Sunday 17 March 2013

பாலாவின் பரதேசி -விமர்சனம்

மர்சியல் மசாலா கலவைக்குள் கட்டுப்படாமல் சமகால தமிழ் சினிமாவிற்கு வேறொரு பரிமாணம் கொடுக்கும் மிகச்சிறந்த ஆளுமைகளில் தானும் ஒருவன் என 'அடித்து'ச் சொல்லியிருக்கும் இயக்குனர் பாலாவின் மற்றுமொரு காவியம் 'பரதேசி'.

இந்தப்படத்தின் 'டீசர்' வெளியானபோது கடுமையான ஆட்சோபங்கள் தமிழ் ரசிகர்களால் முன்வைக்கப் பட்டது. என்னதான் தான் ஒரு தத்ரூபமான ஆளுமையாக இருந்தாலும் சக கலைஞர்களை அவர் நடத்திய விதம் மனித உரிமை மீறல் என விமர்சனம் எழுப்பப் பட்டது. ஆனால் அந்த ஆக்ரோஷ மெனக்கெடல் ஒவ்வொருக் காட்சிப் படிமங்களிலும் எந்த அளவுக்கு வீரியத்தை விதைத்திருக்கிறது என்பதை  திரையில் காணும் போது உணர முடிகிறது.

'எரியும் பனிக்காடு' இந்த நாவலைத் தழுவிதான் கதைக் களத்தையும் தளத்தையும் இயக்குனர் பாலா அமைத்திருக்கிறார் என்பதை எனது முந்தையப் பதிவில் விளக்கியிருந்தேன்.முழுக் கதையையும் தழுவாமல் தன் கதை சொல்லும் பாணியோடு அதில் சொல்லப்பட்ட காட்சிகளை உள்வாங்கி சம காலத்திய ரசிகர்களின் புரிதலுக்கேற்ப திரைக் கதையை அமைத்திருக்கிறார்.

1939 காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வாக படம் தொடங்குகிறது.படத்தின் கதைச் சுருக்கம் இதுதான்..


வறுமையின்  பிடியில் சிக்கித்தவிக்கும் சாலூர் கிராமம்தான் முதல் பாதி கதைத்தளம்.வறுமை இருந்தாலும் நிம்மதியான சந்தோஷ சிலிர்ப்புகளுடன் நகர்கிறது அவர்களது வாழ்க்கை.'ஒட்டுப் பெ(பொ)றுக்கி என்கிற சாலூர் ராசா ' வாக டமக்கு அடிச்சி ஊருக்கு தகவல் சொல்லும் பாத்திரத்தில் நாயகன் அதர்வா.அவனுடன் 'நான் உன்னை நெனைக்கிறேன்' என வழியும் நாயகியாக வேதிகா.ஒரு கட்டத்தில் தன்னையே அவனிடம் இழக்கிறாள் திருமணம் ஆகாமலே.

அதர்வா பக்கத்து ஊருக்கு வேலை
த் தேடிச் செல்லும் போது அவனுக்கு அறிமுகமாகிறார் தேயிலைத் தோட்ட கங்காணி(மேஸ்திரி).அவர்களது இருண்ட வாழ்க்கைக்கான ஆரம்பப்புள்ளி அங்குதான்  இடப்படுகிறது. கங்காணியின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி அந்த கிராமத்தின் பெரும்பகுதி மக்கள், தேயிலைத் தோட்ட பணிக்காக எதிர்காலக் கனவுகளோடு நீண்ட பயணம் மேற்கொள்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை மாத நடைப் பயணம்.வந்தடைகிறது அந்த நரகக் குழி. தான் எதிர்பார்த்த எந்த வித அமைப்பும் அங்கு இல்லை.கங்காணி சொன்ன எந்த வார்த்தையும் உண்மையில்லை என உணர்ந்து,தாம் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுவிட்டோமே என ஒவ்வொருவரும் நெஞ்சு வெடிக்கக் குமுறகிறார்கள். கங்காணியின் அடியாள் பலம் எதிர்த்துப் பேச முடியாதவாறு அவர்களின் கரங்களையும் வாய்களையும் கட்டிப் போடுகிறது.

