தே போதையாவிறியேடா..


(போலிஸ் நிலையத்தில் ..இரவு முழுவதும் சந்தானம் மிமிக்கிரி செய்து சோர்ந்து போனபின் ) 

உதயநிதி: என்ன மச்சான்  சிவாஜி சார் வாய்ஸ் எடுக்கிறியா 

சந்தானம்: டேய்...ராத்திரி பூரா மிமிக்கிரி பண்ணி பண்ணி அந்த ஆளு வாய்ஸ் மாறி ஆயிடிச்சிடா ..
-----------------------------------------------------------------------------------------------------------------------



சந்தானத்தின் தத்துபித்துவங்கள்...
தண்ணியடிக்கிற  பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.

நீ கரக்ட் பண்ற பொண்ண விட,உன்ன கரக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும் .

ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.

கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?

 FACT..FACT..FACT..இந்தப் பொண்ணுங்க ஒருநாளைக்கு பத்து பேருக்கு ஓகே சொன்னா.. பத்தாயிரம் பேரை கழட்டி விடுறாங்க. 

டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்க விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம்.

அயன் பன்றவங்க அழக் கூடாது.


பொண்ணுங்களோட ரத்தமும் சிவப்பு.பையன்களோட ரத்தமும் சிவப்பு.அப்பறம் ஏன் பொண்ணுங்களோட எண்ணம் மட்டும் கருப்பா இருக்கு.?

டேய்... நான் மொடாக் குடிகாரனுவ கூட சேர்ந்துக் குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன்.
--------------------------------------------------------------------(((((((((((()))))))))))))))))------------------

12 comments:

  1. வசனங்கள் அனைத்தையும் சொல்லிட்டிங்க போல அருமை

    ReplyDelete
    Replies
    1. இது எல்லாமே நான் ரசித்த வசனங்கள்.பின்னூட்டத்திற்கு நன்றி பிரேம் .

      Delete
  2. சார், காமெடி வசனங்களை பகிர்ந்து படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்களே..

    சூப்பர் போஸ்ட்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிரகாஷ்...உங்க புதிய தளம் சூப்பரா போகுது.வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி

      Delete
  3. ஹலோ பாஸ். நைட் புள்ள மிமிகிரி பண்ணி இந்த ஆளு வாய்ஸ் மாதிரி ஆயிடுச்சுன்னு மகாநதி சங்கர்தான் மென்சன் பண்ணுவார் சந்தானம். சிவாஜிய இல்ல.

    ReplyDelete
    Replies
    1. அனானியா வந்து குட்டு வச்சிட்டு போறீங்க.சாரி பாஸ்..படத்தில சிவாஜிய சொல்ற மாதிரியே இருக்கும்.ஆனா அது மகாநதி சங்கர என்பது இப்பதான் தெரியுது.ரொம்ப நன்றி.

      Delete
  4. இம்ம்புட்டு சொல்றீக சரிங் படத்தை பார்த்துடுவோம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா ...கண்டிப்பா ஒரு தடவைப் பார்க்கலாம்

      Delete
  5. // டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்கள விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம். //

    படம் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சிரிக்க சிரிக்க சிரிக்க வைத்த படம்.

    காமெடியானது சிரிப்பானது சூப்பரானது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா

      Delete
  6. உணமைய சொல்லனும்னா, சி.பி ய விட நீங்க பெட்டரா ட்ரை பண்ணி இருக்கீங்க... குட் லக்

    ReplyDelete
    Replies
    1. அது ரொம்ப பெரிய இடமாச்சே...வாழ்த்துக்கு நன்றி

      Delete