மர்ம நோயால் கொத்து
க் கொத்தாக செத்து விழும் தொழிலாளர்கள்,பாழடைந்த மருத்துவமனை,மாட்டுக் கொட்டகை போல் குடிசைகள்,வெள்ளைக்கார துரையின் பாலியல் அத்து மீறல்கள்,கங்காணி ஆட்களின் வன்முறை வெறியாட்டங்கள்,அட்டைப் பூச்சிகளின் தாக்குதல்கள்,சுகாதாரமற்ற உணவுகள் என நரகத்ததை விட கொடிய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கழிகிறது.

வருடக் கடைசியில் கணக்கு முடிக்கும்போது 'அப்பாடா இத்தோட ஊருக்கு கிளம்பிவிடலாம்' என்கிற அவ
ர்களது நம்பிக்கையில் இடியை இறக்குகிறான் கங்காணி.பொய்க் கணக்குகளை சொல்லி,வாங்கின அட்வான்ஸ் முடிய இன்னும் இரண்டு வருஷம், நான்கு வருஷம் என ஒவ்வொருவரையும் அந்த நரகக் குழிக்குள் மீண்டும் தள்ள, படம் பார்க்கும் நமக்கே நெஞ்சு கனக்கிறது.

இதற்கிடையில் அந்த தேயிலை எஸ்டேட்டில் ஏற்கனவே ஓடிப்போன தன் கணவனின் கணக்கையும் தீர்ப்பதற்காக தன் பிஞ்சு மகளுடன் போராடி
க்கொண்டிருக்கிறார் தன்சிகா.அவருடன் அதர்வாவும் தங்க வைக்கப் டுகிறார்.ஒரு கட்டத்தில் தன்சிகாவும்  மர்ம நோய்க்கு பலியாக மூன்று பேர் கடனும் அதர்வா மேல் விழுகிறது. மீண்டும் அதே எஸ்டேட்டில் ஒன்பது வருடம் பணிசெய்ய பணிக்கப்படுகிறார்.

பிறந்த தன் மகனையும் மனைவியும் பார்க்க முடியவில்லையே என்கிற வெறுமை,இன்னும் ஒன்பது வருடம் இந்த நரகத்தில் வாழ்ந்து சாகவேண்டுமா என்கிற ஆற்றாமை எல்லாம் ஓன்று சேர, மலை உச்சியின் மேல் அமர்ந்துக் கொண்டு நெஞ்சு வெடித்து கதறுகிறார்.அதன் பின் தான் கிளைமாக்ஸ். கங்காணியின் அடுத்த ஆள் பிடித்தலில், தன் கணவனைப் பார்க்கும் ஆசைகளோடு அப்பாவியாய் அங்கு வந்து சேர்கிறார் வேதிகா.  யாரை இவ்வளவு நாளாகப் பார்க்க
த் துடித்துக் கொண்டிருந்தாரோ அவர்கள் நேரில் வந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல்,"இந்த நரகக் குழியில் நீயும் வந்து விழுந்திட்டியே அங்கம்மா..."  என அந்தக் காடே நடுங்கும் அளவுக்கு அதர்வா கதற, a film by bala என படம் முடிகிறது. 

படம் முடிந்து வெளிவரும் போது நம்மையும்  ஏதோ ஒரு இனம் புரியாத ஆற்றாமை ஆட்கொள்கிறது. கிளைமாக்சில் பக்கத்து சீட்டில் யாரும் இல்லை என்றால் கொஞ்சம் வாய் விட்டு அழுதுவிடலாம் என்று கூட தோன்றியது. இது தான் பாலா....!

 "ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும்
 ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில்
 அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.…
 நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் கொண்டிருக்கும்
 ஒவ்வொரு துளி தேநீரிலும்
 கலந்திருக்கிறது எமது உதிரம்…"
  
ஆதவன் தீட்சண்யா-வின் இந்த கவிதை எப்படிப்பட்ட வலிகளோடு எழுதப்பட்டது என்பது படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்...!

செம்மண் சுவர்கள்,பனை ஓலையால் வேயப்பட்ட கூரைகள், முன் பக்க வாசலில் மூங்கில் தட்டியால் செய்யப்பட்ட தடுப்புகள் என அப்போதைய தெருக்களை அச்சு பிசகாமல் அப்படியே நம் முன் நிறுத்துகிறார் ஆர்ட் டைரக்டர் சி.எஸ்.பாலச்சந்தர்.பஞ்சாயத்து நடக்கும்  இடத்தில் தரையோடு சாய்ந்து கிடக்கும் அந்த பெரிய மரம் உண்மையானதா அல்லது செட் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.தேசிய விருதுக்கு பலமாகப் பரிந்துரைக்கப்படுவார்.

இது ஒரு பீரியட் படம் என்பதால் திரையில் இவர்கள் பயன்படுத்தியிருக்கும் அந்த 'கலர் டோன்' கண்களைக் கவர்கிறது.தேயிலைக் காடுகளையும்
சாலூர் கிராமத்தையும் வளைத்து வளைத்து 'சுட்ட' செழியனும் விருது வளையத்துள் வருகிறார்.

முதற்பாதி முழுவதும் நாஞ்சில் நாடனின் 'கலகல' வசனங்கள் பட்டையைக் கிளப்புகிறது.அவர்களின் வழக்கு மொழியை அப்படியே பிரதிபலிக்கவேண்டும் என்கிற சிரத்தை தெரிகிறது. அவர்கள் பேசும் பாசையை தெளிவாக புரிந்துகொள்ள பத்து நிமிடமாவது எடுக்கிறது.

அதர்வாவும் வேதிகாவும்
பாலாவின் கற்பனை.அந்த நாவலில் இருவருமே கிடையாது.விக்ரமுக்கு ஒரு சேது போல அதர்வாவுக்கு பரதேசி.ஒன்றிரண்டு படம் மட்டுமே நடித்திருக்கும் அதர்வா-க்குள் இப்படியொரு நடிகனா....! படத்தில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமானவர் வேதிகா.அதர்வாவை ஒட்டுப் பெறுக்கி...குச்சிப் பெறுக்கி...கு..பெறுக்கி என நையாண்டி செய்வதாகட்டும்,கடைசியில் அதர்வாவைப் பார்க்கும் போது உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஓடி வருவதாகட்டும்... கடைசி வரை ஸ்கோர் பண்ணுவது இவர் ஒருவரே..." அங்கம்மாவுக்கு ஒரு நேசனல் அவார்டு பார்ஸ...ல்ல்ல்...!"

எரியும் பனிக்காடு நாவலில் வரும் பிரதான கதாப்பாத்திரமான கருப்பன்-வள்ளியாக இதில் தங்கராசு-கருத்தக் கன்னியாக வரும் உதயகார்த்திக்கும்,ரித்விகாவும்.வெள்ளைக்கார துரையின் கொழுப்பெடுத்த குறிக்கு தன் மனைவியை இரையாக்கும் கொடூரத்தைக் கண்டு எதுவும் செய்யமுடியாமல் இடிந்துபோய் வெதும்பிய முகத்தோடு அப்பாவியாய் பார்க்கும் அந்தப் பார்வையில் எவ்வளவு ஆற்றாமை..! இருவருமே மிகச் சரியானத் தேர்வு.அதர்வாவின் அப்பத்தாவாக வரும் அந்தப் பாட்டி யாருப்பா..?. மகாநதி ஸ்டைலில் சொல்லணும்னா செம பாட்டி...!  வாயைத் திறந்தா இப்படியா பச்சை பச்சையா வர்றது....?!?1

இப்படியொரு உயிரோட்டமான காவியத்திற்கு ஏன் பாலா இளையராஜாவைத் தவிர்த்தார் எனத் தெரியவில்லை. 'செந்நீர் தானா' பாடலை கங்கை அமரனைப் பாடவைத்து இசைஞானியின் எ.'.பக்டு கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்
கள். சாரி...ஜி.வி.பிரகாஷ்.


ரி....எரியும் பனிக்காடு  நாவலை எந்த அளவுக்கு பாலா உள்வாங்கி திரைக் காவியமாக செதுக்கியிருக்கிறார் என்பதை இங்கே அலச வேண்டியுள்ளது. இது இந்தப் படத்தில் உள்ள குறைகள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

1.கங்காணியாக வரும் தேயிலைத் தோட்ட மேஸ்திரி ஒரு ஊரையே எப்படி நம்ப வைக்கிறார் என்பதை அழுத்தமாக சொல்லவில்லை. சூலூர் கிராமத்தில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருப்பதாகக் காட்டிவிட்டு,கங்காணி பணப் பெட்டியைத் திறந்து காண்பித்தவுடன் மொத்த ஊர் மக்களும் நம்புவதாகக் காண்பிக்கும் காட்சி நம்பும்படி இல்லை.

2. பாலா சொல்லாமல் விட்ட இன்னொரு விஷயம்..
சாலூர் கிராமம் ஒரு ஒடுக்கப்பட்ட- தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதி. டீக்கடையில் வெளியில் போட்டிருந்த பெஞ்சில் அதர்வா உட்காரும் போது டீக்கடை ஓனர்  பிரம்பால் நையப் புடைப்பார்.இந்த ஒரு காட்சியோடு அன்றைய ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அவல நிலையை உணர்த்தி விட்டதாக திருப்திப் பட்டுவிட்டார் போல...இன்னும் ஒரு சில காட்சிகளை அழுத்தமாக அமைத்திருக்க வேண்டாமா...என்னவொரு கதைக்களம் .! புகுந்து விளையாட வேண்டாமா...?

3. அவர்களின் வறுமையைப் போக்குவதாகச் சொல்லித்தானே கங்காணி ஆசைக் காட்டினார்.ஆனால்
சாலூர் கிராம மக்கள் யாரும் வறுமையில் அடிபட்டு இருப்பதாகத் தெரியவில்லையே. குறிப்பாக வேதிகாவின் அம்மாவாக வருபவர் நல்ல 'செழுமை'யாகவே இருக்கிறார்.ஒருவேளை அன்றைய வறுமையான வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கும் என்றால், வளமையான வேறொரு சமூகத்தை ஒப்பீடு செய்வதற்காவது காண்பித்திருக்கலாமே.

3. நாவலில், டீ
க் கடையில் அழுது கொண்டிருக்கும் நாயகனை அழைத்து நெஞ்சுருகப் பேசி மூளைச் சலவை செய்வார் கங்காணி.இந்தக் கதைக்கு முக்கியமானக் காட்சி அது.இன்றைய வெளிநாட்டு ஏஜெண்டுகளை குட்டியது போலவும் அந்த காட்சியை அமைத்திருக்கலாம்.பாலா சறுக்கிய முதல் இடம்.

4. நல்ல கலகலப்புடன் நகரும் படத்தில் அதர்வாவை அவர்கள் ஏன் கல்யாணப் பந்தியில் வெறுப்பேற்ற வேண்டும்.அதற்குப் பிறகு லேசான தொய்வு விழும்படி ஆகிவிட்டது.

5. நாற்பத்தியேழு நாட்கள் நடை பயணம் என்பதும், வரும் வழியில் யாருமே மனது மாறி திரும்பிச் செல்லவில்லை என்பதும் ஆச்சர்யம்.அதுவும் அந்த திறந்த வண்டியில் கங்காணியும் பயணித்திருப்பது நெருடல்.நாவலில் ரயிலில் பயணம் செய்வது போல் எழுதியிருப்பார்கள்.அந்தகால ரயிலை வடிவமைப்பது பட்ஜெட்டில் சூடு வைத்துவிடும் என்பதால் தவிர்த்திருக்கிறார்கள் போல...

6.நாவலில் ஒரு முக்கியமான கேரக்டர் வரும்.ஏற்கனவே அங்கு வேலைப்பார்க்கும் ஒருவர் அவ்வப்போது எஸ்டேட்டில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி புதிதாக வந்தவர்களுக்கு சொல்லிக் கொண்டே வருவார். அதைக் கேட்கும் போது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் திகிலாக இருக்கும்.எதற்காக சங்கு ஊதுகிறார்கள்? அங்குள்ள சட்ட திட்டங்கள் என்ன...? இதற்கு முன் நடந்த கொடுமைகள் என்ன...? எதற்காக வருட சம்பளம்..? ஏன் மக்கள் தப்பித்துப் போக முடியவில்லை..? முன் பணம் எதற்காகக் கொடுக்கிறார்கள்...? கங்காணியின் பின்புலம் என்ன..? துரையுடன் பாலியல் ரீதியான உடன்பாட்டுக்கு ஒத்துப் போகாதவர்களுக்கு என்ன தண்டனை...? தேயிலை எடை போடும்போது நடக்கும் ஒருதலைப் பட்சம்.. மற்ற எஸ்டேட்டுகள் எப்படி இருக்கும்? இப்படி நிறைய கேள்விகளுக்கு அந்த கேரக்டர் மூலம் தெளிவாக நாவலில் விளக்கியிருப்பார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று திரைக்கதையில் கொஞ்சம் வேகத்தைக் கூட்ட இது உதவியிருக்கும்.


அனேகமாக தன்சிகாவின் கேரக்டர் அதுதான்.தன்சிகா டம்மியாக்கப் பட்டதால்தான் இதற்கு விடை கிடைக்கவில்லை. இதையெல்லாம் காட்சிப்படுத்திவிடலாம் என பாலா நினைத்திருப்பார் போல.ஆனால் எதுவுமே நெஞ்சில் ஒட்டவில்லை.

இதெல்லாம் தேவையா என்று கூட இங்கே கேள்வி எழலாம்.உண்மைச்  சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் எடுக்கும்போது காட்சிப் படிமங்களுக்கு உணர்வுப் பூர்வமான அழுத்தம் கொடுக்க இவை தேவை தானே..!.

7. அதர்வாவுக்கு ஊரிலிருந்து கடிதம் வரும்போது...எஸ்டேட்டில் இருக்கும் யாராவது ஒருவர் இங்கிருக்கும் நிலைமையை அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தால்,வேதிகா வருவது தவிர்க்கப் பட்டிருக்குமே என்ற கேள்விக்கு நாவலில் விடை இருக்கும்.

8. மர்ம நோயால் கொத்துக் கொத்தாக உயிர்கள் மடிந்து விழும் விஷயத்தை ஒரு தண்ணி பார்ட்டியில் வெள்ளைகார துரைகள் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பது நம் நெஞ்சில் அறைகிறது. இந்திய உயிர்களை எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்திருக்கிறார்கள் என்பது இது ஒன்றே போதும். எத்தனைப் பேர் செத்தாலும் அவர்களுக்கு கொடுத்த முன்பணத்தை கங்காணியின் கமிசனில் தான் கை வைப்பார்கள் எனத் தெரிந்தும் சாவு செய்தியை கங்காணியும் அலட்சியப் படுத்துவது போல் காண்பித்திருப்பது நெருடலான விஷயம்.

9.கதை முடியும் தருவாய் 1940 களில்.அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் இயக்கம் காந்தியடிகள் தலைமையில் கடுமையாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.தேயிலை எஸ்டேட்டில் உள்ள நிலைமையை ஆராய எத்தனித்திருப்பதாக செய்தி வந்தவுடன் தான் நல்ல டாக்டரை நியமிக்க நிர்வாகம் முடிவு செய்திருக்கும். அவரை மிக நல்லவராகக் காட்டியிருப்பார்கள்.அவர் மூலம்தான் எஸ்டேட் தொழிலாளிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.ஆனால் இதில் ஒரு சோப்ளாங்கி சிவசங்கரைப் போட்டு அவரை ஒரு மத போஷகராகக் காட்டி இருக்கிறார்கள்.

10.  1939-45 காலகட்டத்தில் நடந்த சம்வங்கள்தான் படம். இப்போது கண்டிப்பாக அப்படியொரு அடிமைமுறை கிடையாது.அப்படியிருக்கும் போது கிளைமாக்சில் ஏன் இப்படியொரு சோகக்காட்சி வைக்க வேண்டும்...? கொஞ்சம் பாசிடிவாக கிளைமாக்ஸ் வைத்திருக்கலாமே...அட்லீஸ்ட் அந்த டாக்டர் மூலமாகவாவது அவர்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கும் என நிம்மதியாக தியேட்டரைவிட்டு வெளியே வந்திருப்போமே... எரியும் பனிக்காடு நாவலின் முடிவும் அதுதானே...!


( இது எல்லாமே அந்த நாவலைப் படித்ததால் வந்த விளைவுன்னு நினைக்கிறேன்.இனி இது மாதிரி ஒரு தப்பு செய்யவேக் கூடாது..)

இந்தப் படத்தில் பெருங்கூட்டத்தையே நடிக்க வைத்திருக்கிறார் பாலா...அந்தக் கூட்டத்தை விட...   பாலா.. அதர்வா..வேதிகா...செழியன்... சி.எஸ்.பாலச்சந்தர்...வைரமுத்து....அப்பத்தா....என விருது வாங்கிக் குவிக்கப்போகும் கூட்டம் அதிகம் போல...(வழக்கம்போல தமிழ் சினிமா புறக்கணிக்கப் படாமல் இருந்தால்..)

இதைத் தவிர்த்துப் பார்த்தால்,தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய இந்த இருண்ட பக்கத்தை,தமிழ் சினிமா தொடத் தயங்கும் இந்த ரத்தம் தோய்ந்த வரலாற்றை,நம் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அம்மக்களின் அவல வாழ்வை நம் கண் முன் நிறுத்திய இயக்குனர் பாலாவுக்கு ரா......யல் சல்யுட்.. !!!



வணக்கங்களுடன்....  
மணிமாறன்.  

--------------------------------------------------------(((((((((((((((())))))))))))))))))))))-------------------------------------------

16 comments:

  1. இசைஞாநி இணைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்...

    ( இது எல்லாமே அந்த நாவலைப் படித்ததால் வந்த விளைவுன்னு நினைக்கிறேன்... இனி இது மாதிரி ஒரு தப்பு செய்யவே கூடாது...)

    படித்ததினால் விளக்கங்களை அறிய முடிகிறது... நன்றி...

    நிறைகளை மனதார வாழ்த்துவோம்...

    ReplyDelete
    Replies
    1. //இசைஞாநி இணைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்...//
      நிச்சயமாக எல்லோருடைய மனக்குறையும் இதுதான்.... பாலாவின் மன மாற்றத்திற்கு என்ன காரணம் எனப் புரியவில்லை..நன்றி நண்பரே..

      Delete
  2. நாவலை நான் படிக்காததால் எனக்கு இது போன்ற உணர்வுகள் வரவில்லை சார்...

    பாலாவுக்கு ராயல் சல்யுட்

    நல்ல விமர்சன பார்வை

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு ...உங்கள் விமர்சனமும் அருமை..

      Delete
  3. It seems that the great director Bala of "Pithamagan" makes a strong critical statement on missionary's conversion in those days and makes a lighter statement on every other evil practices in the name of god/religion. This is strengthening my doubt that Bala is getting close to RSS/BJP ideology - remember that he glorified Agori lifestyle in "Nan Kadavul". After “Nan Kadavul” I lost faith in Bala being an independent film maker. Robinraj, Tp

    ReplyDelete
  4. அற்புதமான விமர்சனம். நாவலை ஏற்கனவே படித்திருப்பதால் ப்ளாஸ் மைனஸ்’ஐ மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள் மணிமாறன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.... உங்கள் விமர்சனமும் படித்தேன்... அருமை.

      Delete
  5. ஆமா நீங்கள் போலவே அந்த டாக்டர் சீன் அந்நியமாகவே பட்டது.

    உங்க பதிவை படிச்சதுக்கு அப்புறம் தான் அது நம்ம பாலாவோட உட்டாலக்கடி என்று புரிஞ்சு போச்சு..

    என் பார்வையில் அந்த காட்சிகள் வலிந்து திணித்து போல இருந்தது.. நல்ல படத்தில் ஒரு மைனஸ் அது போல இருந்தது

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஹாரி...எல்லோரும் ஒத்துக்கொண்ட உண்மை..நன்றி.

      Delete
  6. நல்ல விமர்சனம் கதைய படித்துவிடு பார்கலாமா கதையை படிக்காமல் பார்க்க வேண்டுமா பாலாவின் படங்களின் கொஞ்ச சோகம் தூக்கலாகவே காண்பிக்கப்படும் இருந்தாலும் அவர் தொடும் நிஜ ங்கள் தனித்துவம் வாய்ந்தது
    முந்தய இதை பற்றிய பதிவும் நன்றாக இருந்தது உண்மையாய் உரைத்தது

    ReplyDelete
  7. நானும் ரெட் டீ நாவலை படித்தவன் என்பதால் உங்களோடு ஒத்துப்போகமுடிகிறது. பாலா தமிழின் மிக சிறந்த படைப்பாளி என்று ஒரு பிம்பம் செயற்கையாக உருவாக்கப்படுவது போல தெரிகிறது. காவிய இயக்குனர் என்ற அளவுக்கு பாலா இதுவரை எந்தப்படைப்பையும் கொடுக்கவில்லை என்பதே உண்மை. நாம் அறிந்து கொள்ள விரும்பாத மனிதர்களைப்பற்றி படம் எடுப்பவர் என்பதில் மட்டும் பாலா ஒரு தனித்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். ஆனால் அதையும் கூட அவர் ஒருவித வியாபார நோக்குடனே செய்வது அவரின் நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது. அவன் இவன் படத்தில் மாட்டு இறைச்சி என்று ஒரு வகுப்புவாத அரசியல் பேசிய இவர் இந்த படத்தில் நாவலில் இல்லாத மத போதகர் கதாபாத்திரத்தை உருவாக்கி தன் மத வெறுப்பை மக்களின் கைதட்டலுக்கு காணிக்கை ஆக்கி விட்டார். (தினகரன் பால் தினகரன் வகையறாக்களை நேரடியாகவே தாக்கி ஒரு படம் இவர் எடுத்தால் எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கும்)

    மேலும் பலர் இப்போது பாலாவை மகேந்திரனோடு இணைத்து பேசி வருவது அதிகரித்து வருகிறது. எந்த காலத்திலும் மகேந்திரனோடு யாரையும் ஒன்றாக ஒரே தாராசில் வைத்து விட முடியாது.அதுவும் பாலா போன்ற மக்களின் வறுமையை பணமாக்குபவர்கள் உதிர்ப்பூக்கள் மெட்டி நண்டு போன்ற சிறந்த படங்களை கொடுத்த மகேந்திரனோடு ஒரே கோட்டில் பயணிக்கவே முடியாது. பாலா என்னதான் விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படம் எடுத்தாலும் அதில் முரண்பாடாக தெரியும் செயற்கை தனத்தையும், காதுகொடுத்து கேட்க முடியாத நரகல் பேச்சுக்களையும் விட்டு அவரால் வெளியே வர இயலாது.

    இந்த படத்தில் கூட இடைவேளைக்கு பிறகே கதை துவங்குகிறது. அதுவரை தேவை இல்லாமல் கதையோடு ஒட்டாத பல காட்சி அமைப்புகள் வருகின்றன. 1939 களில் தமிழ் நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தினர் இவ்வாறுதான் உடை அணிந்து வாழ்ந்தார்களா அவர்களின் வாழ்க்கை முறையை பாலா அப்படியே பிரதிபலித்தாரா என்றால் இல்லை. பாடல்கள் கொஞ்சம் கூட அந்த காலத்து தொடர்பின்றி அபத்தமாக ஒலிக்கின்றன. 1939 களில் இருந்த நிலையை காட்சிகளில் மட்டுமே காட்டி அந்த காலத்து இசை பேச்சு வழக்கு போன்ற கண்ணில் படாத விஷயங்களில் (பொதுவாக எல்லோருமே இதை கவனிப்பதில்லை) பாலா சறுக்கிவிட்டார் என்பதை விட அதைப்பற்றியே சிந்தனையே இல்லை என்பதே உண்மை. பாலா அந்த காலத்து மக்களின் வாழ்கையை பற்றி அறிந்து கொள்ளாமல் அதை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் தன்னுடைய உலகத்தை புனைந்து கொடுத்திருக்கிறார். சோகத்தை பிழிந்து கதாபாத்திரங்களை அழவைத்து பார்ப்பவர்களை கண்ணீர் விட வைப்பது தான் உலக தரம் என்று முக்கால்வாசி பேரை பாலா நம்பவைத்ததே அவரின் வெற்றி. இது துலாபாரம் படத்திலேயே துவங்கிய ஒரு யுக்தி. பரதேசியை வேண்டுமானால் பாலாவின் பெஸ்ட் என்று சொல்லலாம்.அதை தாண்டி சிலாகிப்பது கமலஹாசனை ஆஸ்கர் நாயகன் என்று புகழ்வதற்கு சமம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... நிச்சத்யமாக பாலா இதைப்பற்றி யோசித்திருப்பார் என்றே தோன்றுகிறது.இதுபோன்ற வரண்ட கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் போது அதில் சில மாசாலாப் பொடிகளைத் தூவினால்தான் இங்கே வேகும் என்று அவர் நினைத்திருக்கலாம்.பிறகு இதுபோன்ற கதைக்களத்திற்கு காசுபோட எந்த தயாரிப்பாளர் வருவார்கள்..இப்போதைக்கு அப்படியொரு அவலவாழ்வு இருந்ததை நமக்கு தெரியப்படுத்திய பாலாவுக்கு ன்றி சொல்லலாம் நண்பரே.

      Delete
  8. இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.

    பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே...எனக்குக் கூட அந்த விஷயம் தோன்றியது.ஈழப்பிரச்சனை வெடித்துள்ள இந்த சந்தர்பத்தில் இலங்ககையில் எஸ்டேட்டில் எப்படி நம் மக்கள் கஷ்டப்பட்டார்கள் என்பதை போகிற போக்கிலாவது சொல்லியிருக்கலாமே...அந்த நாவலில் கூட அப்பாவு என்ற கேரக்டர் மூலம் சொல்லியிருப்பார்கள்.நன்றி.

      Delete
  9. Hi Bro, How can i contact you? I would like to have a conversation with you. Thanks.

    lourduprabhu@gmail.com

    ReplyDelete